http://i63.tinypic.com/jjxmpl.jpg
Printable View
முத்தையன்
ரங்கதுரையின் ராஜபாட்டை, கரடு முரடான பயணத்திற்கு அடையாளமாய் விளங்கிய பாதை. தன் வாழ்க்கையில் அத்தனை கஷ்டங்களையும் பட்ட ஓர் தேசபக்தனின் வரலாறு. நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கல்லாய் மின்னும் ராஜபார்ட் ரங்கதுரை நிழற்படங்கள் தங்கள் கைவண்ணத்தில் அந்த உன்னதங்களை அப்படியே கொண்டு வந்துள்ளன.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரும் தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த நடிகருமான திரு கவிதாலயா கிருஷ்ணன் அவர்களின் பேட்டி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இதனுடைய இணையப் பக்கத்திலிருந்து..
courtesy and link: http://www.newindianexpress.com/citi...cle3154810.eceQuote:
http://media.newindianexpress.com/ma.../main-logo.jpg
Tuesday, December 01, 2015
'Happiness is Also Not Doing What You Don't Want to Do'
http://media.newindianexpress.com/%E...98Happines.jpg
Kavithalaya Krishnan and Avis Viswanathan during the first season of Bliss Catchers | MARTIN LOUIS
CHENNAI:
A conversation with a person who dared to chase his/her dreams is what Bliss Catchers is all about. Concluding the first season this year, curator and host Avis Viswanathan presented the man who found his bliss through a path of happiness. No pursuit, just a path of plain happiness. Only by chance did he come across legends who led him into theatre and the film industry. You may have seen him first as a driver in Sindhu Bairavi (1985), or on stage at one of Crazy Mohan’s plays — Kavithalaya Krishnan.
Krishnan sat beside Avis, quiet and observant, while the latter introduced him. When his turn came, his first words were, “I’m really not comfortable being here and talking about myself.” But what followed was a life story that inspired those present.
Krishnan’s first bliss was Sivaji Ganesan. “Orgasmic,” he exclaimed. “The first film I watched was of Sivaji Ganesan, when I was 17. (I come from an orthodox family. My parents never let me watch films). The minute I saw him on screen, I fell in love and I’ve been in love for 40 years now,” he said.
Thus began the ‘Sivaji’ fever. He would watch all Sivaji movies, go to salons only to catch a glimpse of him in celebrity magazines, and covertly cut out the pictures.
So when Avis aked him if Sivaji played a role in making him an actor, Krishnan denied it. “I never wanted to be an actor. It all just happened. I’m still not sure if I’m a competent actor. If you hide under the shadow of K Balachandar, people will think you are a good actor,” he chuckles.
Krishnan had become an engineer, and had a corporate job for 16 years, but also did theatre. One day he quit for good. He got offered jobs outside India, but did not want to leave the realm of Sivaji. “Success is relative. What are the parameters of success? I realised them an early age. My success was being happy with myself, doing what I wanted to do. Happiness is doing what you want to do and also not doing what you don’t want to do. Follow your heart, but keep your mind informed,” he said, and the audience applauded.
Krishnan also talked about his restricted social life, saying, “I make friends only with people who encourage me. I associate with people who back me and my bliss.” To this Avis reflected, “I think when we look for reference points of what we are doing, it is important to learn the direction of perspectives that connect with us at a deeper level. Have a circle that is extremely supportive of your bliss.”
After a long conversation on Krishnan’s lessons from his life, Avis ended with a question. He asked Krishnan who among his many inspirations (including Sivaji, Kamal Hassan and Balachandar) takes centre stage. Krishnan replied, “None of the above, but Sowcar Janaki. She is one woman whom I’ve been in awe of for 40 years. She has so much grace and dignity; it drew me to her. I’ve always wanted to impress her,” he smiled.
The last series of season one ended with the focus on what season 2 would bring. “We want to bring in bliss as a concept. We are not only going to look for people who quit their jobs to follow their bliss, but also for people who are doing something that gives them joy. Someone — anyone who is completely happy with life,” said Avis.
The Bliss Catchers series will be back in January 2016 with season two.
THE UNCOMMON GOD & a common man
RAja Raja cholan?!
what a movie! how a ten year old can understand history and involve with the massive presentation of temple ,and architectural aspects.Always NT mustache reminds me that it was a cinema-scope .If you see the mustache ,it will be like a screen of cinema-scope.The height at the centre is less and incresae on both sides till the end like a screen.
What a introduction?
every one had gone to the birthday celebration of the king,including the helper boy of the stone carver.When the carver asks to take the pot for spitting the betalnut,the wrist and palm portion carrying the pot is shown.The carver receives it and in the process he lifts his head and get shocked.Now the camera shows NT sorry Rajarajan in a full.From feet to head.From that day,among many kings ruled india rajarajan is special to me.
In-numerous of kings,freedom fighters,poets and historic people have lived in this world.But we NT fans definitely have a liking of the characters whom were acted on screen by NT.(to be continued)
http://i1028.photobucket.com/albums/...psxqyopola.jpg
திரைப்படம் என்கிற கலை
வடிவம் மிகவும் சக்தி வாய்ந்தது.
ஒரு நல்ல திரைப்படம்,மனிதன்
நல்லபடியாய் பொழுது போக்கிட மட்டுமல்ல...
மனசின் பழுது நீக்கிடவும்
உதவுகிறது.
ஒரு வீட்டின் கம்பீரத்தையே
தாங்கி நிற்கும் தூண்களில்
முதுகு சொறிந்து கொள்வது
போல்...
படிப்பறிவில்லாதவன், தத்துவப்
புத்தகத்தைக் கொண்டு புழுக்கம்
போக விசிறிக் கொள்வது போல்...
நாம் சிறந்த விஷயங்களை
சாதாரணங்களுக்காக வீணடித்துப் பழகி விட்டோம்
என்பதற்கு, சினிமாவைப்
பொழுது போக்கப் பயன்படுத்துவது ஒரு
உதாரணம்.
நம்முடைய ஒரு மூன்று மணி
நேரத்தை சொர்க்கமாக்குவதற்காக, ஒரு
திரைப்படத்தோடு தொடர்புடைய எத்தனை பேர்
தங்கள் நாட்களை நரகமாக்கிக்
கொள்கிறார்கள்?
காசு கொடுத்து எளிதில் நாம்
பெற்று விடுகிற நிம்மதி, காசை
வாங்கிக் கொண்டாலும்
அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
காதல், கவர்ச்சி, கற்பழிப்பு,
நடனம்,சண்டை என்று விருப்பமானதைக் காட்டியவர்கள், கண்ணீரையும்.
வாழ்வின் நிஜமான இயல்பு
முகங்களையும் காட்டினால்
நமக்குப் பிடிப்பதில்லை.
சம்மந்தமே இல்லாத இடத்தில்
பாட்டு வந்தாலும் தமக்குப் பிடித்த மாதிரி இருந்தால் குஷியாட்டம் போடுகிறவர்கள்.. இந்த இடத்தில் எதற்குப் பாட்டு
என்று கேள்வி கேட்பதில்லை.
மூன்று மணி நேரத்திற்குப்
பிறகு திரையரங்க இருட்டை
விட்டு நீங்கி, வெளியுலகில்
அவன் சந்திக்கப் போகும்
வாழ்வின் சராசரி துன்ப நிகழ்வுகளையே, அவனுக்கு
திரையிலும் சந்திக்கப் பிரியமில்லை.
இந்தப் பயம், இந்த தப்பித்தல்...
சிவாஜி ரசிகர்களாகிய நமக்கில்லை.
அழுகையும், கஷ்டங்களும்
தியாகத்துடன் தொடர்புடையது
எனில், அவையும் நல்லவையே
என அய்யன் நடிகர் திலகம்
தன் கலையால் விளக்கியிருக்கிறார்.
மனித வாழ்வில், மகிழ்வைப்
போலவே துன்பங்களும், கண்ணீரும், போராட்டங்களும்,
பார்க்கச் சகியாத கொடுமைகளும் நிச்சயமானவை. இவற்றையெல்லாம் அனுபவிக்கிற நிஜமான மனிதனைக் கதாபாத்திரமாக்கி
நடிப்பதும், அதை உலகமே
ரசிப்பதும் தவறானதல்ல என்பதை நமக்கு உணர்த்தி,
எந்த தப்பித்தலுமின்றி தன்
படங்களைப் பார்ப்பதற்கு அவர்
நம்மைப் பழக்கியிருக்கிறார்.
--------------
"தாவணிக் கனவுகள்."
என்னால் எப்போதும் மறக்க
முடியாத படம். மனசுக்குள்ளே
ஒரு மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிற படம்.
"தாவணிக் கனவுகள்" வெற்றிப்
படமே என்பதை நானறிவேன்.
ஆனால்.. அது இன்னும்,இன்னும் வெகுவாகக்
கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.
கஷ்டப்படும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து,
உள்ளத்தில் நெருப்போடு
கிளம்பிப் போன ஒருத்தன்
வாழ்வை ஜெயித்து வரும்
சாதனையையும், அவனது
முன்னேற்றத்திற்காக தன்னுயிரையும் தரத் துணியும்
ஒரு நல்ல மனிதரின் தியாகத்தையும் மிக அழகாய்
எடுத்துக் காட்டிய திரைப்படத்தை நாம் இன்னும்
போற்றிக் கொண்டாடியிருக்க
வேண்டும்.
மிகப் பெரிய குடும்பத்தைக்
காப்பாற்றத் தவிக்கும் இளைஞனுக்கு, மனிதாபிமானத்துடன் உதவும்
பெரியவராக இந்தப் படத்தில்
நடிகர் திலகம் ஏற்றிருப்பது
கௌரவ வேடமல்ல.
அவர் தந்திருப்பது..
அந்த வேடத்திற்கு கௌரவம்.
------------------
சுப்ரமணியம் - படித்த இளைஞன். பி.ஏ. பட்டதாரி.கல்வியில் சிறந்து தங்கப்பதக்கம் வாங்கியவன்.
தகப்பனில்லாத குடும்பத்தின்
மூத்த மகன். ஐந்து தங்கைகள்.
அதில் மூன்று தங்கைகள்
கல்யாண வயதில். படித்த
படிப்புக்கு வேலை இல்லை.
சம்பாத்தியம் இல்லை. அவனது
விதவைத் தாய்க்குக் கூட
அவன் மீது மரியாதை இல்லை.
திரும்பின திசையெல்லாம்
ஏமாற்றங்கள். அடிக்கடி அவனைப் பார்த்துப் பல்லிளிக்கும் அவமானங்கள்.
குடிக்கிறான்... மனசு வலிக்கும்
போதெல்லாம் மதுவை மருந்தாக.
ராணுவத்திலிருந்து ஓய்வு
பெற்றுத் திரும்பி அங்கே
சின்னதாய் சைக்கிள் கடை
நடத்திக் கொண்டிருக்கும்
கேப்டன் சிதம்பரத்தின் வீட்டில்
தான் சுப்ரமணியத்தின் குடும்பம் குடியிருக்கிறது.
கேப்டன்- ராணுவச் சீருடையை உடல் மீதும்,
தேசத்தை நெஞ்சோடும்
எப்போதும் வைத்திருப்பவர்.
நேதாஜியின் பக்தர். எளிமை,
ஒழுக்கம், மனிதாபிமானம்
இவற்றோடு ஒரு உயர்வு
வாழ்க்கை வாழும் பெரிய
மனிதர்.
சுப்ரமணியத்தின் குடிப்பழக்கம்,
சின்னச் சின்ன துடுக்குத் தனங்களை உரிமையுடன்
கண்டித்தாலும், சம்பாதித்துக்
குடும்பத்தைக் காப்பாற்றத்
துடிக்கும் அவனுக்கு எப்போதும் உதவும் கரங்கள்
உடையவராயிருக்கிறார்..
கேப்டன்.
துன்பங்களும், அவமானங்களும் துரத்து,துரத்தென்று துரத்த
சுப்ரமணியம், கேப்டனின்
உதவியோடு சென்னைக்கு
வேலை தேடி ஓடுகிறான்.
வாழ்க்கையில் குறுக்கு வழியில் முன்னேற அசட்டுத்
திட்டங்கள் போட்டுத் தோற்று,
பசித்து,மயங்கி...
கேப்டனின் நண்பர் மகளின்
உதவியில் சினிமாவில் சின்னச்
சின்னப் பாத்திரங்களில் நடித்து,
தன் திறமையால் ஒரு பெரிய
இயக்குனரைக் கவர்ந்து, அவரது திரைப்படத்தின்
கதாநாயகனாகவும், கதை வசனகர்த்தாவாகவும் ஆகி
கைநிறையப் பணத்தோடு
ஊர் திரும்புகிறான்.
இங்கே அவன் நல்வாழ்வுக்காகவே வாழ்ந்து,
அவன் குடும்பத்தைத் தன்
குடும்பமாகவே வாழ்வித்த
அவனது மதிப்பிற்குரிய கேப்டன், உடல் நலிவுற்று
இறந்து விடுகிறார்.
கொண்டு வந்த பெரும்பணத்தைக் கொண்டு
தனது மூன்று தங்கைகளுக்கு
பெரிய,பெரிய பணக்கார மாப்பிள்ளைகளைப் பார்க்கிறான்.
திருமணத்தன்று, நகை மீதும்,
பணத்தின் மீதுமே கண்ணாக
இருக்கும் மாப்பிள்ளை வீட்டாரைச் சுட்டிக் காட்டி,
இவர்களின் வீடுகளில் போய்
தாங்கள் நிம்மதியாக வாழ முடியாது என்பதைத் தங்கைகள் தெளிவுபடுத்த.. அவர்கள் சொல்வதிலிருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ளும் சுப்ரமணியம், தான்
சென்னையிலிருந்த போது, தன்
குடும்பம் கஷ்டப்பட்ட போது
தேடி வந்து உதவி செய்த ஒரு
தையல்காரர், ஒரு சலவைத்
தொழிலாளி, ஒரு தபால்காரர்
ஆகிய மூவரையும் தனது
மூன்று தங்கைகளுக்கும்
மணம் செய்து வைக்கிறான்.
வரதட்சணைத் தீயால்
அழகழகான கல்யாணக் கனவுகள் பொசுக்கப்படக் கூடாதென்று வேண்டிக் கொண்டு "தாவணிக் கனவுகள்"
முடிகிறது.
----------------------------
ஒரு சல்யூட்டோடு அறிமுகமாகி, மற்றுமொரு
சல்யூட்டோடு விடைபெறும்
நடிகர் திலகத்துக்கு ஒரு சல்யூட் வைத்து, நான்
"தாவணிக் கனவுகளைத்"
துவக்குகிறேன்.
-------------------
உத்தமர் நடிகர் திலகத்தின்
குணம் போலே உயர்ந்து
நிற்கும் ஒரு கொடிக் கம்பம்.
தேசம் காப்பதற்கென்றே
இறைவன் அருளிய கரங்கள்
அந்தக் கம்பத்தின் கொடிக்
கயிறை இழுக்கின்றன.
பெருமை மிகுந்த நம் தேசியக்
கொடி, மேலே..மேலே.. மேலே
போகிறது.
உச்சிக்குப் போன கொடி,
உற்சாகமாய் விரிகிறது.
பட்டொளி வீசிப் பறக்கிறது.
கொடியேற்றிய கரங்களுக்குரியதாய் ஒரு
சாதனை முகம் இருக்கிறது.
பறந்த கொடி தன்னுள்ளிருந்த
பூக்களை அந்த முகத்தின்
மீது உதிர்க்கிறது.
"என்னை மறவாத உன்னை
நான் மறவேன்" என்று உயரத்திலிருந்து சிரிக்கிறது.
( ...தொடரும்...)
ஆதவன்...
(இந்தப் படத்தில்
நடிகர் திலகம் ஏற்றிருப்பது
கௌரவ வேடமல்ல.
அவர் தந்திருப்பது..
அந்த வேடத்திற்கு கௌரவம்.)
.,ஆரம்பமே அமர்க்களம்.
தொடர்ந்துபிரமாதப்படுத்துங்கள்.
Aathavan
Oru veettin kambeeraththai .........................indha bayam namakkillai
Really touching lines ,that's what I often tell myself that i(we) am blessed to be born as NT fans.I salute you Ravi!
Helplessly watching the perils of our people suffering from incessant rains and unprecedented floods.
Our heartfelt prayers for them to get relieved off and resume normality at the earliest, on behalf of NT/GG threads!
senthil
https://www.youtube.com/watch?v=2BH1a4RP16A
சூழ்ந்த வெள்ளம்
வடியட்டும்.
சென்னையின் துன்பம்
முடியட்டும்.
நாளைப் பொழுது அங்கே
நல்லபடி விடியட்டும்.
எல்லோருக்காகவும்
என் பிரார்த்தனைகள்.
அது மட்டுமல்ல அதனால் வாழ்க்கையில் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவும் நம்மைப் பழக்கியிருக்கிறார்.Quote:
மனித வாழ்வில், மகிழ்வைப்
போலவே துன்பங்களும், கண்ணீரும், போராட்டங்களும்,
பார்க்கச் சகியாத கொடுமைகளும் நிச்சயமானவை. இவற்றையெல்லாம் அனுபவிக்கிற நிஜமான மனிதனைக் கதாபாத்திரமாக்கி
நடிப்பதும், அதை உலகமே
ரசிப்பதும் தவறானதல்ல என்பதை நமக்கு உணர்த்தி,
எந்த தப்பித்தலுமின்றி தன்
படங்களைப் பார்ப்பதற்கு அவர்
நம்மைப் பழக்கியிருக்கிறார்.
கொடி உயர்ந்து விட்டது..Quote:
உத்தமர் நடிகர் திலகத்தின்
குணம் போலே உயர்ந்து
நிற்கும் ஒரு கொடிக் கம்பம்.
அதற்கு தன்னை உண்மையாக மதிப்பவர் யாரெனத் தெரிந்திருக்கிறது..Quote:
"என்னை மறவாத உன்னை
நான் மறவேன்" என்று உயரத்திலிருந்து சிரிக்கிறது.
Dear all chennai people,i join your prayer to the God of nature to show some considerations to us.
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று.
இயற்கையை அழிக்க நினைத்தால் நாம் அழிந்து விடுவோம். இதுவே இந்த மழை நமக்கு கற்று தந்த
பாடம்
டியர் சென்னை நண்பர்கள்
இந்த இக்கட்டான சூழலில் உங்கள் அனைவருக்கும் ஆண்டவன் நல்ல மனதையும்
தைரியத்தையும் , உடல் நலத்தையும்
உதவும் உள்ளதையும் தர பிரார்த்தனை செய்கிறேன்
இறைவன் அருளாலும் மனிதநேயமிக்கவர்களின் நல்வாழ்த்துக்களாலும் சென்னையில் மழையின் வேகம் குறையத் தொடங்கி இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்லத் திரும்புகிறது. என்றாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எத்தனை நாட்களாகுமோ தெரியவில்லை. அவர்கள் அனைவரும் இந்த இடரிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை நம்முடைய பிரார்த்தனைகள் தொடரும்.
எங்கள் திருவல்லிக்கேணி பகுதியைப் பொறுத்த மட்டில் பார்த்தசாாரதி பெருமாள், மஹான் ராகவேந்திரர், மற்றும் அனைத்து மதக் கடவுள்களின் ஆசியாலும் பாதிப்பு அதிகமின்றி நலமாயுள்ளோம். அக்கறையோடும் கவலையோடும் நலம் விசாரித்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. கைப்பேசி மூலம் விடாமல் முயற்சி செய்து இணைப்புக் கிடைத்து விசாரித்த நண்பர் வினோத் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...e2&oe=56D87985
தங்கப் பதக்கம் - கதை வசனம் .. லாங் பிளே இசைத்தட்டின் மேலுறை
From Facebook
இதோ ஒரு சிறு மலரும் நினைவு...
1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர்.
அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர்.
அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார். ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் “அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்” என்றார்கள். ஆனால் காமராஜ் “அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்” என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார்.
முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார். பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா (கவனிக்கவும்..... அன்று அறிஞர் அண்ணா எதிர் கட்சி)
திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். “சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை.
ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்.”
மாணிக்கங்களையும்!!!!!!! முத்துக்களையும்!!!!!!! தூக்கி எறிந்துவிட்டு.........
மற்றவர்களை ஆட்சி செய்ய சொன்னால் இப்படித்தான் இருக்கும்........????
இது அரசியல் பதிவல்ல. ஆக்ரோசப்பதிவு...
இன்னல்படும் மக்களின் பதிவு...
ஈகை இல்லா கல் நெஞ்சங்களை ஆளவிட்ட நம் தமிழ் உணர்வின் பதிவிது.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...a3fcdcbf25a188
First time on internet. Enga Oor Raja original Song Book Cover. The unique design made waves at the time of release of the film. The sliding of the wrapper on front produced two images and the book was a craze then.
Sharing for the benefit of new generation to know how much pains did a producer and the unit of the film took to take the film to the masses.
சிவாஜி ரசிகன்
பட வரிசை தொடர்ச்சி
http://i1065.photobucket.com/albums/...pssgvbybhq.jpg