http://i1065.photobucket.com/albums/...psrjg3uh9u.jpg
Printable View
கல்லூரி நாட்களில் நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன்../வெறியன்...
நண்பர்களிடம் சொல்வதுண்டு..."எனக்கு பயமாக இருக்கிறது...ஒரு நாள் சிவாஜி இறந்து விட்டால் ,அதை எப்படி நான் தாங்கிக் கொள்ளப் போகிறேன்..?"..
பல ஆண்டுகளுக்குப் பின்..
2001-..ஜூலை மாதம் ..21-ம் தேதி.. ...இரவு ஏழு மணிக்கு மேல் சன் டிவியில் ஏதோ ஒரு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன்...சட்டென்று ஒரு ஃப்ளாஷ் நியூஸ் ....சிவாஜி என்ற பெயர் அதில் ஓடியவுடனேயே ....போய் விட்டார் எனப் புரிந்தது...
ஒரு நொடியில் ..சிவாஜி நடித்த அத்தனை மரணக் காட்சிகளும் ஒவ்வொன்றாக என் மனதில் ஓடி மறைந்தது...
"ஏற்கனவே எத்தனையோ முறை இறந்து காட்டியவன் ..இன்று நிஜமாகவே இறந்து விட்டான்...தாங்கிக் கொள் மனமே.."..என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டேன்..
ஏனோ ஒரு எம்ஜியார் படப் பாடல் அந்த நேரத்தில் ,என் நினைவுக்கு வந்தது...
"தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.."
courtesy net
Delete
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு
எனது விண்ணப்பம்...!
விண்ணப்பம் நீங்கள் ஏற்றுகொண்டால் அனைவரும் மகிழ்வர். எனது மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது !
தங்களுடைய மேற்கூறிய இரண்டு திலகங்களின் படங்கள் வசூல் ஒப்பீடு நமது தரப்பில் இருந்து இப்போது வேண்டாமே சார் !
வேறு ஒன்றும் இல்லை. அது ஒரு சர்ச்சையை கிளப்புமோ என்ற ஒரு ஐயம். ஆகையால் தான் !
இரு பிரிவினரும் நட்பாக பதிவுகள் போடும் நேரம் ..பதிவு செய்துகொண்டிருக்கும் நேரம்....நமது பதிவு அதனை முறிக்க ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற ஒரு ஏக்கத்தில் விண்ணப்பிக்கிறேன்.
எனது விண்ணப்பம் தவறாக இருந்தால் ஏற்க்ககூடியதாக இல்லாமல் இருந்தால் மன்னிக்கவும்.
Regards
RKS
dEAR GOPAL SIR
My hearfelt condolences to you and your family. may god give you the strength to bear the loss.
முத்தையன் அம்மு சார்,
தமிழ்த் திரையுலகின் அழியாப்புகழ் பெற்ற திரைக்காவியமாம் தில்லானா மோகனாம்பாள் நிழற்பட அணிவரிசை அற்புதம். கண்கவரும் துல்லியமான படப்பதிவிற்குத் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். புதிய வித்தியாசமான கோணங்களில் பதிவிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி.
செந்தில்வேல்
நடிகர் திலகத்தின் வித்தியாசமான நிழற்படங்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும். பல்வேறு புதிய கோணங்களில் சிந்தனைகளில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிழற்படமும் அருமை.
#4
RavikiranSurya RavikiranSurya is online now
Senior Member
Veteran Hubber
RavikiranSurya's Avatar Join Date
Jan 2014
Posts
2,247
Post Thanks / Like
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு
எனது விண்ணப்பம்...!
விண்ணப்பம் நீங்கள் ஏற்றுகொண்டால் அனைவரும் மகிழ்வர். எனது மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது !
தங்களுடைய மேற்கூறிய இரண்டு திலகங்களின் படங்கள் வசூல் ஒப்பீடு நமது தரப்பில் இருந்து இப்போது வேண்டாமே சார் !
வேறு ஒன்றும் இல்லை. அது ஒரு சர்ச்சையை கிளப்புமோ என்ற ஒரு ஐயம். ஆகையால் தான் !
இரு பிரிவினரும் நட்பாக பதிவுகள் போடும் நேரம் ..பதிவு செய்துகொண்டிருக்கும் நேரம்....நமது பதிவு அதனை முறிக்க ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற ஒரு ஏக்கத்தில் விண்ணப்பிக்கிறேன்.
எனது விண்ணப்பம் தவறாக இருந்தால் ஏற்க்ககூடியதாக இல்லாமல் இருந்தால் மன்னிக்கவும்.
Regards
RKS
"நடிகர்
உணர்வுகள்
மதிக்கப்படவேண்டியவை
நீங்கள் சொல்வதும் சரி
மேலும்
நடிகர்திலகத்தின் படங்களை மற்ற படங்களோடு கம்பேர் செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை
http://i1065.photobucket.com/albums/...ps1q18x68h.jpg
http://i1065.photobucket.com/albums/...pswisfvln0.jpg
http://i1065.photobucket.com/albums/...pswkoydlir.jpg
ஒரே காட்சியில் தான் இத்தனைவிதமான நவரசங்களும்
என்பதை எத்தனை விஞ்ஞான வளர்ச்சி உலகம் அடைந்தாலும் தமிழன் வியப்படையாமல் இருக்க முடியாது.
http://i1065.photobucket.com/albums/...ps85kdyhx5.jpg
http://www.nadigarthilagam.com/films...manistyle1.jpg
நான் தான் உண்மையான சிவாஜி ரசிகன், இல்லை... இல்லை... நான் தான்... என்று கேள்வி கேட்கவோ விவாதிக்கவோ நேரம் ஒதுக்காமல், கர்மமே கண்ணாக நடிகர் திலகத்தின் உன்னதமான நிழற்படங்களின் மூலம் நடிகர் திலகத்தின் மேல் தங்களுடைய ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தி வரும் கோவை செந்தில்வேல் சிவராஜ் மதுரை சுந்தரராஜன் இருவரும் அளித்து வரும் நிழற்படங்களின் அணிவகுப்பு மட்டுமே போதும்... இந்த திரியின் மேன்மை விளங்கும்.. பல்லாயிரம் சொற்கள் சொல்ல வேண்டியதை அந்த புன்னகை தவழும் மதிமுகம் கொண்ட தெய்வப்பிறவியின் கண்கள் சொல்லி விடுமே... கண்ணுக்குள்ளே என்னைப் பாரு என்று நடிகர் திலகம் சொல்லாமல் சொல்லி நம்மை சொக்க வைக்கும் அந்த உணர்வே போதும்... என்கின்ற அளவிற்கு தொண்டாற்றும் அன்பர்களுக்கு, நிழற்படங்களை வழங்கும் நண்பர்களுக்கு மீண்டும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
திலக சங்கமம்
கூண்டுக்கிளியில் தொடங்கிய நடிகர் திலகம் திரை இசைத் திலகம் கூட்டணி இறுதி வரை சிறப்பான கூட்டணியாகவே விளங்கியது.
http://i1146.photobucket.com/albums/...ps24e2f43a.jpg
தொடர்ந்து 1957ம் ஆண்டில் தமிழ்த்திரையுலகையே புரட்டிப் போட்ட மாபெரும் வெற்றித் திரைக்காவியமான மக்களைப் பெற்ற மகராசி, மிகச் சிறந்த கூட்டணிக்கு வித்திட்டது. எவ்வாறு நடிகர் திலகம்-இயக்குநர் பீம்சிங்-விஸ்வநாதன்-ராமமூர்த்தி என ஒரு கூட்டணி விஸ்வரூபமெடுத்ததோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் நடிகர் திலகம்.இயக்குநர் சோமு-இயக்குநர் ஏபி.என். - கே.வி.எம். என்ற இந்த கூட்டணியும் காவியங்களைத் தரும் கூட்டணியாக உருவெடுத்ததற்கு அச்சாரமானது மக்களைப் பெற்ற மகராசி. தமிழகமெங்கும் வெற்றி பவனி வந்த இத்திரைக்காவியம் சேலம் மற்றும் திருச்சியில் நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடை போட்டது. அன்று தொட்டு இன்று வரை இப்படத்தின் பாடல்கள் பேசப்படுகின்றன. பொங்கல் திருநாளென்றால் வானொலியில் தவறாமல் இடம் பெறும் பாடலாக மணப்பாறை மாடு கட்டி பாடல் அமைந்து விட்டது.
பானுமதி அவர்களின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது மக்களைப் பெற்ற மகராசி.
ஏழிசைக்குரலோன் பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்துத் தந்தது மக்களைப் பெற்ற மகராசி பாடல்கள்.
குறிப்பாக அந்நாளில், அதாவது படம் வெளியான புதிதில், அதிகம் பிரபலமான பாடலைத் தான் நாம் இப்போது காணப் போகிறோம்.
என் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் பிடித்த அந்தப் பாடல், போறவளே போறவளே பொன்னுரங்கம் பாடல் தான்..
இதோ உங்களுக்காக..
https://www.youtube.com/watch?v=QFMh6H5v3SY
இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அபிநயம்... விரலைச் சொடுக்கி கையை மேலே சுழற்றி சிரித்துக் கொண்டே பாடும் அந்த முகத்தின் வசீகரம்...கழுத்தின் பின் பக்கத்தில் அந்தக் குச்சியைப் பரப்பி இருகைகளையும் இருபுறமும் பிடித்துக் கொண்டு ஒயிலாக நடந்தவாறே பாடிக் கொண்டு முகத்தில் அந்த வசீகரப் புன்னகையை வீசி மயக்கும் அழகு இருக்கிறதே..
ஆறிப்போனா போகட்டுமே ஆசை மச்சான் என்று பானுமதி பாடும் போது தலைவர் காட்டும் முக பாவனை.... நம்மை அள்ளிக்கொண்டு போகும்...
.... பாடலை முழுதும் பாருங்கள்.. அனுபவியுங்கள்... அந்த மதிமுகத்தில் தவழும் புன்னகையை...
செந்தில் வேல்
திரிசூலம் நிழற்படம் டிசைன் அருமை.
பாவமன்னிப்பு 51 - பாகம் 3
15. "சாயவேட்டி தலையில கட்டி" பாடல் Lesshit பாடல் தான் என்றாலும் படத்தோடு பார்க்கும் போது நம்மையும் அறியாமல் நமது கால்களை தாளம் போட வைக்கும். இப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.எஸ் மற்றும் குழுவினர் பாடியிருந்தனர்.
16. 'இந்த அளவுக்கு இனிமையாக என்னால் பாடவே முடியாது' என்று ஒரு இசைக்குயில் இன்னொரு இசைக்குயிலைப் பாராட்டியது. ஆம், "அத்தான் என் அத்தான்" பாடலைக் கேட்டு விட்டுத்தான் இத்தகைய மனமார்ந்த பாராட்டை பி.சுசீலாவுக்கு அளித்தார் லதா மங்கேஷ்கர். சாவித்திரியும், தேவிகாவும் போட்டி போட்டுக் கொண்டு perform பண்ணும் இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகம் ஒரு மலர்ந்த புன்னகை விரித்து சீனை தூக்கிக் கொண்டு போய் விடுவார். [இன்றளவும், எனது அத்தை மகன் அத்தானைப் பார்க்கும் போதெல்லாம் அவரை நோக்கி அடியேன் இந்தப் பாடலைப் பாடுவது வழக்கம்.]
17. "வந்தநாள் முதல் இந்தநாள் வரை" பாடலின் டியூன் படத்தில் டைட்டில் மியூசிக்காக தொடக்கத்திலேயே வந்து நமது ஆன்மாவைத் தொடும். பின்னர் பாடல் காட்சியாக வரும் போது கண்ணதாசன், விஸ்ராம், டி.எம்.எஸ் ஆகியோரை சைக்கிளில் செல்லும் சிவாஜி தன் performanceஸால் ஓவர்டேக் செய்து விடுவார். இப்பாடலில் விட்டல்ராவும் ஒளிப்பதிவில் தன் பங்குக்கு தூள் கிளப்பியிருப்பார். 'ரஹீம்' குற்றவாளியாக்கப்படும் காட்சியின் போதும் இப்பாடலின் சரணம் பின்னணியாக ஒலிக்கும். அதற்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார் உதவி இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.
18. 'வந்தநாள் முதல் இந்தநாள் வரை' பாடல் காட்சியில், சிவாஜி அவர்கள் சைக்கிளில் வரும் போது, சைக்கிளின் கேரியரில் ஒரு குழந்தையை வைத்து அழைத்து வருவார். அந்தக்குழந்தை பின்னாளில் சிவாஜி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான, "சின்ன தம்பி", "மிஸ்டர் மெட்ராஸ்" போன்ற திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரவீந்தர்.
19. மேலும், "வந்தநாள் முதல் இந்தநாள் வரை" டியூனையும் படத்தின் டைட்டில் மியூசிக்கிற்காக சேர்த்து ஒலிப்பதிவு செய்த போதுதான், தமிழ்த் திரை இசை வரலாற்றில், முதன்முதலாக, ஒரு படத்தின் ஆரம்ப இசைக்கு மிக அதிகப்படியான இசைக்கருவிகள் பின்னணியில் இசைக்கப்பட்டது. இத்தொடக்க இசைக்காக 60 வயலின், 8 வயோலா, 3 செல்லோ, 1 பாஸ், 4 டிரம்பட், 2 ஸாக்ஸ், 2 டிரம்ப், 2 ஃப்ளூட், 2 தபேலா, 2 டோலக், 2 டிரம் செட் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. "பாவமன்னிப்பு" திரைக்காவியம் ஒரு திரை இசை பிரம்மாண்டம்.
20. "கவியரசரின் பாட்டிருக்கும், இசையரசர்களின் மெட்டிருக்கும், இசையரசியின் குரலிருக்கும், நடிப்பரசரின் நடிப்பிருக்கும்". இவையனைத்தும் இணையும் கீதம் "பாலிருக்கும் பழமிருக்கும்". "பாலும் பழமும்" மட்டுமா சுவை, இந்தப் "பாவமன்னிப்பு" பாடலும் தானே! சுசீலாவின் இனிமைக்குரலுக்கு ஏற்றாற் போல் தேவிகாவும் இப்பாடலில் இங்கிதமாக நடித்திருப்பார். சிவாஜியின் ஹம்மிங் எம்.எஸ்.வியின் சிங்கிங்.
21. ரஹீமின் அழகு முகம், திராவக வீச்சுக்குப் பின், சிதையும் போது அவரது காதலி மேரி(தேவிகா) வந்து பார்த்துவிட்டு தாங்கொணாத் துயரத்துடன் திரும்பிச் செல்கிறாள். அப்போது திலகத்தின் உயிர்ப்பில் டி.எம்.எஸ். குரல் ஒலிக்கும்:
"ஓவியம் கலைந்ததென்று ஓவியர்கள் வெறுப்பதில்லை
உருக்குலைந்த கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை
மறையாத காதலிலே மனங்கனிந்து வந்தாளோ
மறந்துவிட நினைப்பாளோ மறுபடியும் வருவாளோ"
ஆஹா...தமிழிருக்கும் வரை தமிழ்ப்பெரும் கவிஞன் கண்ணதாசனும் இருப்பார்.
நன்றி பம்மல் R. சுவாமிநாதன்
(தொடரும்)
அன்புடன்
நடிகர் திலகத்தின் தொலை நோக்குப் பார்வையில் நம் உலகத்தின் சிறப்புக்கள்Quote:
இன்று உலக பூமி தினம் 2015
உலகின் அனைத்து ஜீவன்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !!
இனியது இனியது உலகம் ...
https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA
உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது
https://www.youtube.com/watch?v=ePriq_xpWLo
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி
https://www.youtube.com/watch?v=3NmW-RVilzk
அதிசய உலகம் ரகசிய இதயம் ..
https://www.youtube.com/watch?v=QKkw0-tbqmk
நான் மகனின் பட்டமளிப்பு விழா காண நீண்ட விடுமுறையில் செல்கிறேன். நான் விரும்பி கொண்டாடும் இரு தினங்கள் . உழைப்பாளர் தினம் .(மே ஒன்று). மற்றது சரஸ்வதி பூஜை (அறிவு வேள்விக்காய்)
மே தினத்தில் நான் திரும்ப போட எண்ணிய மூன்று படங்கள் .ஒன்று நகர உழைப்பாளிகளின் ஒற்றுமை மற்றும் சங்க அமைப்பை பேசியது .(1960)
மற்றது நில சுவான்தார்களின் சுரண்டல் . முறைசாரா உழைக்கும் வர்க்கத்தின் ஓங்கிய குரல் (1971).
மற்றது ரிக்ஷா இழுக்கும் நகர கூலி தொழிலாளியின் மேன்மை நோக்க உழைப்பை பேசி உருக்கியது.(1971)
மூன்றுமே நடிகர்த்திலத்தின் உயர் காவியங்கள். உழைப்போர் நாளுக்கு வேண்டி ,எங்கள் திரியில் உயர் பங்கு அளித்து வரும் திரு முத்தையன் அவர்களுக்கு சமர்ப்பணமாக மே ஒன்றுக்காக இன்றே பதிக்கிறேன்.
தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 1960 பொங்கலுக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி வாகை சூடிய காவியம் இரும்பு திரை படத்தின் விமரிசனம் மீள்பதிவு செய்ய படுகிறது..
தொழிலாளர் பிரச்சினையை தீவிரமாய் பேசிய படம்.
இரும்புத்திரை (iron curtain )- 1960
எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம்.
நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.
மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார்.
அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில்(Stanislavsky Method Acting) நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை.
ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)
இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?
இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.
கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.
இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிர்க்க முடியாத குறை.தங்கவேலுவிற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )
பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).
ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)
வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.
((தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 03/07/1971 இல் நடிகர்திலகத்தின் 150 வது காவியமாய் வந்து பெரு வெற்றி பெற்ற அற்புத காவியத்தின் மீள்பதிவு .)
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.
1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
உழைப்பாளர்களை மகான்களாய் பெருமை படுத்திய உயர்ந்த காவியம் பாபு.உழைப்பாளர் தினத்தில் நினைவு கூர்வதை பெருமையாய் நினைத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன்.
பாபு- 1971.
சிவாஜி ரசிகர்களுக்கு நினைக்கும் போதே கண்களை குளமாக்கி இதயத்தை கசிய வைக்கும் படங்களில் முதல் சில இடங்களில் இருப்பவற்றில் முக்கியமான படம் பாபு.அதுவரை உழைப்பவரை அலட்சியம் செய்யா விட்டாலும் ,அவர்களை தேவை படும் மனிதர்களாய் மட்டும் எண்ணி கொண்டிருந்த மனப்பாங்கை, திருப்பி போட்ட படம்.இந்த படம் கண்ட பிறகு,ஒவ்வொரு முறையும் ரிக்ஷா இழுப்பவரையோ அல்லது கூலி தொழிலாளர்களையோ பார்க்கும் போது ,இவர்கள் ஏதோ பிற குடும்பத்தையோ அல்லது தன குடும்பத்தையோ காப்பாற்றவோ அல்லது யாரையாவது படிப்பிக்கவோ,தன சுக துக்கம் கருதாது ,தன்னை வருத்தி பிறரை வாழ வைக்கும் உன்னதர்களாய் பார்க்கும் பார்வையை எனக்கு அளித்த உயர்ந்த படம்.எண்ணத்தில்,செயலில்,வாக்கில்,உருவாக்கத்தி ல் எல்லாவற்றிலும்.மனிதம் வாழ்வதே ,ஜீவித்திருப்பதே ,பாபு போன்ற படங்களின் பங்களிப்பால்தான் சாத்தியமான ஒன்று.
உருக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும், சிவாஜியின் உழைப்பால் மட்டுமே உயரத்தை அடைந்த படம் பாபு.கேசவ தேவ் 50களில் எழுதிய பிரபலமான ஓடையில் நின்னு (சாக்கடை அல்லது குட்டை)என்ற கதையை அதே பெயரில் மலையாளத்தில் சத்யன் கதாநாயகனாய் 1965 இல் சேது மாதவன் இயக்கத்தில் வந்து வெற்றி கண்ட படம். தமிழில் ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பதால்,இன்னும் உயரங்களை தொட சாத்யகூருள்ள இந்த மொழிமாற்று படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இன்னும் அர்த்தத்தை,சுவாரஸ்யத்தை கூட்டினார் திருலோகசந்தர். தமிழில் இடை வேளைக்கு முன்பு ஏராள மாற்றங்கள், இடைவேளைக்கு பிறகு சிறிதே மாற்றங்கள்.கதாநாயகன் குண விசேஷங்கள்,காதல்,அந்த சிறு பெண்ணின் மேல் விளையும் அன்பு இவற்றில் சிறிதே அர்த்தமுள்ள தமிழுக்கேற்ற மாற்றங்கள் கண்டது.பல வண்ணங்களை மண்ணை கவ்வ வைத்து பிரம்மாண்ட வெற்றி கண்டு ,சாதனை புரிந்தது.
சுருங்க சொன்னால் நூறு நூறாய் கொட்டி கொடுத்தும் கடவுள் கைவிட்ட குடும்பத்தை, ஒரு வேளை சோறு போட்ட மனித கடவுள் தனியொருவனாய் போராடி வென்று தன்னையே தேய்த்து கொள்ளும் துன்பியல் மனிதம். பாபு ஒரு தன்மானம் நிறைந்த சிறுமை கண்டு பொங்கும்,உழைத்தே உண்ண விரும்பும் அநாதை மனிதன்.பல வேலைகள் பார்த்தும் நிலைக்க முடியாமல்,தற்செயலாய் ஒருவனுக்க உதவ கை ரிக்ஷா இழுக்க ,அதுவே அவன் ஜன்ம பிழைப்பாக மாறுகிறது.ரிக்ஷா நிறுத்தத்தில் சோறு கொண்டு வரும் கண்ணம்மாவுடன் காதல்.ஒரு நாள் ஒரு வேளை ஒரு அதிசய மனிதர் மற்றும் அவர் குடும்பத்தை தற்செயலாய் சந்திக்கும் பாபு ,அவர்களின் மனித தன்மையால் ஈர்க்க படுகிறான்.பிறகு காதலியை கற்பழித்த கொன்றவனை தற்செயலாய் கொலை செய்து ,இரண்டு வருட தண்டனை பெற்று திரும்ப,நண்பர் பிள்ளை அவன் முற்கால சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு சொந்த கைரிக்ஷா வாங்கி தர,தான் சந்தித்த குடும்பத்தின் சிறுமி மற்றும் அவள் அன்னையை வறுமையில் சந்திக்கும் பாபு(குடும்ப தலைவரின் அகால மரணத்தால்),அந்த குடும்பத்திற்கு உதவ ஆரம்பிக்கிறான்.ஒரு சந்தர்பத்தில் ரௌடிகளால் சிறுமியின் அன்னைக்கு தொல்லை விளைய ,அந்த குடிசை வீட்டின் திண்ணையில் குடியேறும் பாபு,அந்த சிறுமியை நன்கு படிக்க வைத்து அந்த குடும்பத்தை முன்னேற்ற மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது தன்னையே வருத்தி ,ஒரே நோக்கில் உழைத்து, வயதுக்கு மீறி முதுமை கண்டு ,சயரோகம் பிடியில் அவதியுற்று(மருத்துவம் காணாமல்), சிறுமியை பட்டதாரியாக்கி ,அவள் உயர்ந்த இடத்தில் வாழும் நிலையில் ,அவள் திருமண தினத்தன்று மரிக்கிறான்.
பாபுவின் சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது நடிகர்திலகத்தின் அபார நடிப்பு. ஒரு சுயமரியாதையுள்ள உழைப்பாளி ,சிறுமை கண்டு பொங்கும் போராளி, அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகும் அநாதை,வெளிப்படையான நேர்மனிதன்,மற்றோர் அலட்சியங்களை உதாசிக்கும் ஞானி,பின்னாட்களின் ஒரே நோக்கம் கொண்ட வயதுக்கு மீறி உழைப்பாலும்,தன் உடலை பேணா மடந்தையாலும் ,தளர்ந்த வியாதி காரனாய்,லட்சியத்தில் தளரா ,உயர் நோக்கு கொண்ட மேன்மையடைந்த(மென்மையும் ) மனிதனாய் என்று அற்புதமான பாத்திரம்.
பாபுவின் லட்சிய பிடிப்பு அவனை எந்த தொழிலிலும் நிலைக்க விடாத தருணங்களிலும்,காதல் சிறிதே இளக்கும் தருணம் விபத்தில் தன் ஒரே பிடிப்பையும் இழக்க, இந்த அநாதை தேர்ந்தெடுப்பதோ(வாழ்க்கையை அர்த்த படுத்தி கொள்ள) தன்னை ஒரு நாள் சமமாக நேசித்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நலம் என்று ஒரே நோக்கு.தன் தகுதிக்கும் மேலாய் வளர்க்க படும் வளர்ப்பு மகளின் உதாசீனம்,போலி கௌரவ மனப்பான்மை, விடலை வயதுக்கேற்ற விலகல் மனப்பான்மை எல்லாவற்றையும் ஒரு துறவு மனத்தோடு அணுகும் மேன்மை.எதுவுமே ,அந்த குடும்ப மனிதர்களின் நேசத்தையும் சிதைக்காமல்,பாபுவையும் வதைக்காமல் உடனுக்குடன் தீரும் அற்புத அணுகல். பாபுவின் கடைசி நிமிட விலகல் (தன் வளர்ப்பு மகளால் கடந்து வந்த தாழ்வு மனப்பான்மை தந்ததாய் இருக்கலாம்) என்று இந்த படத்தில் ,ஒரு சமகால தமிழ் படங்களில் அன்று காண கிடைக்காத அதிசய முத்துக்கள் ஏராளம்.
நடிகர்திலகத்தின் ஒப்பனை,சிகை அலங்காரம் எல்லாமே புதுசாய் .... வழித்து முன் தள்ளி வாரிய தலை முடியுடன் ஒல்லி உடம்புடன் ,அவ்வளவு cute திராவிட மன்மதன் முற்பாதியில்.பின் பாதியில் ரோகம் கண்டு ,வயதுக்கு மீறிய தளர்ச்சி கண்டு சிக்கான தாடி மீசையுடன் என்று முற்றிலும் புதிசு. இடை வேளை வரை யதார்த்த நடிப்பு. இடைவேளைக்கு பின் எப்படி விவரிக்க? இந்த மாதிரி படங்களுக்குத்தான் நடிகர்திலகம் போன்ற மேதையே தேவை படுகிறார்.நோக்கம்,செயல், எல்லாவற்றிலும் அசாதாரமான மனிதனான பாபு,தன்னை வருத்தி அழித்து கொள்வதிலும் அசாதாரணம் தான். மிகை யதார்த்தமாய் மாறும் பாத்திரத்தில் (சாதாரண குப்பன் சுப்பன் முனியன் போன்றதல்ல )இந்த உணர்வை, மாறு நிலையை ஒரு mystic கலந்த ,நோக்கம் தளரா,உடல் தளர்ந்த,உதாசீனம் மட்டுமே கண்டு ஒடுங்கிய மனிதனை ,சிவாஜி சித்திரிக்கும் நடிப்பு ஒரு மந்திர செயல்.
பாபு என்ற இந்தியா ஜெயிக்க ,சிவாஜி என்ற கவாஸ்கர் நடிப்பில் போட்டிருக்கும் செஞ்சுரியே காரணம் (அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றிருந்தது புதுமுக கவாச்கரால்)என்று விமரிசித்த துக்ளக் வாயில் சர்க்கரை போடலாம்.(உதிரி பூக்கள் புகழ் மகேந்திரன் விமரிசகர்).முக்கியமாக, ரிக்ஷா இழுத்து உழைக்கும் காட்சிகள், குடும்பத்திடம் ஈடு படும் காட்சிகள், பள்ளிக்கு சென்று வகுப்பறையில் தான் கஷ்டப்பட்டு பீஸ் கட்ட சேர்த்த பணத்தை அம்முவிடம் கொடுக்க ,அம்முவின் சங்கடம் அறியாது நகைக்கும் குழந்தைகளை வாழ்த்தி செல்வது,அம்முவின் drift புரிந்தாலும் அதீத ஈடுபாட்டால் அவளையே சாரும் கட்டங்கள்,அவள் நலனுக்காக என்று போராடும் கட்டங்கள்,லட்சியத்தை நிறைவேற்றி காணும் திருப்தி,நேரடியாக பங்கேற்காமல் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தில் மறைமுக பங்கேற்ப்பு,சிகிச்சை இல்லாமல் நோயுடன் போராடி உழைக்க முயன்று தோற்கும் இடங்கள் என்று அப்படியே மனதை பிசைந்து புண்ணாக்கி விடுவார். கதற வைத்து ,மனிதம் வளர்ப்பார் இந்த பிறவி மேதை.
தன்னை இவர் வருத்தி கொண்டது சொல்லி மாளாது. ரிக்ஷா இழுக்கும் கட்டத்தில் ,(கோடம்பாக்கம் பாலம் அருகே)மார் வலியால் அவதியுற்று ரத்தம் கக்கி நடிப்பாராம். ரிக்ஷாவை காலால் தூக்கும் சத்யன் ஸ்டைல் வர ஒரு மாதம் ஒத்திகை பார்த்தாராம்.(எம்.எஸ்.வீ உபயம் ,மெகா டீவீ)
சிவாஜி-திருலோக் கூட்டணியில் தெய்வ மகனுக்கு அடுத்த அற்புதம் இந்த காவியம்.
தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 1960 பொங்கலுக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி வாகை சூடிய காவியம் இரும்பு திரை படத்தின் விமரிசனம் மீள்பதிவு செய்ய படுகிறது..
தொழிலாளர் பிரச்சினையை தீவிரமாய் பேசிய படம்.
இரும்புத்திரை (iron curtain )- 1960
அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),
https://www.youtube.com/watch?v=5_lghtjmgzU
நெஞ்சில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
https://www.youtube.com/watch?v=R5xuTfQcHeA
நடிகர் திலகத்தின் ஆண்மை நிறைந்த கம்பீரமான அழகு.....அப்பப்பா...அந்த தேங்காய் எண்ணெய் தடவி வாரிய கரு கரு சுருள் கேசம்.....தெளிந்த நீரோடையான அந்த கண்கள் ....மாம்சளமான அந்த மொழுக்கேன்றிருக்கும் முகத்திற்கு ஏற்ற உடலமைப்பு..உடலுக்கேற்ற அந்த நடை... இறைவன் கலையுலகில் படைத்திட்ட ஒரே ஒரு அரிதாரம் பூச தகுதிகொண்ட அவதாரம் ....நடிகர் திலகம்....காண கண் இரண்டு போதாது !
RKS
ரவி,
சமீப காலங்களில் ,நாம் பழைய கசப்புகளை மறந்து நட்பு காணும் திசையில் பயணிக்கிறோம். உங்கள் எழுத்துக்களில் அசாத்திய மெருகு தென்படுகிறது. உங்கள் பணி ,இந்த திரியில் தேவை படுகிறது. உங்கள் மன வருத்தத்திற்கு காரணமான நானே, மனப்பூர்வமாக அழைப்பு விடுக்கிறேன். உங்கள் மனமும், விருப்பமும் இங்குதான் என்பதை அறிவேன்.
இங்கே வாருங்கள் .உன்னத விஷயங்களை எழுதும் போதுதான் உங்கள் எழுத்தின் உன்னதம் ஊருக்கு தெரியும். .பாடுபொருளை பொறுத்தே , எழுத்துக்களின் உண்மையும் ஒளி பெறும்.. ராமபிரானை பாடியதால் கம்பர் நினைக்க பெற்றார்.
வாருங்கள். நான் உங்கள் தலை ரசிகனாக இருப்பேன்.
RARE STILL.
http://i59.tinypic.com/2qn5biq.jpg
எல்லோருக்கும் இனிய வணக்கம் - திரியை சாந்தப்படுத்தின, திரிக்கு போதிய "சாந்தி"யை தந்து கொண்டிருக்கும் ( பார்ட் 1 & 2) திரு முரளிக்கும் , சிவாஜி ஒருவரையே சுவாசிக்கும் மூச்சாக நினைத்து , நடிகர்திலகம்.காம் 9வது அடி எடுத்து வைக்க founding father ஆக இருக்கும் திரு ராகவேந்திரா அவர்களுக்கும் , புதிய முயற்ச்சியில் நடிகர் திலகத்தை அலசும் திரு சிவாஜி செந்தில் அவர்களுக்கும் - அருமையான பதிவுகளை அசர வைக்கும் வேகத்தில் பதிவிடும் திரு சுந்தரராஜன் அவர்களுக்கும் , அருமையான ஆவணங்களை பதித்து , பம்மலார் இங்கு வருவதில்லை என்ற குறையை தீர்க்கும் திரு செந்தில்வேல் அவர்களுக்கும், நக்கீரர் திரு RKS அவர்களுக்கும் ஏனைய என் நெருங்கிய தோழர்களுக்கும் (திரு கோபால் உட்பட ), மக்கள் திலகம் திரியை சேர்ந்து இருந்தாலும் ஒற்றுமையை வளர்க்க வேண்டி இங்கு வந்து பதிவுகள் இடும் அன்பு சகோதர்களுக்கும் இந்த இரு பதிவுகளை அன்புடன் சமர்ப்பிக்கின்றேன் .
பல நாட்களாக ஆசைப்பட்டது சமீபத்தில் தான் நிறைவேறியது - நடிகர் திலகம் என்ற கடலின் ஆழத்தில் செல்லும் பொழுது அந்த நடிப்பு என்னும் கடலின் அடியில் தான் எவ்வளவு முத்துக்கள் சிதறிக்கிடக்கின்றன - சில முத்துக்களைத்தான் நம்மால் பொறுக்கி எடுத்துக்கொள்ள முடிகின்றது - எல்லா முத்துக்களுமே என்னையும் அள்ளிக்கொள்ளேன் என்று சொல்லும் போது , கைகளின் அளவுகள் நமக்கு தடையாக வருகின்றன - மீண்டும் வருவேன் உங்களை அள்ளிக்கொள்ள என்று எடுக்கமுடியாத முத்துக்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பவும் கறைக்கு வர வேண்டியதாக உள்ளது - அப்படி எடுத்து வந்த இரண்டு முத்துக்களைத்தான் இங்கு ஒரு புதிய கண்ணோட்டத்தில் அலச விழைகின்றேன் ....
முதல் முத்து - சாரங்கதாரா
இரண்டாவது முத்து - ராணி லலிதாங்கி
சாரங்கதாரா - NT யின் 50 வது படம் என்ற சிறப்பு உடையது . வெளியான தேதி 15-08-1958. திரை படங்களில் தோன்ற ஆரம்பித்த 6 வருடங்களில் 50 வது இலக்கை வேறு எவரும் அடைந்திருக்க முடியாது - 6 வருடங்களில் எதுவுமே ஏனோ தானோ படங்கள் அல்ல - ஏன் தான் அப்படிப்பட்ட படங்கள் இப்பொழுது வருவதில்லை என்று இன்றும் நம்மை எங்க வைக்கும் முத்துக்கள் - ஒவ்வொரு படமும் தனிப்பட்ட சிறப்பு , நடிப்பு என்று வெளி வந்த வண்ணம் இருந்தன - ஒரு வேளை உண்ண உணவில்லாதவனுக்கு , வடை பாயாசத்துடன் மூன்று வேளைகளிலும் விருந்து கிடைத்தால் எப்படி இருக்கும் ! - தமிழ் பசியுடன் இருந்தவர்களுக்கு - அந்த பசியை அறவே ஒழித்த படங்கள் , சண்டை காட்ச்சிகள் இப்படித்தானா இருக்கும் என்று வீர பசியுடன் இருந்தவர்களுக்கு , இப்படித்தான் சண்டை காட்ச்சிகள் இருக்க வேண்டும் என்று உணர்த்திய படங்கள் , காதல் காட்சிகள் இன்று வருவதைப்போல அல்ல , விரசம் அல்லாமால் அதே சமயம் விவேகம் நிறைந்த , கண்ணியம் நிறைந்த , மென்மை நிறைந்த , மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் காதல் காட்ச்சிகள் , நாம் மறைந்த பின்னும் வாழப்போகும் இனிய இசையுடன் கலந்த பாடல்கள் , முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவைகள் ,இத்தனை அம்சங்களுக்கும் , உணர்ச்சி , உயிர் கொடுக்கும் அம்சமான நடிப்பு, அழகான தோற்றம் - இப்படி அமைந்தன அவர் நடித்து காட்டிய படங்கள் - படம் எடுத்தவர்களின் முகத்தில் ஆனந்தம் , படம் பார்த்தவர்களின் முகத்தில் , இப்படியும் ஒரு நடிப்பா என்ற ஆச்சிரியம் , படம் பார்க்காதவர்களின் முகத்தில் ஒரு பரபரப்பு , சொல்ல முடியாத சோகம் , பார்க்க விரும்பாதவர்கள் முகத்தில் ஒரு கேள்விக்குறி -- இப்பத் நகர்ந்தன அந்த இனிய நாட்கள் - இன்று நினைத்தாலும் அன்று அடைந்த சுகம் அதே அளவில் மீண்டும் நமக்கு கிடைக்கின்றது - அந்த அக்ஷய பாத்திரத்தில் இருந்து வெளி வந்த ஒரு துளி அமிர்தம் தான் " சாரங்கதாரா " .
(தொடரும் )
இந்த படத்தைப்பற்றிய அலசலை ஒரு கேள்வி - பதில் முறையில் தந்துள்ளேன் சற்றே புதிய முறையில் .
1. நீங்கள் இவ்வளவு பழைய படத்தை அலச காரணம் ? 70, 80, 90 இல் வந்த படங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டிருக்கலாமே ??
Nt படங்கள் எல்லாமே சுவையில் தேனைக்காட்டிலும் இனியவை - எதை விடுவது , எதை எடுப்பது என்று ஒரு குழப்பம் - அதிகமாக பேசப்படாத , ஆனால் பேசப்படவேண்டிய படங்கள் சில வற்றை பற்றி சிறிது பேசலாமே என்ற ஒரு ஆசைதான் காரணம் .
2. இந்த படம் சுதந்திர தினத்தன்று வெளிவந்து nt க்கு 50வது படம் என்ற சிறப்பை தந்ததாமே - உண்மையா ? மேலும் தெலுங்கில் வந்த இதே படம் (ntr ஹீரோ ) இறுதி கட்டத்தில் கதையில் மாறுப்பட்ட படமாமே ?
இமயத்தின் சிகரத்தை தொட்டவருக்கு - 50வது படத்தை 6 வருடங்களில் தொடுவது என்பது நாம் ஒருமுறை கண்ணை மூடி திறப்பதுபோல ----- தெலுங்கில் கதையின் இறுதியில் விரும்பத்தக்காத சில காட்ச்சிகளை திணித்திருப்பார்கள் .
3. இந்த படத்தின் கதையை உங்களிடம் கேட்பதற்கு முன் , இப்படத்தின் வில்லன் யார் ? P .u சின்னப்பாவா ?
இந்த படத்தில் இரண்டு வில்லன்கள் - ஒன்று இப்படத்தின் கதை , மற்றும் ஒருவர் m .n நம்பியார் . கதை mnn யை வில்லத்தனத்தில் இருந்து பல படிகள் கீழே இறக்கி விடுகின்றது .
4. வில்லன் -கதையை பற்றி சுருக்கமாக -------
அதிகமாக நானும் விளக்க விரும்பவில்லை - ராஜா ராணி கதை - இளவரசர்- சாரங்கதாரா (nt ) அழகிலும் , பாடும் திறமையிலும் , போரிலும் , மற்றவர்களை மதிக்கும் பண்பாட்டிலும் , அமைதியாக பேசுவதிலும் , மற்றவர்களை பாராட்டி நட்ப்பை வளர்த்துக்கொள்வதிலும் சிறந்தவர் - விளையாடுத்தனமாக தன் உற்ற நண்பனுடன் புறமுது கொண்டு போரில் திரும்பி வந்த சேனாதிபதியை ( mnn ) கிண்டல் செய்கிறார் - அந்த கிண்டல் அவருக்கு எதிராக ஒரு சதி திட்டத்தை உருவாக்க காரணமாகின்றது . அடுத்த நாட்டின் இளவரசி - சித்ராங்கி ( பானுமதி ) எதேர்ச்சையாக இளவரசரை சந்திக்கின்றாள் - எவரையும் மயக்கும் மன்மதனின் அழகில் தன்னை பறிகொடுக்கின்றாள் . இளவரசரோ தனது நாட்டில் இருக்கும் ஒரு கவியின் மகளை ( ராஜசுலோசனா ) விரும்புகிறான் . இளவரசரின் தந்தை - நாட்டின் மன்னர் - ராஜராஜ நரேந்திரா ( ரங்கராவ் ) மன்னர் இரு நாட்டிற்கும் வெகு நாட்களாக இருக்கும் சண்டையை , இவர்களை இணைத்து வைப்பதின் மூலம் தீர்த்து விடலாம் என்று நினைத்து இளவரசனை திருமணம் செய்துகொள்ள கட்டாயம் படுத்துகின்றார் - என்றுமே தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் சாரங்கன் இந்த திருமணம் இந்த ஜென்மத்தில் நடக்காது என்று திட்டவட்டமாக தன் தந்தையிடம் சொல்லி விடுகிறான் - இந்த சண்டையை சேனாதிபதி தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்கிறான் - மன்னரரின் மனதை மாற்றி , இரு நாட்டுகளின் ஒற்றுமைக்காக என்று சொல்லி சித்ராங்கிக்கும் , சாரங்கனுக்கும் தான் திருமணம் என்று சொல்லிவிட்டு , மன்னரையே சித்ராங்கிக்கு தாலி கட்டும் படி செய்து விடுகிறான் . முதல் இரவில் உண்மை தெரிந்து சித்ராங்கி எரிமலை என வெடிக்கின்றாள் - தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு இளவரசரும் ஒரு காரணம் என்று நினைக்கின்றாள் - இருந்தாலும் அவனை அடையும் மோகம் அவளை விட்டு விலக மறுக்கின்றது - புறாக்களின் பந்தயம் என்ற ஒரு போட்டியின் மூலம் தனது தனி இடத்திற்கு சாரங்கனை அழைக்கின்றாள் - தன் புறாவை திரும்ப பெற , அவளை சந்திக்க சம்மதிக்கின்றான் சாரங்கன் - ஒரு பேசாத புறாவினால் என்ன பயன் - பேசும் இந்த புறாவை எடுத்துக்கொள்ளுங்கள் என்று இளவரசரிடம் மன்றாடுகின்றாள் . எதற்கும் இளையாத சாரங்கன் அவளை தன் சிற்றன்னை என்று சொல்லி வணங்குகின்றான் - அந்த இடத்தில் இருந்து வெறுப்புடன் வெளியேறுகிறான் - சற்று நேரத்தில் அங்கு வரும் மன்னர் சித்ராங்கியின் சோகத்தையும் , அங்கு விடப்பட்ட சாரங்கனின் சில தடயங்களையும் இணைத்து சாரங்கன் தவறான முறையில் அங்கு வந்து , சித்ராங்கியை மான அவமானம் செய்திருப்பான் என்று தப்பு கணக்கு போட்டு அவனுக்கு சேனாதிபதியின் தூண்டுதல் மூலம் மரண தண்டனை விதிக்கிறார் . சேனாதிபதிக்கு அவன் திட்டம் நிறைவேறுவதில் மிகவும் மகிழ்ச்சி -- இதன் நடுவில் இளவரசர் உண்மையாக காதலிக்கும் கவியின் மகள் சித்ராங்கியை சந்தித்து இளவரசர் ஒரு நிரபராதி என்றும் , தனக்கு வாழ்வு கொடுக்கவேண்டி உண்மையை மன்னரிடம் சொல்லி , இளவரசரை மரண பிடியிலிருந்து விடுவிக்க கெஞ்சுகிறாள் - இறுதியில் சித்ராங்கியின் மனம் தெளிவடைகின்றது - இளவரசரை காப்பற்ற , அவனை கொல்ல இருக்கும் பட்டறைக்கு ஓடுகின்றாள் - சேனாதிபதியின் கத்திவீச்சுக்கு பலியாகுகிறாள் - மன்னர் தன் தவறை உணர்ந்து இளவரசரை விடுவிக்க ஆட்களை அனுப்புகிறார் - அவர்கள் சேனாதிபதியை கொன்று இளவரசரை மீட்கிறார்கள் - முடிவு கவியின் மகளை மணந்துகொள்கிறான் இளவரசன் - சந்தோசம் , மகிழ்ச்சி திரும்புகின்றது அவன் ஆட்சி செய்யும் நாட்டில் -------
(தொடரும் )
5. இந்த படம் உங்களை கவர காரணங்கள் ----
பல காரணங்கள் - ஒன்று , இரண்டு மட்டும் குறிப்பாக சொல்கிறேன் - தன்னை விட மூத்த , திறமையான நடிகையுடன் நடிப்பதாகட்டும் , கதை பலவீனமாக இருந்தால் என்ன , நான் இருக்கிறேன் , என்னை நம்புங்கள் என்று சொல்லும் நடிப்பு , வயதிற்கும் மீறிய சவால்கள் - அவைகளை சமாளிக்கும் விதம் - காதலில் ஒரு மென்மை - பாடலில் ஒத்துபோகும் உதடசைவுகள் - போர் வாள்களுக்கும் வீரம் சொல்லித்தரும் அழகு --- இப்படி எத்தனையோ இந்த படத்தில் --
6. முத்திரை பதித்த சில இடங்கள் ( எல்லாம் இடங்களும் தான் என்று சொல்லாதீர்கள் )--------
பானுமதியை சிற்றன்னை என்று சொல்லும் அந்த இடம் - கல்லையும் கரைய வைக்கும் - அந்த உயர்ந்த பண்பு - காமத்திற்கு இணங்காத உள்ளம் - அந்த காட்ச்சியை நீங்களும் பாருங்களேன் !
https://www.youtube.com/watch?v=LX7Pc5aScOA
7. பானுமதியின் நடிப்பு -----
அருமை - தனது ஏமாற்றத்தை எவ்வளவு அழகாக வெளிபடுத்துகின்றார் - சாரங்கனை தனது இடத்திற்கு வரவழைக்கும் திட்டம் - தனது செய்கையிலும் ஒரு நியாயம் உள்ளது என்று அடித்து சொல்லும் விதம் - பேசும் அழகு - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .
8. மற்றவர்களின் நடிப்பை பற்றி ------
உங்கள் அடுத்த கேள்வி ..
9. பாடல்கள் எப்படி ???
பாடல்கள் நிறைந்த படம் - மனம் நிறைந்த பாடல்கள் - இரண்டு பாடல்கள் இன்றும் புறாக்கள் போல நம்மை சுற்றி வருபவைகள் - இந்த புற ஆடவேண்டுமானால் --- இளவரசர் பாட வேண்டும் ---- இரண்டாவது பாடல் - " வேறு என்ன வேண்டும் !" - மனதை சாந்தபடுத்தும் வார்த்தைகள் ...
10.இந்த படம் உங்களுக்கு பிறகு வெளிவந்த படங்கள் எதையாவது நினைவுபடுத்துகின்றதா ?
ஆமாம் . "எதிர்பாராதது "- தனையன் மணக்க வேண்டியவளை தந்தை மணந்து கொள்வது . இரண்டாவது படம் நடிகர் திலகத்தின் 175வது படம் - "அவன் தான் மனிதன் " - அதிலும் ஒரு புறாதான் கதையை முடிக்கின்றது - இதில் அந்த புறா கதையை மாற்றுகின்றது . இரண்டிலும் புறாவின் நிறம் "வெள்ளை " அவரின் மனதை போல - அவரின் ரசிகர்களின் மனதை போல ...
11. கடைசி கேள்வி - எல்லோருக்கும் பிடிக்கும் ஒருவரை ஏன் சில பேர் வெறுக்கிறார்கள் - அவரை மாதிரி நடிக்க யாருமே இன்று இல்லை, இனியும் பிறக்கப்போவதில்லை என்று தெரிந்தும் ஏன் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் இடம் தருவதில்லை ?
இந்த உங்கள் கேள்விக்கு இந்த ஒரு சின்ன உதாரணம் போதும் என்று நினைக்கிறேன்
இறைவனிடம் ஒருவன் ஒரு வரம் கேட்டானாம் - " எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நான் இருக்கணும் " என்று .
இறைவன் சிரித்துக்கொண்டே சொன்னானாம் " எனக்கே அந்த வரம் இன்னும் கிடைக்கவில்லை என்று "
12. விடை பெரும் முன் உங்கள் அடுத்த அலசல் ----?
முன்பே சொன்னதைப்போல சிறிது இடைவெளி விட்டு எடுத்துக்கொள்ளப்போகும் படம் சிறப்பான நடிப்பையும் , நடனத்தையும் , பாடல்களையும் கொண்ட "ராணி லலிதாங்கி "
13. வணக்கம் - உங்களுடன் உரையாடியதில் , ஒரு நல்ல படத்தை பற்றிய கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி - நான் வேகமாக விடை பெற்று செல்லும் காரணம் உங்களுக்கு தெரிந்திருக்கும் - ஆமாம் - " சாரங்கதாராவை " கண் கொட்டாமல் இன்றே , இப்பொழுதே பார்க்கத்தான் ..
14. வணக்கம் - எனக்கு புரிந்த வகையில் , எழுத தெரிந்த வகையில் என் கருத்துக்களை பதித்துள்ளேன் - அதை பொறுமையுடன் படிப்பதற்கு உங்கள் எல்லோருக்கும் என் நன்றி . மீண்டும் "ராணி லலிதாங்கி யில் " சந்திப்போம் - அதுவரை --
அன்புடன்
ரவி
சில technical questions யை கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் உடனே உதவிக்கு ஓடிவந்த திரு வாசுதேவன் ( நெய்வேலி ) , திரு வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி .
எதனால் சிம்மக்குரலோன்?
http://i1065.photobucket.com/albums/...ps206thzkz.jpg
திலக சங்கமம்
http://i.minus.com/jbsEu41DBDeIZ6.jpg
மக்களைப் பெற்ற மகராசியைத் தொடர்ந்து நடிகர் திலகம் - கே.சோமு - கே.வி.எம். கூட்டணியில் வெளிவந்த அடுத்த திரைக்காவியம் சம்பூர்ண ராமாயணம் . பெரும் வெற்றி பெற்றதோடு மூதறிஞர் ராஜாஜி பரதனைக் கண்டேன் என நடிகர் திலகத்தை வியந்து பாராட்டிய பெருமை பெற்றது. திரை இசைத் திலகம் கே.வி.எம். அவர்களும் இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களும் கர்நாடக இசை அடிப்படையில் இசையமைத்து தங்கள் சிறப்பை வெளிக்காட்டிய கால கட்டம். சம்பூர்ண ராமாயணம், கே.வி.எம். அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. இதை அவர் மிகச் சரியாகவும் சிறப்பாகவும் பயன்படுத்திக் கொண்டார். இன்றளவும் சம்பூர்ண ராமாயணம் படம் மக்களிடம் பிரபலமாக இருப்பதற்குக் கே.வி.எம். அவர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாது.
இதற்கு சான்றாக விளங்குபவை, இரு பாடல்கள், இசைச்சித்தர் பாடிய இன்று போய் நாளை வாராய் என்ற பாடலும், சங்கீத சௌபாக்கியமே என்ற பாடலும் ஆகும்.
நடிகர் திலகத்தைப் பொறுத்த மட்டில் பாதுகையே துணையாகும் பாடல் மிகவும் சிறப்பான பாடலாகும். ஏனோ சி.எஸ்.ஜே. பாடிய பாடல்கள் ஹிட்டான அளவிற்கு இந்தப் பாடல் பிரபலமாகவில்லை. என்றாலும் நெஞ்சை அள்ளும் இனிய ராகத்தில் மறக்க முடியாத மெட்டில் அருமையான பாடல். பாடல்களை மருதகாசி இயற்றியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=HKrjD6Z2kOQ
பாடல் காட்சியில் பெருமளவிற்கு நடிகர் திலகத்தைப் பக்கவாட்டிலேயே படம் பிடித்திருப்பது வித்தியாசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டைட்டில் கார்டு வித்தியாசமாக இருந்தது. சம்பந்தப்பட்ட கலைஞர்களின் நிழற்படங்கள் இடம் பெற்றன. அதன் ஒரு தொகுப்பு நிழற்படம் இதோ நம் பார்வைக்கு
http://i1146.photobucket.com/albums/...ps49aa7264.jpg
பாவமன்னிப்பு - 51 - பாகம் 4
. "காலம் பல கடந்து" எனத் தொகையறாவில் தொடங்கி "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்" எனப் பாட்டாகும் போது நம் ஐம்புலன்களும் பார்க்கின்ற திரையோடு ஐக்கியமாகி விடும். "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" சரிதான். ஆனால் இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் சிரித்துக் கொண்டே அழுவதற்கும், அழுது கொண்டே சிரிப்பதற்கும் ஒருவர் தானே இருக்கிறார். பாடல் முழுமையுமே நடிகர் திலகம் தனது performanceஸால் பார்ப்போரை புரட்டிப் போட்டு விடுவார். இந்தப் பாடலையெல்லாம் பாடகர் திலகம் டி.எம்.எஸ்ஸைத் தவிர இவ்வுலகில் வேறு எவரால் பாட முடியும். அன்றும், இன்றும், என்றும் பல கோடி உலக மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும், விளங்கப் போகும் வரிகளை கவியரசர் எத்தனை தீர்க்கதரிசனத்தோடு எழுதியிருக்கிறார் பாருங்கள்:
"காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்! வந்ததை எண்ணி அழுகின்றேன்!"
சிவாஜி, சௌந்தரராஜன், விஸ்வநாதன், கண்ணதாசன் - பொற்காலப் படைப்பாளிகள். இவர்களின் பங்களிப்புக்கு ஒவ்வொருவருக்கும் எடைக்கு எடை தங்கம் கொடுக்கலாம்.
23. 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' பாடல் காட்சியில், ஒரே ஃப்ரேமில் மூன்று சிவாஜிகள் தெரிவார்கள். ஒருவர் சிரிப்பார், ஒருவர் அழுவார், ஒருவர் சிரித்து-அழுது பாடிக் கொண்டே வருவார். இப்படி இந்தப் பாடல் காட்சியை எடுக்கச் சொல்லி பீம்சிங்கிற்கு ஐடியா கொடுத்ததே அய்யன் சிவாஜி தான்.
24. "பாவமன்னிப்பு" படத்தில் பல இடங்களில் பல காட்சிகளில் விட்டல் ராவின் கேமரா விளையாடியிருக்கும். ஆர்ட் டைரக்ஷனை ஹெச்.சாந்தாராம் செய்து கொடுக்க, எடிட்டிங் மேற்பார்வையை கவனித்தார் பீம்சிங்.
25. நடிகர் திலகத்தின் தாயாக இதில் நடித்திருப்பவர் எம்.வி.ராஜம்மா. முதலில் அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் பி.கண்ணாம்பா. அவர் நடித்து 6000 அடிகளுக்கான காட்சிகள் படமாகியிருந்த நிலையில் திடீரென்று அவர் உடல்நலம் குன்றி மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுக்க நேர்ந்தது. எனவே, மீண்டும் முதலிலிருந்து கண்ணாம்பா நடித்த காட்சிகளையெல்லாம் எம்.வி.ராஜம்மாவைக் கொண்டு படமாக்கப்பட்டது.
26. "பாவமன்னிப்பு", நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியமாக, 66வது கருப்பு-வெள்ளைக்காவியமாக. 16.3.1961 புதனன்று சென்னையில் சாந்தி, ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி முதலிய 3 திரையரங்குகளிலும் மற்றும் இந்தியாவெங்கும் வெளியானது.
27. ஏவிஎம் நிறுவனத்தினர் தங்களது திரைப்படங்களுக்கு வித்தியாசமாக விளம்பரங்கள் செய்வதில் வல்லவர்கள். அவர்கள், "பாவமன்னிப்பு" திரைப்படத்திற்கு, மிக மிக வித்தியாசமான - அதுவரை யாரும் செய்திராத - நூதன விளம்பரயுக்தியாக, ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு ராட்சத பலூனில், "AVM" என்று ஆங்கில எழுத்துக்களில் பெரிதாக எழுதி, பலூன் வாலில் "பாவமன்னிப்பு" என்ற எழுத்துக்களை ஒன்றன்கீழ் ஒன்றாக தமிழில் அமைத்து, சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தின் மேல் வானில் பறக்க விட்டனர். ரசிகர்களும், பொதுமக்களும் இந்த பலூனை அதிசயத்துடன் அண்ணாந்து பார்த்து வியந்தனர். இந்த ராட்சத பலூன் சிறந்த காட்சிப்பொருளாகவும், படத்திற்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்தது.
28. "பாவமன்னிப்பு" பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவு ஆன உடனேயே, ஏவிஎம் நிறுவனத்தார் அதனை இலங்கை வானொலிக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை வானொலி இப்பாடல்களை அனுதினமும் ஒலிபரப்பியது. படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.
நன்றி பம்மல் R. சுவாமிநாதன்
(தொடரும்)
அன்புடன்
"சாரங்கதாரா " வுக்கு லைக் போட்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றி - இதை அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியாகத்தான் கருதுகிறேன் - தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைத்ததாக நினைக்கவில்லை - இப்பொழுது அடுத்து, தேடி எடுத்த முத்தான படமான "ராணி லலிதாங்கி " யை பார்க்கலாமா ??
ராணி லலிதாங்கி
நடிகர் திலகத்தின் 41வது படம் - அவதாரம் எடுத்த நாள் 21-09-1957. இந்த படத்தின் சிறப்பு அம்சம் , படம் முழுவதும் ஒரு தெய்வீகத்தன்மையுடன் அவர் வருவார் - நமக்கும் ஒரு கோயிலுக்குள் சென்று படம் பார்ப்பதைப் போன்ற எண்ணம் தோன்றும் . இந்த படம் பின்னால் வந்த "திரு விளையாடல் "க்கு அடி போட்டது என்றால் அது மிகையாகாது . அமைதியான நடிப்பு , ஆழமான கருத்துக்கள் , ரம்மியமான காட்சிகள் , மனதை கொள்ளைகொள்ளும் பாடல்கள் , இதமான காதல் காட்சிகள் , காதலும் , வீரமும் போட்டிப்போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் மிஞ்சும் அழகை இந்த படத்தில் கண் கூட காணலாம் - படத்துடன் ஒத்து போகும் நகைச்சுவை காட்சிகள் , ராஜா ராணி படங்களில் மட்டுமே வரக்கூடிய திருப்பங்கள் இந்த படத்தை ஒரு வித்தியாசமான படம் என்று ஒப்புக்கொள்ளவில்லை - சில தலைகளை எடுத்துவிட்டால் போதும் அது ஒரு புதிய படம் என்று சொல்ல- என்று அந்த காலக்கட்டத்தில் இருந்த ஒரு எழுத படாத சட்டம் .
ராஜா ராணி கதை - படங்களில் குதிரைகள் வேகமாக ஓடுகின்றன - ஆனால் அந்த வேகம் கதைக்கு இல்லை - என்ன சொல்ல வருகிறார்கள் என்று சிந்தித்து நாம் ஒரு முடிவுக்கு வரும் முன் படம் முடிந்து விடுகின்றது . படத்தை இழுத்து நிறுத்துபவை நடிகர் திலகத்தின் நடிப்பும் , அவர் ஆடும் ருத்ர தாண்டவமும் ( இனி ஒருவன் பிறந்தால்தான் உண்டு !!) , பானுமதியின் ஈடுகொடுத்த நடிப்பும் , சிறந்த பாடல்கள் மட்டும் தான் . ராஜ சுலோசனா இந்த படத்திலும் உண்டு , இளவரசரை (NT ) காதலிக்கிறார் - தன் சில தவறுகளால் காதலை இழக்கின்றாள் - இழந்த காதல் ராணி லலிதாங்கி ( பானுமதி ) யிடம் செல்கின்றது -ஒரு தலை ராகமாக . இதன் நடுவில் வாழ்க்கையில் சிறிதும் நாட்டம் இல்லாமல் தற்கொலை செய்யும் முடிவுக்கு வரும் இளவரசரை ஒரு சாமியார் ( இந்த கால சாமியார்கள் அல்ல ) காப்பாற்றி தனது ஆஸ்ரமத்தில் அவனுக்கு ஆன்மீகத்தை போதிக்கிறார் . ஆன்மீகத்தின் உச்சிக்கு செல்லும் இளவரசர் , காதலை வெறுக்கின்றான் , காதலைத்தரும் பெண்களை வெறுக்கின்றான் , கடவுளை காணும் எண்ணங்களில் ஆழ்கிறான் --- அதே சமயத்தில் பலர் புத்திமதிகள் சொல்ல , அந்த நாட்டை ஆளும் அரசராகவும் இருக்க சம்மதிக்கின்றான் . ராணி லலிதாங்கி இளவரசரை அடைய எல்லா முயற்சிகளையும் எடுத்த வண்ணம் இருக்கின்றாள் - அவள் ஆவலுடன் காத்திருந்த நாளும் வந்தது - இசைபோட்டியில் கலந்துக்கொள்ள ----- போட்டியில் பல கேள்விகள் அம்புகள் போல பல திசைகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளது - குறிக்கோள் திடமாக இருந்தால் 'Impossible " - " I'm possible " என்றாகிவிடும் என்பதை அவளின் பதில்கள் உறுதி படுத்துகின்றன . முடிவில் இளவரசர் தன்னை மறந்து ஆடும் ருத்ர தாண்டவம் ஆனந்த தாண்டவமாகின்றது - அந்த மகிழ்ச்சி திருமணத்தில் முடிவடைகின்றது . ஆன்மீகத்தின் உச்சகட்டம் இரு மனங்கள் காட்டும் அன்புதான் - அந்த அன்புதான் சிவம் என்பதை உணர்த்தும் ஒரு உன்னத காவியமாக இந்த படம் இன்றும் திகழ்கின்றது .
நிஜங்களை அனுபவித்த நான் , வெறும் நிழல்களை விமர்சிக்க விரும்பவில்லை - P .S வீரப்பா இருக்கிறார் , அவருடைய சிரிப்பும் இருக்கின்றது , அவரும் அதிகமாக இந்த படத்தில் தனது வில்லத்தனத்தை காட்ட வில்லை ....
பாடல்கள் : பல - நெஞ்சை தொடும் ஒன்று " ஆண்டவனே இல்லையே - நெகடிவ் இல் ஆரம்பித்து "பாசிடிவ் இல் முடியும் பாடல் ....
ருத்ர தாண்டவம் ஆடும் அந்த அழகை நீங்களும் பருகவேண்டி இந்த கிளிப்பை பதிவிடுகிறேன் .
https://www.youtube.com/watch?v=g0U0tl4toqs
அன்புடன்
ரவி
முரளி சார்
பாவ மன்னிப்பு மீள் பதிவு, பம்மலார் மற்றும் வாசு இருவரும் இணைந்து அசுர வேகத்தில் இரவு பகலாய் உழைத்து அபூர்வ ஆவணங்கள், நிழற்படங்கள் மற்றும் தகவல்கள் என நமக்களித்த அந்த நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றன. எந்த அளவிற்கு நமது நடிகர் திலகம் திரி நண்பர்கள் பாடுபட்டு இத்திரியில் தம் பங்கை அளித்துள்ளார்கள் என்பதை எண்ணினால் மிகவும் நெகிழ்ச்சியூட்டுகிறது. மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும் என்று தான் தோன்றுகிறது. பம்மலாரும் வாசுவும் மீண்டும் வரவேண்டும். அதற்கு தடைக்கல்லாக இருப்பது தேவையில்லாத குத்தலான விமர்சனங்கள் அவ்வப்போது இங்கு வைக்கப்படுவதுவே. இதற்கு இடம் தராமல் நடிகர் திலகத்தின் மேன்மையை உரைக்கும் விதத்தில் பதிவிடும் நண்பர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் எப்போதும் உண்டு என்பதை நாம் உணர்த்தினாலே போதும்.
வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளுக்கு இடம் தராமல் இங்கு பங்கேற்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும், அவரைப் பற்றிய சிறப்பான தகவல்களைத் தரும் மற்ற நண்பர்களுக்கும் உளமார்ந்த வரவேற்புத் தருவோம்.
சாந்தி...பொன்விழா
முரளி சார்,
நேரில் இல்லாத குறையைத் தீர்த்து வைக்கும் அளவிற்கு நிகழ்வைப் பற்றிக் கூறுவதில் தங்களுக்கும் பம்மலாருக்கும் ஈடு இணையில்லை. எந்தவொரு சின்ன விஷயத்தையும் விட்டு விடாமல் தங்களின் அபார நினைவாற்றல் கொண்டு அப்படியே தங்கள் எழுத்தில் கொண்டு வந்து விடுகிறீர்கள். எதிர்பாராத விதமாக என்னால் வரவேற்புரையின் போது வர முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் அந்தக் குறையைத் தங்கள் எழுத்து தீர்த்து விட்டது.
அபூர்வ ஆவணங்கள் பொருட்கள் மூலம் நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டிய ஏஎல்.எஸ். நிர்வாகி திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றி.
தங்களுடைய சிறப்பான தொகுப்புரைக்கு மீண்டும் பாராட்டுக்களும் நன்றியும்.