Darling of Kids!!
http://pbs.twimg.com/media/B0UGd4tCYAE0a38.jpg
Printable View
Darling of Kids!!
http://pbs.twimg.com/media/B0UGd4tCYAE0a38.jpg
SJ Surya in #koffeewithDD
Rajinikanth - Manirathnam combo was best in the past
Vijay- ARMurugadoss combo in present is mass
Jilla on prime time this Diwali and getting a television premiere on a Tamil channel 9 months after the release ( a rarity these days) ..another indicator that the film was definitely more successful than it was perceived to be or made to believe
Festival season prime times belongs to Vijay alone these days
Kuruvi ennaiku poduraanga??
Same day I guess
Rewind: Vijay outburst during Kavalan issue.
எப்போதும் இல்லாத வகையில் இடியாப்பச் சிக்கலில் இந்த முறை சிக்கினார் விஜய். 'காவலன்’ படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய அவர் நாள் குறித்தபோது, படத்துக்குச் சம்பந்தமே இல்லாத பல பேர் அதற்கு மாறி மாறித் தடை வாங்கக் குதித்தனர். கடன் வாங்கினார்... கதை மாற்றினார்... என்ற சிக்கல்கள் எல்லாம் தாண்டிய பிறகு, தியேட்டர்கள் கிடைக்காமல்... தேதி கொடுத்தவர்களும் திடீரென மறுத்து... பெட்டி வராத சோகத்தில் ரசிகன் தீக்குளிக்கப் போய், 'என்னைச் சுத்தி என்னதான்டா நடக்குது?’ என்று விஜய் திணறிய கடந்த இரண்டு வாரங்கள் பரபரப்பானவை. விஜய் ரசிகர்கள் வெளிப்படையாகக் கொந்தளிக்கிறார்கள். இளைய தளபதியை அரசியலுக்கு இழுக்காமல் விட மாட்டார்கள் என்பது உறுதி!விஜய்யும் அதே மூடில்தான் இருக்கிறார். நேரில் சந்தித்தபோது நெஞ்சம் திறந்தார்...''சரித்திரத்துல ஒரு சம்பவம் வரும். நம்முடைய மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவம் அது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் பயணம் போன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்’னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக அந்த பிளாட்ஃபார்ம்லதான் பிறந்தார்!தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளி னாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடைசூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது.அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?'' என்று தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தை மென்மையான வார்த்தைகளால் உச்சரிக்கும் விஜய் முகத்தில் தெரிவது புன்னகை அல்ல... பூகம்பம்!இதுவரை எந்தக் கேள்வி கேட்டாலும் பரீட்சை பேப்பரில், 'இரண்டு வரிகளுக்கு மிகாமல் பதில் அளிக்கவும்’ பாணியில் பதில் அளித்து வந்த விஜய், முதன்முறையாக அரசியல் காரம் கலந்து தன்னுடைய அடிமனசில் அழுந்திக்கிடந்த உண்மைகளைப் போட்டு உடைத்தார்!''காவலன் படத்தை ஆரம்பிக்கும்போது இப்படி எல்லாம் நடக்கும்னு நான் யோசிக்கலை. ரசிகர்கள் இந்தப் படத்தை எப்படி எடுத்துப்பாங்கங்கிற சந்தேகம் மட்டும்தான் என் மனசில் இருந்துச்சு. தொடர்ந்து ஆக்ஷன் படங்களாப் பார்த்தவங்க இதை எப்படி நினைப்பாங்கன்னு யோசிச்சேன். ஆனா, என்னுடைய எல்லா எதிர்பார்ப்பையும்தாண்டி, 'காவலன்’ படம் சூப்பர் சக்சஸ் ஆனதுக்காக முதல் நன்றி என்னுடைய ரசிகர்களுக்குத்தான் சொல்லணும்.அவங்களுக்கு நான் ஒரு உத்தரவாதமும் தர்றேன்... டிஷ்யூம் டிஷ்யூம் படங்களை இனிமேல் நான் தொடர்ந்து தர மாட்டேன். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில் ஒரு கேரக்டராக இருப்பதும் பெருமையான விஷயம்தான். இனிமேல் வருஷத்துக்கு ரெண்டு படங்கள் பண்ணுவேன். ஒண்ணு, கலகலன்னு 'காவலன்’ டைப். இன்னொண்ணு... ஜிவுஜிவுன்னு 'வேலாயுதம்’ மாதிரி ஆக்ஷன். 'வேலாயுதம்’ ரொம்ப வித்தியாசமானவன். ஒவ்வொரு காட்சியிலும் சின்னச் சின்ன டிவிஸ்ட் படம் முழுக்க தொடர்ந்துகிட்டே இருக்கும். வில்லனை ஹீரோ எதுக்கு அடிக்கிறான், எப்படி அடிக்கிறான்கிற காரணம் ரொம்பப் புதுமையா இருக்கும். இந்த நாட்டுல வீழ்த்தப்பட வேண்டிய வில்லன்கள்தானே சார் அதிகம்'' என்று சிரிக்கிறார் விஜய் அர்த்தபூர்வமாக!பேச்சு, 'காவலன்’ ரிலீஸ் நேரத்துப் பிரச்னைகள் குறித்துத் திரும்பியது...''இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்’ படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்குப் பயங்கர ஷாக். தனிப் பட்ட மனிதரிடம் போய் என்னுடைய சூழ் நிலையைச் சொல்ல முடியாது.'காவலன்’ படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டுத் தெளிவாகத் திட்டம் போடுறதைப் புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து 'காவலன்’ படத் துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க.**அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது!வேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. 'காவலன்’ படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம். எல்லாத் தடைகளையும் மீறி மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க!''''முன்பெல்லாம், பொங்கல், தீபாவளி வந்தா... ஏழெட்டு ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாகும்.ஒவ்வொரு தியேட்டரும் திருவிழா மாதிரி இருக்கும். ஆனா, சமீப காலமா அப்படி ரிலீஸ் ஆகலையே... ஏன்?''''அதுக்கான காரணம், எல்லா ஹீரோக்களோட ரசிகர்களுக்கும் தெரியும். குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. 'நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்’னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் 'காவலன்’ வந்தான். மீண்டும் என்னுடைய ரசிகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்'' என்று அமைதியாகிறார் விஜய்!விஜய்க்குச் சில மாதங்களாகவே சிக்கல்கள். ஈரோட்டில் அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் மேடை ஏற, திடீரென்று போலீஸார் அனுமதி மறுத்தார்கள். பேட்டி அதைப்பற்றித் திரும்பியது!''சில மாதங்களுக்கு முன்னால் ஈரோட்டில் இருக்கும் என்னுடைய மக்கள் இயக்க ரசிகர்கள் முறைப்படி போலீஸிடம் அனுமதி வாங்கி, நல உதவிகள் கொடுக்கும் விழாவை ஏற்பாடு செஞ்சாங்க. கூட்டம்னா... கூட்டம். ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் என்னைப் பார்க்க ஆவலா இருக்காங்க. மேடைக்குப் போகக் கிளம்பிய**என்னை போலீஸார் தடுத்தாங்க. 'கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கு. மீறிப் போனா, உங்களோட உயிருக்கு நாங்க பாதுகாப்பு இல்லை’ன்னு கை விரிச்சாங்க. 'முறையா போலீஸ் பெர்மிஷன் வாங்கித்தானே ஃபங்ஷன் நடத்துறாங்க... திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’னு கேட்டேன். உடனே, செல்போனில் யார் யாரிடமோ மாறி மாறிப் பேசினாங்க. திரும்பி வந்து 'முடியவே முடியாது’ன்னு என்னைத் திருப்பி அனுப்பு வதிலேயே குறியா இருந்தாங்க. அதாவது, நான் மக்களைச் சந்திப்பது, ரசிகர்கள் என்னைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாகத் திரள்வதை எல்லாம் யாரோ விரும்பலைன்னு தெளிவாத் தெரிஞ்சது. என்னால எந்தப் பிரச்னையும் வரக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் திரும்பி வந்துட்டேன்'' என்று விஜய் பேசுவது ஒவ்வொன்றுமே, அவர் எவ்வளவு காயங்களோடு இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.''சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்’ ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், 'பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்திவெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? 'காவலன்’ படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே?இது எல்லாம் என் ரசிகர்களுக்குத் தெரியும். ரசிகர்களுடன் என்னை வாழவைக்கும் பொதுமக்களும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. குரோம்பேட்டை முதல் குக்கிராமம் வரை இந்தப் படம் ரிலீஸ் ஆகிறதுக்காக அனுபவிச்ச வேதனையும் சேர்த்து, என்னை நிறைய நிறைய யோசிக்க வைக்குது.அதனால, அடுத்தடுத்து நான் போக வேண்டிய பாதையை 'காவலன்’ ரிலீஸ் தீர்மானிச்சு இருக்கு. இனி மேல்தான் மனம் திறந்து பேசப்போற உண்மையான சினிமா ரிலீஸ் ஆகப் போகுது!'' என்றார் விஜய்!''அப்போ, இனி அரசியல்தான்?''''நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை.யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வர்றேன்.யாருக்கு எப்போ, எப்படி வெற்றி தோல்வியைக் கொடுக்கிறதுன்னு தீர்மானிக்கிறவன் கடவுள். சாதாரண மாமிச உடம்பு உள்ள எந்த மனித ஜென்மத்தாலும் இதைத் தடுக்க முடியாது. நான் உங்களிடம் சொன்னது என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம் இல்லை. இது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தின் ஆதங்கம். நான் சொல்லிட்டேன். நிறையப் பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க.சம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்குஎல்லாம் நான் கவலைப்படவே இல்லை!''
Fans to inaugurate a statue for Ilayathalapathy Vijay!
http://www.onlykollywood.com/wp-cont...-fans-copy.jpg
While statues for political leaders and freedom fighters have been making headlines across the length and breadth of the country, here is the latest fad where fans of Vijay have joined hands to install a statue for their icon in the city outskirts. The statue, reportedly constructed with a cost of over 1 lakh, will be inaugurated by fans around 11 am in the premises of Vetri theater, Chrompet.
As Kaththi is busy breaking box-office records on one end, fans are showcasing their love for the actor in a limitless manner on the other end. The statue has Vijay in his Vishwa Bhai get-up from Thalaivaa, a film which ran into political turmoil and eventually got delayed in Tamil Nadu to release. Vijay has also opened up in an award function about how closeThalaivaa is to his heart. And, this decision to choose this particular makeover is a fitting gesture from fans.
http://www.onlykollywood.com/fans-in...lapathy-vijay/
#Vijay will be visiting #coimbatore Hindustan Arts nd Science College on 27.10.14 for an event for Indian foundation.