http://s8.postimg.org/7y22qlw9h/IMG_20150905_WA0023.jpg
Printable View
Recent Hindi movie "Bajrangi Bhaijaan" same concept like Thalaivars "Kanni Thai"?
பேரறிஞ்ர்களை அவர்கள் இருக்கும்போது பாராட்டுவது இல்லை. மறைந்தபின் பாராட்டி வருகிறோம்.
- புரட்சித்தலைவர்
தந்நலம் இன்றியே ஊர்நல்மேல் நினைவு
தனைவைத்த எம்.ஜி.ஆருக்கு
இணையில்லை நிகரில்லை ஈடில்லை புவியினில்
மக்கள்திலகத்தின் பல்லாண்டு வாழ்க, மற்றும் உழைக்கும் கரங்கள் - எவ்வித இடைவெளி அன்றி திரும்ப, திரும்ப மறு வெளியீடு காண்கிறதே... இதுவன்றோ எவரும் நெருங்க முடியவே முடியாத சாதனை? சரித்திரம்? இதையெல்லாம் அறியாத புரியாத அப்பாவி ...ரசிகர்கள் சிலர் ரெகுலர் காட்சிகளில் எண்கள் படம் இந்த படம் ஓடியது !!! என தங்களுக்கு உள்ளாகவே ஆறுதல் சொல்லி கொண்டிருக்கும் பரிதாபமான பதிவுகளை எழுதுகின்றனர்...ஆமாங்க, சொந்த அரங்குகள் வைத்து நடத்தியது இதற்குத்தானே...
நமது நண்பர்கள் நேற்றும் வந்த விளம்பரம் கண்டு அந்த திரை அரங்குகளுக்கு சென்று பார்த்தால் ... வழக்கம்போல தானாம்!!! சத்தியம்- studio 5 - sat, sun - காலை காட்சி மட்டும், சாய் சாந்தி, மாயாஜால் ஆகிய அரங்குகளில் படத்தை எடுத்துவிட்டு பேபி ஆல்பர்ட் - 1 காட்சி மட்டும் ஓட்டுகிறார்கள் என தெரிவித்தனர்... நாம் ஏற்கனவே கூறியது போன்றே இந்த தடவையும் ஓடாத அரங்குகளை விளம்பரம் செய்துள்ளனர்...இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ... தம்மை மேலும் மேலும் இழிவு படுத்தி கொள்கின்றனர் எனவும் தெரியவில்லை...
அன்பு சகோதரர் திரு. சுஹாராம் அவர்கள் அறிவது :
எனது நண்பர்கள் சிலரும், தாங்கள் கூறியது போலவே, செய்தித்தாள் விளம்பரம் பார்த்து விட்டு, திரையரங்கிற்கு சென்று திரும்பி விட்டதாக தெரிவித்தனர். ரசிகர்களை ஏன் இப்படி செய்தித்தாள் விளம்பரத்தில் ஏமாற்றுகின்றனரோ என புலம்பி தீர்த்தனர்.
ஒரு ரூபாய்க்கு தினகரன் என்று ஆரம்பத்தில் விளம்பரம் செய்து விட்டு, அடுத்த சில மாதங்களிலேயே நாளிதழ் விலையை உயர்த்தி வாசகர்களை ஏமாற்றிய கும்பல் தற்போது சில பொய் செய்திகளை வாசகர்களுக்கு வழங்கி வருகிறது.
இன்றோடு போகட்டும் திருந்தி விடு ! உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பி விடு என்று நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் பாடியது இந்த கும்பலுக்காகவேதான் என்று எண்ணத் தோன்றுகிறது.