4000 பதிவுகள் வழங்கியதற்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
http://i61.tinypic.com/23tmdu9.jpg
Printable View
4000 பதிவுகள் வழங்கியதற்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
http://i61.tinypic.com/23tmdu9.jpg
நான்காயிரம் பதிவுகள் கண்ட நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 61-ஆம் ஆண்டு துவக்க விழா, மூத்த சினிமா பத்திரிகையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா, சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 6௦-ஆம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா கடந்த 2-10-2015 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் ஹாலில் கலைஞானி திரு.கமல்ஹாசன் தலைமையிலும், பிரபல நடிகர் திரு.சிவகுமார் முன்னிலையிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு.மேஜர்தாசன் வரவேற்புரையாற்றினார். பிறகு 'பேசும்படம்' சம்பத்குமார், 'பொம்மை' சாரதி, நாகை தருமன், 'ஃபிலிம்நியூஸ்' ஆனந்தன், ராண்டார்கை ஆகிய ஐந்து மூத்த சினிமா பத்திரிகையாளர்களை கெளரவித்து பாராட்டி அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருதினை சங்கம் சார்பில் கமல்ஹாசன், சிவகுமார் இருவரும் வழங்கினார்கள்.
அதன் பிறகு சினிமா பத்திரிகை உலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வரும் கலைப்பூங்கா ராவணன், பராசக்தி மாலி, தேவி மணி, மதுரை தங்கம், திரைநீதி செல்வம், நெல்லை சுந்தர்ராஜன், மேஜர்தாசன், மக்கள்குரல் ராம்ஜி, சலன், இதயக்கனி விஜயன், சுரா, மணவை பொன்.மாணிக்கம், ஜெயச்சந்திரன் ஆகிய 13 சினிமா பத்திரிகையாளர்களுக்கு 'சாதனையாளர் விருது' சங்கம் சார்பில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 60-ஆம் ஆண்டு சிறப்பு மலரை திரு.கமல்ஹாசன் வெளியிட திரு.சிவகுமார் பெற்றுக்கொண்டார். சினிமா பத்திரிகையாளர்களுக்கும் தங்களுக்கும் உள்ள நட்பை, பாசத்தை, அவர்கள் செய்த சேவைகளைப் பற்றி யெல்லாம் கமல்ஹாசன், சிவகுமார், மனோரமா ஆகியோர்கள் சிறப்புரையாற்றி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தார்கள்.
'வாழ்நாள் சாதனையாளர்' விருதுகளைப் பெற்ற அந்த ஐந்து மூத்த சினிமா பத்திரிகையாளர்களுக்கு சங்கத்தின் சார்பில் பணமுடிப்பும் கமல்ஹாசன், சிவகுமார், ராகவா லாரன்ஸ், விக்ரம் ஆகியோர்களும் அதன்பிறகு நாசர், விஷால், கார்த்தி, உதயா, கருணாஸ், ரித்தீஸ், விக்ராந்த், பொன்வண்ணன் ஆகியோர் அடங்கிய 'பாண்டவர் அணி' சார்பாக ஒரு தொகையும் அந்த ஐந்து சினிமா பத்திரகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
சங்கத்தின் வளர்ச்சிக்காக கமல் ஹாசன் தனிப்பட்ட முறையில் ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார். இவரைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்திருந்த "ரோஜா" பத்திரிகை ஆசிரியர் துரை ராமச்சந்திரன் மற்றும் விழாவைக் காண வந்த நேயர்கள் சிலரும் கமல்ஹாசன் முன்னிலையில் சங்கத்தின் வளர்ச்சிக்காக நிதியுதவி செய்தார்கள்.
இந்த முப்பெரும் விழாவில் குமாரி சச்சு, ஜெயச்சித்ரா, ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, நமீதா, எஸ்.என். பார்வதி, போன்ற நடிகைகளும், பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், ஏ.ஆர்.எஸ். சித்ராலட்சுமணன், அபிநய் போன்ற ஏராளமான திரைக்கலைஞர்களும், ரசிகப் பெருமக்களும் திரளாகக் கலந்து கொண்டு விழாவை பெரிதும் ரசித்து மகிழ்ந்தார்கள்.
முன்னதாக நிகழ்ச்சியின் தமிழ்தாய் வாழ்த்தை 'வானவில் வாழ்க்கை' படத்தின் நாயகி ஜனனி பாடினார். நிகழ்ச்சியை அழகாய் சன் டி.வி. தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கினார். இறுதியில் சங்கத்தின் செயலாளர் சி.என்.கிருஷ்ணன் குட்டி நன்றியுரையாற்றினார்.
http://s15.postimg.org/d1zcwhha3/Cin..._Vizha_Sti.jpg
மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பாக இவ்விழாவை மிகச்சிறப்பாக நடத்திய எங்களின் பாசத்துக்குரிய நண்பரும் மன்னாதி மன்னன்
எம் ஜி ஆர் ரசிகன் இதழின் ஆசிரியருமான திரு மேஜர் தாசன் (தலைவர் - சினிமா பத்திரிக்கையாளர் சங்கம்) அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தபோது (பேராசிரியர் திரு செல்வகுமார் & திருப்பூர் ரவிச்சந்திரன்).
http://s1.postimg.org/b2a1r9npr/Cine..._Vizha_Sti.jpg
மூத்த பத்திரிக்கையாளர்கள் ஐந்து பேருக்கு தலா 50000 வீதம் மொத்தம் 250000 நன்கொடையை (காசோலை மூலம்) நடிகர் திரு LAWRENCE வழங்கியபோது.
http://s27.postimg.org/3mxggce0j/Cin..._Vizha_Sti.jpg
மூத்த பத்திரிக்கையாளர் திரு நாகை தருமன் கௌரவிக்கப்பட்டபோது.
http://s13.postimg.org/eyjlcy0jr/Cin..._Vizha_Sti.jpg
மூத்த பத்திரிக்கையாளர் 'பேசும் படம்' திரு சம்பத் குமார் கௌரவிக்கப்பட்டபோது.
http://s21.postimg.org/596cs245j/Cin..._Vizha_Sti.jpg
மூத்த பத்திரிக்கையாளர் பிலிம் நியூஸ் திரு ஆனந்தன் கௌரவிக்கப்பட்டபோது.
http://s8.postimg.org/i824wlk91/Cine..._Vizha_Sti.jpg
மூத்த பத்திரிக்கையாளர் திரு ரண்டார்கை கௌரவிக்கப்பட்டபோது.
http://s10.postimg.org/5n2oi878p/Cin..._Vizha_Sti.jpg
மூத்த பத்திரிக்கையாளர்கள் ஐந்து பேருக்கு நன்கொடையை நடிகர் திரு விஷால் வழங்கியபோது. உடன் நடிகர் திரு நாசர் - கார்த்திக் - மற்றும் பலர்.
நான்காயிரம் பதிவுகள் கண்ட திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
http://i58.tinypic.com/122l1ds.jpg
சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட 60ம் ஆண்டு சிறப்பு மலரில் மக்கள் திலகத்தை பற்றி இடம் பெற்றுள்ள பல அரிய புகைப்படங்களும் மற்றும் செய்திகளும் நாளை பதிவிடப்படும்.
எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் புதிய வரவான திரு. மதுரை மயில்ராஜ்
அவர்களுக்கு வணக்கம். தங்களின் பங்களிப்பு திரியில் மெருகேற்றலாக
அமைய நல்வாழ்த்துக்கள்.
http://i58.tinypic.com/sl5v9y.jpg
ஆர். லோகநாதன்.
இன்று இரவு 7.30 மணி முதல், முரசு தொலைக்காட்சியில், நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.
நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும் " ஒளிபரப்பாகியது
http://i58.tinypic.com/uatr9.jpg
நாளை (04/10/2015) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரிக்க்ஷாக்காரன் " ஒளிபரப்பாகிறது.
http://i57.tinypic.com/15i3s3s.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
நெடு நாட்களுக்கு பிறகு , புதுவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
பழைய கட் அவுட்கள் பதிவிட்டு, அனைவரையும் உற்சாகப்படுத்திய நண்பர்
திரு. கலியபெருமாள் அவர்களுக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றி.
நேரம் கிடைக்கும்போது இதே போன்று பதிவுகள் இட்டு அனைவரையும் மகிழ்ச்சி
கடலில் ஆழ்த்தவும் .
ஆர். லோகநாதன்.
பாக்யா செய்திகள் - 09/10/2015
http://i60.tinypic.com/30xhi0i.jpg
http://i58.tinypic.com/308wjh4.jpg
http://i60.tinypic.com/znpx87.jpg
இந்த வார பாக்யா இதழில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தாய்க்கு தலைமகன் "
திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i59.tinypic.com/2d6s934.jpg
http://i62.tinypic.com/289j3lt.jpg
http://i59.tinypic.com/1z6fm7k.jpg
அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே
அத்தகை அழுகுடை
எம்மவன் தலை
நூற்றாண்டு
அழைப்பிதழ்
வந்தமை
கண்டு
ஆர்த்தன பேரிகள்
ஆர்த்தன சங்கம்
ஆர்த்தன நால் மறை
ஆர்த்தனர் வானோர்
ஆர்த்தன பல் கலை
ஆர்த்தன பல்லாண்டு
ஆர்த்தன வண்டு இனம்
ஆர்த்தன அண்டம்.
Attachment 4503Attachment 4503Attachment 4503
Courtesy : Facebook
http://i60.tinypic.com/330yzht.jpg
“ மதுரை முத்து ” அப்படின்னு இப்போ கூகிளில் தேடினால் "கலக்கப் போவது யாரு ?" முத்துவைத்தான்
அது காட்டுகிறது ...
ஆனால் 1970 களில் தமிழ் நாட்டையே கலக்கு கலக்குன்னு கலக்கிய ஒரு மதுரை முத்துவை நம்மில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை...
எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியான சமயத்தில் ,அந்தப் படத்தை வெளியிடாமல் தடுக்க அப்போதைய தி.மு.க.அரசு ...அசுர முயற்சி எடுத்தது....
அந்த சமயத்தில் தி.மு.கவின் மதுரை சாம்ராஜ்யம் முழுக்க அப்போதைய மதுரை மேயர் “ மதுரை முத்து ” என்பவரின் கைகளில்தான் இருந்தது...
மதுரை முத்து பகிரங்கமாக ஒரு சவால் விட்டார்...
“எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளிவராது...
வரவும் விடமாட்டேன்...
அப்படி, படம் ரிலீஸ் ஆகி விட்டால் , நான் சேலை கட்டிக் கொள்கிறேன்...'”...
இப்படி பகிரங்க சவால் விட்டு பதட்டத்தை உண்டாக்கினார் இந்த மதுரை முத்து....
ஆனால் எம்.ஜி.ஆரின் சமயோசித மூளையினால் ...சாமர்த்திய வேலைகளால் .... உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி பெரும் வெற்றியும் பெற்றது...
சவால் விட்ட மதுரை முத்துவுக்கு, சேலைகள் ஏராளமாக வந்து குவிந்தனவாம்......
சில காலம் பின் கருணாநிதியோடு மதுரை முத்துவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட ..ஏகப்பட்ட தயக்கத்துக்குப் பின் ...எம்.ஜி.ஆருடன் வந்து இணைந்தார் மதுரை முத்து....!!!
அன்றைய மாலை பொதுக்கூட்டத்திலேயே , கருணாநிதியை கடுமையாக தாக்கிப் பேசினாராம் மதுரை முத்து....
அந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும் போது, 'வருங்கால மேயர்.. அண்ணன் முத்து அவர்களே...' என்று அழைத்ததோடு ...மதுரை மேயர் பதவியையும் வழங்கி, கவுரவித்தாராம் ...
Courtesy : Facebook
http://i58.tinypic.com/1z3nnnm.jpg
Courtesy : Facebook
http://i57.tinypic.com/111mt91.jpg
http://i61.tinypic.com/73dx5d.jpg
Thanks Facebook
Today 7.00pm Watch Sulife Tv
http://i60.tinypic.com/becwfm.jpg
தின மலர் " வார மலர் " 04/10/2015
http://i59.tinypic.com/5aesg7.jpg
http://i59.tinypic.com/70fe3d.jpg
http://i59.tinypic.com/2vll5xw.jpg
http://i62.tinypic.com/344w5ed.jpg
தின மனி " கதிர் " 04/10/2015
http://i62.tinypic.com/2h4l1s3.jpg
http://i61.tinypic.com/iz5c2w.jpg
http://i58.tinypic.com/1snpew.jpg
தற்போது வசந்த் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "தாய் சொல்லைத் தட்டாதே " மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
http://i57.tinypic.com/f21smd.jpg