http://i61.tinypic.com/10e3iuv.jpg
Printable View
http://i57.tinypic.com/2nq5lsp.jpg
நம் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “ஆயிரத்தில் ஒருவன்”, மறு வெளியீட்டில், வெள்ளி விழா கொண்டாடியதன் நினைவாக “ஷீல்ட்” ஒன்று, இன்று காலை புரட்சித் தலைவரின் மெய்காப்பாளராக திகழ்ந்த திரு. கே. பி. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது.
“ஷீல்ட்” வழங்கியவர் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம். அருகில் ‘ஒலிக்கிறது உரிமைக்குரல்’ ஆசிரியர் திரு. பி. எஸ். ராஜு அவர்கள்.
திரு. கே. பி. ராமகிருஷ்ணன் அவர்களுடன், திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் மற்றும் திரு. கே. எஸ். மணி அவர்கள்.
http://i62.tinypic.com/sv48p1.jpg
உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மறைந்து 27 ஆண்டுகள் கடந்த பின்னரும் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் பிற மொழி பேசும் மக்களும் ,கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களும் , அவரை நினைத்து அஞ்சலி செய்தது வரலாற்று சாதனையாகும் .
தமிழகமெங்கும் இல்லங்கள் / வீதிகள் தோறும் மக்கள் திலகத்தின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியது மூலம் மக்கள் என்றென்றும் எம்ஜிஆரை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள் என்பது தெரிகிறது .
உலக அரசியல் அரங்கில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை நம் மக்கள் திலகத்திற்கு கிடைத்துள்ளது .
அரசியல் உலகில் - திரை உலகில் - மனித நேயத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நிகழ்த்திய சாதனைகள் மக்களால் என்றென்றும் மறக்க முடியாது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உடலால் பிரிந்தாலும் உள்ளதால் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு வருகிறார் .ஊடகங்களில் 24 மணி நேரமும் அவருடைய தரிசனம் நமக்கு கிடைக்கும் போது எப்படி அவரை நாம் மறக்க முடியும்
4000 பதிவுகள் முடித்தமைக்கு தொலைபேசி, அலைபேசி, திரி மூலம் வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் தெரிவித்த திருவாளர்கள்: எஸ்.வினோத் ,சி.எஸ்.குமார், (பெங்களுரு ),
சைலேஷ் பாசு (துபாய் ), கலியபெருமாள் (புதுச்சேரி ), ரவிச்சந்திரன் (திருப்பூர் ), எஸ். குமார் (மதுரை ) , மற்றும் சென்னை நண்பர்கள் :திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார் , கலைவேந்தன் , எஸ். ராஜ்குமார் , வேலூர் திரு.ராமமூர்த்தி , திரு.முத்தையன் ஆகிய நல்லிதயங்களுக்கு இதயங்கனிந்த நன்றி .
வாழ்ந்தவர் கோடி , நடித்தவர் கோடி , மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
இருந்தாலும், வாழ்ந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ,
மக்களின் ஏகோபித்த தலைவர் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் .
http://i57.tinypic.com/mkxe2p.jpg
ஆர். லோகநாதன்.
30 ஆண்டுகள் முன் ......24.12.1984
மக்கள் திலகம் எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நேரத்தில் அவர் இங்கே இல்லாத சூழ் நிலையில் அவரது
தளபதிகள், எதிர் கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து என்றென்றும் மக்கள் முதல்வர் எம்ஜிஆர் என்பதை
தேர்தல் முடிவுகள் மூலம் உலகத்திற்கு அடையாளம் காட்டினார்கள் . முதல்வராக எம்ஜிஆர் அமெரிக்கா சென்றார் . முதல்வராக சென்னை திரும்பினார் .