ராஜாவ&
"இதுவரை இந்தியாவில் இதுபோல ஒரு நிகழ்ச்சி வந்தது கிடையாது , இனிமேலும் வரப்போவதும் கிடையாது" என்பது போல இருக்கிறது ராஜாவின் பாராட்டுரை. நிச்சயம் ரகுமான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
உற்று கவனீத்தீர்கள் என்றால் புலப்படும்... நிறைய இடங்களில் ரகுமானை மனம் திறந்து , தெள்ளிய நீரோடை போல பாராட்டி இருக்கிறார்.
"இறைவன் சரியான பாத்திரத்தை தேர்ந்தெடுக்கிறான். சரியான பாத்திரத்தை தேர்ந்தெடுத்து, இவனுக்கு இது தகும் என ஒவ்வொருக்கும் அவரவருக்கு தகுந்த மாதிரி அளந்து வைத்திருக்கிறார். " என்ன ஒரு நிதர்சனமான வார்த்தைகள்.. விழாவின் சாராம்சமான வார்த்தைகள்..தீர்த்தமாய் வந்து தெளிக்கிறது.
இந்த நிகழ்ச்சிப் பதிவை ஏதோ ராஜாவின் அருமையான , சிறந்ததொரு பாடலை மீண்டும் மீண்டும் கேட்பது போல தினமும் மூன்று முறையாவது பார்த்துக் கொண்டிருக்கிறேன்... ராஜாவின் இசையைப் போல, ஒவ்வொருமுறையும் இந்த மேடைப்பேச்சு ஓவ்வொரு பொருளை தருகிறது..
ஒவ்வொரு வாய்ப்பிலும் இவர் பேசும் போது, தவறாமல் முன்னோர்களை மரியாதை செலுத்துகிறார்.. உலக இசை மேதைகளை மதிக்கிறார். ரகுமானைப் பாராட்டும் விழாவாக இருந்தால் கூட, பாலமுரளியை சிகரத்தில் வைத்து அழகுபடுத்துகிறார். மதன், ரோஷன், எம்.எஸ்.வி முதல் மைக்கேல் ஜாக்ஸன் வரை எல்லோரும் புகழப்படுகிறார்கள். அவர் சொல்வதை போலவே, மனசு சிறுசு என்றாலும் இதையெல்லாம் கேட்கும் போது மனசெல்லாம் குளிர்கிறது.
இசையமைப்பாளர்கள் கூடும் விழாவிற்கு ஏ.வி.எம், பாலச்சந்தரை ஏன் கூப்பிட்டார்கள் எனத் தெரியவில்லை. இரும்படிக்கிற இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை?