nadodi mannan celebration - chennai - albert- 2006
thanks krishna sir
Printable View
கிரேசி மோகன் - மலரும் நினைவுகள்
1984 என்று நினைக்கிறேன் .கிரேசி குழுவினருக்கு பாம்பே ஷண்முகானந்தா சபையில் நாடகம் போடும் வாய்ப்பு கிட்டியது .அன்நாளில் பாம்பேயில் நாடகம் போடுவதென்றால் மதராஸ் குழுக்களுக்கு அமரிக்காவில் போட அழைப்பு கிடைத்த அளவுக்கு பிரசித்தம் .அவர்கள் மேஜர் சுந்தர்ராஜன் போன்ற மேஜர் குழுக்களைத்தான் கூப்பிடுவார்கள் .மைனர் குழு எங்களுக்கு கிடைத்தது தெய்வாதீனமே .அந்த சமயம் பார்த்து எங்கள் லேடி-ஆர்டிஸ்ட் திருமணம் செய்து கொண்டு விலக, புதிதாக வேறு ஒரு நாயகி .சுந்தரத் தெலுங்கி .பார்க்க சுந்தரம்(அழகு) .பேச்சு அவந்தரம் .அவளுக்கு வீடியோ பிரமாதம் .ஆடியோ அபத்தம் .
நாடகத்திற்கு 2 நாட்கள் முன்பு அவளுக்கு தமிழ் வசனம் ரிகர்சல் .கடைசி வரை மாதுவை தாய் பாஷையில் லேது என்றுதான் கூவிக் கொண்டிருந்தாள் .3000 பேர் அமரும் ஷண்முகானந்தாவில் ஒரு சிறுவன் மட்டும் அமர்ந்து எங்கள் ரிகர்ஸலை ரசித்துக் கொண்டிருந்தான் .குறிப்பாக அவன் குஷியாகி சிரித்தது , அந்த நாயகியின் மாது-லேது மாற்றத்திற்குத்தான் .அந்தச் சிறுவனின் தாய் பாஷை தெலுங்காம் அதனால்தானோ லேது மாது பன்னை(PUN) வெகுவாக ரசித்தான் .சாயங்காலம் தினமும் சூறாவளி கச்சேரி செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரத்யேகமாக(கிருஷ்ணருக்கு கீதை சொல்ல ஒரே ஒரு அர்ச்சுனன் கிடைத்தது போல) மேடை அலங்காரம் செய்து எங்கள் மேரேஜ் மேட் இன் சலூன் நாடகத்தைப் போட்டு அந்தக் குழந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம் .குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே .ஒருவேளை அந்தக் குழந்தையைக் கொண்டாடி, அதன் ஆசீர்வாதத்தைப் பெற்றதாலோ என்னவோ இன்று எங்கள் குழு தெய்வத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது (சாக்லேட் கிருஷ்ணா) .அந்த தெய்வக் குழந்தை யார் என்பதை கேசவ் சித்திரத்தில் காட்டியுள்ளார் .பார்க்க .கிரேசி மோகன் .
http://www.vallamai.com/wp-content/u...09/crazy23.jpg
crazy
MANDOLIN கேட்க மகாவிஷ்ணு வுக்காசை
ஆண்டவன் கட்டளை ஆதலால் -மாண்டலின்(அமரராகி)
ஆனாரே, வாசிக்கப் போனாரே வைகுண்டம்,
ஈநாடுக்(கு) இங்கே இழப்பு .கிரேசி மோகன் .
மலரும் மாண்டலின் நினைவுகள் ..
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாசன் .வைகுந்தத்தில் வாசித்து அவர் ஆத்மாவும் சாந்தி அடையும், அந்தப் பரமாத்மாவும் சாந்தி அடைவார் .
பின்குறிப்பு -எங்கள் ஜுராஸிக் பேபி நாடகத்தில், பிறந்த குழந்தை நர்ஸரி ரைம் பாடும் .அப்போது குழந்தையின் தந்தை மாது- என்ன ! அச்சப்பன் குழந்தை பாடறது .!
அச்சப்பன் -அவனுக்கு மாண்டலின் கத்துக் கொடுங்கோ .யார் கண்டா பிற்காலத்துல ஸ்ரீனிவாசன் மாதிரி பிராடிஜியா பிரபலம் ஆகலாம் .(பலத்த கைத்தட்டலோடு நாடகம் நிறைவு பெறும்) ..
கவிஞர் காவிரி மைந்தன்
மக்கள் திலகம் என்னும் அடைமொழி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கல்கண்டு தமிழ்வாணன் அவர்களால் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களின் மாபெரும் வெற்றிப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் கவிஞர் வாலி அவர்கள் என்பதை வரலாறு சொல்கிறது.
திரைப்படப் பாடலாசிரியர்கள் பல நூறு பேர்கள் வந்தாலும் தங்கள் தடங்களைப் பதித்துவிட்டுப் போனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை மட்டுமே காலம் இன்று கணக்கில் வைத்திருக்கிறது. ஏன்.. எப்படி.. எண்ணிப்பார்த்தால், திரைப்பாடல்கள் என்கிற வரையறைகளை வகுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையின் எல்லைகளை.. இன்ப துன்பங்களை பல்வேறு கூறுகளை.. அப்பாடல்களில் இலகுவாக பக்குவமாய் பதித்து வைத்திருப்பதே அடிப்படைக் காரணம் ஆகும் என்பது புலனாகும்.
குறிப்பாக, புரட்சித் நடிகர் பொன்மனச் செம்மல் என்கிற அடைமொழிகளைத் தாங்கிநின்ற சாதனை சரித்திரமம் எம்.ஜி.ஆர். என்கிற கதாநாயகனின் பாத்திரப் படைப்புகள் எல்லாம் மக்கள் மனதில் நிச்சயமாக, சத்தியமாக, பலமாக பெரியதோர் தாக்கத்தை உண்டாக்கும் வல்லமை வசனங்களைத் தாண்டி.. இது போன்ற பாடல்களின் மூலமே சாத்தியமாகும் என்பதை கவிஞர் வாலி அவர்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பல்வேறு பாடல்கள் சாட்சியம் கூறும். இதோ இவ்வரிசையில் நாளை நமதே திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் .. திரையில் இருமுறை மலரும் அன்பு மலர்களே.. நம்பி இருங்களேன். நாளை நமதே..
அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
நாளை நமதே, நாளை நமதே
வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது
நாளை நமதே நாளை நமதே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
படம் : நாளை நமதே (1974)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்
இத் திரைப்படம் பார்த்தபோது.. குறிப்பாக இந்தப் பாடலில் இந்த வரிகள் தந்த உற்சாகம், வைராக்கியம் ..
திரு. தர்மேந்திரா அவர்கள் இந்தியில் நடித்த யாதோங்கி பாரத் என்னும் இந்திப்படத்தின் தழுவல் இந்தப் படம் எனினும் பாடல்கள் மெல்லிசை மன்னரால் அதீதமானதவையாகவும் அற்புதமாகவும் மலர.. கவிதை இதழ்கள் விரிவது போல் பாடல் வரிகள் அமைத்தவர் கவிஞர் வாலி என்பதில் இருவேறு கருத்தில்லை.
நாளை நமதே இந்த நாளும் நமதே
http://antrukandamugam.files.wordpre...pg?w=593&h=451
வாசு சார் /எஸ்வி சார்
மேலே இருக்கும் படத்தில் சசிகுமார் உடன் இருக்கும் நடிகை நளினா நாளை நமதே திரை படத்தில் குழந்தைகளுக்கு ஆயாவாக தோன்றுவார் .. மக்கள் திலகமும் சந்திர மோகனும் பாடல் பாடி முடித்த உடன் இவர் முகத்தை காட்டுவார்கள் . கண்ணாடி போட்டு கொண்டு வயதான தோற்றத்தில் இருப்பார். பிறகு சகோதரர்கள் இணைந்த சந்தோஷத்தில் கண்ணாடியை கழட்டி துடைத்து கொள்வார் . அந்த புகைப்படம் இருந்தால் வெளியிடவும் .
மேலும் தியாகம் படத்தில் ஹரிக்ரிஷ்ணன் மகள் அன்னம்மாவாக வந்து வீ கே ராமசாமியிடம் கற்பை இழந்து பழியை நடிகர் திலகத்தின் மீது போடும் கதா பாத்திரம் இவரா ? ஹரிக்ரிஷ்ணன் அன்னம்மா அன்னம்மா என்று அலறும் நேரத்தில் ஹரி கிருஷ்ணன் ரசிகர்கள் விசில் அடிப்பார்கள் :)
சந்தோஷ சாம்ராஜ்ஜியமாய் இல்லம் துலங்கும்போது
இன்ப கீதங்களின் முழக்கம் இப்படித்தான் இருக்குமோ?
நட்சத்திர ஜன்னலில்..........
சூரிய வம்சம் திரைப்படத்திற்காக கவிஞர் மு.மேத்தா வரைந்த கவிதையிது! ஒரு கவிஞனின் ஒளிப்படைப்பு! உள்ளத்தில் தோய்ந்திருக்கும் கவிதை வெள்ளத்தின் உற்சாகப் பாய்ச்சல்!
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே கண்ணில் படுகின்றவற்றையெல்லாம் கட்டி இழுத்து வர கவிஞர்களால்தான் முடியும் என்கிற உண்மையை இப்பாடல் வரிகள் பறைசாற்றுகின்றன!
சந்தோஷ சாம்ராஜ்ஜியமாய் இல்லம் துலங்கும்போது இன்ப கீதங்களின் முழக்கம் இப்படித்தான் இருக்குமோ?
சிந்தனையில் இவர் தொடும் உயரங்களைப் பாருங்கள். இமயத்திற்கு பொன்னாடை போட்டுவிடலாம் என்கிறார். உற்சாகம் இறக்கைக் கட்டியல்லவா பறக்கிறது!
மென்மையான வார்த்தைப் பூக்கள் மலர்வதைப்போல் மலரச் செய்து இசையிலே துள்ளி குதிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.
ஓங்கும் உந்தன் கைகளால் வாழ்க்கையைப் புரட்டிப்போடு! புது வாழ்வாழ்வின் கீதம்பாடு!
நம்பிக்கைக்கான நங்கூரங்களைப் பாடலெங்கும் பரவியிருக்கிற கவிஞரின் சாதுர்யம் இவர் சூர்ய வம்சத்துகாரர் என்கிற ரகசியப் பதிவைத் தந்துவிடுகிறது!
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)
சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
வானம்பாடி வாழ்விலே
வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை
(நட்சத்திர..)
சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
சந்தமழை நம்மை நனைக்கும்
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் மீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)
படம்: சூர்யவம்சம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ, சுனந்தா
வரிகள்: மு. மேத்தா
http://www.youtube.com/watch?v=YYYtkQV3Ym0
http://www.ithayakkani.com/OpenFile?..._16_17_PM2.jpghttp://www.ithayakkani.com/OpenFile?..._16_17_PM1.jpg
உலகமெங்கும் நடன நிகழ்ச்சிகள் நடத்தி பெயர் பெற்ற, மும்பையிலிருந்த நடனக் கலைஞர் வாணி கணபதி, கமலுடன் நட்பு ஏற்பட்டு காதல் உண்டாகி இருவரும் 'மேல் நாட்டு மருமகள்' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பின் வாணி கணபதி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. 1978ல் மும்பையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமண வரவேற்புக்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சென்றிருந்தார். 'பிலிம்ஃபேர்' பத்திரிகை விருதுகள் வழங்கும் விழாவுக்கும் அவர் தான் சிறப்பு விருந்தினர்
திருமணத்திற்கு பின் கமல் நடிக்கும் படங்களில் வாணி கமல் தான் உடையலங்கார நிபுணர். அது கமல்ஹாசனின் பழைய படங்களைப் பார்த்தாலே தெரியும். சரிகா கமலின் வாழ்வில் நுழைந்த பின், வாணி காதல் கணவரிடமிருந்து பிரிய வேண்டியதாயிற்று. கமலும் பெரும்தொகை கொடுத்து விலகினார். பத்திரிகைகளில் கமல்- வாணி மோதல் பெரிதாகி, பின் அடங்கியது
நன்றி இதயக்கனி சினிமா இதழ்
தற்செயலாக 2 நாட்கள் முன் காலையில் தொ.காயில் ஜெயா பக்கம் போக, யாரது ? வாணி கமல் (??? கணபதி ) மாதிரி இருக்கு என்று நிதானிக்க, வாணியே தான். திரும்பிப் பார்கிறேன் நிகழ்ச்சி. கொஞ்சம் முடிந்து விட்டிருந்தது. 2 episode ல் இது இரெண்டாவது. வேலையை ஓரங்கட்டி விட்டு என்ன சொல்கிறார் என்று கவனித்தேன்.
வரிசையாக கமல் பாடல்கள். ரசித்து சொல்லிக் கொண்டு இருந்தார். எனக்கு ஆச்சர்யம். பேச்சில் எந்த தயக்கமும் இல்லை. அவர் கமலின் மனைவியாக இருந்த காலகட்டத்து படங்கள், அவர் ரசித்த காட்சிகள், கமலின் ரசனை, உழைப்பு, உடை என்று வெகு இயல்பாக இருந்ததது அவர் பேச்சு. எப்படி கமல் பற்றியே தொடர்ந்து பேசுகிறார் என்று நினைக்கும் போதே அவரே அதற்கு காரணமும் சொல்லி விட்டார்.
ஏன் கமல் பற்றியே சொல்லுகிறேன் என்றால், அந்த காலகட்டத்தில் அவரது costumes எல்லாமே நான் தான் வடிவமைத்தேன். அதனால் அந்த நினைவுகளே எனது பசுமையான நினைவுகள் என்று சொன்னார்.
அதனையும் சூப்பர் ஹிட் பாடல்கள். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நினைவோ ஒரு பறவை பாடலில் பயன்படுத்திய உடைகள் முக்கியமாக அந்த தொப்பி குறித்துப்பேசினார்.
பல வருடங்கள் கழித்து அந்த படம் ஹிந்தியில் ராஜேஷ் கன்னாவை வைத்து எடுத்த போது அந்த தொப்பிக்கு அலையோ அலைன்னு அலைஞ்சு கிடைக்காமல் கடைசியில் இவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதை ஒரு மிகவும் இனிமையான நினைவு என்று சந்தோஷமாக சொன்னார்.
சலங்கை ஒலியில் உடைக்கு கோபி கிருஷ்ணாவை வரவழைத்தது, மீசை எடுக்காமல் அந்த நடன getup அமைத்தது, சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலில் ஸ்ரீதேவி கமலின் பொருத்தம்(chemistry)ஏற்று நிறைய விஷயங்கள் சொன்னார். வாணியின் கண்களை படம் எடுத்து அதை வரைய வைத்து ஒரு முறை கமல் பரிசளித்து இருந்ததையும் அதை வெகு காலம் கழித்து ராஜ பார்வையில் மாதவியுடனான பாடலில் அந்த ஓவியத்தை கமல் கேட்டு வாங்கி பயன் படுத்தியதையும், இப்போதும் அந்த பரிசை தான் பத்திரமாக வைத்திருப்பதையும் அவர் சொன்ன போது ஏனோ எனக்கு சற்று மனம்கசிந்தது.
கமல் 50 விஜய் கொண்டாடியபோது யாரிடம் எல்லாமோ கருத்து கேட்டு ஒளி பரப்பினார்கள். கமலின் காதல் இளவரசு பட்டங்களுக்கு காரணமான பெரும்பான்மையான படங்களில் அவர் பெண்களின் ஆதர்ச நாயகனாக ஆண்களின் ரோல் மாடலாக மன்மதனாக வளைய வந்த படங்களின் costume design செய்த வாணியை எந்த கருத்தும் கேட்க வில்லையோ என்று நினைக்கத் தோன்றியது. ஒரே ஒரு படத்தில் கதாநாயகியாக கூட நடித்த நடிகைகள் கூட மேடையில் அங்கீகாரம் பெற்றிருந்தார்கள்.
thanks to vindya madem-may 2010
http://image6.buzzintown.com/files/e...-ganapathy.jpghttp://3.bp.blogspot.com/-DIiKhAMWG3...nth+Family.jpg