வணக்கம் ஜி
Printable View
வணக்கம் ஜி
நாளை 20.06.2015 சனிக்கிழமை மாலை மெல்லிசை மன்னரின் பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக அவர் இசையமைத்த படங்களின் முகப்பிசை, பின்னணி இசை, இடையிசை போன்றவற்றை விளக்கமாக அலசும் வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழின் நிழற்படம்.
அனுமதிச்சீட்டுக்கு நிழற்படத்தில் உள்ள கைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்க
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...77875240_o.jpg
அபூர்வ நிழற்படம்..
மணியோசை திரைப்படப் பாடல் உருவாக்கத்திற்காக இயக்குநர் மாதவன், கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி விவாதிக்கும் காட்சி..
http://i872.photobucket.com/albums/a...psmhyertok.jpg
பேசும்படம் டிச.1962 இதழிலிருந்து..
நண்பர்களே,
ஜூன் 24 கவியரசர் மெல்லிசை மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று முழுதும் இவர்கள் இணையில் வெளிவந்த பாடல்களைப் பற்றி பகிர்ந்து கொள்வோமா..
கருவின் கரு - பதிவு 100:):smile2:
தாயின் பரிமாணங்கள் -1
நம் எல்லோரிடமும் தாயின் சில அம்சங்களாவது இணைந்திருக்கும் - உறவுகள் வேறுபட்டாலும் , பிறருக்கு நாம் கருணையை , அன்பைக் காட்டும் போது நாமும் தாய்மை என்ற பெயரை பெற்றுவிடுகிறோம் - கருணைக்கு "அம்மா " என்ற ஒரே அர்த்தத்தை தவிர வேறு ஒரு அர்த்தம் அதற்கில்லை .. இங்கே பாருங்கள் - ஒரு தங்கை தன் அண்ணனை "தாயின் முகம் இங்கு நிழலாடுகிறது "என்று பாடுகிறாள் - ஒரு அண்ணன் இங்கே ஒரு தாயாக அவள் கண்களில் தெரிகிறாள்
https://youtu.be/MmWZrz-IwdM
தாயின் பரிமாணங்கள் -2.
இன்னொமொரு தங்கை அண்ணனை ஒரு கோயிலாகவும் , தன்னை அந்த கோயினுள் இருக்கும் தீபமாகவும் நினைக்கிறாள் - தாய் தந்தை அன்பை தன் அண்ணன் மூலம் தான் பார்க்கிறாள் - இங்கும் அந்த அண்ணன் ஒரு தாயாக மாறுகிறான் ..
https://youtu.be/VLMjv8LzMHY
கருவின் கரு - பதிவு 101
தாயின் பரிமாணங்கள் -3.
இங்கே ஒருவன் தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும் - தாளாத என் ஆசை சின்னம்மா -- வெகு நாளாக என் ஆசை சின்னம்மா " என்று பாடுகிறான் -தாயாகுவதில் இவனுக்குத்தான் எவ்வளவு பெருமை !! உருக வைக்கும் பாடல் .....
https://youtu.be/J0TrMbpWScg
தாயின் பரிமாணங்கள் -4
இங்கே தங்கையைப்பற்றி கனவு காணும் ஒரு அண்ணன் - தாயில்லை அவளுக்கு வரன் பார்க்க ----
பூமணம் கொண்டவள் பால் மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
எல்லாமே தங்கைதான் என்று வாழும் ஒரு அண்ணன் - தாயின் பாசத்தையும் மிஞ்சியவனாகுகிறான் ......
https://youtu.be/9P8Hynotz1M
தாயின் பரிமாணங்கள் -5
நட்புக்காக எதையும் செய்பவன் இவன் --- தன் காதலையும் தன் நண்பனுக்காக மறக்கிறான் ... அவன் காதலி அவனுக்கே தங்கை ஆகின்றாள் --- தன் அன்பையும் , பாசத்தையும் உலகம் புரிந்துக்கொள்ளவில்லை - நண்பன் சந்தேகிக்கிறான் அவர்கள் உறவை ----- வெறுத்த மனம் - விதைக்கும் விஷ வார்த்தைகள் - இதன் நடுவில் அவளை அவளின் காதலனுடன் இணைக்கிறான் - இங்கேயும் தாயை மறக்காமல் வரும் வார்த்தைகள் - தாய் வழியே வந்த நாணத்தைக்காட்டி ------------
வேறு யார்
இப்படி எழுதமுடியும்?
இப்படி இசையமைக்கமுடியும்?
இப்படிப்பாடமுடியும்?
இப்படி நடிக்கமுடியும்
அது ஒரு பொற்காலம்... இணையத்தளத்தில் ஒருவரின் புலம்பல் ------
https://youtu.be/prT3e7Wb29M
கருவில் கரு - பாகம் 1 - இத்துடன் இந்த பாகம் இனிதாக முடிவடைகிறது - எவ்வளவோ சொல்ல விரும்பினேன் - கொஞ்சம் தான் சொல்ல முடிந்தது - அன்னையின் கருணைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க யாரால் முடியும் ? பல பாடல்கள் , உங்களுக்குத் தெரிந்தவைகள் இங்கே நான் எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் --- சில பதிவுகள் தப்பித்தவறி உங்கள் மனங்களை காயப்படுத்திருக்கலாம் - இரண்டுக்கும் முதலில் என் மன்னிப்புக்கள் .....
ஒரு வேள்வியைப்போல ஆரம்பித்தேன் - எண்ண ஓட்டங்களில் தடை வரவேயில்லை அவளின் அருளால் ... முன்னமேயே சொன்ன மாதிரி இங்கு சொன்ன அத்தனை நிகழ்ச்சிகளும் , என் வாழ்க்கையிலும் , உறவினர்கள் வாழ்க்கையிலும் , நண்பர்கள் சிலர் வாழ்க்கையிலும் நடந்த உண்மை சம்பவங்கள் - மிகைப்படுத்தப்பட்டவைகள் அல்ல ......
நடமாடும் அந்த தெய்வத்திற்கு ஒரு பாமாலை நான் சூட வாயிப்பு கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் , இந்த திரியை ப்படிக்கும் அத்தனை நல்ல இதயங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . இறைவன் எங்குமே தனியாக இருப்பதில்லை அவள் உருவில் என்றுமே நம்முடன் வாழ்கிறான் - இருக்கும் போது மதிப்போம் - அவள் நிழலும் நமக்கு உதவும் - இல்லை என்று ஆகி விட்டால் அவளைப்போல ஆகமுயற்ச்சிப்போம் மற்றவர்களுக்கு ------
இங்கு இருக்கும் / படிக்கும் எல்லோருடைய அன்னையர்களின் பாதங்களில் இந்த கருவின் கரு - பாகம் 1 யை அன்புடன் வணங்கி சமர்ப்பிக்கிறேன் .
அன்புடன்
https://youtu.be/PFPX9OgqEG4
https://youtu.be/jDn2bn7_YSM
RECAP - கருவின் கரு - பாகம் ஒன்று ( ஆரம்பித்த நாள் 23/05/205-பதிவு எண் 98 ) பதித்த பாடல்கள் , சொற்பழிவு , ஸ்லோகங்கள் மொத்தம் 155க்கும் மேல் ......
முதலில் ஆதி சங்கரரின் மனம் உருகி தாயைப்பற்றி பாடிய மாத்ருகா பஞ்சகம்த்தை பார்த்தோம் - 5 பாடல்கள் அன்னையின் சிறப்பை சிகரமாக வைத்தவை
அதனை ஒட்டி தாயின் அன்பை , கருணையை பல திரைப்பட பாடல்கள் மூலம் கண்டு உருகினோம் - மொழி வித்தியாசம் இல்லாத பாடல்கள்
ஒரு தாயின் தியாகத்தையும் அன்பையும் 5 பருவங்களாக பார்த்தோம் - தத்ரீ (Dhatree) - அதாவது குழந்தையை சுமப்பவள் - இந்த நிலையில் அவள் செய்யும் தியாகங்களுக்கு அளவே இல்லை - ஒரு பெண் தாய்மை என்ற நிலையை அடையும் போதுதான் அவளின் உள்ளே ஒளிந்திருக்கும் கருணை ஒரு கருவாக உருவாகிறது .
இரண்டாவது இடம் ஜனணி (Janani) - குழந்தையை ஈன்றுபவள் - இங்குதான் அவளின் சுயநலம் , தனக்கு என்று வாழ்தல் என்னும் குணங்கள் கொல்லப்படுக்கின்றன - தாய்மை கருவாக வெளி வருகிறது ( A child gives birth to a mother )
மூன்றாவது அம்பா ((One who nourishes the limbs of the child) - தன் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் அழகு பார்க்க தொடங்குகிறாள் - அவைகளை ஆராதிக்கின்றாள் .
நான்காவது "வீரசு" ( veerasu ) - (One who makes him a hero),- தன் குழந்தையை வளர்க்கத்தொடங்குகின்றாள் - தன்னம்பிக்கையை பாலாக ஊட்டுகின்றாள் - ஒரு பண்புள்ள நல்ல தலைவனாக வருவான் என்று கனவுகள் பல காணுகின்றாள் .
அடுத்தது ஷுஸ்ரூ - Shusroo- (One who takes care of him till her end ) - பல வருடங்கள் தன் குழந்தையை சுமக்குகின்றாள் - இளமை உதிர்ந்த இலைகளாக கீழே விழ , முதுமையின் கொடுமையிலும் அவனுக்காகவே வாழ்கிறாள் - அவள் தவம் செய்யும் இடத்திற்கு , யாரோ " முதியோர் இல்லம் " என்ற தவறான பெயரை கொடுத்துள்ளனர் - இவைகளில் சம்பந்தப்பட்ட திரைப்பாடல்களை ரசித்தோம் .
பிறகு நவரத்தினத்தால் அன்னைக்கு ஒரு அழகிய மாலையைத்தொடுத்தோம் ..
கடைசியாக அன்னையின் கருணையை வைத்து எழுப்பப்படும் பல பரிமாணங்களைபார்த்தோம் - அவளின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் .
திரு கோபாலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் - கருவில் ஒரு பதிவை உருக்கமாக போட்டதற்காக ..... அதே மாதிரி திரு ஆதிராமும் தன்னுடைய அன்னையுடன் சேர்ந்திருக்க அந்த இறைவன் அருள் செய்யட்டும் -----ராஜேஷ் அவர்களும் அவர் பங்கில் சில நல்ல பாடல்களை சேர்த்திருந்தார் - பிறகு CK வின் உருக்கமான அவருடைய தாயைப்பற்றிய பதிவு - உற்சாகப்படுத்தும் திரு வாசு , திரு கல்நாயக் , திரு முரளி , திரு ராகவேந்திரா சார் ,திரு கலை அண்ட் திரு வினோத் அவர்களின் வார்த்தைகள் ( யாருடைய பெயர்கள் விட்டிருந்தால் மன்னிக்கவும் ) , திரு கோபு அவர்களின் திரிக்குப்பின் இருந்து வரும் "likes ", திரு ராஜ் ராஜ் அவர்களின் மௌனம் கலந்த வாழ்த்துக்கள் - சொல்லிக்கொண்டே போகலாம் ----எல்லோருக்கும் மீண்டும் எனது தாழ்மையான வணக்கங்கள் , நன்றிகள்
அன்புடன்
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நம் ரத்தத்தில் கலந்த இரு மேதைகள். இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் காணும் பிரித்தறிய முடியா உயிர் நண்பர்கள். (ஜூன் 24) கண்ணதாசன் ஒரு வருடம் மூத்தவர்.(1927) .இருவருமே நடிகர்திலகத்தை விட மூத்தவர்கள்.
நடிகர்திலகம்- விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன் இணைவு பாகபிரிவினை (1959)முதல் சாந்தி(1965) வரை தொடர்ந்தது. நடிகர்திலகம்-விஸ்வநாதன்-கண்ணதாசன் இணையோ ,கண்ணதாசன் இறப்பு வரை தொடர்ந்தது. பல உயரிய தமிழ் பாடல்கள் இந்த இணைவுக்கு சொந்தமானவை.
கண்ணதாசன் சுப்ரமணிய பாரதிக்கு அடுத்த நிலையில் கொண்டாட படும் உன்னத கவிஞன். என்னதான் வசனம், தனி பாடல்கள்,நாவல்கள்,சுயசரிதை,தத்துவம்,மதநூல்கள் என்று எழுதியிருந்தாலும், மறக்க முடியாத சாதனை அவர் திரைப்பாடல்களே.
அவர் திரை பாடல்கள் சாதித்தவை ,பலருக்கு ஊக்கம் கொடுத்து கவிஞனாக தூண்டியவை,.
1)இலக்கியத்துக்கும் ,திரை பாடல்களுக்கும் கலப்பு மணம் செய்வித்தவர். திருக்குறள்(உன்னை நான் பார்க்கும் போது ),அக-புற பாடல்கள்(நேற்று வரை நீ யாரோ), கம்ப ராமாயணம் (பால் வண்ணம் ),திருப்பாவை(மலர்ந்தும் மலராத,மத்தள மேளம் முரசொலிக்க ),காளமேக புலவர் சிலேடைகள் (இலந்த பயம்)பட்டினத்தார் (வீடு வரை உறவு), பிற்கால கவிஞர்கள் (அத்தான் என்னத்தான் ) என்று எத்தனை எத்தனை.என்று ஆய்வு செய்தால் வாழ்நாள் காணாது.
2)நடைமுறையை இணைத்தவர்.அரசியலை அழகாக படத்துடன் ,கதையமைப்பு கோணாது இணைத்தவர்.(ஓஹோ ஓஹோ மனிதர்களே,அண்ணன் காட்டிய வழியம்மா,யாரை எங்கே வைப்பது என்றே,என்னதான் நடக்கும்,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு,சிவகாமி மகனிடம்,நலந்தானா யாரை நம்பி நான் பொறந்தேன்)
3)சொந்த வாழ்விலிருந்து கவிதைக்கு பொருள் சேர்த்து உரமாக்கியவர்.அவரின் வாழ்க்கையில் அனுபவங்களுக்கோ பஞ்சமில்லை. வாழ்க்கையை வெற்றி-தோல்வி,இன்ப-துன்பம்,பற்றி கவலையின்றி வாழ்ந்து பார்த்தவர். ஒளிவு மறைவில்லா திறந்த புத்தகம்.(அண்ணன் என்னடா தம்பி என்னடா, நாளை முதல் குடிக்க மாட்டேன்,இரண்டு மனம் வேண்டும்,ஆட்டுவித்தால்,மனிதன் நினைப்பதுண்டு ,)
4)இவ்வளவையும் மீறி இசையின் தேவையறிந்து,குறிப்பறிந்து ,வார்த்தைக்கு அழகியல் மெருகு சேர்த்து அர்த்தமும் கொடுத்து இசையை வள (வசமும்)படுத்திய கவிஞர்.
5)ஒரு படத்தின் ஜீவன் உணர்ந்து பாடல்கள் தருவதில் மிஞ்ச முடியாதவர். ஒரே வரியில் கதையை முடிப்பார்.(,கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ,சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று )
கண்ணதாசா, நீ எங்கள் ஞான தந்தைகளில் ஒருவன்.
விஸ்வநாதன் பற்றி ஏற்கெனவே எழுதியவற்றின் மறு பதிப்பு.நான் கேட்டது,உணர்ந்தது,படித்தது ,அனைத்தின் தொகுப்பு. ஆனால் அவர் பாதிப்பில் என் பார்வையின் பதிப்பே. (உலக இயக்குனர்கள் முடிந்ததும் தொடர்வேன்)
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.
இவரை பற்றி நான் எழுதும் போது ,இவரை தனியாக பிரித்து ,பகுத்து, இவருள் ராமமூர்த்தி எவ்வளவு, அவருள் இவர் எவ்வளவு என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் ,இவரின் இசை வெள்ளத்தில் நான் கண்ட சிறப்புக்களை மட்டுமே ஆராய போகிறேன்.
நான் நன்கு இசையறிந்த விஸ்வேஸ்வரன் போன்றோரிடம் பழகியுள்ளேன். அவர் இவரை பற்றி சொல்வது "விஸ்வ""நாதம்".எதனிலும் சாராது தன்னுள்ளில் பொங்கும் நாத வெள்ளம் என்று குறிப்பார்.இவர் இசை வாழ்வை 1952- 1959, 1960-1965, 1966-1969, 1970- 1976, 1976 க்கு பிறகு என்றெல்லாம் பகுத்து நான் பிரித்து மேய போவதில்லை. இந்த ஆய்வுக்கு அது அவசியமும் இல்லை.
நான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவு இசைஞர்களை , இந்தியாவிலேயே இது வரை வந்ததிலேயே சிறந்த composers என்று போற்ற காரணங்கள் - மிக சிறந்த பத்து ஹிந்தி இசை மேதைகள் தந்த அத்தனை வகை இசையையும் தனியாகவே தந்து ,அனைத்திலும் வெற்றி கண்ட சுயம்புகள். அந்த எதையும் சாராத originality and novelty . எதிலும் அடக்கி விட முடியாத ஒரு அதிசய தன்மை கொண்ட இசையமைப்பு.எல்லா பாணியையும் ஒரு கை பார்த்து எல்லாவற்றையும் ரசிக்க வைத்த ,வெற்றி பெற்ற தனித்துவம்.
இத்தனைக்கும் இவர்கள் trend -setter கள் கிடையாது. Trend -setters ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்,ஏ.எம்.ராஜா,கே.வ ீ.மகா தேவன் ,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்கள் மட்டும்தான்.ஆனால் ,இவர்களில் இருந்து வேறு பட வேண்டும் என்று எண்ணி, பலரின் இசையை சுவீகரித்து, அதிலும் தங்களுக்கென புது பாதை கண்டு, இசையை பற்றி புதிய நுண்ணுணர்வு பெற்று (perspective on music ),யாரையும் போல இன்றி,பலரை போல மாறி, versatile genius என்ற வகையில் எல்லோரையும் திருப்தி படுத்தினர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மிக மிக பிரத்யேக திறமையாக குறிப்பிடுவது பாடல்களின் போக்கை முன் கூட்டியே தீர்மானிக்காத ஒரு நீக்கு போக்கான தன்மை.(nebulous ).இதற்கு முக்கிய காரணம் அவருக்கு ராகங்கள்,தீர்மானமான நோட்ஸ் எதுவுமே அவசியமில்லாதவை. சில சத்தங்கள், அவற்றின் மன கிலேசங்கள்,உணர்வுகள்,அதிர்வுகள் போதுமானவை .அவற்றை வைத்து trial &error என்ற பாணியில், ஒரே வார்த்தையையோ, வரிகளையோ வித விதமாக உச்சரித்து , சோர்வேயில்லாமல் முப்பது நாற்பது tune கொடுப்பாராம். (டி.கே.ராமமுர்த்தி வேறு ரகம்.பாடல்கள் பிடிக்க வேண்டும். முன்தீர்மானம் செய்வார்.எனக்கு என்ன கொடுப்பது என்று தெரியும் என்று ஒன்றிரண்டு மட்டுமே தருவாராம்). இவர்களுக்கிடையே உள்ள முக்கிய வித்யாசமே இதுதான். ராமமூர்த்தியை குருவாக மதித்து,அவரிடம் இசை கற்றாலும், அவரை மிஞ்சி field இல் பலமாக நிற்க இதுவே முக்கிய காரணமானது.
பாடகர்களும் ,என்னிடம் குறிப்பிடுவது, அவர்களின் improvisation சுய தன் முயற்சியில் செய்ய படும் சோதனைகள்,நகாசுகளை அனுமதிப்பாராம். இரு முறை ,மூன்று முறை பாடி காட்டும் போது வெவ்வேறு மாற்றங்களை காட்டுவாராம். மேதை என்பதன் அறிகுறியே அதுதானே?
இவர் பாடல்களுக்கு ,ஒரு எதிர்பாரா புது புதிர் தன்மை அளித்தது ,இந்த ஒரு குணமே. மற்ற இசையமைப்பாளர்கள், ஒரு ராகத்தை மனதில் வைத்து,பாடல் கட்டமைப்பை உருவாக்குவது போல எம்.எஸ்.வீ செய்ததே இல்லை.(கர்ணன் போன்ற படங்கள் விதிவிலக்கு). தோன்றிய படி போகும் பல்லவி,சரணங்களினுடே ,ராகம் ஒன்றோ ,இரண்டோ,மூன்றொ கூட புதையலாம். ஆனால் அவை ஒட்டு போட்ட சட்டையாக தோன்றாமல், ஒரு யூகிக்க முடியாத புதிர்த்தன்மை கொண்டு, எம்.எஸ்.வியின் வெகு ஜன பிடித்தம் பற்றிய பரிச்சயம்,இசையறிவு கொண்ட தயாரிப்பாளர்,மற்றும் இயக்குனர்களின் தேர்வுகள்,அந்த தேர்வுகளுக்கு எம்.எஸ்.வீ அளித்த வற்றாத எண்ணிக்கை கொண்ட tunes , பிறகு அதற்கான இசை தொகுப்பை நிர்ணயிக்கும் முறை,இசை கலைஞர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் ,இவற்றால் அவர் பாடல்கள் தனித்து தெரிந்ததில் அதிசயம் என்ன?
மேலும் தொடர்வோம், உதாரணங்கள்,விளக்கங்கள்,சுட்டிகள் இவற்றோடு?எங்கே வேறு பட்டார் என்ற ஆணித்தரமான விளக்கங்களோடு.(நானே உணர்ந்தவை,மற்றோரிடம் தெரிந்தவை எல்லாமே தொகுத்து).இவை முற்றிலும் வேறு பரிமாணத்தோடு ,மற்றும் வித்தியாச புரிதலோடு.
எம்.எஸ்.வீயை பற்றி விளக்க வேண்டுமானால் முத்துக்களோ கண்கள் பாட்டை எடுங்கள்.
இந்த பாடலில் பொதுவாக மத்யமாவதியின் சாயல் (ச ரி2 ம1 ப நி1 ச ) இருந்தாலும் அதில் பல அந்நிய ஸ்வரங்களின் கலப்பினால் புது வடிவம் பெறுகின்றது. காகலி நிஷாதம் (நி2) கலந்ததனால் பிருந்தாவன சாரங்கா போல தெரியும். ஆனால் மேலும் சரணத்தில் ஷதுர்ஷ்ட தைவதம் (த2) மற்றும் சுத்த காந்தாரம் (க1) சேர்க்கை மேலும் இனிமையை கொடுப்பதோடு ராகங்களின் இலக்கணத்தை முற்றுமாக தாண்டுகிறது. இதை MSV கந்தர்வனி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
இதெல்லாம் தெரிந்து பண்ணும் அளவு எம்.எஸ்.வீ சங்கீத பிஸ்தா எல்லாம் ஒண்ணும் கிடையாது.ஆனால் எந்த சங்கீத பிஸ்தாவும் இதை மீறி சாதிக்க முடியாது.
அடானா ராகத்தை பயன் படுத்தியவர்.(வருகிறாள் உன்னை தேடி). ஒப்பாரிக்கு இசைவான முகாரி ராகத்தில் டூயட் போட்டவர். (கனவு கண்டேன்). பெரிய சங்கீத வித்வான்களும் தொட தயங்கும் சந்திர கௌன்ஸ் என்ற ராகத்தில் மிக மிக சிறந்த பாடலான மாலை பொழுதின் மயக்கத்திலே ,உண்மையான அதிசய ராகம் மகதியில்(S G 2M 2P D1N 1S ----S N 1D1P M 2G 2S ) அதிசய ராகம் பாட்டை தந்தவர் (பாலமுரளி ஸ்பெஷல் ராகம், படத்தில் ஜேசுதாஸ்),கர்ணன் ஒரு படத்தில் ஹம்சா நந்தினி,ஆனந்த பைரவி,கம்பீர நாட்டை,சஹானா,பிலு,சுத்த சாவேரி,ஆரபி,பேஹாக் ,சாரங்க தரங்கிணி,நீலாம்பரி,ககரபிரியா,சக்கரவாகம்,சரசாங ்கி,க ேதாரம்,பகாடி,ஹமீர்கல்யாணி,ஹம்சநாதம்,ஹிந்தோளம் என்று பதினேழுக்கு மேற்பட்ட ராக அணிவகுப்பை தந்தவர்(கள் ) என்பதெல்லாம் ஒரு புறம்.
ஆனால் ராகங்களை முன்னிலை படுத்தாமல் ,ராகமே அந்த பாடல் சந்தத்தில் இயல்பாக பொருந்தும் படி செய்து மீட்டர் உடைப்பு,தாள மாற்றம்,ராக கலப்பு அனைத்தும் அவ்வளவு இயல்பாக விழுந்து கேட்போரை மயங்கி விழ செய்யும்.ஒரு பாட்டின் போக்கினை ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து எங்கோ நிறுத்துவார். (ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் பூமாலையில் ஒரு சான்று), தேடினேன் வந்தது பாட்டில் சரணம் பல்லவியோடு loop back பாணியில் ஹம்மிங் ஓடு இணைவது,ஒரே ராகத்தை விதவிதமாக வளைப்பது.
தேஷ் ராகத்தில் சிந்து நதியின் மிசை, அன்றொரு நாள் , ரசிக பிரியா ராகத்தில் உருக்கும் ஒரு நாள் இரவு,துள்ள வைக்கும் இன்று வந்த இந்த மயக்கம், கல்யாணியா இது என்று விற்பன்னர்களும் காண முடியா கஜல் பாணி இந்த மன்றத்தில் ஓடி வரும்,அதே கல்யாணியில் நாட்டு புற குத்து என்னடி ராக்கம்மா என்று எத்தனை ஜாலங்கள்???
ஒரு நிர்வாகியின் திறமை என்பது teamwork என்பதில்தான் உள்ளது என்பது நிர்வாக சூத்திரம்.அத்தனை பேரின் திறமையும் உழைப்பும் தரும் பலன் தலைமை நிர்வாகிக்கே போய் சேரும். ஆனாலும் தலைவன்,தனக்காக உழைத்தவர்களை பெருமை படுத்தி ,அவர்கள் முன்னேற விரும்பினால் உதவ வேண்டும்.அத்தனை பலங்களையும் நமதாக்கி பெருமையும் அடைந்து ,புகழும் பெற்று மற்றவரையும் பெருமை படுத்தலாம்.ஆனால் அதற்கு தலைமை நிர்வாகி ,தன் பொருளை விற்பனை (நல்ல விலைக்கு)செய்ய தெரிந்தவராகவும் ,தொடர்ச்சியாக சந்தையில் நிலைக்க எல்லோரையும் அணைத்து ,நல்லுறவை பேண வேண்டும்.
எம்.எஸ்.வீயை விட இதற்கு சிறந்த உதாரணம் ஏது?வேறு எந்த இசை குழுவிலாவது தனி தனி இசை கலைஞர்கள் ,இந்த அளவு கவனம் பெற்று போற்ற பட்டார்களா?உலக அளவில் பார்த்தாலும் சொற்பமே.யோசித்து பாருங்கள்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,கோவர்த்தனம்,ஹென் றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,ஷ்யாம் பிலிப்,டி.என்.மணி,சத்யம்,பிரசாத்,மங்கள மூர்த்தி,எம்.எஸ்.ராஜு,சதன்,கோபாலகிருஷ்ணன்,நோய ல் க்ராண்ட்,நஞ்சுண்டையா,ஆகிய இசை கலைஞர்கள் ,உதவியாளர்கள் மட்டுமின்றி,ரெகார்டிங் engineer சம்பத் கூட கவனிக்க பட்டார். இவர்களுக்கு தனி வாய்ப்பு வந்த போது எம்.எஸ். வீ தடுத்ததே இல்லை. திரும்பி தன்னுடன் வந்து பணியாற்றிய போதிலும் வரவேற்றுள்ளார்.
புது இசையப்பாளர்கள் வந்த போது இவர் அவர்களை வரவேற்ற விதம்,பெருந்தன்மை, அவர்கள் தன கோட்டை என்று நினைத்த எல்லா இடத்திலும் புகுந்த போதும் வன்மம் காட்டி சுடுசொல் கூறாத பண்பு அதுதான் எம்.எஸ்.வீ. (அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )
எம்.எஸ்.வியின் அற்புத பண்புகளுக்கு 4 உதாரணங்கள் .
1)ஸ்ரீதர் ,தன் ஆஸ்தான ஏ.எம்.ராஜாவை விட்டு சில கருத்து வேறுபாடுகளினால் ,நெஞ்சில் ஓர் ஆலயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி புக் பண்ண வந்த போது ,உடனே "ஞானி" போல ஒப்பு கொள்ளாமல் ,நிஜ ஞானியாய் ,தான் genova காலத்திலிருந்து கருத்து வேறுபாடு,மனத்தாங்கல் கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவை சந்தித்து அனுமதி கேட்டார்.ராஜாவின் பதில் (பெயர் விசேஷமோ?)படு கீழ்த்தரமானது. நான் தூக்கி போட்டு விட்டேன். எவன் எடுத்து கொண்டால் எனக்கென்ன?
2)தேவர் ,கே.வீ.மகாதேவனை விட்டு தன்னிடம் தாவ நினைத்த போது ,தான் குருவாக நினைத்த கே.வீ.எம் இற்கு துரோகம் செய்யாமல் ,தன் அன்னையின் ஆணையை ஏற்றவர் எம்.எஸ்.வீ. தேவரின் வேண்டுகோளை நிராகரித்தார்.
3)தன் நண்பர் கண்ணதாசன் ,சிலசொந்த படங்களுக்கு கே.வீ.எம்முடன் பணி புரிந்த போதும்,இவர் சுணக்கம் காட்டியதில்லை.தடுத்ததில்லை.
4)ஒரு முறை தபேலா இசை கலைஞருடன் ,பாடகர் ஜேசுதாஸ் மன வேறுபாடு கொண்ட போது ,இவர் தபேலா கலைஞர் பிரசாத்துக்கு ஆதரவாக நின்றார். ஜேசுதாஸ் ,அப்படியானால் நான் தங்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று சொன்ன போது சரி ,வேண்டாம், எனக்கு பிரசாத் முக்கியம் என்று சொன்ன தலைவர் எம்.எஸ்.வீ. (அவர் நினைத்தால் வேறு தபேலா ஆளா கிடைக்காது?)
எம்.எஸ்.வீ யின் குழுவினரை அணைத்து சிறப்பான பணி வாங்கும் தலைமை குணம், வியாபார திறமை,அதிலும் நேர்மை,பெருந்தன்மை என்பதை விளக்கவே இந்த பகுதி.
இனி எம்.எஸ்.வியின் அபூர்வ இசை வெள்ளத்தில் நுழைவோம்.
ஒரு சினிமா பாடல் புனைவது சுலபம் அல்ல.தியாகராஜர் போன்றவர்களின் பணி உன்னதமானாலும் ,சுலபமானது.அவர் வியாபாரம் செய்ய வேண்டியது இல்லை. பல விதமான புதுமை பாடல்களை,களங்களை தேட வேண்டியதில்லை. துந்தனா போதும் சுருதி கூட்ட.ராகங்களின் நேர்த்தி ,ஸ்வர அணிவகுப்பு இதற்கு தகுந்த நெளிவு சுளிவுடன் கிருதி கீர்த்தனைகள்.ராமா உன் அருள் வேண்டும், தொழுவேன்,காத்தருள் ரீதியில் பாடல்கள்,இதற்கு signature வேறு ஓவியர் மாதிரி.
ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)
எனக்கு தெரிந்து நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாக எழுதிய இருவரின் கருத்துக்களை சொல்லி விட்டு ,எனது கருத்துக்களை இன்னும் ஓங்கி பதிவேன். ராகங்களை தேடி இவர் ஓடாமல்,அவைகளாக இவரின் காட்டாறு போன்ற கற்பனையில் வந்து ஒன்றாகவோ,இரண்டாகவோ,மூன்றாகவோ கொஞ்சம் நிறம் மாறியோ ,படு அழகாக வந்து அமர்கிறது. இனி எனக்கு பிடித்த வாணியின்"நீராட நேரம்" பற்றி ராம் என்ற ஒருவர் எழுதியது.
இந்த பாடல் அமிர்தவர்ஷினி ராக பல்லவியுடன் அதற்கு உறவான பந்துவராளி ( அமிர்தவர்ஷினி +ரி 1+த 1)சரணத்துடன் தொடரும் .ஒரு புதிர்த்தன்மை கொண்ட மர்ம உணர்வுடன் ,தெய்வீக பேரமைதி தரும் இந்த காம பாடலுக்கு கிட்டே கூட யாரும் வர முடியாது.
chords உடன் சேரும் புல்லாங்குழல்,தொடரும் அமானுஷ்ய ஒற்றை வயலின் ,மத்திம துவக்கத்துடன் சுத்த தைவதம் வருடி,மேல் ஷட்ஜமத்தில் பாடல் துவங்கும்.(நீராட நேரம் நல்ல நேரம்)ஷட்ஜமத்தில் தொடரும் போராட பூவை நல்ல பூவை.திடீரென்று ப விலிருந்து ஸ விற்கு பல்டி மேனி ஒரு பாலாடை.rhythm வேகம் பெரும் மின்னுவது நூலாடை.
கிடார் முடிந்து காலம் பார்த்து வந்தாயோ ,பந்துவராளிக்கு திரும்பும்.
இரண்டாம் இடையிசை ஒரு நூதனம்.பரமானந்தமாய் உள்ளுணர்வுகளில் உறங்கியிருக்கும் அழுத்தமான எரிமலை பூகம்பங்களுக்கு ,விடுதலை தந்து அமைதி அளிக்கும் தெய்வீக கலப்பு.எலெக்ட்ரிக் ஆர்கன் ,புல்லாங்குழல் ,கிளாரினெட் இணைவில் அரங்கேறி விடும்.
அருகில் வந்து நில் நில் நில் என்று இசையிலக்கணம் மீற படும் பேஸ் கிடார் துணையுடன்.
மூன்றாவது இடையிசையோ distortion கிடார்,இதமான பியானோ,புல்லாங்குழலுடன் இணையாக வயலின் ,முடிவாக ஒற்றை கிளாரினெட்.
சொல்லுங்கள்,சவால் விடுகிறேன் ,பல கற்று அதை செய்தேன் ,இதை செய்தேன் என்று தனக்குதானே பீற்றும் யாரும் இந்த தெய்வீக இசைக்கு அருகே வர முடியுமா?
இனி விஸ்வநாதன் அவர்களின் பிரத்யேக சிறப்பு ஒன்றை பார்ப்போம். அவருடைய இசையமைப்பு ஒரு மூளையின் ரகசிய விளையாட்டு. ஒரு பாட்டுக்குரிய வெவ்வேறு அம்சங்களை எப்படி திட்டமிடுகிறார்,அதிலும் காலத்துக்கு முந்திய sophistication கொண்டு என்பது புதிர்தான்.
நான் தொழில் நுட்ப முன்னேற்றத்தை குறிப்பிடவில்லை. creativity என்று சொல்ல படும் வித்தியாச படைப்பு திறனை சொல்கிறேன்.
அவர் இசை கருவிகளை உபயோக படுத்தியதில் நிஜமாகவே இசை மகாராஜாவே. யாழ்,கொட்டங்கச்சி வயலின்,உறுமி மேளம்,பறை ொட்டு,வீணை,வயலின்,மிருதங்கம்,தவில்,தபேலா,சாக் ஸ்,ஹா ர்மோனியம்,சிதார்,சாரங்கி,ட்ரம்பெட் ,புல் புல் தாரா,பியானோ,கிடார்,அக்கார்டியன்,புல்லாங்குழல் ,மௌத் ஆர்கன்,விசில்,கஞ்சிரா,பாங்கோ,ட்ரம்ஸ்,கிளாரினெ ட்,ஷெ னாய் ,நாதஸ்வரம்,என்று கணக்கே இல்லை. அத்துடன் ஒன்றோடு மற்றதை இணைக்கும் லாவகம், ஏதோ பெரிய சோதனை முயற்சி என்று படாமல்,உங்கள் அறிவுக்கும் ரசனைக்கும் இயல்பாக தெரியும் அழகுணர்ச்சி கொண்டிருக்கும்.
அதைத்தவிர கருவி சாரா அழகு படுத்தல்,(non -instrumental embellishmant )என்று ஒன்று உண்டு. அதுதான் infusing grandeaur mood with drafted voices என்பது. அது மனிதர்களின் வித்யாசமான ஏதோ ஒரு ஹம்மிங் அல்லது ஆலாபனை, அல்லது மழலை போன்ற gibbarish என்று ஒன்றுடன் தாளத்தை இணைத்து அழகான காற்று இசை கருவிகளையோ,அல்லது தந்தி இசை கருவிகளையோ கொண்டு பல்லவியுடனோ ,சரணத்துடனோ லீட் கொடுப்பது.
இவை சில சமயம் மனித குரல்களின் இணைந்த தாள- ஒலி கருவிகளாகவோ, வெறும் தாள-ஒலி கருவிகலாகவோ ,அல்லது திடீர் குரல் ஆரம்பமாகவோ கூட இருக்கலாம். அது பாட்டின் தன்மை மற்றும் இசையமைப்பாளரின் உள்ள போக்கில் அது மக்களை கவருமா என்று கணிப்பில் அடங்குவது.
"நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன "பாட்டில் வினோத ஒலி சுசிலா குரலில் எழும்ப பாங்கோ ஒலி அதற்கு பதில் சொல்வது போல துணை நிற்கும். "ரோஜா மலரே" பாட்டிலும் ஹம்மிங் உடன் சேரும் பாங்கோ ,"பூமாலையில் ஓர் மல்லிகை" பாடலில் ஆலாபனையுடன் அழகாக சேரும் தபலா,என்பவை மனித குரலுடன் இணைந்த கருவிகளை கொண்டு ஆரம்பத்தையே களை கட்ட வைப்பார்.
கருவிகள் என்றால் ட்ரம் ,கிடார் சேரும் "யாரோ ஆட தெரிந்தவர் யாரோ ", தபலா,பாங்கோஸ் என்று சேர கூடாத கருவிகளை சேர வைத்து கொடுத்த "நாளை இந்த வேளை பார்த்து ", தவிலும்,பாங்கோவும் இணையும் "அதிசய உலகம்",ட்ரம் ,பாங்கோ இணையும் "அவளுக்கென்ன " என்று சொல்லி கொண்டே போகலாம்.
"தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.
ஆனால் எல்லா பாடல்களிலும் , ஆரம்பத்திலேயே ,இசை ரசிகர்களை கட்டி போட்டு விடுவார்.
"தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.
பாடல்களின் உயிர் நாடியை பிடித்தல் ஆரம்பமே. ஆனால் ஆத்மார்த்தமான இசை பங்களிப்பால் ஜீவ நாடியையே பிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தும் வித்தையை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே …
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றில் மைல் கற்களாய் அமைந்த திரைப்படங்கள் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவையாகும். மேலும் இவ்விரண்டு திரைப்படங்களையும் தானே இயக்கிய பெருமையும் எம்.ஜி.ஆருக்கு உண்டு. 1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 எனும் கண்காட்சியை முழுக்க முழுக்க தமிழ் மக்கள் காண வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பியதால், இப்படத்தின் திரைக்கதையோட்டம் ஜப்பான் நோக்கித் திரும்பியது.
எம்.ஜி.ஆர் அவர்களின் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கே உண்டு. அவ்வரிசையில் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. இத்திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னரை ஒப்பந்தம் செய்தபோது எம்.ஜி.ஆர். அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார். திரைப்படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள், அனைத்தும் முத்துப் பாடல்கள் எனலாம். கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், புலவர் வேதா ஆகிய கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இன்றும் மின்னுகின்றன. இப்பாடல்கள் பதிவான பின் எம்.ஜி.ஆர். அவர்கள் மெல்லிசை மன்னரை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம். மெச்சிப் புகழ்ந்தாராம்.
அப்பாடல்களில் ஒன்று இதோ, கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் தமிழ் வார்த்தை விளையாட்டு நடக்கிறது பாருங்கள்.
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ
பத்மஸ்ரீ கே.ஜி.யேசுதாஸ் பி. சுசீலா குரல்களில் இழைந்து வரும் இசைத் தென்றல் இது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அபூர்வ ராகம் இது. காட்சியமைப்பும் காண வெகு கச்சிதமாய் மக்கள் திலகத்தின் திரைச் சரித்திரத்தில் மற்றுமொரு மாணிக்க மகுடம். கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இளமை நந்தவனம் நர்த்தனமிடுகிறது, அதற்கு மெல்லிசை மன்னரின் இசை கவரி வீசி விடுகிறது! வாழ்க்கையின் அன்றாடப் பரபரப்பிலிருந்து சற்று விலகி இளைப்பாற இப்பாடல் அழைக்கிறது…
தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ
இல்லை காதல் தேவதையோ
தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ
இல்லை காதல் தேவதையோ
வண்ணப் பாவை
கன்னித் தேனை
கன்னம் என்னும்கிண்ணம்
கொண்டு உண்ணச் சொன்னாளோ
தங்கத் தோணியிலே
தவழும் பொன்னழகே
நான் கனவில் வந்தவளோ
உன் மனதில் நின்றவளோ
மின்னல் கோலம் கண்ணில்
போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில்
யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை
என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச்சொல்ல
காதல் உண்டானதோ
(தங்கத் தோணியிலே)
அல்லி பூவைக் கிள்ளிப்
பார்க்க நாள் என்னவோ
கிள்ளும்போதே கன்னிப்
போகும் பூ அல்லவோ
அஞ்சும் கெஞ்சும் ஆசை
நெஞ்சம் நாணம் விடாததோ
அச்சம் வெட்கம் விட்டுப்
போனால் தானே வராததோ
(தங்கத் தோணியிலே)
https://youtu.be/I-qRFUpdqME
courtesy -thiru கவிஞர் காவிரிமைந்தன்.
Bicycle Thieves -Vittorio De Sica - Italy -1948.
நான் மட்டுமல்ல உலக பட இயக்குனர்கள் ஜப்பான் முதல் ஈரான் வரை ,சத்யஜித்ரே,பிமல்ராய்,முதல் பாலுமகேந்திரா வரை தெய்வமாய், நியோ ரியலிச படங்களின் தந்தையாய் தொழும் நபர் விட்டோரியோ டிசிகா . இவரின் நூறாவது பிறந்த நாளை கானடா நாட்டு montreal சூதாட்ட விடுதியில் ,நண்பர்களுடன் கொண்டாடினேன்.(7 ஜூலை 2001) இது முடிந்து ஊர் திரும்பியதும் (ஜகர்தா) இந்திய தூதர் தந்த விருந்தில் இருக்கும் போது ,நம் தெய்வம் நடிகர்திலகம் மறைந்த செய்தி வந்து என்னை மீளா துயரில் வீழ்த்தியது.
neo Realism என்ற பாணியை துவங்கியவர் ரோசலினி என்ற இத்தாலிய இயக்குனரே (1945இல்).இதை தொடர்ந்தவர் நமது டிசிகா Sciuscia (1946),Bicycle Thief (1948) போன்ற படங்களில். 5 முறை ஆஸ்கார் விருது வாங்கியவர் குருவாக ஏற்றது ரோசலினி ,சார்லி சாப்ளின் ஆகியோரை. சிறு வயதில் வறுமையில் வாடியவர், பிறகு நாடகம்,படத்துறை என்று பெரிய அளவில் சாதித்தார்.சூதாட்டத்தில் நாட்டம் கொண்டு பெருமளவில் இழந்தவர்.(சூதாட்ட விடுதியில் நாங்கள் நூறாம் ஆண்டு கொண்டாடிய காரணம்).
சக சூழலில், சக மனிதர்களின் பிரச்சினையை எடுத்து அதை கலை சார்ந்த அழகுணர்ச்சியுடன்,உண்மை தன்மை கெடாமல் கொடுப்பதே Neo Realism .தீர்வு கொடுப்பதை விட,தீர்வை நாடி நம்மை ஓட வைக்கும்.மனத்தை ஈரமாக்கி ,துயர் துடைக்க வழி இல்லையெனினும்,துயரில் பங்கு பெரும் மனிதம் வளர்க்கும். தொழில் முறை நடிகர்களை நாடாமல் அமெச்சூர் நடிகர்களை வைத்தே படம் எடுத்தார்.(தொழில் முறை நடிகர்கள் டப்பிங் கொடுத்ததாக நினைவு).
உலகத்திலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த படைப்பாக கருத படும் படைப்பு இது.பல உன்னத படங்கள் ஒரு புத்தகத்தை மையமாக கொண்டே இருக்கும். இதுவும் லுஜி பர்டோலோனி என்பவரின் நாவல் .சத்யஜித் ரே இந்தியாவின் வறுமையை வெளிச்சமிட்டு புகழடைபவர் என்ற குற்ற சாட்டு எழுந்தது போல, இவர் இத்தாலியின் வறுமையை வெளிச்சமிட்டு உலக புகழ் சேர்ப்பதாக ,இத்தாலியில் குற்றசாட்டு எழுந்தது. அதையும் மீறி ,இவர் படைப்பும்,ஐவரும் காலத்தில் அழியா புகழ் அடைந்தனர்.
அமெரிக்க Great Depression காலத்திலும், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலக போருக்கு பின்னரும் சொல்லொணா வறுமை,வேலையில்லா திண்டாட்டம், இளம் தலை முறையின் கொதிப்பு, அதிகரித்த குற்றங்கள் என்று எல்லா சவால்களையும் சந்தித்தன. இதை பற்றி அந்தோனியோ ,மனைவி மரியா, மகன் ப்ருனோ சுற்றி பின்ன பட்ட சுருக்க கதை ,உலகம் போற்றும் classic படமானது.
வேலையில்லா அந்தோனியோ, போஸ்டர் ஓட்டும் வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு தேவை ஒரு சைக்கிள். மனைவி,தனது உயர் ரக (கல்யாண சீதனம்) விரிப்புகளை அடகுக்கு கொடுத்து பணம் வாங்குகிறாள். முதல் நாளே சைக்கிள் திருடு போய் ,அதை மீட்க அவன் படும் பாடு, மகனும் சேர்ந்து அவனுடன் படும் துயர் கதை. இறுதியில் பாடு பட்டும் தன் உடமையை மீட்க முடியாத விரக்தியில்,இன்னொரு சைக்கிள் ஐ களவாட போய் பிடிபட்டு, இறுதியில் உடமையாளரால் மன்னிக்க பட்டு,மகனுடன் வருத்தம்,விரக்தி,மீளா வறுமை,செயலற்ற நிலையுடன் அவமானமும் சுமந்து செல்லும் துயரம்.
இதன் பாதிப்பில் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி தந்த அற்புத படைப்பே பொல்லாதவன்.வருங்கால பொழுது போக்கு படங்களுக்கு புது பாதை போட்ட படைப்பு.
''கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது.''
மக்கள் திலகம் எம்ஜிஆர் .
அனந்தராமன் என்கிற திரு ஆதிராம் அவர்களே
உங்கள் விளக்கத்தை படித்தேன் . கடந்த 8 ஆண்டுகளாக எல்லா திரிகளையும் படித்தவன் என்ற முறையில்
எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு பதில் இது வரை கிடைக்கவில்லை .இருந்தாலும் உங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி என்னுடைய பதிவினை உங்கள் முன் வைக்கிறேன் .
''என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது' - ஆதிராம் 1
என் பதிவு .1
நீங்கள் அப்படியென்ன உலகத்தில் யாரும் கேட்காத சட்ட கேள்விகள் கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு பயந்து மற்றவர்கள் தப்பிக்க உபாயம் தேடுவதற்கு.
''இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்'' - ஆதிராம் -2
என் பதிவு -2
நீங்கள் சொல்பவரே நீங்கள்தான் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் சொல்லல அய்யா!அதுவும் உங்கள் திரியிலேயே பலர் சொல்லி நான் படித்திருக்கிறேன். அது உண்மையாய் இருந்தால் உங்களுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துக் கொள்வது போல ஆகி விடுமே! அது உண்மையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் இல்லை இல்லை உங்கள் விருப்பமும். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நீங்களே ஒரு பெயரில் பதிவிட்டு ஒரு கால் மணி நேரமோ அரை மணி நேரமோ சென்றபின் நீங்களே உங்களுக்குண்டான வேறு பெயரில் (பெயர்களில்) உங்களுக்கு லைக்குகள் போட்டுக் கொள்கிறீர்களாமே! சிரிக்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
ஆனால் நான் கூட பல சமயங்கள் பார்த்திருக்கிறேன். who is online பார்க்கும் போது நீங்கள் குறிப்பிட்ட அந்த வேறு ஒருவரும் பச்சை விளக்கில் இருக்கிறார் அடுத்த வினாடி உங்கள் பெயர் லாகின் ஆகி பச்சை விளக்கில் மின்னுகிறது. உடன் நாயகர் லாக்-ஆப் ஆகி பச்சை விளக்கு அணைகிறது. அப்புறம் உங்களுடையது அணைந்து பரணி சாம்ராஜ்யம் என்று லாகின் ஆகி விளக்கு எரிகிறது.
இதுமட்டுமல்லாமல் 'ஊர்வசி', கிரிஜா என்று பொம்பளைகள் பெயரில் அடிக்கடி வேறு உங்கள் பின்னாலேயே விளக்குகளாய் லாகின் ஆகி மாறி மாறி மின்னி மின்னி அணைகின்றன. நண்பர்கள் தங்கள் 'எண்ணங்கள் எழுத்துக்களை' சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் பெண் பெயரில் எழுதுவார். ஆனால் அவர் பெண்ணாக மாற முடியுமா? ஜீன்ஸ் பேன்ட் போட்டு அத்தை மகனுடனோ சித்தி பையனுடனோ பின்னாடி பைக்கில் கால் தூக்கிப் போட்டு எறி குஜாலாக படம் பார்க்க போக முடியுமா? குளித்துக் கொண்டிருக்கம் போது ரவிச்சந்திரன் மேட்டர் வந்தால் அப்படியே வர முடியுமா? பெண் புனைப் பெயர்தானே .ஆனால் அவர் ஆண்தானே! ஆனா ஆணே இங்கு பெண்ணாக மாறி விட்ட அதிசயமெல்லாம் நடந்துது என்று நான் சொல்லி சிரிக்கல சார். சொல்றாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான். பெண் இல்ல.
அது எப்படி உங்கள் பெயர் வரும் போது மட்டும் இவர்கள் பின்னாலேயே உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை உங்களுக்கும் மிஞ்சிய ஒற்று வேலை பார்ப்பவர்கள் போல் இருக்கிறது. நீங்கள் எப்போது ஹப்பில் அமர்வீர்கள் என்று வேலை வெட்டி இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொண்டு நீங்கள் வந்ததும் உங்கள் பின்னாடியே ஓடி வந்து விடுகிறார்களே! அப்படி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நாயகர் பதிவிடும் போது ஆதிராமும் லாகினில் இருக்கிறார். ஆனால் உஷாராக பதிவு போடாமல் இருக்கிறார். அப்புறம் சந்தேகம் கொண்டு யாராவது கேட்டால் அரை மணி நேரத்தில் ஆதிராம் ஓடி வந்து நாயகருக்கு லைக் போட்டு விட்டு தற்காப்பு நாடகம் நடத்தி ஓடி விடுகிறார்..அப்போது நாயகர் லாக்-ஆப் ஆகி விடுவார். ஏனென்றால் நாயகருக்கு நான் லைக் போட்டேன் என்று சொல்லி நாங்கள் இருவரும் வெவேறு நபர்கள் என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா! அப்படின்னு சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்'' - ஆதிராம் -3
என் பதிவு -3
ஓஹோ! இந்தக் குற்றச்சாட்டு துவக்கத்திலேயே வந்து விட்டதா? நான் ஒரு மாங்கா. இப்பத்தான் உங்களை மாதிரி துப்பு துலக்கி கண்டு பிடிச்சுட்டேன்னு பெருமைபட்டா மக்கா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டார்களா? சதிகாரர்கள். இவர்களை சும்மா விடக் கூடாது நாயகரே சாரி ஆதிராம் . சாரி அனந்த ராமன்
அது சரி.எந்த மாடரேட்டர்கள் ஆராய்ந்து சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் உங்களை குறை சொல்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன். ஒரு மனுஷரை இப்படியா சந்தேகப்படுவது? இருந்தாலும் மாடரேட்டர்கள் உங்களையேவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஆதிராம் ஒருவர்தான் வேறு பெயரில் வரவில்லை என்று எங்காவது அறிவித்திருக்கிறார்களா? அப்படி என்று நான் கேட்கவில்லை. கேட்கிறார்கள். சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார்'' -ஆதிராம் 4
என் பதிவு 4
முத்துராமன் மட்டுமா கொளுத்திப் போட்டார். அதற்கு முன்னும் பின்னும் பலர் கண்டு பிடித்து விட்டார்களே. உங்களுக்கும் பாரிஸ்டர் என்று அப்போது இருந்த ஒருவருக்கும் இது சம்பந்தமாக பக்கம் பக்கமாக வாக்குவாதம் நடந்ததே. சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே'' -ஆதிராம் -5
என் பதிவு - 5
ஏன் பயப்படுகிறீர்கள் சார். நீங்கள்தான் மற்றவர்கள் இல்லையே. யாராவது ஏதாவது ஆராய்ச்சி பண்ணிவிட்டுப் போகட்டுமே. நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே. அப்புறம் ஏன் இந்த நடுக்கம். பயப்படாதீர்கள். நாங்கல்லாம் இருக்கோம். விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் இப்படி பயப்பட்டால் நீங்கள் செய்வது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும். இன்னும் வகையாக மற்றவர்கள் பேச நீங்களே வழி செய்து கொடுத்தது போல் ஆகி விடும்.
உங்கள் தலைவர் நடித்த ராஜா ராஜ சோழன் படத்தில் ஒற்று வேலை பார்க்க நம்பியார் சிவாஜியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவது போல் நடிப்பார். ஆனால் மனோரமாவை வைத்து நம்பியாரையே ஒற்றும், வேவும் பார்த்து அவரை கையும் களவுமாக பிடிப்பார் சிவாஜி. அது மாதிரி நீங்க எங்க மக்கள் திலகம் எம்ஜிஆர திரியில் வந்து ஒற்று வேலை பார்க்கும் போது உங்களைப் பற்றி எங்க திரியிலே இருந்து வந்து ஒற்று வேலை செஞ்சி எங்க ஆளுங்க கண்டு பிடிச்சதுதான் இவ்வளவு விஷயமும். என்ன தைரியம் இருந்தா அந்த ஆளு இங்கே வந்து ஒற்று வேலை பார்த்திருப்பாரு அப்படின்னு இங்க உள்ளவங்க கேக்குறாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன்'' - ஆதிராம் -6
என் பதிவு -6
ஓ...இருக்கிற பேரெல்லாம் போதாது என்று இன்னொரு பேரா. தாங்கல ஆதி ! இப்போ மத்தவங்க சொல்றத நான் நம்பித்தான் ஆகணும் போல இருக்கு. என் பெயரே எனக்கு மறந்துடும் போல் இருக்கு. அஞ்சாறு பெயர்ல நீங்க எப்படித்தான் கில்லாடித்தனமா இவ்வளவு நாள் சாமர்த்தியமா குப்பை கொட்டுறீங்களோ தெரியல. ஒற்றர் வேவு வேலை பார்த்து எங்க திரியை உங்க திரி போல வேகமாக பாகம் கடக்க வச்சதுக்கும், இன்னும் கொஞ்ச நாள்ல உங்களையும் மிஞ்சி நாங்க அடுத்த பாகம் போக உதவி செஞ்சதுக்கும் உங்களுக்கு நன்றி.
ஆமா! நாயகரை ரொம்ப ரெண்டு மூணு நாளா காணோமே. ரொம்ப அப்செட்டோ. நீங்க மட்டுமே வரீங்க. சரி இப்பதான் சொல்லிட்டோமில்ல. அவரும் நீங்களும் இப்போ ஒண்ணா வந்து நாங்க ரெண்டு பெரும் வேற வேற ஆள்னு நம்ப வச்சுடுவீங்க. நவராத்திரி வேஷம் கட்டினவரே உங்களிடம் தோத்துப் போகணும். உங்களையெல்லாம் ரசிகரா வச்சிருந்தாரே..அவரை சொல்லணும்.
சரி வருத்தப்படாதீங்க. சுவிட்சை மாத்தி மாத்தி போடுங்க.
ஆதிராம்
என்னோட பொது வாழ்க்கையில் உங்களை போன்று பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரை இப்போதுதான் பார்கிறேன் .
வேண்டுகோள்
உங்கள் அழகு திருமுகத்தை திரியில் பதிவிடுங்களேன் . எல்லோருடைய குழப்பமும் தீரும் .பதிவீர்களா ?
கல் நாயக் சென்னையில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்கிறேன் .
கடைசியாக மக்கள் திலகத்தின் பொன்னந்தி மாலை - பாடலை பதிவிட்ட திரு கார்த்திக் எங்கே ?
ஆயிரத்தில் ஒருவனை - மிக நேர்த்தியாக விமர்சனம் செய்த சாரதா பல வருடங்களாக காண வில்லையே ?
ஒரே ஒருவரின் சாமர்த்தியம் - பலரை எப்படி அலை கழிக்கிறது ?
மாடரேட்டர்கள் ஏமாறலாம் . பதிவாளர்கள் ஏமாறலாம் . பார்வையாளர்கள் ஏமாறலாம் .
பைபிள் - பகவத் கீதை - குரான் மீது நம்பிக்கை கொண்டவன் நான் .
சிரித்து வாழ வேண்டும் படத்தில் மக்கள் திலகம் பாடுவார்
''யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
அஸ்ஸலாமு அலைக்கும் !
குமார்,
மொக்கை பதிவுகளாய் போடாமல், ஆழமான சுவாரஸ்ய விஷயம் உள்ள பதிவுகளாய் போட்டு ,நான் உட்பட பலரை இந்த திரிக்கு வரவழைத்த கார்த்திக் ,சாரதா மற்றும் நல்ல பதிவாளர்கள் கல்நாயக் ,ஆதிராம் இவர்கள் மீது நீங்கள் தொடுத்திருக்கும் அஸ்திரம், அதுவும் இடம் மாறி வந்து, ஆச்சர்யம் அளிக்கிறது. நண்பர்களிடம் ,நான் கேள்வி பட்ட வரை தாங்கள் ஒரு தரமான நடிகர்திலகம் ரசிகர் என்பதே.
எதையுமே நிரூபிக்கும் வரை வீண் குற்றம் சுமத்துவது ,தங்களை போன்ற முதிர்வுற்ற பதிவருக்கு அழகல்ல. என்ன பெரிய ஒற்று வேலை? சதி செயலா புரிகிறீர்கள் நீங்கள்?
தேடி துரத்தி வந்து தாக்குமளவு என்ன தவறு நேர்ந்தது குமார்?
இன்னொன்றும் கூறி கொள்கிறேன். எனக்கு தனி தனியாகவே இந்த பதிவர்களின் மேல் மலையளவு மதிப்புண்டு. இவர்கள் எல்லோரும் ஒன்று என்றால் ,அவர் திறமையில் மலைத்து நின்று வணங்குவேனே தவிர, ரசனையற்று பழி சுமத்தி அவரை காய படுத்த மாட்டேன்.
திரு கோபால்
என்னை பற்றி சிறிதளவு தெரிந்து கொண்ட உங்களுக்கு என்னுடைய நன்றி . எல்லா பதிவாளர்கள் மீதும் எனக்கு மரியாதை மதிப்பு உண்டு .
என்னுடைய நீண்ட நாள் ஆதங்கத்தை வெளி வருபடி செய்தவர் திரு ஆதி . திரியில் பலருக்கும் இந்த உண்மைகள் தெரியும் .
நீங்கள் ஆத்திரத்தில் பதிவு போட்டு உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள் . முதுகு சொரியும் பட்டியலில் கோபாலும் சேர்ந்தார் என்ற
அவப்பெயர் வேண்டாம் .இனி சம்பந்த பட்டவர்கள் விளக்கமளித்தால் போதும் .ஆதி எம்ஜிஆர் திரியில் மட்டும் வரவில்லையே ? மதுர கானம் திரியில் வருகிறாரே . எனவேதான் நான் இங்கும் பதிவிட்டேன் .சரியான பதில் கிடைத்தவுடன் நானும் அமைதி காக்கிறேன் .
நீங்கள் ஒதுங்கி இருக்கவும் . முடியாது என்றால் ஆதியின் நிழற்படம் இங்கே பதிவிடவும் .
குமார்,
என்னிடம் ஆதியின் புகை படம் உள்ளது. அது அவர் 6 மாத குழந்தையாக இருந்த போது எடுத்தது. பரவாயில்லையா?போடலாமா?:-d
டியர் ரவி சார்,
உங்களின் 'கருவின் கரு' தொடர் வேள்வி உண்மையிலேயே பெரிய சாதனைதான் தாயின் பெருமைகளை மிகத்தெளிவாக அழகாக உணர்த்தியுள்ளீர்கள். தாய்ப்பாசம் அற்றவர்களும் உங்கள் பதிவுகளைப் படித்தால் மனம் திருந்தி தாயின் அருமையை உணர்வார்கள். கங்கை கரையில் தாயை அனாதரவாக விட்டு வந்தவர்கள் படித்து உணரவேண்டிய பொக்கிஷப்பதிவுகள்.
இணைக்கப்பட்ட பொருத்தமான பாடல்கள் மட்டுமல்லாது, அவற்றோடு இணைத்து தந்த உண்மைச்சம்பவங்கள் மனதைத் தொடுவதாக அமைந்திருந்தன.
உங்கள் கடின உழைப்பு நிச்சயம் போற்றுதலுக்குரியது.
டியர் கோபால் சார்,
நீங்கள் என்மீது வைத்திருக்கும் மலையளவு நம்பிக்கைக்கு, அதைவிட அதிகமான நன்றிகள்.
நன்றி திரு ஆதிராம் - உங்களைப்பற்றிய சர்ச்சைகள் மனதிற்கு மிகவும் கஷ்ட்டமாக இருந்தாலும் , விடாமல் எல்லா பதிவுகளையும் படிக்கும் குணமும் - படித்ததோடு நிற்காமல் உடனே மனமுவந்து பாராட்டும் நல்ல எண்ணமும் உங்கள் நல்ல உள்ளத்தை எடுத்துக்காட்டுகின்றது .
புரட்சி தலைவரின் 'தொழிலாளி' திரைப்படத்தில் வரும் பாடலிருந்து சில வரிகள்...
'இருப்பதைக்கொண்டு
சிறப்புடன் வாழும்
இலக்கணம் படைத்தவன், தொழிலாளி
உருக்குப் போன்ற
தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன், தொழிலாளி
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் அரும்பும்
...
ஆண்டவன் உலகத்தின் முதலாளி'
இப்பாடலுக்கே உரித்தான சில சிறப்பு அம்சங்கள்...
முதலாவதாக, முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இசையமைக்கப்பட்டிருக்கும் ஒரு இனிமையான பாடல்.
குறிப்பாக, குறைந்தயளவு இசைக்கருவிகள் பயன் படுத்தப்பட்டிருக்கும்.
இரண்டாவதாக, நமது அன்பிற்குறிய, மறைந்த TMS அவர்கள், மிகவும் தாழ்ந்த சுருதியில் (Low Pitch) பாடிய பாடல்.
குறிப்பாக, TMS அவர்களின் பாடல்களை அவ்வளவு எளிதாக பாடிவிட முடியாது.
பாட்டில் எங்கேயாவது உயர்ந்து சுருதி (Hi Pitch) கலந்திருக்கும், நிச்சயம் பட முயற்சிப்பவரின் காலை வாரிவிடும்.
ஆனால் இந்த பாடலை எவர் வேண்டுமானாலும் பாட முயற்ச்சிக்கலாம்.
மூன்றாவதாக, தலைவர் மிகவும் அமைதியாக தரையில் அமர்ந்து பாடும் பாடல், அதுவும் ஒரு தத்துவப்பாடல்.
மிக எளிதாக, மிகவும் இயற்கையாக, முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எந்த உடலசைவுகளையும் காட்டியிருக்க மாட்டார்.
இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்களாக ஏன் ஒரு 'தொழிலாளி' மட்டும் இருக்க வேண்டும்?
மேல்மட்டத்தில் உள்ள துறைகளில் பணிபுரிபவர்கள், ஏன் இதை கடைபிடிக்கக் கூடாது?
மேல்மட்டத்துறைகளில் உள்ள நிறுவனங்களில், ஏன் இத்தனை ஆடம்பரம், விளம்பரங்கள்?
தேவையற்ற விஷயங்களுக்கு பொருளாதாரத்தையும், நேரத்தையும், ஏன் செலவிட வேண்டும்?
இவையெல்லாம் குறைந்தால், உருக்குப் போன்ற தன் கரத்தை நம்பி ஓங்கி நிற்கும் தொழிலாளியின் வாழ்வு மலர, ஏன் வழி பிறக்காது?
இப்பொழுது இருக்கும் நிலை தொடர்ந்தால், கல்லை கனியாக மாற்றும் தொழிலாளியின் கவனம் ஒரு நாள் திரும்பும்.
அப்பொழுது (அதில்), நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒரு நாள் அரும்பும் நிலை உருவாகும்.
courtesy venkatrao fb
ஊருக்கு உழைப்பவன்” படத்தில் ஜேசுதாஸ் பாடிய “பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்” ஒரு சூப்பர் ஹிட் பாடல்...
இந்தப் பாடல் காட்சிக்காக முதலில் இரண்டு , மூன்று பல்லவிகள் எழுதப்பட்டனவாம்...
அதில் ஒரு பாடலின் பல்லவி...
"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது
இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது
இது இறைவனுக்கும் புரியாது"
இயக்குனர்..இசையமைப்பாளர் ...எல்லோரும் இந்தப் பாடலை ரசித்து ஓகே சொல்லி விட்டாலும் , எம்.ஜி.ஆர் மட்டும் ஒன்றுமே சொல்லாமல் அமர்ந்திருந்தாராம்...
எல்லோரும் எம்.ஜி.ஆர் முகத்தைப் பார்க்க ..
"நீங்க சொல்றது போலவே இந்தப் பாட்டு நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத்தான் பாப்புலராகும்... ரொம்ப கேட்சிங்கா இருக்கு"என்றாராம் எம்.ஜி.ஆர்....
அப்புறம் என்ன..? பல்லவியோடு சரணமும் உருவாகி பாடல் பதிவானதாம்...
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்”
“வான மழைத் துளி யாவும்
முத்தாக மாறாது
வண்ணமிகு மலர் யாவும்
உன் போல சிரிக்காது
தேடி வைத்த பொருள் யாவும்
தேன் மழலை ஆகாது
திருவிளக்கின் ஒளியழகும்
உன் அழகைக் காட்டாது..”
இந்தப் பாடல் வரிகளை ஜேசுதாஸ் எந்த உணர்ச்சியோடு பாடினாரோ..?
ஆனால் இதற்கு வாயசைத்து நடிக்கும்போது எம்.ஜி.ஆரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்..?
# “எது நடக்கும் எது நடக்காது
இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது
இது இறைவனுக்கும் புரியாது..”
courtesy net
உங்களுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு வரவில்லையென்றால்
நீங்கள் சரியான ஜால்ரா என்று புரிந்து கொள்ளுங்கள்..”
என்றார் நண்பர்...!
உண்மைதான்...!
இதோ..ஒரு இனிய பாடல் உருவாக எத்தனை காரசாரமான கருத்து மோதல்கள் உருவாக வேண்டியதிருக்கிறது.....!
# ‘இளைய நிலா பொழிகிறது’ ....
‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை , முதலில் ‘சலவை நிலா பொழிகிறது’ என்றுதான் வைரமுத்து எழுதி இருந்தாராம்....
படித்துப் பார்த்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் ...“அந்தச் ‘சலவை’ என்ற வார்த்தை நன்றாக இல்லையே... அதற்குப் பதிலாக வேறு வார்த்தையை போடுங்களேன்..”என்று சொல்ல ..வைரமுத்து மறுக்க...ஆர்.சுந்தரராஜன் சொன்னாராம்...” எனக்கு அது புரியலீங்க..”.
வைரமுத்து உடனே , “உங்களைவிட அறிவாளிகள் நிறைய பேர் தமிழ்நாட்டுல இருக்காங்க..” என்று பட்டென்று பதில் சொன்னாராம்..
“இருக்கலாம் ஸார்.. ஆனா எனக்கே அது என்னன்னு புரியலையே..? அப்புறம் எப்படி நான் மத்தவங்களுக்கு புரிய வைக்கிறது..?” என்று சண்டைக்கு போய் விட்டாராம் ஆர்.சுந்தர்ராஜன்.
இளையராஜாவும் ஆர்.சுந்தர்ராஜனை அழைத்து, “இது உனக்கு முதல் படம்.... கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.. கவிஞர் சொன்ன மாதிரியே இருக்கட்டும்..” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.
“இல்ல ஸார்.. ‘சலவை’ன்னு போட்டா நல்லாயிருக்காது ஸார்..” என்று விடாப்பிடியாக விட்டுக் கொடுக்காமல் விறைப்பாக நின்றாராம் ஆர்.சுந்தரராஜன்....!
அப்புறம்தான் ‘சலவை நிலா’வை ....‘இளைய நிலா’வாக மாற்றிக் கொடுத்தாராம் இளையராஜா ..!
“சலவை”நிலாவை விட இளையராஜாவின் “இளைய நிலா”தானே இனிமையாக இருக்கிறது...?
வைரமுத்து அன்று ஏன் அத்தனை அடம் பிடித்து நின்றார் என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை...!
# “அடம் பிடிக்கும் குழந்தைகளை , அம்மாக்கள் “தரதர” வென இழுத்துப் போவதைப் போல ...
காலம் எனும் தாய் ,
இளையராஜாவையும் , வைரமுத்துவையும் எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டாள்..”
# இளையராஜாவுடன் இணைவது பற்றி , வைரமுத்து எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன..
“நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?
‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.
நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.
மழை வந்தது.
நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.
ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.இப்போது முடியுமா?
இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?"
# “பூங்காற்று திரும்புமா..?”
j
courtesy net
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
10
http://i.ytimg.com/vi/ukezvBWyqNo/hqdefault.jpg
'பொன்னென்றும் பூவென்றும்'
படம்: 'நிலவே நீ சாட்சி'
இசை: 'மெல்லிசை மன்னர்'
பாடலாசிரியர்: 'கவிஞர்' வாலி
பாலாவின் தொடரில் அடுத்து வரும் பாடலின் படமும் இதற்கு முந்தைய தொடரில் நாம் பார்த்த அதே 'நிலவே நீ சாட்சி' படம்தான்.
ஹைய்யா! ஜாலி! கதை எழுத வேண்டிய அவசியமில்லை. போன தொடரிலேயே படத்தைப் பற்றி விவரம் தந்தாயிற்று.
பாலு பாடிய பாடல்களில் உச்ச நிலை தொடும் பாடல். ஜெய், விஜயா காதல் பாடல் என்றாலும் இப்பாடலை பாலு ஒருவரே பாடி அசத்துவார்.
ஆனால் பாடல் மனதில் பதிந்த அளவிற்கு காட்சி பதியாமல் அம்பேல். சுரத்தே இல்லாமல் ஜெய் பாடுவது, சம்பந்தமே இல்லாமல் விஜி பாடல் முழுக்க செயற்கையாக சிரித்துக் கொண்டே இருப்பது, ஒரே ஒரு மரம், அதன் பின்னால் ஆர்ட் இயக்குனரின் கை வண்ணத்தில் வரையப்பட்ட நிழலுருவு மரங்கள் என்று பாடலுக்கான காட்சியமைப்பு போர்தான்.
வாலி இப்பாடலின் நாயகர். வார்த்தை சித்தர்.
'மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோகரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து'
இதைவிட ஒரு காதலன் மோகம் கொண்டு தன் காதலியை வர்ணித்து விட முடியாது.
http://i.ytimg.com/vi/q7GhGUNjRj4/hqdefault.jpg
'கண்கள் ஒளிவீசும் அதிகாலை வெள்ளி'
என்று கற்பனையில் வாலி கலக்குவதை எவரும் ரசிக்காமல் இருக்க முடியாது.
அது மட்டுமா?
'இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி'
என்று காதலியின் மீது காதலன் பாடும் வார்த்தைகள் அர்த்தம் நிறைந்தது. அதில் காதலனின் ஏக்கமும் நிறைந்திருப்பதை நாம் உணரலாம்.
'ம் ம்ம்ம் ஹூம்
ஹா ஹாஹாஹாஹாஹா'
என்று பாலா படுசுவாரஸ்யமாய்த் பாடலைத் தொடங்க, பின்னால் கிறங்க வைக்கும் கிடாரின் பின்னணி முழங்க, எப்படிப்பட்ட சுகமான பாடலை நாம் அனுபவிக்கத் தொடங்குகிறோம்! வயலினின் பின்னணி சுகமாய் நெஞ்சை வருடும்.
பல்லவி முடிந்து முதல் சரணம் தொடங்குவதற்கு முன்னும், அதே போல மூன்றாவது சரணம் ஆரம்பிக்கும் முன்பும் ஒலிக்கும் அந்த சாக்ஸ்போனின் இனிய இசையை இன்று முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். தொடர்ந்து வரும் சந்தூரின் அழகே அழகு. பாடல் முழுதும் பின்னால் உருண்டு கொண்டிருக்கும் பாங்கோஸ் பரவசம் தரும்.
'மெல்லிசை மன்னர்' தன் அற்புத இசையாலும், டியூனாலும் நம்மை மிரள வைத்த படம் இது.
குறிப்பாக இந்தப் பாடலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. எந்த வயதினரும், எந்த தலைமுறையும் கேட்டால் சொக்கிப் போக வைக்கும் பாடல் இது.
விஜய் தொலைகாட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை பாடினால் பாடுபவருக்கு வெற்றி நிச்சயம்.
பாலா மிக மிக மிக மிக அனுபவித்து, குழைத்து, நமக்கு அளித்த காயகல்ப சஞ்சீவி இந்தப் பாடல்.
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம்
ம்ம்ம்ம்...இன்னும் நூறாயிரம்
(இடையிசை கலக்கல்)
மூன்று கனிச்சாறு ஒன்றாகப் பிழிந்து
மோகரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து
பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம்
ம்ம்ம்ம்...இன்னும் நூறாயிரம்
கோடை வசந்தங்கள் குளிர் காலம் என்று
ஓடும் பருவங்கள் கணநேரம் இன்று
காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
(இடையிசை கலக்கல்)
கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளிவீசும் அதிகாலை வெள்ளி
தென்றல் விளையாடும் அவள் பேரை சொல்லி
இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம்
ம்ம்ம்ம்...இன்னும் நூறாயிரம்
https://youtu.be/ukezvBWyqNo
வாங்க ஜி
நிலவே நீ சாட்சி
அருமையான பாடல்கள்
நன்றி ஜி
Hi good morning to all from Gurgaon!..
Congrats to ravi for completing the karuvin karu series part 1.
Thanks vasu sir for nilave nee satchi
Thanks Rajesh, Gopal for the feed back on Julia. Gopal I didn't try any baani of Sujathaa..Just I tried to write on that movie, Thanks for your naermaiyana comments about me . I also used to write in 5 punai peyarkaL chinnakkannan, kr.iyengar, Gayathri srinivas,Xavier dasan, kannan rajagopalan in old days. ippo chinnak kannan only. ennai patri enna ninaikkireerkaL.. (Ithu thaan vambai vilai koduththu vaanguvathu enbathu)
Day before yesterday went to haridwar and returned yesterday mid night. Tomorrow again starting another tour for a week.
Welcome kumar sir do contribute about the songs of ma.thi.
I will read and try to come as and when
கடலூர், இரும்புக்கோட்டை, சென்னை, சவூதி அரேபியா முதலிய இடங்களில் கோல்மாலுக்குப் பெயர் பெற்றது 'கோபால்' கல்பொடி. பொய்களை முத்துப் போல் பிரகாசிக்க செய்வது கோபால் பல்பொடி. தில்லுமுல்லுகளுக்குத் துணை போவது கோபால் பற்பொடி. ஏமாந்த சோணகிரி கோபால் பற்பொடி.
கோபால்,
ஒரு ஆள் பல வேஷம் போட்டு இங்கிருப்பவர்கள் எல்லோரையும் மாற்றி மாற்றி ஏமாற்றி நான் வேறு அவர்கள் வேறு என்று நம்ப வைப்பது மோசடி செயல்தானே. நல்ல பதிவுகள் தருபவர்கள் ஒரே பெயரில் தரலாமே. நல்லதோ கேட்டதோ தாங்கள் ஒரே பெயரில் நேர்மையாக பதிவிட வில்லையா? ஒரு ஆள் நான் அவனில்லை என்று சாமர்த்தியம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த தில்லுமுல்லுகளுக்கு நீங்கள் சப்போர்ட் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. குற்றம் செய்பவரை விட குற்றம் செய்ய தூண்டுபவருக்குதான் தண்டனை அதிகம்.
ஒரு நபர் 5 பேராக வந்தாலும் அந்த ஏமாற்று வேலையை ரசிக்கிறேன் என்று அந்த நபர் பலவேஷம் கட்டுபவர்தான் என்று மனப்பூர்வமாக திரியில் ஒத்துக் கொண்டதற்கும், தைரியமாகத் திரியில் பதிந்து உண்மையை உணர்த்தியதற்கும் உங்களுக்கு மிகவும் நன்றி. ஆமாம்!
ஆறு வயது ஆதி குழந்தை போட்டோ உங்களிடம் எப்படி வந்தது?
குமார்,
அவர் என்ன ஏமாற்றி பணம் பிடுங்கினாரா? அல்லது பலரை மணந்தாரா?(நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில்)
திரியை சுவாரஸ்யமாக்கினார். மார் தட்டி சொல்லுவேன், எனக்கு முன்னாள் நடிகர்திலகம் திரிக்கு வந்த பலர் ,அத்திரியை சுவாரச்யமாக்கி மையத்துக்கு பெருமை சேர்த்தனர். நல்லவர்,நேர்மையாளர் என்று மொண்ணை பதிவுகளை போட்டு வெறித்தனமாக செயல்படும் போர் ஆட்களால் திரி சுவாரஸ்ய படவில்லை.
அப்படி அவர் பல பெயரில் பதிவுகள் போட்டதால் என்ன கேடு வந்தது?
திரிக்கு சுவாரஸ்யம் சேர்த்து வள படுத்தியது பெரிய குற்றமா என்ன ? பல பெயரில் வருவது மட்டும் மோசடியல்ல. தவறான தகவல்கள், பொய்யானவற்றை தூக்கி பிடித்தல் எல்லாமே மோசடி. ஒரு தலை பட்சமாக வழிபாடு செய்வது பகுத்தறிவு மோசடி.
நீங்கள் ஏன் இவ்வளவு மோசமாக தாக்குகிறீர்கள் என்பது புரியவில்லை. Administator ,Moderators இவர்களிடம் புகார் செய்வதை விட்டு ,நிரூபணமாகாத ஒன்றை சொல்லி ஏன் ஒரு அங்கத்தினரை கொதிப்படைய செய்கிறீர்கள்?அவர்கள் இருவரும் சேர்ந்து வந்து உங்களை சந்தித்தால் முகத்தை எங்கு கொண்டு வைப்பீர்கள்?
நான் திரும்ப சொல்கிறேன். என்னை போன்ற சிலர் திரிக்கு வந்த காரணம் முன்னோடிகள் கார்த்திக்,சாரதா,முரளி போன்றோர்தான்.
நான் உங்களை கேலி செய்து தாக்க நேரம் பிடிக்காது. ஆனால் பம்மலார் உங்களை பற்றி மிக உயர்வாக குறிப்பிட்டுள்ளார். என் மதிப்புக்குரிய உங்களிடம் ,தற்காலிக பொறுமை காட்டுவதில் எனக்கு தயக்கம் இல்லை.
காற்றாலையுடன் Don Quixote போல மோதாதீர்கள்.
La Strada -Federico Fellini - 1954.
வாழ்க்கை என்பது நாம் காணும் நிகழ்ச்சிகளின் தொகுப்போ, நாம் படிக்கும் கேட்கும் விஷயங்கள் மட்டுமேயல்ல.ரியலிசம் மட்டும் உண்மையோ கலையோ ஆகாது.விஷயங்களை நம் மனம் வாங்கி கொள்ளும் முறை,அது சார்ந்து நம் மனம் நமக்கு காட்டும் முறைமை,உள்மன புயல்கள்,தேவையற்ற பயங்கள் ,வக்கிரங்கள், வன்மங்கள்,துயர் சிந்தனைகள்,நிழலான பகிர முடியாத எண்ணங்கள்,பிரத்யேக மன பிறழ்வுகள்,குற்ற உணர்வுகள்,சில நேரம் துன்பத்திலும் எள்ளும் வினோத குணம், வாழ்க்கையில் சேர்த்து கட்ட பட்டாலும் நேர்கோட்டில் வராத இரு பிரத்யேக குண விசேஷம் கொண்டவர்களின் சந்திக்காத மன உணர்வுகள்,அவர்கள் ஒருவர் வாழ்கையை மற்றவர் பாதிப்பதை உள்மன படிமங்களாக்குவது போன்ற ஆழமான விஷயங்களை ,மன விளையாட்டு பயிற்சியை,சத்தியமாக ரியலிச படங்களால் அணுகவே முடியாது.
Fellini புரிந்து கொள்ள படுவதற்கே ,தேர்ந்த ஆய்வாளர்களின் துணையுடன், படிப்பறிவு (துறை சார்ந்த),மனோதத்துவ பின்னணி,அழகுணர்ச்சி ,பல உலக படங்கள் பார்த்த தேர்ச்சி,இவை இருந்தாலே சாத்தியம். அப்படி ஒரு பாணி. Fantasy எனப்படும் மன பிரமை,Baroque என்ற கலை போல மிகை தன்மையுடன் நகர்வு சார்ந்த ஒருங்கிணைக்க பட்ட கலையுணர்வு, பூமியின் தன்மையுடன் (Earthiness )இணைவு பெற்றால் மட்டுமே நிகழும் அற்புத தருணங்கள். சிறு சிறு விஷயங்களும் நேர்த்தியாக காட்ட படும்.இது ஒரு Hollywood படங்கள் போல பொதுமையுடன் ,நீர்க்க செய்த வியாபார கலையல்ல. ஒரு மனிதன் தன் மனத்தை, அதன் தருணங்களை,அதன் சலனங்களை நம் மனத்தோடு பகிர என்னும் பிரத்யேக கலை படங்கள்.உள்மன விவரிப்பு படிமங்கள்,மனோதத்துவம் சார்ந்த யதார்த்தம்,மன உணர்வுகளின் மேன்மை-மென்மை -வறுமை-துயரம்-கொடூரம்-குழப்பம் இவற்றை மனிதம் கெடாமல் நம்மோடு பகிரும் ஒரு நேர்மையான நேர்த்தியான கலை.
இந்த படம் Zampano என்ற தெருவில் வித்தை காட்டி பிழைக்கும்(சங்கிலியால் கட்டி இழுக்கும் பல விளையாட்டு) ஒருவன் ,ரோஸா என்ற உதவி பெண் இறந்து விட்டதால், அவளுக்கு பதிலாக கேல்சொமினா என்ற அவளது தங்கையை 10,000 லிரா (இத்தாலிய காசுகள் சுமார் 600 ரூபாய் ) கொடுத்து வாங்கி உதவியாக வைத்து கொள்கிறான்.அவளிடம் மனித தன்மையற்ற குரூரம் காட்டி அனுதினமும் வதைக்கிறான்.அவன் ஒரு circus ஒன்றில் பணி புரிய நேரும் போது Matto என்ற கோமாளி கலைஞன் அவர்களை எதிர்கொள்கிறான். அவனுக்கு எதிலும் எப்போதும் விளையாட்டு மனநிலை இருந்தாலும் ,எந்த ஒன்றும்,எந்த ஒருவரும் ஒரு காரணத்தோடு படைக்க பட்டவர்களே என்ற மனிதம் நிறைந்த எண்ணங்கள் கொண்டவன். சம்பனோ வும் மட்டோ வும் ஆரம்பம் முதலே மோதல். ஒரு அசந்தர்ப்பமான தருணத்தில் மாட்டோ ,சாம்பநோவால் மடேர் மடேரென்று அடித்து கொல்ல பட்டு விடுகிறான்.(சாகும் போது மாட்டோ-என் வாட்ச் உடைந்து விட்டதே) .இந்த சம்பவத்துக்கு பிறகு மணந்து கொள்ள சொல்லும் கேள்சொமினா வை நிராகரித்து,நடை பிணமாக இருக்கும் அவளை விட்டு ஓடி விடுகிறான். அவள் நினைவுகளால் துரத்த பட்டு ,இறுதியில் கண்ணீர் வடிப்பதுடன் படம் முடிகிறது.
fellini தன் Autobiography என்று இதனை வர்ணித்துள்ளார்.உள் மனத்துயர் ,ஒரு லேசு பாசான (diffused )குற்றவுணர்வு,நிழல் ஒன்று மேல்தொங்குவது போன்ற உணர்வுகளுக்கு ஆட்பட்டு ஒரு மன சித்திரமாக உருவானவள் கேள்சொமினா. Zampano ,சிறு வயதில் பார்த்த பன்றிகளுக்கு காயடித்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு பெண் பித்தனின் உண்மை பாத்திரம்.இவை வைத்து உருவானது. Fellini படங்களிலேயே அவருக்கு அதிகம் சிரமம் தந்த படம்.(நேரம்,பொருள்,மன உளைச்சல்),Antony Quinn தான் Zampano .
இவரின் பிற படங்கள் La Dolce Vita , 8 1/2, Amarcord .Nino Rota இந்த படத்திற்கு தந்த இசை கவனிக்க பட வேண்டியது. காட்சிகள் படமாக்கம் மிக ஆழ-அழுத்தம் கொண்டு பலமான காட்சி அதிர்வை தரும். ஒரு perfectionalist Fellini .
நண்பர்களுக்கு வணக்கம்.
வேலை கடுமையாக இருந்ததால் சில நாட்களாக திரிக்கு வர முடியவில்லை. மன்னிக்கவும்.
வாசு சார்,
‘ஆயிரம் ஆயிரம் அற்புத காட்சிகள் எங்கும்’ மிகவும் அபூர்வமான பாடல். இதுபோன்ற அடிக்கடி நினைவுக்கு வராத பாடல்களை தேடி எடுத்துக் கொடுப்பதிலும் அதற்கான உழைப்பிலும் உங்களை யாரும் மிஞ்ச முடியாது. பொன்னென்றும் பூவென்றும் பாடலும் தங்கள் விளக்கமும் அருமை.
‘நீராழி மண்டபத்தில்’ பாடல் பதிவுக்கும் நன்றி. அந்த பதிவை திரு.எஸ்.வி. எங்கள் திரியில் மீள்பதிவு செய்து, அதை நான் மீண்டும் எடுத்துப் போட்டு நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்தேன். பார்த்தீர்களா?
கிருஷ்ணா சார்,
நடிகர் சிவக்குமாரின் பேஸ்புக் பக்கம் பதிவு சுவையாக இருந்தது. அப்போதைய காபி, சாப்பாடு, முடி திருத்தும் கட்டணம் விலையை பார்த்தால் பெருமூச்சு வருகிறது. நன்றி.
ரவி சார்,
//இன்று மருத்துவ மனையில் பிறப்பதால் அடிக்கடி மருத்துவ மனைக்கு போகிறோம்//
சிந்திக்க வைக்கும் வார்த்தைகள். நீங்கள் கூறியுள்ள கதைகளும்.
கருவின் கருவை முதல் பாகத்தை வெற்றிகரமாக முடித்ததற்கும் அசாத்திய உழைப்புக்கும் பாராட்டுக்கள்.
அன்பே வா படத்தில் சிம்லாவுக்கு ஓய்வுக்காக செல்லும் மக்கள் திலகம், பர்ஸில் பணத்தை கத்தையாக திணிப்பதை பார்த்து திரு.நாகேஷ் அவர்கள் , ‘சார், கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. நமக்கு தொழில் நோட்டு அடிக்கிறதா?’ என்று தியேட்டரே சிரிப்பால் குலுங்க கேட்பார். அது மாதிரி நான் கேட்கிறேன். ‘உங்களுக்கு சைடுல நவரத்ன பிஸினஸ் உண்டா?’ (சாரி சார். மன்னிக்கவும். விளையாட்டுக்கு கேட்டேன்) நவரத்ன மாலையில் பாடல்களோடும் கருத்துக்களோடும் இல்லாமல் நவரத்னங்களைப் பற்றியும் அபூர்வ தகவல்களை தந்து அசத்தி விட்டீர்கள். பயனுள்ளதாய் இருந்தது. நன்றி.
கல்நாயக்,
எங்கே ரொம்ப நாளா காணோம்? பூ பாடல்கள் என்னாச்சு? வேண்டுமானால் நீங்கள் சின்னவர்தான் என்பதை ஒப்புக் கொண்டுவிடுகிறேன். கூச்சப்படாமல் வாருங்கள்.
குமார் சார்,
இணையதளத்தில் இருந்து எடுத்து பதிவிட்ட தங்களின் தங்கத்தோணியிலே பதிவும் மற்றும் சகோதரர் திரு.யுகேஷ்பாபு அவர்களின் பதிவும் அருமை.
சின்னக்கண்ணன்,
நீங்கள் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் பதிவுகளில் இருந்து தெரிகிறது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் அளிப்பதாய் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ...
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். பி.பி.எஸ். தேன்குரலில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள் பாடும் ‘இளமை கொலுவிருக்கும்...’ பாடல். (சுசீலா அவர்களின் குரலில் சாவித்திரி அவர்கள் பாடும் காட்சியை பெண்கள் தினத்தில் சின்னக்கண்ணன் பதிவிட்டதாக நினைவு. நான் சொல்வது பி.பி.எஸ் பாடுவது) மனதை மயக்கும் பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில் நாமே நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற உணர்வு. கவிஞரின் அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் வரிகள்.
இந்தக் காட்சியில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள் காதல் மன்னர் என்பதை நிரூபித்திருப்பார். நீச்சல் குளத்தில் அவரது ஜலக்ரீடை தாங்க முடியாது. கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் குளத்தில் மேலேயிருந்து குதிக்கும்போது பின்னால் திரும்பி நின்றபடி டைவ் அடிப்பார்.
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே...
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும் மனம் வருமா
...எவ்வளவுதான் பொன் நகையும் பொருட்களும் இருந்தென்ன?
அவையெல்லாம் இனிய மொழி பேசுமா? பூவைக்குத்தான் அவை மாலையிடப் போகிறதா?
இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா
...செல்வம் நிலையற்றது என்பதை எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் கவிஞர். அதை அனுபவபூர்வமாய் உணர்ந்தவர் கவிஞர். அப்போதெல்லாம் இந்தியாவில் ஜனாதிபதிக்குத்தான் அதிக சம்பளம். இப்போது போல இல்லை. அதனால்தான் கவிஞர் ஒருமுறை தன் நிலைபற்றி இப்படிக் குறிப்பிட்டார். ....‘இந்திய ஜனாதிபதியை போல சம்பளம் வாங்குகிறேன். இந்தியாவைப் போல கடன்பட்டிருக்கிறேன்’’ என்று தனது நிலையைக் கூட கவித்துவமாய் குறிப்பிட்டார்.
அப்படிப்பட்ட நிலையற்ற செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? என்று கேட்கிறார். அமுது நமக்கு எப்படி கிடைக்கப் போகிறது? நாம் என்ன தேவர்களா? சோறுதான். ஆனால், இன்முகத்துடன் சிரித்தபடி மனைவி அந்த சோற்றை பரிமாறினாலே அது அமுதாம். நயமான உவமை.
இயற்கையின் சீதனப் பரிசாய் விளங்கும் பெண்களின் பல சிறப்புகளை கவிஞர் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மகுடமாக விளங்கும் வார்த்தைகள்.
‘அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ’
பெண்களுக்கு ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும் தாய்மை என்பதுதான் பெண்மையின் உயர்ந்த சிறப்பு. அந்த தாயன்புக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இல்லையே.
உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் கூட தான் மிகவும் நேசித்த காதலி (கடைசி நேரத்தில் மணந்து கொண்டார்) இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டபோது (தற்கொலை செய்யவில்லை என்று இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது) மார்போடு ஒரு புகைப்படத்தை அணைத்தபடி இறந்திருந்தார். அது இவா பிரான் படமல்ல. அவரது தாயின் படம். இது ஒன்றே போதுமே, கல்லுக்குள்ளும் ஈரம் வைக்கும் தாயின் சிறப்பை விளக்க.
சின்னக்கண்ணன்,
குழந்தை பாட்டோடு வருகிறேன் என்றேன். குழந்தைகள் பாட்டை போட்டு விட்டேன்....... என்ன பார்க்கிறீர்கள்? பள்ளி ஆசிரியையாக வரும் சாவித்திரி அவர்கள், பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பாடலையும் ரசித்தபடியே அருங்காட்சியகத்தை பார்வையிடுவார். அங்கு மீ்ன் தொட்டியில் உள்ள மீன்களை பார்த்தபடி எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் பாருங்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i58.tinypic.com/5fnjiq.jpg
PLAY BACK SINGERS P.LEELA ..GHANTASALA ...S.JANAKI
http://i61.tinypic.com/2uh5rty.jpg
P.SUSEELA - GHANTASALA - S.JANAKI
http://i62.tinypic.com/2ebznso.jpg
SPB- GS- PBS
http://i61.tinypic.com/qybl2w.jpg
ACTRESS SAVITHRI
http://i59.tinypic.com/14il6xe.jpg
THEN PRIME MINISTER LB SASTHRI-1966
ACTRESS DEVIKA
கலை வேந்தன்,
வருகைக்கு நன்றி.
ஹிட்லர் பற்றி வேண்டுமென்றே மோசமான கருத்தாங்கங்கள் பரப்ப பட்டு ,அவருக்கு கடன் பட்ட ஜெர்மன் மக்களையும் வாயடைக்க செய்தது.
தனிப்பட்ட முறையில் ஹிட்லர் ஒரு ஒழுக்க சீலன். தாயின் மீதும்,தாய்நாட்டின் மீதும் சொல்லொணா பற்று.சுத்த சைவர் .எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கேளிக்கையில் நாட்டம் இல்லாதவர். ஊழல் கிடையாது. பெண் பித்தன் கிடையாது. நேரத்தை மதிப்பவர்.
வெர்சேல் உடன்பாடு அநியாயமானது. ஜெர்மன் மக்களை அடக்கியாள மற்றவர் செய்த சதி. பத்தே உறுப்பினர் கொண்ட கட்சியில் பின்னணியில்லாமல் நுழைந்து, சில வருடங்களில் ஜெர்மனியின் ஆட்சியை பிடித்தவர். முதல் ஆறு ஆண்டுகள் அவர் தலைமையில் ஜெர்மனி கண்ட வளர்ச்சி ,எந்த ஆட்சியிலும் நினைத்தும் பார்க்க முடியாதது. இரண்டாம் உலக போருக்கு அவரை காரணமாக சொன்னாலும்,போருக்கு பின் அனைத்து பொருளாதாரம்,தொழில்துறை,விஞ்ஞானம் எல்லாம் எல்லா நாடுகளிலும் வளர்ச்சியே பெற்றது.(நம் சேர சோழ மன்னர்களை போல உபயோகமற்ற போரல்ல)
அவரின் கொலை வெறி தாக்குதல், யூதர்களை பற்றி முழு ஐரோப்பாவுக்கும் இருந்த வெறி அவர் மூலம் நிறைவேற்ற பட்டது. முழு உலக மனசாட்சியும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். தவறுதான் எனினும் இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கும் அநீதியை எதில் சேர்க்க?இன்னொன்று தெரியுமா,டைம் பத்திரிகை ஹாலோகாஸ்ட் பற்றி வாயே திறக்கவில்லை அப்போது.(தெரிந்தும்)
வரலாறு திரிக்க படுகிறது. களப்பிரர் ஆட்சி இருண்ட காலம் என்று நாம் படித்திருப்போம். ஆனால் மூவேந்தர் ஆட்சியில் நிலமெல்லாம் கோவில் அல்லது மேல்சாதி கையில். களப்பிரர் வந்து நிலசீர்திருத்தம் செய்து உழைக்கும் மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தனர். பிறகு ஆட்சி மாறிய பிறகு அவை பறிக்க பட்டு திரும்பவும் மேல்சாதி கையில்.களப்பிரர் ஆட்சி பற்றிய வரலாறு திட்டமிட்டு துடைத்தெறிய பட்டாலும், ஒரே ஒரு பாடல் குறிப்பு ,மேற்கண்டதை குறித்து நிற்கிறது.களப்பிரர் காலமே உழைப்போரின் பொற்காலம்.
இன்னொன்று .நான் பட்டங்களை உபயோக படுத்தி பெருமை படுவதில்லை என்று சிறு வயதில் முடிவெடுத்த காரணம். என்று எல்லா தொழில் செய்வோரும் தங்கள் பெயரின் முன் தங்கள் தொழிலை குறிப்பிட்டு பெருமை கொள்ளும் காலம் வருமோ,அன்றே நாம் மருத்துவர்,ஆசிரியர் என்று தொழில் குறித்து பெயருடன் போடலாம்.அல்லது ஜாதி குறிப்பை போல தொழில் சார்ந்த அடை களும் தவிர்க்க படவே வேண்டும்.(சில தொழில்களை பற்றி தவறான புரிதல் தொடரும் வரை)