https://scontent.fyto1-1.fna.fbcdn.n...54&oe=5BD296B6
Printable View
nilla
31:07:2018
திருவிளையாடல் காவியத்தின் 54 ஆம் ஆண்டு துவக்கநாள் இன்று...
ஐம்பத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன என்பது சாதாரணம்... இன்னும் ஒரு யுகம் கடந்தாலும் சைவத்தின் புகழ்ப்பரப்ப செல்லுலாய்டில் இனியொரு திரைப்படம் இதுபோல் செதுக்கப்படப் போவதுமில்லை. செதுக்கினாலும்...அது இதைப்போல இருக்கப் போவதுமில்லை.
தமிழகத்தில் நாத்திகமும், ஆங்கில,இந்திப் படங்களின் மோகமும் தலைத்தூக்கியிருந்த சமயத்தில், ஆன்மிக, புராண படங்களெல்லாம் இனி தேறாது என் ஆருடம் சொல்லிக் கொண்டிருந்த காலக்க...ட்டத்தில் வெளியாகி வரலாற்று வெற்றியைத் தந்த படம்.
1965 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் அதிக வசூல் சாதனைப் படைத்தத் திரைக்காவியம் திருவிளையாடல்..
தமிழகத்தில் 13 அரங்குககளில் நூறு நாட்களைக் கடந்த ஒரே புராணப் படம். சென்னையில் திரையிட்ட மூன்று அரங்குகளிலும் வெள்ளிவிழா ஓடிய முதலும் கடைசியுமான ஒரே புராணப் படமும் இதுவே.
' சிவலீலலு' என்னும் பெயரில் தெலுங்கிலும், 'சிவலீலவிலாசா' என்று கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
1965 முதல் 1983 வரைக்குள், இலங்கை வானொலியில், 224 முறை இப்படத்தின் கதை வசனம் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a5&oe=5BD638E8
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...d2&oe=5C031124
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e7&oe=5BCEF68A
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e7&oe=5C136BB8
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...43&oe=5C04D1EC
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...4f&oe=5BC6825E
.................................................. .................................................. ..
வசூலில் ஒரு கோடி ரூபாய்களை பெற்ற முதல் தமிழ்படம் திருவிளையாடல்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a6&oe=5BC90CA4
Sundar Rajan
30 July
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே....
பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை
மலருமாம் குறிஞ்சி மலர்...
இப்போது மதுரையிலும் பன்னிரண்டாண்டுகளுக்கு பிறகு, என்றும் வாடா குறிஞ்...சி மலராம்... நடிகர்திலகத்தின் சவாலே சமாளி திரைப்படம்
ஆகஸ்டு 17 முதல் மதுரை சென்டரல் திரையரங்கில் வெளிவருகிறது.
நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வருகிறது, சவாலே சமாளி.
ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை தீர்க்க வருகிறார் நடிகர்திலகம்.
தயாராகுங்கள். அன்பு இதயங்களே,
தொடர்ந்து சென்ட்ரல் திரையரங்கில் சாதனை படைத்து வரும் நடிகர்திலகத்தின் திரைக்காவியங்களை வெளியிட்டு வரும்
தியேட்டர் நிர்வாகத்திற்கு நமது நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
மதுரையை கலக்கப் போகும்
சவாலே சமாளியின்அட்டகாசமான போஸ்டர்
உங்கள் பார்வைக்கு....