One more song 'Varuvaayo Vel Muruga' from the film 'Yean?' (1970) by Ravichandran and Lakshmi. If I am not mistaken the music was composed by Sulamangalam Sisters. This song is actually an adaption of a Hindi hit song.
Printable View
T.R. Pappa is the Music Director of Yaen
ஏன் படம் சுப்பு ஆறுமுகம் எழுதியது என்று ஞாபகம். இறைவன் என்றொரு கவிஞன், வருவாயோ வேல் முருகா என்ற நல்ல பாடல்கள் டி.ஆர்.பாப்பா எழுபதுகளிலும் ஏன் ,மறுபிறவி போன்ற படங்களில் தரமான இசையுடன் மறுபிறவி எடுத்தார்.
ரவி நடித்த படங்களிலிருந்து சில நிழற்படங்கள்
நான்கு சுவர்கள்
http://i1146.photobucket.com/albums/...4walls10fw.jpg
http://i1146.photobucket.com/albums/...4walls11fw.jpg
காதலிக்க நேரமில்லை
http://i1146.photobucket.com/albums/.../knillai02.jpg
குமரிப் பெண்
http://i1146.photobucket.com/albums/...umarippenn.jpg
நான்
http://i1146.photobucket.com/albums/...avijj3ltrs.jpg
http://i1146.photobucket.com/albums/.../ravi3ltrs.jpg
ஜெயா டி.வி.யில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சிக்குப் பேட்டி தந்த போது
http://i1146.photobucket.com/albums/...ps86d7527e.jpg
மீண்டும் வாழ்வேன் திரும்ப பார்த்தேன். நான் படத்திற்கு சற்றும் குறையாத entertainment value கொண்ட டி.என் .பாலுவின் மிக சிறந்த படம். படம் விறு விறுப்பு குறையாமல் express வேகத்தில் செல்லும். வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம் பாட்டுக்கு lead scene(Bikini யில் என் கன்னட பேரழகி) , police station இல் மனோகரை அறிந்த ரவியும், ரவியை தெரியாத மனோகரும் புன்னகைக்கும் சீன்,
ஒன்னை நெனைச்சா பாட்டில் பாரதி பொம்மையை போலவே இயங்குவது, குழந்தைகளை கடத்தும் காட்சியில் இருவரை சுட்டு விட்டு ,teacher ஒருவரை குறி வைத்த பிறகு விரல்களால் சரி போய் தொலை என்று மனோகர் பண்ணும் gesture .
ரவி கேட்க வேண்டுமா ,அழகுடன் தனி துவம் கொண்ட விசேஷ துள்ளலுடன் கொஞ்சம் கஷ்ட பட்டு கண்ணீரும் வடிப்பார்.
ஜாலி ரவி-பாலு திரு விழா இப்படம். மெல்லிசை மன்னர் கொஞ்சம் உழைத்து இன்னொரு முன்னாள் சகா வான மெல்லிசை மன்னர் நான் படத்தில் தந்த அளவு நல்ல out put கொடுத்திருந்தால் இந்த வண்ணபடத்தின் range எங்கேயோ போயிருக்கும். நடிகர்திலகத்தின் 150 அவது படத்தையே சொதப்பிய வல்லிசை மன்னருக்கு ,இந்த படம் எம்மாத்திரம்? ஆனாலும் வெள்ளி முத்துக்கள் பாட்டு superb .
கோபால்,
மீண்டும் வாழ்வேன் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளலாம், ஒன்றைத் தவிர. இன்றைக்கும் மீண்டும் வாழ்வேன் படத்தை மக்களிடம் நினைவூட்டிக் கொண்டிருப்பது அப்படத்தின் பாடல்கள் தான். உன்னை நினைச்சா பாடலைப் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தான் நினைக்க வேண்டும் போல உள்ளது. அந்தப் பாடலின் சூழ்நிலை, காரணம், எல்லாவற்றையும் அந்தப் பாட்டின் பின்னணி இசையில் தந்திருக்கிறார் மெல்லிசை மன்னர். அந்த பொம்மை ஒலிக்காகவே அவர் பட்ட கஷ்டங்கள் எழுதி மாளாது. சதன், முருகேசன் துணையுடன் மெல்லிசை மன்னர் அந்தக் காலத்தில் தந்திருந்த சிறப்பு சப்தங்களின் சிறப்பை, இன்றைக்கு எத்தனை sound effects கருவிகள் வந்தாலும் ஈடு செய்ய முடியாது. அதுவும் அந்த பொம்மை அந்த காலத்தில் மிக பிரபலமானது. காரணம் அந்த சப்தம் தான். இன்னும் சொல்லப் போனால், இந்த மீண்டும் வாழ்வேன் படம் ஹிட்டானதற்குப் பிறகு பல டீக்கடைகள் இரானி டீஸ்டால் என வரத் தொடங்கின. இன்றும் கூட சென்னையில் சில இடங்களில் அந்த இரானி டீ ஸ்டால் பெயர் இருப்பதைக் காணலாம்.
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் பாட்டுக்குப் பிறகு எஸ்.பி.பி.யின் புகழ் மேலும் உச்சத்தை அடைந்தது.
ஆனால் படத்தில் மற்றொரு அருமையான பாடல் எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது பாடலாகும். பி. வசந்தா ஹம்மிங் பறவை என்பதை மாற்றி, இதில் பாட்டைப் பாடியிருப்பார். அந்தப் பாட்டைப் பாருங்கள்.
http://youtu.be/IlMAIoT2S1A
வர போகும் கார்த்திக் சார்,வந்து விட்ட ராகவேந்தர் சார்,
மனசாட்சியில் கை வைத்து சொல்லுங்கள். ஒரு ராமமூர்த்தி நான்,மூன்றெழுத்து,மதராஸ் to பாண்டிச்சேரி யில் போட்ட இசைக்கு, ஒரு வேதா அதே கண்கள் படத்துக்கு தந்த இசைக்கு ,ஒரு சுதர்சனம் வாலிப விருந்து கொடுத்தது போல ,அவர்களை போல மூன்று மடங்கு சம்பளம் வாங்கி போட்ட பாக்தாத் பேரழகி,மீண்டும் வாழ்வேன் இசை ஈடாகுமா? டப்பா தட்டி விட்ட வல்லிசை மன்னருக்கு அந்த பணம் ஒட்டுமா? ஒரு பூக்காரிக்கு போட்ட அளவு கூடவா போட முடியவில்லை?
அன்புள்ள எஸ். கோபால் சார்,
மீண்டும் வாழ்வேன் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. கொடுத்திருந்த பாடல்கள் அவ்வளவு தரமானவை அல்ல என்ற உங்கள் கூற்றை ஒப்புக்கொள்கிறேன். இப்போதும் கூட தொலைக்காட்சிகளில் பாரதியின் நீச்சல் உடை கடற்கரைப்பாடல் பார்க்கும்போது அவ்வளவாக கவரவில்லை. பாரதியின் பொம்மை டான்ஸ் பாடலுக்கு மெல்லிசை மன்னர் ரொம்ப மெனக்கெட்டிருந்தார் என்பது உண்மை. ஆனால் படத்துக்கு வெளியே ஹிட் ஆகவில்லை. ஒரு 'சாந்தி நிலையம்' போல அமைந்திருக்க வேண்டிய பாடல்களை சொதப்பி விட்டார் என்பது உண்மை.
என்றாலும் அவர் ஆள் பார்த்து, இடம் பார்த்து இசையமைக்கிறார் என்ற தங்கள் முந்தைய குற்றச்சாட்டை மறுக்கிறேன். அவருக்கு அந்தந்த நேரங்களில் அமையவில்லை என்பதே உண்மை. இதற்கு ஒரு உதாரணம். 1971-ல் இறுதியில் வந்த இரண்டு படங்கள். இரண்டுமே ஒரே நாயகருடையது (எதற்கு மறைப்பு?. எம்.ஜி.ஆர். அவர்கள்தான்) .
சாதாரண கருப்புவெள்ளைப்படம் 'ஒருதாய் மக்களுக்கு' மணிமணியான பாடல்களை கம்போஸ் செய்தவர், அதே சமயம் வெளியான பிரம்மாண்ட, இரட்டைவேட, வண்ணப்படம் 'நீரும் நெருப்பும்' படத்தின் பாடல்களை எப்படிப்போட்டு சொதப்பியிருந்தார் என்பதை தங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டுமா?.
சவாலே சமாளி படத்தில் அவர் சொதப்பவில்லை. ஒரு கிராமப்படத்துக்கு இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. இருந்தும் இப்படத்தின் பாடலுக்காக பி.சுசீலா அவர்கள் தேசீய விருது பெற்றார். மற்ற கிராமப்படங்களான பட்டிக்காடா பட்டணமா, பொன்னூஞ்சல் படங்களுக்கு இதைவிட சிறப்பான பாடல்கள் கிடைத்தது உண்மை. அது அவ்வப்போது அமைவது.
நான் படப்பாடல்கள் அளவுக்கு மூன்றெழுத்துப் படப்பாடல்கள், படம் வந்த காலத்தில் அவ்வளவு பாப்புலர் இல்லை. கேட்க நன்றாயிருந்தன, ஆனால் வெளியில் பாப்புலராகவில்லை என்பதே உண்மை..