MAKKAL THILAGAM - DEVIKA -1963
ANANDHA JOTHI
http://i39.tinypic.com/igyal2.png
MAKKAL THILAGAM - DEVIKA -1972
CALCUTTA - BHARATH AWARD FUNCTION
http://i40.tinypic.com/jpaamb.jpg
Printable View
MAKKAL THILAGAM - DEVIKA -1963
ANANDHA JOTHI
http://i39.tinypic.com/igyal2.png
MAKKAL THILAGAM - DEVIKA -1972
CALCUTTA - BHARATH AWARD FUNCTION
http://i40.tinypic.com/jpaamb.jpg
திமுக தலைவர் கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில் 17 அக்டோபர் 1972 அன்று உருவான கட்சி அதிமுக. தொடங்கியபோது, ரசிகர்கள்தான் எம்.ஜி.ஆரின் ஆதாரபலம். அடுத்தது, கலைஞர் எதிர்ப்பாளர்கள். திடீரென வந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர் புன்னகைக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.
திமுக ஊழல் கட்சி, கலைஞர் ஊழல் தலைவர் என்று முழங்கியபடிதான் மேடையேறினார் எம்ஜிஆர். திமுக அரசு மீதான ஊழல்புகார் பட்டியலையும் மத்திய அரசிடம் கொடுத்தார். அதுதான் பின்னாளில் திமுக அரசைக் கலைக்கவும் சர்க்காரியா விசாரணை கமிஷனை அமைக்கவும் பயன்பட்டது.
ஒட்டுமொத்த தேசமே இந்திராவின் எமர்ஜென்ஸியை எதிர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அதனைத் தீர்மானம் போட்டு வரவேற்ற கட்சி அதிமுக. அதுதான் இந்திரா காங்கிரஸையும் அதிமுகவையும் அரசியல் ரீதியாக இணைத்தது. 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் இந்திராவை வெறுத்து ஒதுக்கியபோது தமிழ்நாடு மட்டும் இந்திரா காந்திக்கு வெற்றிமாலை சூட்டியது. ஒரே காரணம், எம்ஜிஆர். எதிரியை முதல் ஆட்டத்திலேயே வீழ்த்திவிட்ட பெருமிதத்தோடு 1977 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார் எம்.ஜி.ஆர். இந்திரா காங்கிரஸை விலக்கிவிட்டு மார்க்சிஸ்டுகளைச் சேர்த்துக்கொண்டபோதும், ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.
ஆட்சி நிர்வாகத்தில் ஊழல், லஞ்சம் இருக்கக்கூடாது என்று சொல்லி அமைச்சர்களைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கே அனுமதி கொடுத்தார் எம்ஜிஆர். கட்சியின் கொள்கைத் திட்டத்தில் அறிவித்த ‘பொருளாதார இட ஒதுக்கீட்டை’ நிறைவேற்ற முயற்சி செய்தார். அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்களுக்குரிய சலுகைகளைப் பெறவேண்டும் என்றால் அவர்களுடைய ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருக்கவேண்டும். இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதன் தாக்கம் அடுத்துவந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. 24 இடங்களில் போட்டியிட்ட அதிமுக வென்ற இடங்கள் வெறும் இரண்டு மட்டுமே.
அதன் தொடர்ச்சியாக அதிமுக அரசு கலைக்கப்பட்டது. அதன் காரணமாக ஏற்பட்ட அனுதாப அலை மீண்டும் எம்.ஜி.ஆரை 1980ல் ஆட்சியில் அமர்த்தியது. மக்கள் ஆதரவு இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்த தருணம் அது. அதன் வெளிப்பாடாக வந்ததுதான் சத்துணவுத் திட்டம். ஏழைக்குழந்தைகளின் பசி துடைத்த அந்தத் திட்டம் புரட்சித்தலைவரை மக்கள் திலகமாக்கியது. ஜெயலலிதா அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் அது. அதிமுக என்ற கட்சி இன்னமும் உயிரோட்டத்துடனும் வெற்றி முகத்துடனும் இருப்பதற்கு இந்த இரு அறிமுகங்களும் ஒரு முக்கியக் காரணம்.
1983 ஜூலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை காரணமாக இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களோடு ஈழப்போராளி இயக்கத்தினரும் வந்தனர். இந்திய அரசு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்தது. மேலும், போராளி இயக்கங்களுக்கு இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறையின் உதவியுடன் ஆயுதப்பயிற்சி கொடுத்தது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சி யும் ஒவ்வொரு போராளி இயக்கத்தை ஆதரித்தன. யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எம்.ஜி.ஆருக்கு எழுந்தது. இறுதியில் விடுதலைப் புலிகளை அழைத்துப் பேசினார். முதல் கட்டமாக இரண்டு கோடி ரூபாய் நிதி கொடுத்து உற்சாகப்படுத்தினார். அதைக்கொண்டுதான் விடுதலைப்புலிகள் ஆரம்பகட்ட ஆயுதக்கொள்முதலைச் செய்தனர். ஈழத்தமிழர்கள் பிரச்னையை மிகவும் கரிசனத்தோடு பார்த்த தமிழ்நாட்டுத் தலைவர்களுள் எம்.ஜி.ஆர் முக்கியமானவர்.
கட்சியும் ஆட்சியும் ஒழுங்காக இயங்கிக்கொண்டு இருக்க, திடீரென எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டுசெல்லப்பட்டார் எம்.ஜி.ஆர். மீண்டும் உயிருடன் திரும்புவாரா என்ற கேள்வி தமிழ்நாட்டு மக்களை ஒருபக்கம் உலுக்கிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் படுகொலை செய்யப்பட்டார். நோயுற்ற எம்.ஜி.ஆருக்கும் கொல்லப்பட்ட இந்திராவுக்கும் ஆதரவாக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அனுதாப அலையை தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள இரண்டு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் முனைப்பு காட்டினர். 1984 மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் தேர்தல். அபாரவெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக முதல்வரானார் எம்.ஜி.ஆர்.
அப்போது ஈழத்தமிழர் விவகாரம் கொதிநிலையின் உச்சத்தில் இருந்தது. புலிகளுக்கு மீண்டும் நான்கு கோடி ரூபாய் கொடுத்தார். இன்றளவும் ஈழத்தமிழர்கள் வீடுகளில் எம்.ஜி.ஆரின் புகைப்படம் இருப்பதற்கு இப்படியான உதவிகளே பிரதான காரணம்.
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவுசெய்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுடன் பேசி, ஒப்பந்தம் ஒன்றைத் தயார் செய்தார். ஆனால் அதனை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஏற்கவில்லை. பின்னர் நடந்த அரசியல் காய்நகர்த்தல்கள் காரணமாக, ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அரைமனத்துடன் ஏற்றுக்கொண்டார் பிரபாகரன். இலங்கையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் பாராட்டுவிழா நடத்தினார் எம்.ஜி.ஆர்.
1987 இறுதியில் உடல்நலம் குன்றிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு மீளவில்லை. எம்.ஜி.ஆரின் ஆளுமை செலுத்திய தாக்கத்தை சமூகம் அப்போது உணர்ந்துகொண்டது. மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததற்கும் இன்றளவும் மக்கள் மனத்தில் சிம்மாசனம் போட்டு எம்ஜிஆர் அமர்ந்திருப்பதற்கும் பின்னணியில் இருப்பது ஒரே காரணம்தான். மக்களின் நாடித்துடிப்பையும் ஆட்சியாளர்களின் நாடித்துடிப்பையும் துல்லியமாகக் கணிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. குழந்தைகளின் பசியைப் போக்க சத்துணவுத் திட்டம். பெரியவர்களின் வயிற்றையும் பாக்கெட்டையும் பாதிக்காத வகையில் குறைந்த விலையில் அரிசி. தமிழ்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவியபோது மத்திய அரசுக்கு எதிராகவே உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்குச் சென்றவர் எம்.ஜி.ஆர்.
அரசியல் ரீதியாக, மத்திய அரசுடன் இயன்றவரைக்கும் அனுசரித்துச் செல்லக்கூடியவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியுடன் நட்பு; மொரார்ஜியுடன் நேசம்; சரண் சிங்குடன் சமரசம்; ராஜீவ் காந்தியுடன் ராசி என்று எவரையும் பகைத்துக்கொள்ளாத, அதேசமயம் தன்னுடைய கௌரவத்தை விட்டுக்கொடுக்காத தலைவராக இருந்தார் எம்.ஜி.ஆர். அதுதான் அவரை அரசியல் ரீதியாக வெற்றிகரமான மனிதராக வைத்திருந்தது. அதுதான் அவர் உயிரோடு இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கட்டிலில் அசையாமல் அமர்ந்திருக்க உதவியது.
courtesy - admk netru indru naalai