Originally Posted by
makkal thilagam mgr
stop it என்று கூக்குரலிட்டவரையும், அநாகரீகமாக கூச்சலிட்டோரையும் தனது ஆளுமை திறனால் அடக்கி, புரட்சித்தலைவரை நினைவு கூர்ந்த நன்றி மறவாத நல்ல நடிகைகள் திருமதி லதா மற்றும் திருமதி வாணிஸ்ரீ போன்றவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
புவி உள்ளவரை புரட்சித்தலைவரின் புகழ் எந்த மேடையிலும் எதிரொலிக்கும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பது காலத்தின் கட்டாயம்.
பின்குறிப்பு : மறுவெளியீட்டில், வெள்ளி விழாவையும் தாண்டி, 190 நாட்கள் ஓடி. தமிழ் திரையுலகில் ஒரு புதிய வரலாறு படைத்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் " ஆயிரத்தில் ஒருவன் " காவியத்துக்காக, சென்னை சத்யம் அரங்கில் டிரைய்லர் வெளியிட்ட பொழுது, திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் மற்றுமொரு சிறப்பு விருந்தினர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றி நினைவு கூர்ந்து பேசிய சமயத்திலும், இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் பொழுது நடிகர் பாக்கியராஜ் அவர்கள் மறைத்திரு சிவாஜி கணேசன் பற்றி பேசும் பொழுதும், இது போன்ற அநாகரீக கூக்குரல்களை மக்கள் திலகத்தின் ரசிகர்கள், பக்தர்கள் எழுப்ப வில்லை. பெருந்தன்மையின் சிகரமாம் நம் புரட்சித்தலைவர் போல், அவரது ரசிகர்களும், பக்தர்களும், அன்பர்களும், அமைதியுடன் இருந்து கண்ணியம் காத்தனர்.
திரு. சுஹாராம் அவர்கள் குறிப்பிட மறந்து போனது : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தயவால் பள்ளி கட்டிடத்துக்காக இடம் பெற்று நன்றி மறந்த அரை லூஸ் காமெடியன் மகேந்திரனின் (சுவாதி கொலை வழக்கில் ஏனோ தானோ என்றும் தத்து பித்து என்றும், .அரை வேக்காட்டுத்தனமாய் உளறிக்கொட்டி பின்பு ஜகா வாங்கி மன்னிப்பு கேட்டு கொண்ட மகேந்திரன்) வழக்கமான உளறல் பற்றிய செய்தி !