திரையில் மலர்ந்த நாவல்கள் - 3
அது ஒரு கிராமத்தில் வாழுகின்ற குடும்பம்.. பஞ்சாயத்துத் தலைவர் அப்பா , அம்மா. இரு மகள்கள் தேவி, சித்ரா.. தேவி இளையவள்..சித்ராவிற்கு அவளுடைய அத்தை பையன் உமாசங்கர் தான் என ஏற்கெனவே பெரியவ்ர்களால் முடிவு செய்யப் பட்ட விஷயம்..சூழ் நிலையில் தேவிக்கு ஒரு விபத்து நிகழ்ந்து அதனால் அவளுக்கு சற்றே முன்கூட்டி நடக்கப் போகிறவை தெரிய ஆரம்பிக்கின்றன..(உதாரணம்..ஒருவன் மாடு காணவில்லை எனச் சொல்ல அவன் கையை எதேச்சையாகத் தொட்ட தேவிக்குள் கொஞ்சம் அதிர்வு ஏற்பட அதான் அந்த வடகிழக்கு வயக்காட்டுப்பக்கம் இருக்குதே எனச் சொல்ல - சொன்னவன் தேடிப்பார்த்தால் மாடு தேவி சொன்ன இடத்திலேயே இருக்கிறது.. தன் வீட்டு வேலைக்காரியை ஒரு நாள் கோடீஸ்வரி என விளிக்கிறாள் தேவி..ஏன்மா என்றால் நீ தான் தங்கவளையல்கள் எல்லாம் போட்டுக்கொண்டு பட்டுப்புடவையில் பவனி வருவது போல த் தோணிச்சு என்கிறாள்.. மறு நாள் வேலைக்காரிக்கு லாட்டரியில் பத்து லட்சமோ என்னமோ எனறு விழுந்து விடுகிறது..) தேவி இருப்பது கிராமம்..எனில் தீயை விட வேகமாக விஷயம் பரவி எல்லோரும் அவளை த் தெய்வமெனப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்..
பட்டணத்தில் இன்னொரு பெண் ஜென்னி.. தேவியின் ஜெராக்ஸ்.. அவளுக்கு ஒரு லவ்வர்.. ஜோஸப்..வழக்கம் போல காதலுக்குப் பணக்காரத் தந்தை தாமஸ் ஒத்துக்கொள்ள வில்லை.. எனில் திருமணம்செய்து கொள்ளலாமென நினைக்கும் போது ஜென்னிக்கு அடிவயிற்றில் பிரளயமாய் ஒரு வலி உருக்கி உருக்கி வலிக்க அவள் அலறுகிறாள்.. ஜோஸப் டாக்டரிடமழைத்துச் சென்று காட்டுகையில் டாக்டர் கான்ஸரோ என்னவோஎன ஒரு கொடிய வியாதியின் பெயர் சொல்லி அவள் இருக்கப் போவது கொஞ்ச நாள் தான் என்கிறார்.. ஜென்னி தந்தையைப் பார்க்க வருகையில் தாமஸ் தான் அவளது வள்ர்ப்புத் தந்தை என்றும் ஒரிஜினல் தந்தை கிராமத்தில் இருக்கிறார் என்றும் இரட்டையரில் ஜென்னியைத் தானெடுத்து வந்ததாகவும் கூற கிராமத்தில் இருக்கும் தேவியைப்பார்க்க ஆசைப்பட்டுப் போனால்..
கிராமத்தில் தேவியின் நிலைமை மோசமாக இருக்கிறது.. காரணம் அவளே தான்.. விஷயமென்ன வென்றால் எல்லாரும் அம்மன் ரேஞ்சுக்கு அபிஷேக ஆராதனை செய்வதை பொறுக்கவொண்ணாத தேவி சில பல தப்புத்தப்பான ஹேஷ்யங்களைச் சொல்லி விடுகிறாள்..கிராமத்தினருக்கு நம்பிக்கை போய்விடுகிறது..கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என தேவி நினைக்கையில் அக்கா சித்ராவிற்கு அத்தை பையன் உமாசங்கர் வருகிறான்..வெளி நாடு போவதாகவும் உடனடியாக க் கல்யாணம் செய்யவேண்டுமென்றும் கூற தேவியின் பெற்றோருக்கு ஒரே மகிழ்ச்சி.. தேவிக்கும் மகிழ்ச்சி..அத்தானின் கைகுலுக்கப் பார்க்கையில் மறுபடியும் அவளுக்கு ஏற்படும் அதிர்வு ஏற்படுகிறது..
அதில் அத்தான் உமாஷங்கர் போகும் விமானம் தீப்பிடித்து எரிவதைப் பார்க்கிறாள் காட்சியாக.. தான் சொல்வதை எவரும் நம்ப மாட்டார்கள் எனத் தெரிந்ததால் கல்யாணத்தைத் தடுக்க நினைக்க அனைவரும் அவளைத்தப்பாக நினைத்து விடுகிறார்கள்.. அவள்- உமாஷங்கரை ஆசைப்படுவதாக நினைக்கிறார்கள்..விதி வலியதாகி உமாஷங்கர் கிளம்பிச் சென்ற பிறகு தான் தேவி தான் கண்ட கனவை..தனது உள அதிர்வுகள் சொன்னதை அக்காவிடம் சொல்கிறாள்..அக்கா அதிர்ந்து நிற்க ஃபோனும் வருகிறது..உமாஷங்கரின் மரணச்செய்தியைத் தாங்கி..அனைவரும் தேவியைக் குறை சொல்ல நொந்து போய் தேவி வெளியேறும் தருணம் ஜென்னியின் கார் அந்த வீட்டு வாசலில் வந்து நிற்கிறது..
தேவி ஜென்னி இருவரும் சந்திக்க ஜென்னி பெற்றோரைப் பார்த்து வருகிறேனெனச் சொல்லி உள் செல்ல - ஏற்கெனவே கோபத்தில் அவளை கன்னா பின்னாவென அடித்திருந்த அவள் அப்பா அவளிடம் மன்னிப்புக் கேட்க வர..ஜென்னி அவர்களைப்பார்த்த மகிழ்ச்சியிலேயே விழுந்து உயிர் விட எல்லோரும் தேவி என அலறி அழ,
வெளியில் இருக்கும் ஜோஸப் உள்ளே ஓட முயற்சிக்க தேவி தடுக்கிறாள்..என் ஜென்னீ என் ஜென்னீ எனப் புலம்புகிறான்.. அவனைத் தடுத்து சென்னை வந்தால் தாமஸ் மிக மரணப் படுக்கையில்.. எனில் தாமஸூக்காக ஜென்னியாக வாழ முடிவெடுக்கிறாள்.. ஜோஸப் எனக்கு என் ஜென்னி தான் நினைவு..அவள் மாதிரி நீ இருந்தாலும் உன்னை நினைக்க மாட்டேன்..தாமஸூக்காக நாம் சேர்ந்தே பிரிந்து இருப்போம் எனச் சொல்ல... நாவல் முடிகிறது (சொல்ல மறந்து விட்டேன்..தேவிக்கும் ஒரு காதலன் உண்டு..அவனும் அவளைத் தப்பாக நினைத்திருப்பான்..)
இது ராஜேந்திர குமார் எழுதி மாலை மதியில் வெளியான வணக்கத்த்க்குரிய காதலியே வின் சுருக்க்கம்.. இதுவே பின்னால் அதே தலைப்பில் படமாக வந்தது.. தேவி, ஜென்னியாக ஸ்ரீதேவி(வெகு இளமை) ஜோடிகளாக - முறையே விஜயகுமார், ரஜினிகாந்த். அப்பாவாக எஸ்வி சுப்பையா வேலைக்காரத் தம்பதிகளாக தேங்காய் சீனிவாசன் மனோரமா தாமஸாக அசோகன் தேவியின் அக்காவாக ஜெய்சித்ரா, தேவியின் அத்தானாக ஜெய்கணேஷ் என..
என்ன நாவலை அப்படியே படமாக்கி இருந்திருக்கலாம்..கதாசிரியர் சொன்னசம்பவங்களையே காட்டியிருக்கலாம்.. கொஞ்சம் மாற்றி, கடைசியில் ரஜினிகாந்த் தேவியான் ஸ்ரீதேவியை அவளது காதலன் விஜயகுமாருக்குக் கொடுப்பது போல முடித்திருந்தது விறுவிறுப்பான நாவல் படித்திருந்த எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாய்த் தான் இருந்தது..சுமாராக ஓடியது என நினைக்கிறேன்..
பாடல்கள் இரு பாடல்கள் ஓகே அடியேனைப்பாரம்மா அப்புறம் ஸ்விங்க் ஸ்விங்க் உனது ஊஞ்சல் நான்.. அந்த ஸ்ரீதேவி க்யூட்டியான ஊஞ்சலை இப்போ பார்ப்போம்...:)
https://youtu.be/q22B2uaJyfc