-
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றென்றும் பெருமைக்குரியவர்கள் .
************************************************** ************************************************** ***
உலக வரலாற்றில் ஒரு ஒப்பற்ற நடிகராக அரசியல் தலைவராக மனித நேய தலைவராக நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
சரித்திர சாதனைகள் படைத்து மக்கள் உள்ளங்களில் நிரந்தரமாக குடியேறிவிட்டார் . மக்கள் திலகத்தின் வெற்றிகளை எதிர்கொள்ளாத சிலர் கடந்த கால படங்களின் வசூலை ஒப்பிட்டு அநாகரீகமாக தரம் தாழ்ந்து பதிவிட்டு எம்ஜிஆரை தாக்கியும் இகழ்ந்தும் பதிவிட்டு இருப்பதை கண்டு பரிதாபம் படுகிறோம் . நாங்கள் இமயத்தை தொட்டு வெற்றிக்கொடி நாட்டி உயர்ந்து இருக்கிறோம் .
திரை உலகில் மக்கள் திலகத்தின் சாதனைகள்
அரசியல் களத்தில் வெற்றி படிகள்
மனித நேயத்தில் மக்கள் திலகத்தின் அணுகுமுறை
உலகமே பாராட்டி கொண்டு வருகிறது . கருத்து குருடர்களாக இருந்து வரும் மாற்று முகாம் நண்பர்கள் சற்று சிந்தித்து உங்களை மாற்றி கொள்ளுங்கள் .. எங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டது . மிகவும் உற்சாகத்துடன் மக்கள் திலகத்தின் ரசிகர்களாக பெருமையுடன் வாழ்ந்தது வருகிறோம் . வருவோம் .
-
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
உன் போல் ஒருவர்
இனிபிறக்க போவதில்லை
உலகம் உள்ளவரை
உங்கள் புகழ் அலை
ஓயபோவதுமில்லை
வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.
தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந் தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட் டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த் தினார் ஷெரீப்பின் தாய். ‘‘அழாதீங் கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய எம்.ஜி.ஆர்., ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.
‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. எம்.ஜி.ஆருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் எம்.ஜி.ஆர்.! அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய் !
- தி இந்து ...... Thanks dear friend...
-
மீண்டும் பட்டையை கிளப்ப மக்கள் திலகம் புகழுரைகள் பரப்பும் திரு வினோத் சார், திரு லோகநாதன் சார், திரு மஸ்தான் சாஹிப் சார் பற்பல நல் பதிவுகள் இடுவோம்... 👍
-
ஒரு மாமனிதர் இருந்தார்!
கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…
கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.
கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…
கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.
அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.
கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!
20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.
அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.
முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.
எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.
மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’
எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.
அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.
அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.
‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.
தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.
‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’
நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!
அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…
பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…
ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…
ஏன் தெரியுமா?
இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!
இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.
வாழ்க நீ எம்மான்…!
courtesy டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.
net- envazhi
-
-
-
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
இந்த பதிவை இன்றைய
தலைமுறைக்கு
தெரிவிக்க வேண்டிய
தார்மீக கடமை
தலைவரின்
ரசிகர்களுக்கு உண்டு என்று
சொல்வேன்
( நாடோடி மன்னன் )
நடிப்பு –
எம். ஜி. ராமச்சந்திரன்,எம். என். நம்பியார், சக்கரபாணி, சந்திரபாபு, வீரப்பா, பானுமதி, ஜி. சகுந்தலா, பி. சரோஜாதேவி, எம். என். ராஜம்.
தயாரிப்பாளர் –
எம். ஜி. ராமச்சந்திரன் – எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்.
இயக்குனர் –
எம். ஜி. ராமச்சந்திரன்
இசையமைப்பு –
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு, என். எஸ். பாலகிருஷ்ணன், ஆத்மானந்தன்
வெளியீடு நாட்கள் –
ஆகஸ்ட் 22, 1958.
புரட்சி நடிகர் முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வெளிவந்த படைப்பு வெள்ளி விழா காவியம்.
1958-ம் ஆண்டு தீபாவளி அன்று சிங்கப்பூர் நகரங்களில் திரையிடப்பட்டு மாபெரும் சாதனை படைத்த படம் நாடோடி மன்னன். தமிழ் படங்களில் அன்றைய சிங்கப்பூர் மிகப்பெரிய திரையரங்கில் அதிக வசூல் சாதனை செய்த காவியம்.
1958 – ல் 50 திரையரங்கில் 50 நாள் ஓடி அதிக வசூல் பெற்று(1 கோடியே 10 லட்சம் ) சாதனைபுரிந்த காவியம் (50 திரையரங்கு என்பது இரண்டாம் வெளியீட்டும் சேர்த்து).
“முதன் முதலில் தலைநகர் சென்னையில் மூன்று அரங்கில் 100′ காட்சி மேல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன காவியம்.
சேலம் சித்தேஸ்வரா அரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் இது. புரட்சி நடிகர் கலையுலகில் நடிக்கும் வரை சேலம் நகரில் வெள்ளி விழா கண்ட ஒரே காவியமும் நாடோடி மன்னன் ஒன்றே !
“திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும் ! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100நாள் கண்ட முதல் காவியமும் இதுவே ! அரங்கு கிருஷ்ணா 113நாள்.
சென்னை கிருஷ்ணா அரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே காவியம் ( 3காட்சியில்) 161 நாள்.
இலங்கை மாநகரில் 6 அரங்குகளில் 100 நாள் கண்ட ஒரே காவியம் இது ஒன்றே !
“சிறந்த இயக்குநர் விருது “சினிமாகதிர் ” புரட்சி நடிகருக்கு வழங்கியது.
“லண்டன் ‘ தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.
“சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிக்கையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.
மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.
1958-ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.
“லண்டன்” மாநகர் திரையரங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !
ஆந்திர மாநிலமான “சித்தூரில் ” 100 நாள் கண்ட ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !
முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் ( தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம் ! நாடோடி மன்னனே !
“இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 “சவரன்” தங்க வாள் பேரறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டு, பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை…. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.
சீர்காழியில் “இன்பக்கனவு “நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படம் வெளிவந்தது. ஆகையால் 1959-ம் ஆண்டும் ‘நாடோடி மன்னன்’ தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.
“ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராக யிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாகக் தந்தவர் புரட்சி நடிகரே.
“நடிகை அபிநய சரஸ்வதி B.சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். B. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.
“பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.
“அதிக நேரம் (நான்கு மணி நேரம்) ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.
“தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல்(தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துகள் உணர்த்தும் பாடல்கள் அமைந்தஒரே காவியம்.
“அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும் -பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கேமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி மன்னன்.
“ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களின் இடம் பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ் காவியம்.
“10- க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.
“கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் தூள்ளாக உடைந்து சிதறுவது போல் ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.
“அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்கப் பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.
“கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்ட செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி ; ஒரு பணி பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது. மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்ட மான் இறந்து கிடப்பது போல் காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம். இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.
தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் ‘இந்தியன் மூவி நீயூஸ்’ என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.
தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.
தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.
“4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது. ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.
“வசனத்தில் புதுமை புரட்சி கருத்துகள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல்,அன்பு,சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.
Thanks Google... Thanks friend...
-
'நான் பார்த்த அரசியல்' எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மை.
எம்ஜிஆர் நீக்கப்பட்ட போது, தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை புட்டு புட்டு வைத்துள்ளார்.
"இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் 'கணக்கு அனுப்ப வேண்டும்' என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து,
“இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
1971 பொதுத் தேர்தலே சான்று.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது,
"என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.
ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.
1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.
எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.
அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை.
ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.
ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.
அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.
எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.
அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.
எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”
– என்றும் அவர் காட்டினார்.
அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.
யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார்.
கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.
ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.
எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.
ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.
இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்."..... நன்றி நண்பரே...
-
-
-
-
-
-
-
இன்று (9/6/18) முதல் தூத்துக்குடி சத்யாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/b64ls2.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா.
-
http://i66.tinypic.com/2r53wd4.jpg
வள்ளியூரை சேர்ந்தவரும், நாகர்கோவிலில் ஜவுளிக்கடை அதிபரும், உலக வானொலி நேயர்களின் முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்த திரு.ஏ.பி.எஸ். ரவீந்திரன் அவர்கள் மாரடைப்பால் நேற்று காலை (8/6/18) மரணமடைந்தார் .
சில ஆண்டுகளுக்கு முன்பாக நானும், திரு.சி.எஸ். குமார் (பெங்களூரு ), திரு.தம்பாச்சாரி, (சென்னை ) மற்றும் சில நண்பர்களுடன் , குற்றாலம் செல்வதற்கு முன்பு நாகர்கோவிலில் சென்றடைந்தபோது எங்களுக்கு திரு.ரவீந்திரன் அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, தனது ஜவுளி கடையில் சில நிமிடங்கள் , தனது மிகவும் பிஸியான நேரத்திலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நினைவுகள், நெல்லை
நாகர்கோவிலில் மக்கள் தலைவரின் படங்கள் வெற்றி வாகை சூடிய வரலாறு [போன்றவற்றையம், அவரது மனித நேயத்தையும் பேசிய விதம் பசுமையான நினைவுகள் போன்றவை .அவரது சொந்த தங்கும் விடுதியில் தங்கவைத்ததோடு,
மறுநாள் , கார் மூலம், திருவட்டாறு, பேச்சிப்பாறை அணை , திற்பரப்பு அருவி, காமராஜர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை ஆகியவற்றை கண்டுகளிக்க பேருதவி செய்தவர் .
திரு.ரவீந்திரன் அவர்களின் மறைவு, எண்ணற்ற எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு பேரிழப்பு .
அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .
அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள், தொழிலாளிகளுக்கு என் சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பகதர்கள் குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
-
-
-
-
-
-
-
-
நாகர்கோவிலை சார்ந்த திரு. ஜேம்ஸ் என்பவர் வெறி பிடித்த , தீவிர எம்.ஜி.ஆர். பக்தர் .அவர் சிங்கப்பூரில் கப்பலில் வேலை பார்த்து வந்தார் . தற்போது தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாடு அருகில் உள்ள ஒரு நகரில் கப்பலில்
ஆறு மாத கால ஒப்பந்தத்தில் வேலை பார்த்து வருகிறார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பார்வையாளராக உள்ளார். சமீபத்தில் மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் பதிவுகள் இருந்ததாக கருதி நேற்று (8/6/18) அவரது தேநீர் இடைவேளையின்போது சுமார் அரை மணி நேரம் அலைபேசியில் பேசி தனது கருத்துகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார் . இது போன்ற பதிவுகளைத்தான் தான் பெரிதும்
விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார் . இந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களைத்தான் உண்மையில் சாரும் .
நண்பரின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.
-
ராஜ் தொலைக்காட்சியில் இன்று மதியம் 12 மணிக்கு மக்கள் திலகத்தின் ''உலகம் சுற்றும் வாலிபன் '' ஒளிப்பாராக உள்ளது .
-
" வேட்டக்காரன் வருவான்... உஷார்" !
எம்.ஜி.ஆரோடு திமுக கட்சியும் திமுகவோடு எம்.ஜி.ஆரும் ஒருசேர படிப்படியாக வளர்ந்தனர். இந்த வளர்ச்சி 1960களில் உச்சாணிக்கு போனது.
1949ல் ஆரம்பிக்கப்பட்டு , 1957ல் முதன்முறையாக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்து அதில் 15 இடங்களில் வென்ற திமுக, 1962 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதே போல் 1957ல் பாராளுமன்ற மக்களவையில் திமுகவுக்கு 2 உறுப்பினர்களாக இருந்தது , 1962ல் 7ஆக உயர்ந்தது.
பல ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சு கொள்கையாக வர்ணிக்கப்பட்டு வந்த தனி திராவிட நாடு கோரிக்கையை , 1962ல் சீனப் படையெடுப்பு காரணமாக கைவிடுவதாக திடீரென அறிவித்து அகில இந்திய கவனத்தையும் ஈர்த்த அதே திமுக, 1965ல் பெரும் வாலிபர் பட்டாளத்தைக் கொண்டு மிகப் பெரியளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி நாட்டையே அசர வைத்தது.
அதே போல், 1936ல் சினிமாவில் நுழைந்து திரையில் ஒரு ஓரமாக நின்று போகும் உதிரி வேடத்துக்கு கூட உத்தரவாதமின்றி அவதிப்பட்டு வந்த சாதாரணத் துணை நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், ' புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்' ஆக ' மக்கள் திலகம் ' ஆக உயர நிமிர்ந்ததும் - ' எம்.ஜி.ஆரை போட்டு படமெடுத்தால் படம் எப்படி இருந்தாலும் முதலுக்கு மோசம் வராது. போட்ட பணம் நிச்சயம் வந்து விடும்' என்ற நம்பிக்கை பெற்று சினிமா தயாரிப்பாளர்கள் அவரை மொய்த்ததும் ; MGR என்பதற்கு 'Minimum Guarantee Ramachandran ' என்ற புது விளக்கமே தமிழ் சினிமா உலகில் உலாவியதும் இதே காலகட்டத்தில் தான்.
தனக்கு திமுக முக்கியம் என எம்.ஜி.ஆரும் ; தங்களுக்கு எம்.ஜி.ஆர். அவசியம் என்று திமுகவினரும் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு பரஸ்பரம் தங்களின் பங்களிப்பை பரிமாறிக் கொண்டனர்.
திமுகவில் எம்.ஜி.ஆருக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அவர் மீது கட்சித் தலைவர் அறிஞர் அண்ணா தனி அபிமானம் காண்பித்தார். அரவணைத்து சென்றார். 1962ல் எம்.ஜி.ஆரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி மகிழ்ந்தார்.
'கட்சி நடத்தும் போராட்டங்களில் எம்.ஜி.ஆர். பங்கேற்காமல் படப்பிடிப்புக்கு போய் விடுகிறார் ' என்று அப்போதே கட்சியில் ஒருசாரார் ஆட்சேபம் தெரிவித்த
நிலையிலும், எம்.ஜி.ஆருக்கு சாதகமாகவே நின்றார் அண்ணா. நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் சினிமாவிற்கிருக்கும் சக்தியையும் அதில் எம்.ஜி.ஆருக்கிருக்கும் வலுவான ஸ்தானத்தையும் நன்கு உணர்ந்திருந்த அண்ணா, எம்ஜிஆரை எந்நிலையிலும் விட்டுத் தர தயாராக இல்லை.
தனது ' மடியில் விழுந்த இதயக்கனி' என்றும் ; ' முகத்தை காண்பித்தாலே போதும் கட்சிக்கு பல்லாயிரம் ஓட்டுகள் தானாக வந்து விழும் ' எனவும் அவர் எம்.ஜி.ஆரை பகிரங்கமாகவே புகழ்ந்தார். மேலும் கட்சியின் தளபதியாக தொண்டர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர் கருணாநிதியும் தனது தோழர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவே இருந்தார்.
அதற்கு ஈடாக எம்.ஜி.ஆரும் தன் பங்கிற்கு திமுகவுக்காக கடுமையாக உழைத்தார். கட்சிக்காக நிதி அள்ளி வழங்கினார். சினிமாவில் மட்டுமின்றி தேர்தல் சமயங்களில் சினிமா படப்பிடிப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு இரவுப் பகல் பாராமல் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டும் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.
கட்சியின் மற்ற தலைவர்கள் போல் அடுக்கு மொழிப் பேச்சுத்திறன் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சமும் இல்லையென்றாலும் அவரது கவர்ச்சியும் அவருக்கிருந்த 'இமேஜ்'ம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது. அவரை நேரில் பார்க்கவும் பேச்சை கேட்கவும் ஆயிரக்கணக்கில் ஜனங்கள் பசி, தூக்கத்தையெல்லாம் மறந்து அங்குமிங்கும் நகராமல் மணிக்கணக்கில் பொறுமையாகக் காத்திருந்த அந்த அபிமானம், அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி.. வேறு யாருக்குமே வாய்க்கவில்லை. (இப்போதைய 45+ வயசுக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்).
பொதுவாக சினிமாக்காரர்களையும் சினிமாவையும் லட்சியம் செய்யாதிருந்த
காங்கிரஸ் தலைவர் காமராஜரையே, சென்னையில் ஒரு தேர்தல் பிரச்சாரமொன்றில் " ஓட்டு கேக்க வேட்டக்காரன் வருவான். உஷார். மயங்கிடாதீங்க" என்று சொல்லி ஓட்டு கேட்ட வைத்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. 1964ல் சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் எம்ஜிஆர்நடிப்பில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட படம் ' வேட்டைக்காரன்'
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.
அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.
தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.
“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.
இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.
அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை
அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.
அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.
'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.
‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.
‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.
இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.
பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.
“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
courtesy- rajbav
-
தாய்ப்பாசம் என்றால் எம்.ஜி.ஆர் – நடிகர் சிவக்குமார் ஆக
தமிழக திரைத்துறையில் நன் மதிப்புடன் இருப்பவர் சிவக்குமார். சூர்யா, கார்த்திக் என்ற இரண்டு நடிகர்களை வீட்டிலேயே வைத்திருப்பவர். சிறந்த பேச்சாளாரான அவர் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பேச்சு.
உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.
தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.
என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழுதாங்க. நாங்க அழுதோம், அவங்க அழுதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.
அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.
“ஊருக்கு போயிருந்தியா? அம்மா… அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.
-
நம் நாடு 1969
நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
ஓர் உரையாடல்
வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.
ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.
சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.
மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல், ‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!
ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.
மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.
ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!
சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.
பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’
சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.
ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!
சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)
மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?
ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.
சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?
சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!
சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?
மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?
சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?
ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?
சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!
ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?
பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!
சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!
சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
மனோரமா
ஜெயராஜ் ஓவியர்
-
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.
லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.
பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
நிறைவான பொழுதுபோக்கு.
-
விகடன் பொக்கிஷம் சினிமா விமர்சனம் – 30-4-1972-இல் வந்தது. நன்றி, விகடன்!
ராமன் தேடிய சீதையில் தயாரிப்பாளர்கள் தேடி எடுத்திருக்கிற கதையம்சம் சுவையானது.
ஒரு லட்சிய மனைவியின் ஆறு குணங்கள் என்னென்ன என்று நிறைந்த வாழ்வு வாழும் ஒரு முதிய தம்பதியர் மூலம் அறிந்து, அந்தப் பெண்ணைத் தேடி மணந்துகொள்கிறான் கதாநாயகன். அந்த முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தாம் இப்படத்தின் கதை.
பாம்பாட்டி நடனம் முதல் காபரே வரை விதவிதமான நடனங்களை ஆடிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா. ஆடை களையும் நடனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு நடனக் காட்சியில் அவருடைய ஆடை, கதாநாயகரான எம்.ஜி.ஆரே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் அளவு விரசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டாலும், அவர் நடனங்கள் கண்களுக்கு ரசமாகவே இருக்கின்றன.
எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சற்று மாறுதலான பாத்திரம். ஏதாவது ஒரு பிரச்னையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சீரியஸாக இல்லாமல் இருப்பதே அந்த மாறுதல்! லட்சிய மனைவி வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாகவும் உல்லாசமாகவும் மாப்பிள்ளை மாதிரி தோன்றி, சிறப்பாக நடிக்கிறார். அசோகனுடன் அவர் போடும் சண்டை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.
எம்.ஜி.ஆரின் கன்னம் அதிர்ஷ்டம் செய்தது. அவர் கன்னத்தில் பாம்பு கொத்திய விஷத்தை ஜெயலலிதா தன் வாயினால் உறிஞ்சி எடுக்கிறார்! (சென்ஸார் விஷயத்தில் எல்லாரும் இப்படிச் சாமர்த்தியமாக இருக்கத் தெரிந்து கொண்டிருந்தால், கோஸ்லா கமிட்டிக்கு வேலையே இருந்திருக்காதே!)
ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதை யைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை.
இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால்தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!
-
உரிமைக் குரல் (Urimaik Kural)
விகடனுக்கு நன்றி.
.
———————————–
நாட்டுப்புறக் கதைக்குத் தேவையான ஒரு பணக்கார மிராசுதார் குடும்பம். மிராசுதாரின் ‘வில்லன்’ மகன், நாணயமான ஒரு சின்ன மிராசுதார், அவருடைய கதாநாயகத் தம்பி, அழகான கதாநாயகி, எடுபிடி அடியாட்கள் – இவர்களுடன் காதல், போராட்டம், அண்ணன் தம்பி பாசம், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துவிட்டால் விறுவிறுப்பு இல்லாமல் போகுமா?
ஆரம்பமாக, வெள்ளைக் குதிரை பூட்டிய ரேக்ளாவில் வெகு கம்பீரமாக வரும் கதா நாயகன் கோபி (எம்.ஜி.ஆர்), கடத்திச் செல்லப் படும் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். அதிலிருந்து சோதனை மேல் சோதனை! பொதுப் பணத்தை கோபியின் அண்ணன் பறி கொடுக்கிறார். அண்ணனும் தம்பியும் நிலத்தை அடமானம் வைக்கிறார்கள். கோபியின் காதலியை (லதா) மிராசுதாரின் மகன் (நம்பியார்) மணந்து கொள்ள ஏற்பாடாகிறது. கல்யாண நாளன்று மணப் பெண்ணை மீட்டுச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்கிறான் கோபி. அண்ணன் தம்பி உறவு முறிகிறது. கதா நாயகன் தாக்கப்படுகிறான். நிலம் ஏலத்திற்கு வருகிறது. கடைசியில், உரிமைக் குரல் எழுப்பி நியாயம் கிடைக்கச் செய்கிறான் கோபி.
கதையின் உயிரோட்டம் எம்.ஜி.ஆர்! காதல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் இயற்கையாக அமைந்திருக்கின்றன. குறும்பும், கொஞ்சலும், கொந்தளிப்புமாக லதா சளைக்காமல் நடித்திருக்கிறார்.
பிரிவினை செய்யப்பட்ட வீட்டில் கீற்றுத் தடுப்புக்கு அப்பால் எம்.ஜி.ஆரும் லதாவும் நடத்தும் காதல் விளையாட்டும், அந்த சரஸங் களைக் காது கொடுத்துக் கேட்கக் கூசி மெல்ல வும் முடியாமல், விழுங்கவும் முடியாதபடி அண்ணன் சகஸ்ரநாமம் தவிப்பதும் இனிமை! சகஸ்ரநாமம் பக்குவமான நடிப்பின் உருவமாக வருகிறார்.
வயலில் நடக்கும் சண்டையையும், வழியில் நெருப்பு மூட்டப்படும் கிளைமாக்ஸ் காட்சியையும் டைரக்டர் படுவேகத்தில் படமாக்கியிருக்கிறார். பாராட்டலாம்.
தையற்காரர் தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு கோஷ்டி யின் முற்பகுதி நகைச்சுவை முழுச் சிரிப்பு. சச்சுவிடம் ஒரு மெருகு தெரிகிறது.
பாடல்கள் அதிகம். ‘கல்யாண வளையோசை’, ‘உனக்காகவே நான் வாழ்கிறேன்’ பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன.
மூலக் கதையில் டைரக்டர் கொஞ்சம்கூட கை வைக்க விரும்பவில்லை போலிருக்கிறது. கதாநாயகன் கோபியின் உடை யைப் பார்க்கும்போது ஆந்திர விவசாயி அல்லவா நினைவுக்கு வருகிறார்! கிராமியப் பின்னணிகளும் அநேகமாக ஆந்திரத்தை தான் நினைவுபடுத்துகின்றன.
குரலில் உற்சாகம் இருக்கிறது.
-
M.G.R.'s Unique Triumph
(An extract of an article published on 7-8-1965)
A NEW milestone—significant in every respect—was reached the other day when Vijaya Combines
Productions and the Madras City distributors, Emgeeyar Pictures, celebrated the Silver Jubilee
Week of their remarkable colour picture 'Enga Veettu Pillai*, which has proved to be a great money spinner. As described aptly by Mr. A. L. Srinivasan, the new President of the Film Federation of India, the success of 'Enga Veettu Pillai' symbolises the success of the Tamil film industry. The makers, the artistes and the technicians responsible for creating such ah unforgettable film have earned the salute of the motion picture industry in South India.
In recent years, only very few pictures had the distinction of celebrating the Silver Jubilee. They were 'Kalyana -Parisu', 'Pava Mannippu', 'Pasamalar' and 'Kathalikka Neramillai'. Yet. the success of those films cannot equal that of 'Enga Veettu Pillai'. The difference lies in this. While they were shown only at one picture house, 'Enga Veettu Pillai' has been drawing bumper crowds at three cinemas—Casino, Broadway and Mekala—in Madras. This apart, the film has had a Silver Jubilee run in four other district centres in the South—Madurai, Coimbatore, Tiruchirappalli and Thanjavur.
It is a' record, about which the makers can feel proud.
Statistical figures reveal that the Government has received a bigger share of income from this film from the three theatres in the City than the distributers and the exhibitors. As many as 12 lakhs of people in Madras City, with a population of over 20 lakhs, have seen this film. The total income to the State by way of entertainment tax on this film throughout South India is estimated to be in the region of Rs. 50 lakhs. These staggering figures and the enormous box-office pull of 'Enga Veettu Pillai' have restored the needed confidence in the minds of the distributors to invest more and more in production.
What are the causes for the success of 'Enga Veettu Pillai'? The reasons are not far-to seek. A casual appraisal will convince everyone that the picture's universal appeal, capable of ensuring a repeat audience, has primarily contributed to its unqualified success. Besides wholesome entertainment values, the moral of the film, which is most inspiring, is another contributing factor. On top is the magnificent performance of the lead player, M. G. Ramachandran, in the dual role of the nitwit and his dashing, enterprising twin brother. The gamut of emotions displayed by M.G.R. in the dual role and particularly his interpretation of the nitwit have won for him the unstinted admiration of critics, connoisseurs and cinegoers. All of them have come to the conclusion that M.G.R., who is always capable of good acting has made great strides in the field of histrionics. The picture indeed marks the unique triumph of M.G.R. In the earlier years, M.G.R.'s own film 'Nadodi Mannan' was considered a great box-office hit. And now he has beaten his own record with his latest film, 'Enga Veettu Pillai', which is far superior in production and technical values to his own earlier hit. Further, it is in opulent colour. The actual "shooting" of the Him was completed within a record period of 45 days while the entire production took up less than two and a half months. This is a record for any colour film produced in India. According to B. Nagi Reddi and Chakrapani, the "de jure" makers of the film, the speed and efficiency with which the film was completed should be attributed t« the indefatigable work put in by M.G.R. as the "de facto" producer of the film, besides shouldering the dual role in it. The latter worked for nearly sixteen to eighteen hours each day on the film and supervised' every aspect of its production.
The impression about M.G.R. all the while has been that he is incapable of acting and that he is fit only for swashbuckling roles. Th.e discerning fiimgoers have taken pride in declaring that they scrupulously avoid seeing his pictures. But 'Enga Veettu Pillai' has dispelled all sorts of misgivings about him. It has, on the other hand, proved that his success as an actor has been mainly due to his talent, sincerity, humility, hard work and a spirit of camaraderie displayed by him. Both on and off the screen. His fans are now legion.
-
"1985-ம் வருடம்... #எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து ஆப்பரேஷன் முடிச்சுட்டு இந்தியா வரப்போறாரு.
அப்ப சில சொந்த வேலை காரணமா திருநெல்வேலிக்கு போயிருந்தேன்.
"ச்சே...தலைவர் வரும்போது நேர்ல பாக்கமுடியலையே"-ன்னு தவிப்பு எனக்கு....
அந்த நேரத்துல தமிழ்நாடு முழுக்க ஒரே வதந்தி...
"எம்.ஜி.ஆர். உயிரோடவே இல்லை...எலெக்சன்ல ஜெயிகிறதுக்காக ஆர்.எம். வீரப்பனும், ராஜிவ்காந்தியும் மக்களை ஏமாத்துறாங்க" அப்படி, இப்படின்னு வதந்தி...
ஏன்...? தமிழ்நாட்டுல அ.தி.மு.க தலைவர்கள் சிலரே
"தலைவர் உயிரோட இருக்காரா... இல்லையான்னு தெரியலே' என்று பேட்டியெல்லாம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க...
மக்களுக்கோ ஒரே குழப்பம்...எதை நம்புறதுன்னு தெரியலே...
இந்த நிலையில செய்தி வருகிறது..
"எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து நாளை திரும்பிவருகிறார்" என்று.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்
ஒட்டு மொத்த இந்தியாவும் "ஆப்பரேசனுக்கு பிறகு எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்னு" ஒரே எதிர்பார்ப்பு.
அப்பொழுது எங்கள் ஊரில் டி.வி. வரவில்லை...ஆகையால் ரேடியோவில் வர்ணனை செய்து கொண்டு இருந்தார்கள்.
எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து சென்னை வருவதாக திட்டம்.
எம்.ஜி.ஆரை வரவேற்க கிண்டியில் உள்ள ராணுவப்படை மைதானத்தில் மிகப் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்...
காலை 7 மணிக்கு விமானம் சென்னை வந்துவிடும் என்பதால் முதல் நாள் இரவே லட்சோபலட்சம் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்துவிட்டனர்.
திருநெல்வேலியில் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள டீக் கடையில் ரேடியோவில் நேரடி வர்ணனையை நானும் நண்பர்கள் சிலரும் கேட்டுக்கொண்டு இருந்தோம்...
நேரம் போகப்போக வர்ணனையை கேட்கும் கூட்டம் அதிகமாகிகொண்டே இருந்தது...அந்த அதிகாலை வேளையில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டுவிட்டனர்...
எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவருக்கு கை, கால் வேலை செய்யாது என்று சொன்னதாகவும் அதனால் விமானத்தில் இருந்து இறங்கும் அவரை ஒரு வீல்சேரில் அழைத்து ஆம்புலன்சில் ஏற்றி நேராக மேடைக்கு கொண்டு வந்துவிட வேண்டும்...என்பது r.m. வீரப்பன் அவர்களின் திட்டம்...
மேடையில் ஆம்புலன்ஸ் ஏறுவதற்கு வசதியாக ஒரு ரேம்ப் அமைத்து இருந்தனர்... மற்ற தலைவர்கள் ஏற வலது பக்கம் படிக்கட்டுக்கள்...
இப்பொழுது ரேடியோ வர்ணனை...
டெல்லியில் இருந்து எம்.ஜி.ஆர்., புறப்பட்டார்...
வர்ணனையை கேட்ட அனைவரும் கை தட்டி, விசில் அடித்து ஆரவாரம்...
நேரம் செல்ல செல்ல அனைவருக்கும் டென்ஷன்...
இனிமேல் எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்...:?
ஓடி, ஆடி சினிமாவில் சண்டை போட்டாரே இனிமேல் காலம் முழுவதும் வீல் சேரில் தான் இருப்பாரா...?
பக்கம்,பக்கமாக வசனம் பேசினாரே...இனிமேல் அவரால் பேச முடியாதா...? இப்படி எல்லோர் மனதிலும் கவலை.
மணி 7...
மீண்டும் ரேடியோ வர்ணனை...
"முதல்வர் வந்த விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கும் என்று அறிவிக்க பட்டு இருக்கிறது..."
மீண்டும் விசில், கைதட்டல், ஆரவாரம்...
15 நிமிடங்கள் போய்இருக்கும்...
மீண்டும் ரேடியோவில் செய்தி...
"சென்னை விமான நிலையம் முழுவதும் ஒரே பனிமூட்டமாக இருப்பதால் m.g.r. வந்த விமானம் தரை இறங்க முடியவில்லை...ஆகவே விமானத்தை பெங்களூருக்கு திருப்பலாமா என்று விமானிகள் ஆலோசித்து வருகின்றனர்..." என்று ரேடியோவில் செய்தி...
"ச்சே..என்னடா இது...தலைவர் வருவாரா...மாட்டாரா...?"
"தலைவர் உண்மையிலேயே உயிரோடு இருக்காரா...?"
"ஏதோ கோல்மால் நடக்குது..."
என்றெல்லாம் விமர்சனங்கள்...இந்த ரேடியோ அறிவிப்புக்கு பிறகு.
20 நிமிடங்கள் போயிருக்கும்...
பனிமூட்டம் விலகி விமானம் தரை இறங்க போகிறது என்று அறிவிப்பு...
இங்கு உற்சாகம்...கொண்டாட்டம்...
எம்.ஜி.ஆரை அழைத்துவர ஓடுபாதைக்கே ஆம்புலன்ஸ் செல்கிறது.
விமானத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., இறங்குகிறார்...
"எதற்காக ஆம்புலன்ஸ்" என்று திட்டுகிறார்..?
அவரது 4777 அம்பாசிடர் கார் வந்து இருக்கிறது... அதில் ஏறி உட்காருகிறார்...கார் புறப்டுகிறது...
வழியெங்கும் மக்கள் வெள்ளம்...அவர்களை பார்த்து கை அசைத்துக்கொண்டே ராணுவ, மைதானத்திற்கு சென்றடைகிறார்.
ஆம்புலன்சில் வருவார் என்று எதிர் பார்த்த தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர்., அம்பாசிடர் காரில் வருவதை பார்த்து அதிர்ச்சி...!
இருந்தாலும் அதை சமாளித்துக்கொண்டு "காரிலேயே மேடைக்கு போய்விடலாம்" என்று ஆர்.எம்.வி சொல்கிறார்...
எம்.ஜி.ஆர்., அவரை திட்டிவிட்டு வலது புறம் இருக்கும் படிக்கட்டுகளில் வழக்கம்போல வேகவேகமாக ஏறி ...
மேடைக்கு வந்து அனைத்து திசைகளிலும் கைகாட்டுகிறார்...பின் பெண்களைப்பார்த்து தலையைகுனிந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்குகிறார்...
அப்பொழுது வந்த கைதட்டல், விசில் சத்தம் சென்னை முழுவதும் எதிரொலித்து இருக்கும்.
ரேடியோவில் வர்ணனையை கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லிக்கொள்கிறோம்...
இப்பொழுது தலைவர் பேசுவார் என்று அறிவிப்பு...
ஒரே நிசப்தம்...
எல்லோருமே தலைவரால் பேச முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்த நேரம்...
"பெரி......யோ...ர்....க......ளே, தா.....ய்....மார்....க.....ளே...."
கொஞ்சம் வார்த்தை தடுமாறியது...பலரது கண்களில் கண்ணீர்...
"என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே..."
தெளிவான உச்சரிப்பு. கம்பீரமான அதே குரல்...
இப்பொழுது எழுந்த ஆரவாரத்தை பதிவு செய்து இருந்தால் கின்னஸ் சாதனையாகி இருக்கும்...அப்படி ஒரு கைதட்டல்...
ரேடியோவில் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும், கூச்சல் இட்டுக்கொண்டும் இருந்ததால் அதன்பின்பு எம்.ஜி.ஆர்., என்ன பேசினார் என்பதை கேட்க முடியவில்லை...
வழக்கமாக காலை 6 மணிக்கு வரும் தினமலர் அன்று 11 மணிக்கு தான் வந்தது...பேப்பரை வாங்கிப் பார்த்தால் எம்.ஜி.ஆர்.,
அமெரிக்காவில் இருந்து திரும்பிய போடோக்கள். மேடையில் ஏறிய காட்சி, இரட்டைவிரலை காட்டிய காட்சி. பெண்களைப் பார்த்து தலைகுனிந்து வணங்குவது என்று முதல் பக்கம் முழுவதும் படங்களை போட்டு இப்படிதலைப்பு வைத்திருந்தார்கள்...
நினைத்தேன்_வந்தாய் 100வயது"
courtesy . Facebook
-
பள்ளி குழைந்தைகள் பல் விளக்கவேண்டும் என்று பல் பொடி வழங்கியவர் பசி இல்லாமல் ஒருவேளை உணவாது உண்ணவேண்டும் என்று சத்துணவை மதிய உணவாக தரம் உயர்த்தியவர் விவாசியிகலின் கடனை வட்டியை ரத்து செய்தவர் ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்த்தவர் பல துறைகளில் பல சாதனைகளை படைத்த வள்ளல் என்று பாடுவேன்
இதய தெய்வம் புரட்சி தலைவர் ஒரு அதிசிய பிறவி. அவரை போல ஒரு மனிதர் தோன்ற பல நூறு ஆண்டுகளாவது ஆகும். மக்களிடம் தனது செல்வாக்கை, தான் மறைந்த பிறகும் நிலை நிறுத்தி உள்ள ஒரு தெய்வ பிறவி. தனது ஆட்சி காலத்தில் மக்களின் குறைகளை அறிந்து அதற்கேற்ப விலைவாசியை கட்டுபடுத்தி, நல்ல ஒரு ஆட்சியை தந்த தலைவர். தனது கொள்கைகளை திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து பிறகு அவர்களது ஆதரவால் தனது இறுதி மூச்சு வரை அவர்களுக்காக தனது கொள்கைப்படி ஆட்சி செய்த மாசற்ற மாமனிதர். இன்று ஊழல் மூலம் பல லட்சம் கொடிகளை அள்ளி குவித்துள்ள தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்வளித்த வள்ளல். இருமுறை எமனை வென்ற அவரது ஆயுள் மட்டும் சற்றே நீடித்திருந்தால் திருக்குவளை குடும்பம் அட்ரஸ் இல்லாமல் போயிருக்கும்.
ஏழைகளின் துயர் துடைத்த வள்ளல்.. தமிழக மக்கள் மீது அளவில்லாத அன்பும், பரிவும் கொண்ட உத்தம தலைவர். அவரது இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. இன்னொரு எம்.ஜி.ஆர் நமக்கு கிடைக்கவே மாட்டார்.
பொன்மனச்செம்மல் என்றும், புரட்சி நடிகர் என்றும், புரட்சித் தலைவர் என்றும், மக்கள் திலகம் என்றும், எங்கள் வீட்டு பிள்ளை என்றும், சத்துணவு தந்த சரித்திர நாயகன் என்றும், வாத்தியார் என்றும், இதயக்கனி என்றும், இதய தெய்வம் என்றும்........ இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். "எம்.ஜி.ஆர்" என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மொட்டைகொபுரமாஇ இருந்ததை மாற்றி வானளாவிய வண்ணமிகு கோபுரமாய் மக்கள் மனம் மகிழும் வண்ணம் கட்டியதில் பெரும்பங்கு எம் ஜி ஆருடைது....அதைப்பாராட்டி ஸ்ரீரங்கம் ஜீயர் சொன்னார்...இவர் எம் ஜி ஆர் அல்ல...எம் ஜீயர் என்று....இதைவிடவா அந்த மாபெரும் மனிதருக்கு ஒரு சான்று வேண்டும்.
பொது நீதியிலே, புது பாதையிலே வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன். .. இங்கு ஊமைகள் ஏங்கவும், உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன் ? '' என்று கூறியவர், தன் அன்புக்குரிய, எந்த கைம்மாறும் எதிர்பார்க்காமல், தங்களின் உயிருக்கும் மேலாக - தம் மீது அன்பு வைத்திருந்த தமிழ்நாட்டு மக்களை அவரும் தன் உயிருக்கும் மேலாக மதித்துள்ளார் என்பதையும், அதனாலேயே அவருக்கு '' பொன்மனச் செம்மல்'' என்ற பெயருள்ளது என்பதையும் நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், அவற்றில், இந்த செய்தி ஒரு மணிமகுடமாகும்.............................
Courtesy from comments portion.
-
எம்ஜிஆரின் ''தில் ''
1972 -1973 எம்ஜிஆர் தனி மனிதராக நின்று திரை உலகில் சந்தித்த போராட்டங்கள்
ஆளுங்கட்சியின் அதிகாரம்
காவல் துறை அராஜகம்
திரை அரங்கு உரிமையாளர்களுக்கு மிரட்டல்
விநியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை
படத்தயாரிப்பளர்களுக்கு உத்தரவுகள்
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு காவல் துறை நெருக்கடிகள்
எம்ஜிஆர் மன்றங்களை மூட மும்மர பணிகள்
பத்திரிகைகளில் எம்ஜிஆர் பெயர் , படங்கள் , செய்திகள் இருட்டடிப்பு /
அரசியல் மேடைகளில் எம்ஜிஆரை தரமின்றி தாக்கி பேசுதல்
எம்ஜிஆரின் எதிர்காலம் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்தது .அன்றைய தினம் பலம் பொருந்திய நடிகர சங்கத்திலிருந்து ஒரு நடிகர் கூட எம்ஜிஆருக்கு ஆதரவு தெரிவிக்க இல்லை .காமராஜர் , கருணாநிதி , மற்றும் இ.,காங் தலைமை அனைவரும் எம்ஜிஆரை தாக்குவதில் மும்மரமாக இருந்தனர் .
எம்ஜிஆர் தன்னுடைய ரசிகர்களையும் கட்சி தொண்டர்களையம் , மக்களையும் மட்டுமே நம்பினார் . மனவலிமை கொண்ட எம்ஜிஆர் மக்கள் சக்தியின் பெரும் ஆதரவோடும் ரசிகர்களின் முழு ஒத்துழைப்போடும் களத்தில் இறங்கினார் .
முதல் வெற்றி .....உலகம் சுற்றும் வாலிபன் .
எம்ஜிஆரின் உலகம் சுற்றும்வலிபன் சந்தித்த போராட்டங்கள்
1. நேரிடையாகவே திமுக வை சேர்ந்த மதுரை முத்து படம் வெளிவராது .வர விடமாட்டோம் என்று சவால் விட்டார் .
2. படத்தின் ரீ ரெக்கார்டிங் நேரத்தில் ஏகப்பட்ட தொல்லைகள் மாநில அரசால் தரப்பட்டது .
3. படத்தின் நெகடிவ் சேதாரப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது
4. ஒரு வேளை பட வேலை முடிந்துவிட்டால் திரை அரங்கிற்கு வரவிடாமல் தடுக்க திட்டங்கள் தீட்டப்பட்டது
எல்லா சவால்களையும் எம்ஜிஆர் இன்முகத்துடன் எதிர்கொண்டு தான் குறிப்பிட்டபடி 11.5.1973 அன்று 39 திரை அரங்குகளில் திரையிட முடிவு செய்து 7.5.1973 அன்று அலைஓசை , தென்னகம் மற்றும் தினமணி முன்பதிவு விளம்பரம் தந்தார் .
முன்பதிவு தினத்தன்று முன்னாள் இரவே சென்னை அண்ணா சாலையில் ரசிகர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது .
திரை உலக வரலாற்றில் புதிய வரலாற்றை எம்ஜிஆர் நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்
உலகம் சுற்றும் வாலிபன் - 11.5.1973 அன்று 39 அரங்குகளில் வெளியானது .
படமும் மாபெரும் வெற்றி
வசூலில் புதிய . வரலாற்றை உருவாக்கினான் உலகம் சுற்றும் வாலிபன்
எம்ஜிஆர் திரை உலகை விட்டு விலகிய பின்னரும் அந்த சாதனையை யாராலும் 1979 வரை முறியடிக்க இயலவில்லை.
அதுதான் எம்ஜிஆரின் தில் ஆன சாதனை .
courtesy fb
-
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள். *
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. *
எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர். *
எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'. *
எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
*
எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'. *
எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'. *
எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'. *
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'. *
எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி',
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.
எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.
எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'. எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான். எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்). எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.
எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'.
இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.
எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'
. எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.
எம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார். எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப் சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம்
'படகோட்டி'. எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.
courtesy - net
-
மீண்டும் மீண்டும் எம்ஜிஆர்
பழையகாலத்துத் தமிழ் சினிமாக்களை இப்போது மீண்டும் பார்க்கவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி இணையம்தான் என்றாகிப்போன காலம் இது. யூடியூபில் மட்டுமே பழைய படங்களைக் காண இயலும் என்கிற நிலை தோன்றி அநேக காலம் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்த கதி.
உலகமெங்கும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை மங்கச் செய்திருக்கிற டிவிடி வருகை மற்றும் பரவலாகிவிட்ட இணையதளப் பயன்பாடு போன்றவை சினிமாக்களின் திரையரங்கத் திரையிடல்களுக்குப் பெரும் சவால்களாகியிருக்கின்றன. முதல்முறை வெளியீடுகளுக்குக்கூட வசூல் உத்தரவாதமற்ற நிலைமை உருவாகியிருக்கும் இன்றைய காலத்திலும் தமிழில் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் திரையரங்குகளில் திரையிடல் வாய்ப்பையும் ரசிகர்களின் அமோக ஆதரவினையும் பெற்றிருப்பவை எம்ஜிஆர் படங்கள் என்றால் அது மிகையல்ல.
எம்ஜிஆர் நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ஒருசில படங்கள் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிடப்பட்டு ஒரு கலக்குக் கலக்கியது பல திரையரங்குகளில்.
புதிதாகத் தயாரிக்கப்படும் படங்களுக்குக்கூடக் கிடைக்காத பெரும் வரவேற்பைக் காலம்தோறும் எம்ஜிஆர் படங்கள் பெற்றுவருவதை உள்ளபடியே ஆய்வுக்குட்படுத்தினால் இங்கே எத்தனை ரசனை மாற்றங்கள் வந்தபோதிலும் எம்ஜிஆர் படங்களுக்கான வரவேற்பினை அவற்றால் ஒன்றும் செய்துவிட இயலவில்லை என்பதற்கான அடிப்படைகளை அறிந்துகொள்ளவும் இயலும். இந்தச் சூழலில் இதோ மற்றுமொரு எம்ஜிஆர் சினிமா 48 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, 5.1 ஒலி நுட்ப அமைப்புடன், சினிமாஸ்கோப் திரைப்படமாக வெளிவரத் தயாராகிக்கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப்படத்தில் மறைந்த ஜெயலலிதாவும், லட்சுமியும் அவருக்கு ஜோடிகள். அவர்களுடன் அசோகன், வி.கே.ராமசாமி, சோ போன்றோரும் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை.
ப.நீலகண்டன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 1970ல் இந்தப் படம் முதன்முதலில் வெளியானபோதே மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. சென்னையில் மட்டும் அது திரையிடப்பட்ட அரங்குகளில் தொடர்ந்து அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என். கனகசபை தயாரிப்பில் உருவான இந்த மாட்டுக்கார வேலன் படத்தின் டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட்ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறாராம்.
-
-