http://i57.tinypic.com/2z9mu82.jpg
Printable View
நடிகர் திரு. சரத்குமார் விழா மேடையில் பேசும்போது.
http://i59.tinypic.com/33aqp2h.jpg
வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் பேசும்போது அருகில் ஜெயா டி.வி Vice President , திரு.சுரேஷ்(ஆனந்தா பிக்சர்ஸ்) , திரு. பி.ஆர்.ரவிசங்கர் , திரு. எம்.ஏ.முத்து
http://i60.tinypic.com/10wv63c.jpg
குடும்பம் வேறு,,, கட்சிவேறு...... புரட்சித்தலைவரின் செயலாக்கம்.
================================================== ================================================== ================================================== ========
நாட்டின் தலைமைப் பதவியிலிருக்கும்போது தன் சுற்றங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதற்கு பெருந்தலைவர் காமராஜர் ஒரு உத்தம உதாரணம் என்றால், அவரை தன் தலைவராகவே அறிவித்த புரட்சித் தலைவர் இன்னுமொரு சிறந்த உதாரணம்.
ஒரு கட்சியின் தலைமைத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்னுமொரு சிறந்த உதாரணம் அந்த தங்கத் தலைவன்.
இந்தக் கட்டுரையை எழுதியவர் மூத்த பத்திரிகையாளர் சோலை. புரட்சித்தலைவரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்தவர். தலைவருடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்தவர். அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி…
எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் சக்கரபாணி. தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர். அ.தி.மு.க. துவங்கிய காலத்தில் அவரும் பல பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார்.
அ.தி.மு.க.விற்கு அரசியல் திருப்புமுனை ஏற்படுத்தியது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல்தான். அதன் பிரச்சாரப் பணியிலும் பங்கு பெற்றார். மறைந்த பாலகுருவா ரெட்டியாரும், பரமனும்தான் அவரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது சென்னை லாயிட்ஸ் சாலையில் செயல்படும் அ.தி.மு.கழகத் தலைமைக் கட்டிடம் வி.என். ஜானகிக்குச் சொந்தம். அதனைக் கழகத்திற்காக எம்.ஜி.ஆர். எழுதி வாங்கினார்.
அந்தக் கட் டிடத்தின் பின்பகுதி யில்தான் ஆரம்பத்தில் அண்ணா நாளேட்டின் அலுவலகமும் அச்சகமும் செயல்பட்டன. அந்தக் கட்டிடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி எம்.ஜி. சக்கரபாணியின் இல்லம்.
ஒருநாள் அவருடைய பணியாளர் வந்தார். அய்யா அழைக்கிறார் என்றார். “அண்ணா’ அலுவலகத்திலிருந்து சென்றோம். தமது அருகிலிருந்தவர்களைப் பெரியவர் போகச் சொன்னார். எதிரே நாற்காலியில் அமரச் சொன்னார்.
“தம்பியிடம் நீங்கள் பேசவேண்டும்.”
தம்பி என்றால் எம்.ஜி.ஆர்.
“ஏன்? உங்கள் மீது உங்கள் தம்பி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்களே பேசலாமே?” என்று சிரித்துக்கொண்டே சொன்னோம்.
“இந்த விஷயத்தை நான் பேச முடியாது. நீங்கள்தான் பேசவேண்டும்” என்றார்.
“சரி.”
சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று குரலை இறக்கி, “”என்னை கழகப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கச் சொல்லுங்கள்” என்றார். அப்போதைக்கு அவருடைய கோரிக்கை நியாயமானதாகத்தான் தெரிந்தது. தம்பியிடம் அண்ணன் இமாலய வரம் கேட்டு விட்டாரா?
விடைபெற்றோம். அறை வாசல்வரை வந்தார். “சோலை, தம்பி நல்ல மூடில் இருக்கும்போது பார்த்துப் பேசுங்கள்” என்றார். ஒரு வெண்கலச் சிரிப்பு.
கழகத்தில் அவர் மாநில அளவில் ஒரு பதவி கேட்கவில்லை. செயலாளர் பதவி கேட்கவில்லை. கழகத்தை மண்டலங்களாகப் பிரிக்கச் சொல்ல வில்லை. அதில் தன்னை ஒரு மண்டலத்திற்கு அதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை. ஐநூறுக்கு மேற்பட்டோர் இடம்பெறும் மாநிலப் பொதுக்குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமிக்கச் சொன்னார்.
அடுத்த சில தினங்களில் ஆற்காடு சாலை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தோம். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். உரையாட லுக்கு நடுவே, “பெரியவர் அழைத்தார்” என்றோம்.
“என்ன?”
“அவருக்கு ஒரு பெரிய ஆசை.”
“என்ன?”
சற்றுத் தயங்கினோம். துணிச்சலை வரவழைத்துக்கொண்டோம்.
“அவரும் கழகப் பணி செய்ய விரும்புகிறார். அதற்கு அங்கீகாரமாக பொதுக்குழு உறுப்பினர் பதவி மீது அவருக்கு ஆர்வம்” என்றோம்.
அவரது பொன்மேனியில் நூறு மைல் வேக ரத்த ஓட்டம். முகம் சிவந்தது.
“இல்லை. அதாவது… வந்து…” என்று இழுத்தோம். அதற்கு மேல் நா அசையவில்லை. சத்தியாக்கிரகம் செய்தது.
“சும்மா இருக்கமாட்டீர்களா?” -கோபத்தோடு கேட்டார். நமக்கு சப்தநாடியும் தந்தி அடித்து அடங்கிவிட்டது.
எம்.ஜி.ஆருக்கு இயற்கை அளித்தது கொடுத்துச் சிவந்த கரங்கள். உண்மை. ஆனால் உடன்பிறந்த அண்ணனை கழகப் பொதுக்குழுவில் ஒரு உறுப்பினராகக் கூட நியமிக்க மறுத்துவிட்டார். அண்ணனுக்குக் கனவில் பூத்த மலரும் கருகிப் போய்விட்டது.
“துரைக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.”
நாம் விடைபெறும்போது எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னார்.
துரை அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய விசுவாசி.
துரையும் நாமும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்து கொண்டிருந்தோம்.
அடுத்த நாள் எம்மை துரையே அழைத்தார். “தலைவர் தங்களிடம் தனியாக ஒரு தகவல் சொல்லச் சொன்னார்” என்றார்.
ஏறிட்டுப் பார்த்தோம்.
“இனிமேல் பெரியவரை (எம்.ஜி.சக்கரபாணியை) யாரும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தலைவர் சொல்லச் சொன்னார். இது தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவலாக இருக்க வேண்டும் என்றும் தலைவர் சொல்லச் சொன்னார்” என்றார் துரை.
அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். அழைத்தார். நீண்ட கலந்துரையாடல். விடை பெறும்போது அவர் சொன்னார்.
“சோலை… நான் அரசியலில் இருக்கும்போது அவரும் (எம்.ஜி.சக்கரபாணியும்) இருக்க வேண்டுமா? உலகம் என்ன சொல்லும்? அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்களா?” என்றார்.
மெய்சிலிர்த்துப் போனோம். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.
அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒரு காய் நகர்த்தினால் எதிரி எப்படி காய் நகர்த்துவார் என்பதனை அவர் சிந்தித்தே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார்.
“அண்ணா விரும்பியிருந்தால் தனது வளர்ப்பு மகனை அரசியலில் அறிமுகம் செய்திருக்க முடியாதா? அந்தப் பையன்கள் உழைத்து முன்னேறுவது வேறு. திணிப்பது வேறு” என்று விளக்கம் தந்தார்.
அதே சமயத்தில் அண்ணனை மதிக்கத் தெரிந்த இன்னொரு எம்.ஜி.ஆரையும் பார்த்தோம். அவர் முதல்வராகப் பதவியேற்றார். அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அண்ணன் சக்கரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்க அனைத்து அமைச்சர்களுடன் வந்தார்!
http://i62.tinypic.com/6iy1pz.jpg
துயரச் செய்தி.
----------------------
http://i61.tinypic.com/295eakh.jpg
சென்னை புளியந்தோப்பில் வசித்து வந்த திரு.சாலமன்
(வயது 52 ) என்கிற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்
நேற்று இரவு சாலையில் மின்சாரம் தாக்கி (மேகலா திரை அரங்கு அருகில் -பலத்த மழை காரணமாக ) உயிரிழந்தார்.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த
ரசிகர்கள் / பக்தர்கள் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அன்னாரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
திரு. சாலமன் அவர்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் எந்த அரங்கினில் திரையிட்டாலும் , ஓடி வந்து
இரவு பகல் பாராமல் கொடிகள் , பேனர்கள் அமைப்பதில்
பேருதவி புரிந்தவர். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு
மட்டுமில்லாமல் , புரட்சி தலைவர் புகழ் பரப்பும் பணியில்
ஈடுபட்டுள்ள அவரது அமைப்பிற்கும் பேரிழப்பாகும் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய , புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அனைவரின் சார்பாகவும்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ஆர். லோகநாதன்.
இணை -செயலாளர் ,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்.
துயரச் செய்தி.
-----------------------
திரு.சங்கர் (சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர் )
அவர்களின் தாயார், சென்னை முகப்பேரில் , நேற்று (05/09/2014), காலை இயற்கை எய்தினார்.
அன்னாருக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தாயை இழந்து வாடும் திரு. சங்கருக்கு ஆறுதல் கூறினர் .
சங்கரின் தாயார் ஆத்மா சாந்தி அடைய , அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
திரு. சங்கர் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் , திரைப்பட நிகழ்ச்சிகள் , கலை நிகழ்ச்சிகளில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர் . பாராட்டுக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர். லோகநாதன் ,
இணை செயலாளர்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.
பள்ளியிலே பாடம்சொன்ன வாத்தியா ருண்டு - நீ
பாட்டுப்பாடி கத்துத்தந்த வாத்தியா ரய்யா!
அள்ளியமு தூட்டிசிறு பிள்ளை களுக்கே - பசி
அண்டாது காத்தாயுந்தன் அட்சயக் கையால்!
http://i60.tinypic.com/2czszeb.jpg