டியர் வினோத் (esvee) சார்
ஞான ஒளி விளம்பரம், பிரேம்நகர், வசந்த மாளிகை புகைப்படங்கள் மற்றும் தங்களுடைய பதிவுகள் அருமை. நன்றி.
டியர் வினோத் (esvee) சார்
ஞான ஒளி விளம்பரம், பிரேம்நகர், வசந்த மாளிகை புகைப்படங்கள் மற்றும் தங்களுடைய பதிவுகள் அருமை. நன்றி.
அன்பு பம்மலார் சார்,
முதல் தேதி அ(இ)ன்று முதல் தேதி காவியத்தின் முதல் வெளியீட்டு விளம்பரம் பதித்து எதிலும் தாங்கள் முதல்வர் என்று மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். காணக் கிடைக்காத விளம்பரம் அளித்ததற்கு என் முதல் நன்றிகள்.
நடிகர் திலகத்தின் நாயகியர். (ஒரு விஷுவல் தொடர் பதிவு)
(தொடர்-1)
நடிகர் திலகம் அவர்களுடன் ஜோடியாக நடித்து தங்களுக்குப் பெருமையையும், மங்காத புகழையும் சேர்த்துக் கொண்ட நடிகைகள் பலர். தலைவருக்கு இந்த நடிகைதான் சரியான ஜோடி... இந்த நடிகைதான் ராசியான ஜோடி, தலைவர் அழகுக்கேற்ற ஜோடி இவர்தான், தலைவர் நடிப்பிற்கு ஓரளவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய நடிகை இவர்தான், வயதான ரோல்களின் நடிகர் திலகம் நடித்தால் இவர்தான் ஜோடியாக சரிப்படுவார்... லவ் சீன்களில் தலைவரோடு கலக்கலாக டூயட் பாடி நடிக்க ஏற்றவர் இவர்தான்... என்று பட்டி மன்றம் வைக்கும் அளவிற்கு நம்மிடையே ஆரோக்கிய வாதங்கள் ஏற்படுவதுண்டு. ஏன் வம்பு? தலைவருடன் நடித்த எல்லா ஜோடிகளையும் புகைப்படங்கள் வாயிலாகவும், வீடியோக்கள் வாயிலாகவும் பார்த்து ஒரு முடிவெடுத்து விடலாமே என்ற சீரிய நோக்கில் தொடங்கப் படுவதுதான் இந்த 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' என்ற புதிய தொடர் பகுதி. வழக்கம் போல இந்த புதிய தொடருக்கும் தங்கள் மேலான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிகர் திலகத்தின் முதல் கொடுத்து வைத்த ஜோடியான பண்டரிபாய் அவர்களின் நடிகர் திலகத்துடனான நிழற்படத்தையும், நடிகர் திலகத்துடன் அவர் ஜோடி சேர்ந்த பாடல் ஒன்றையும் பதிப்பிக்கிறேன். தங்கள் அனைவரது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி!
நடிகர் திலகத்தின் நாயகியர் (1) பண்டரிபாய்
படம்:பராசக்தி
http://i1087.photobucket.com/albums/...1355/1-120.jpg
தலைவருக்கு முதல் காதல் பாடல். தலைவர் படத்தில் பாடாமல் இருந்தாலும் முதல் காதல் டூயட் பாடல் போலல்லவா இது. ரசித்து மகிழ்வோமா?...
"புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போறவரே!"
http://www.youtube.com/watch?feature...&v=PGBryGdL0FQ
(ஜோடிகள் தொடரும்)
அன்புடன்,
வாசுதேவன்.
வாசுதேவன் சார்,
புதிய கோணங்களில் புதிய பார்வைகளில் புதிய அணுகுமுறைகளில் புதிய பரிணாமங்களில் நடிகர் திலகம் என்கிற பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையிலும் புகுந்து ஆய்வு செய்யும் தங்கள் முயற்சிகளுக்கு நம் அனைவரின் ஆதரவும் என்றென்றும் உண்டு. நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளைப் பற்றித் தாங்கள் அளித்த பதிவுகள், எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சி வல்லுநர் பார்வையிலும் படாதது, எப்பேர்ப்பட்ட மேதாவிகளும் அணுகாதது, திரும்பத் திரும்ப தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், தேவர் மகன் என பிரபலமான சில குறிப்பிட்ட படங்களையே சொல்லி நடிகர் திலகத்தை ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிலர் அடைக்க செய்த முயற்சிகளை முறியடித்து அவர் உண்மையிலேயே பல்துறை வித்தகர் என்பதற்கு மற்றுமோர் சான்றாக என் தம்பி, தங்கை, ராஜா, மற்றும் மக்களால் அதிகம் அறியப் படாத படங்களிலிருந்தும் காட்சிகளை வழங்க உள்ள, நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளைப் பற்றிய, தங்களுடைய அலசலும் அணுகுமுறையும் பல சிவாஜி ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்தது. . அந்த வரிசையில் இந்த நாயகியர் அணிவகுப்பும் இடம் பெறும் என்பது திண்ணம். அன்றைய தலைமுறை நாயகியர் தொடங்கி வெவ்வேறு தலைமுறை நடிகையருடன் இணையாக நடித்த அவருடைய சிறப்பினை எடுத்தியம்பும் ஆவணமாக இந்தப் பகுதி இடம் பெறும்.
தங்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
காவியக் காட்சிகள் : 2
பொக்கிஷாதி பொக்கிஷம்
வளர்பிறை(1962)
'பேசும் படம்' இதழிலிருந்து...
[உதவி : நல்லிதயம் திரு. ஜி.மாணிக்கவாசகம்]
இந்த அரிதும் அரிதான விஷுவல் ஆவணப்பதிவை நமது மூத்த சகோதரர் திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு Dedicate செய்கிறேன்..!
http://i1110.photobucket.com/albums/...GEDC6170-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6171-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6172-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6173-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6174-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6175-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6176-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6177-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
[QUOTE=vasudevan31355;917217]நடிகர் திலகத்தின் நாயகிகள். (ஒரு விஷுவல் தொடர் பதிவு)
இந்த 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' என்ற புதிய தொடர் பகுதி. வழக்கம் போல இந்த புதிய தொடருக்கும் தங்கள் மேலான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிகர் திலகத்தின் முதல் கொடுத்து வைத்த ஜோடியான பண்டரிபாய் அவர்களின் நடிகர் திலகத்துடனான நிழற்படத்தையும், நடிகர் திலகத்துடன் அவர் ஜோடி சேர்ந்த பாடல் ஒன்றையும் பதிப்பிக்கிறேன். தங்கள் அனைவரது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி![/color][/B][/size]
டியர் வாசு சார்,
எப்போதும் போல் தங்களின் முயற்சிகளுக்கு அனைவரின் ஆதரவும் என்றும் உண்டு, ஒரு வேண்டுகோள்! கதாநாயகி சமந்தப்பட்ட படம் மற்றும் வீடியோ உடன் அவர் எத்தனை படங்களில் நம் தலைவருடன் பங்கேற்றார் என்பதையும் குறிப்பிட்டால் நன்று.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!
இறைவனாரின் இனிய நிழற்படங்கள், ஒரு கோவிலுக்கு சென்று வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது..!
'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடருக்கு எனது பரிபூரணமான நல்வாழ்த்துக்கள்..! ஆரம்பமே அமர்க்களம்..! அவரது வெள்ளித்திரை முதல் நாயகியான பண்டரிபாய் அவர்களோடு இந்நெடுந்தொடரைத் தாங்கள் துவக்கியிருப்பது மிகப் பொருத்தமான ஒன்று..! தொடர்ந்து அசத்துங்கள்..! கண்டு களிக்க காத்திருக்கிறோம்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
நான் மகிழ்ச்சி அடைவேன் என்பதற்காக தங்களது நட்சத்திர கிரிக்கெட் பதிவில், வந்திருந்த இந்திய அணிவீரர்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்ததற்கும், தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும் எனது ஸ்பெஷல் நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.