வாசு சார்
வெள்ளை ரோஜா திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் திலகம் ... அருமையான அபூர்வமான ஆனந்தமான நிழற்படம். மிக்க நன்றி...
Printable View
வாசு சார்
வெள்ளை ரோஜா திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் திலகம் ... அருமையான அபூர்வமான ஆனந்தமான நிழற்படம். மிக்க நன்றி...
தற்போது வெளிவந்துள்ள, ஆனந்த விகடன் தீபாவளி மலரில், நடிகர் திலகத்துடன் பணியாற்றிய நமக்கெல்லாம் மிகவும் பிடித்த இயக்குநர், சி.வி.ராஜேந்திரன் அவர்கள் நடிகர் திலகத்துடன் பணியாற்றிய 10 இயக்குநர்களைப் பற்றியும் அதில் நடிகர் திலகத்தை இயக்கிய அவர்களின் படங்களைப் பற்றியும் கூறியுள்ளார். முழுப் பக்கத்திற்கு நடிகர் திலகத்தின் அழகிய நிழற்படம் இடம் பெற்றுள்ளது.
அவசியம் வாங்கிப் படிக்கவும்.
டியர் ரவி
நடிகர் திலகத்துடன் நடித்த கதாநாயகி நடிகையரின் பாத்திரங்களைப் பற்றிய தங்கள் அலசல் அருமை. இதனை நம் வாசு சார் அவர்கள் மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொரு நடிகையின் கதாபாத்திரங்களைப் பற்றியும் நாயகியர் தொடரில் எழுதி வருகிறார். இன்னும் நிறைய வர உள்ளன.
On the one hand, I always remember this day as my favourite poet-laureate Kaviyarasu departed this day. In fact, me and my college mate went to his residence, waited in queue for hours and placed a wreath (made by us in college campus) on the body.
On the other hand, all of us remember this day as on this day in 1952, a Super Star was born thro' "Parasakthi".
Regards,
R. Parthasarathy
இன்று நடிப்பின் பிறந்த நாள்
கலையின் பிறந்த நாள்
ஆம் பராசக்தி இன் 61 ஆவது உதய தினம்
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஓய்.ஜி. மகேந்திரா
பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013,00:00 ist
என்றும் மனதில் நிலைத்து நிற்கும், பல அற்புதமான படங்களில், சிவாஜியோடு நடித்த பத்மினி. சிவாஜி மீது, மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர். அமெரிக்காவில் வசித்த அவர், சென்னைக்கு வந்திருந்த போது, அவரை சந்தித்து, "சிவாஜி பெயரில் அளிக்கப்படும் விருதை, நேரில் வந்து, பெற்றுக் கொள்ள வேண்டும்...' என்று, கேட்டுக் கொண்டேன்.
"நிச்சயமாக வருவேன். சிவாஜி பெயரில் இருக்கற விருது, எனக்கு கிடைப்பதென்றால், பெருமை தானே...' என்றார் பத்மினி. ஆனால், விதி, சதி செய்து விட்டது. நிகழ்ச்சி நடக்கும் ஒரு சில நாட்களுக்கு முன், அவருக்கு, திடீரென்று, உடல்நலம் மோசமாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஸ்ட்ரெச்சரில், அவரை அழைத்துச் செல்லும் போது, உடன் இருந்த நடிகை ஷோபனாவிடம், "என்னை சீக்கிரம் குணப்படுத்தி அனுப்ப சொல்லு. மகேந்திரன் என்னை கூப்பிட்டிருக்கான். சிவாஜி பேராலே விருது தந்து கவுரவிக்குறாங்க. கண்டிப்பாக நான் போகணும்...' என்று, பத்மினி கூறியுள்ளார். ஆனால், சிகிச்சை பயனளிக்காமல், அமரராகி விட்டார்.
பொதுவாக, திரைப் படங்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு, பத்மினியின் மகன் பிரேம் வருவதில்லை. ஆனால், தாயார் இறந்த சில தினங்களில், எங்கள் நிகழ்ச்சிக்கு வந்து, "என் தாயார், இந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று, ஆவலாக இருந்தார். இன்று, அவர் நம்முடன் இல்லை. அவர் சார்பில், நான் இந்த விருதை பெற்றுக் கொள்கிறேன்...' என்று குறிப்பிட்டார். உடல் நலம் மோசமாக இருந்த போதும், பத்மினி, நடிகர் திலகத்தின் மீது, வைத்திருந்த மரியாதை, பாசம், என்னை நெகிழ வைத்தது. "தன் உடல் நிலையை பற்றி கூட நினைக்காமல், உங்கள் விழாவை பற்றி, பப்பி அம்மா @பசிட்டிருந்தாங்க...' என்றார் ஷோபனா.
அன்னை இல்லத்தில், நடிகர் திலகத்தின் உடல், கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது.
கலை உலகமே, கண்ணீரோடு நின்றது. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கட்டுப்@பாட்டு வந்த நாகேஷை, நான் உள்ளே அழைத்துச் சென்@றன்.
சில நிமிடங்கள் மவுனமாக இருந்தவர், திடீரென்று, "சார்... என்ன சார் இப்படி செய்துட்டீங்க! டேய்... (என்னைப்பார்த்து) இவர் இல்லைன்னா, தருமி இல்லடா...' என்று சொல்லி, உணர்ச்சி வசப்பட்டு அழுதார். அதற்கு மேல், அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மெதுவாக வெளியே சென்றார்.
நடிகர் திலகத்துடன், பராசக்தி படத்திலிருந்து கூடவே நடித்து, நெருங்கி பழகிய, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், "ஷூட்டிங்கிற்கு, நான் லேட்டாக வரும் போதெல்லாம், "ராஜு, டயத்துக்கு வாயேன். சரியான நேரத்துக்கு வரணும்'ன்னு சொல்லுவேய்யா... இப்போ நான் டயத்துக்கு வந்திருக்கேன்யா. பாராட்ட நீ இல்லேய்யா...' என்று கதறினார்.
அவரோடு நடித்த எல்லா நடிகர், நடிகைகளுக்கும் அவரிடம், ஒரு ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும்.
காரணம், அவரோடு நடித்த, எந்த நடிகர், நடிகைகளை வேண்டு மானாலும் எடுத்துக்கொண்டால், அவர்களின் கலைப் பயணத்தில், மெகா வெற்றி பெற்ற மூன்று படங்கள் என்று எடுத்தால், அதில் சிவாஜியுடன் நடித்த ஒரு படம், கண்டிப்பாக இருக்கும். ஏன், சிலருக்கு இரண்டு படங்கள் கூட இருக்கலாம்.
தனக்கு மட்டும் பெயர் வந்தால் போதாது; கூட நடிக்கிறவங்களும் சமமாக பெயர் கிடைக்க @வண்டும், அப்போது தான் படம் நிற்கும் என்பதில், சிவாஜி எப்போதுமே தெளிவாக இருந்தார்.
கடந்த, 1960ல், சென்னை எழும்பூரில் உள்ள, டான் பாஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, நாங்கள் பாந்தியன் ரோடில் வசித்து வந்தோம். வீட்டுக்கு அருகே ஸ்கூல். என் தாயார் ஒய்.ஜி.பி., பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை ஆரம்பித்த நேரம். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், கட்டடம் இல்லாமல், கூரை போடப்பட்ட வகுப்பு அறைகள். பள்ளி ஆண்டு விழாவிற்கு, சிவாஜி கணேசன் வந்திருந்தார். அவர்தான் தலைமை. மாணவர்கள், பெற்றோர் எல்லாரும் பெஞ்ச்களிலும், தரையிலும் உட்கார்ந்திருந்தனர். நான் சிவாஜி சாரை, முதல் முறையாக அன்று தான் பார்த்தேன்.
என் தாயார், சிவாஜியை வரவேற்று பேசும்போது, "கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும் என்பர். எங்களுக்கு கூரை கூட இல்லை. தெய்வம் எவ்வளவு கொடுத்தாலும், மகிழ்ச்சியாக, நன்றியோடு பெற்றுக் கொள் வோம்...' என்றார்.
விழாவில், சிவாஜி பேசும்போது, "மொத்த ஸ்கூலுக்கும், கூரை போட முடியுமா என்று தெரியவில்லை. என்னால் முடிந்த, 10 ஆயிரம் ரூபாயை இந்தப் பள்ளி கட்டட நிதிக்கு, நன்கொடையாக அளிக்கிறேன். இந்தப் பள்ளி கண்டிப்பாக, பெரியதாக வளரும்...' என்று, வாழ்த்தினார். அவருடைய வாழ்த்து பலித்தது. இன்று, என் தாயார் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளி, பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.
தகுதியான காரியங்களுக்கு, நிறைய தர்மம் செய்வார் சிவாஜி. அவர் செய்யும் தர்ம காரியங்களை, கொடுக்கும் நன்கொடைகளை, விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. அதுதான் அவருடைய உண்மையான குணம்.
சிவாஜியின் தம்பி சண்முகத்தின் மகன் முரளி, எங்கள் பள்ளியில் தான் படித்தார். என் பெற்றோருக்கு, நெருக்கமாக இருந்தாலும், சிவாஜி என்றுமே ஸ்பெஷல் சலுகைகள் கேட்டதில்லை. என் தாயார் இந்த பள்ளியை, மிகுந்த கட்டுப்பாட்டோடு, ஒழுக்கமாக நடத்துகிறார் என்பதால், சிவாஜிக்கு, என் தாயார் மீது மிகுந்த மரியாதை உண்டு.
எப்போதாவது, மாணவர் சேர்க்கை பற்றி பேச வேண்டியிருந்தாலும், என்னிடமோ, அப்பாவிடமோ தான் பேசுவார். "டேய் உங்கப்பாவே, ராஷ்மியிடம் கேட்கிறதுக்கு, பயப்படுவாரு; நீ கேட்டு சொல்லு...' என்பார்.
எங்கள், "யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' குழு, வியட்நாம் வீடு சுந்தரத்தின் கதை வசனத்தில், மேடையேற்றிய நாடகம், "கண்ணன் வந்தான்!' அது தான் சிவாஜி, இரு வேடங்களில் நடித்த, கவுரவம் படம். அந்த நாடகத்தை, சிவாஜி ஒரே ஒரு முறை மட்டும் தான் பார்த்தார். பாரிஸ்டர் ரஜினிகாந்த் ரோலை, நாடகத்தில் செய்த என் தந்தையிடம், "ஒய்.ஜி.பி., நல்லா பண்ணியிருக்கே. ஆனால், இதை எங்க கொண்டு போகிறேன் பாரு...' என்றார் சிவாஜி.
"பாரிஸ்டர் ரஜினிகாந்த் ரோலை, நான் öŒ#து, ஜூனியர் வழக்கறிஞர் கண்ணன் ரோலுக்கு சிவகுமாரையோ, முத்துராமனையோ நடிக்க சொல்லலாம். "நீ கொஞ்சம் கம்மியாக நடி, அப்போ தான் பாரிஸ்டர் கேரக்டர் நிக்கும்'ன்னு கேட்க முடியுமா... அவங்க மனசு புண்படாது?... நானே இரண்டு பாத்திரங்களிலும் நடித்தால், கண்ணன் ரோலை, அன்டர் பிளே செய்வேன். பாரிஸ்டர் கேரக்டரை, ஞாபகத்தில் வைத்து நடிப்பேன். மொத்தத்தில் ஆடியன்ஸ் மனசுல, அந்த கேரக்டரும், படமும் நிற்கணும்...' என்றார். அவரது தொழில் பக்தியை நினைத்து, வியந்து போனேன்.
* ஜெயா "டிவி'யில் ஒளிப்பரப்பாகும், "ஆல்பம்' நிகழ்ச்சியில், நடிகர் பிரபு பேட்டி அளித்தார். சிவாஜி, பிரபு மற்றும் நான் மூவரும் இருந்த படத்தை, அவருக்கு காட்டி அதுபற்றி கேட்டனர். "என் தந்தையைப் பற்றிய விவரங்கள், அவரது நடிப்பு மற்றும் நடிப்பின் நுணுக்கங்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தயவு செய்து அண்ணன், "ஒய்.ஜி.மகேந்திராவை கேளுங்கள். எங்களுக்கு (ராம்குமார், பிரபு) தெரியாததையும், அவர் சொல்வார். எங்கள் குடும்பத்தில், மூத்த சகோதரர் ஒய்.ஜி.மகேந்திரா...' என்று, குறிப்பிட்டார்.
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரன்
பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013,00:00 ist
"கண்ணன் வந்தான்' நாடகத்திலும், கவுரவம் படத்திலும், மாதிரி கோர்ட் சீன் ஒன்று வரும். டிராமாவில், அந்த சீனில், நான் கிடையாது. ஆனால், படத்திற்கு அந்த காட்சி எடுக்கும் போது, "மகேந்திரனும் இந்த காட்சியில் இருக்கட்டும். அவனுக்கு டிராமா முழுவதும், மனப்பாடம். நாம ஏதாவது விட்டாலும், அவன் சொல்வான்...' என்றார் சிவாஜி.
சிவாஜி, தன் வாதத்தை முடிக்கும் போது, நீண்ட ஆங்கில வாக்கியத்தை, ஸ்டைலாக பேசி, "தட் இஸ் ஆல் யுவர் ஆனர்' என்று, முடித்தார். செட்டில் இருந்த அனைவரும், அவரது நடிப்பை, வசன உச்சரிப்பை வியந்து, மெய்மறந்து கை தட்டினர். சிவாஜி என்னை பார்த்தார். செட்டில் இருந்த நாகேஷûம், நானும் மகிழ்ச்சியை காட்ட வில்லை.
எங்கள் இருவரின் தோளிலும், கையை போட்டு, தனியாக அழைத்துச் சென்று, "நீங்க ரசிக்க மாட்டீங்களா?' என்று கேட்டார், கேலியாக.
"நீ சொல்லு' என்றார் நாகேஷ். "இல்ல... நீங்க சொல்லுங்க...' என்றேன் நான். சற்று தயக்கத்துடன், நாகேஷ் சொன்னார்: "கடைசியாக நீங்க பேசின டயலாக்கிலே, ஆங்கில உச்சரிப்பு, சரியாக இல்லை யென்று, நாங்க, "பீல்' பண்றோம்...' என்றார் நாகேஷ்.
எங்களை முறைத்துப் பார்த்தார் சிவாஜி. கவுரவம் படம் தான் எனக்கு, அவரோடு முதல் படம். இதுவே, முதலும், கடைசியுமான படம் ஆகிவிடுமோ, என்ற பயம் வந்து விட்டது.
"ஏன்டா... இதை சொல்லக் கூடாதா?
நான் என்ன கான்வென்ட்டிலா படிச்சேன்! இல்ல, இவங்க அம்மா (ராஷ்மி) எனக்கு பத்மா சேஷாத்ரி, பள்ளியிலே, "அட்மிஷன்' தந்தாங்களா? எனக்கு பழக்கத்துல வந்த, ஆங்கிலத்தை வைத்து பேசினேன்...' என்றார்.
ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டை கூப்பிட்டு, "இந்த ஷாட்டை, ரீ-டேக் செய்துடுப்பா...' என்றார்.
"அண்ணே, எந்தினா... நன்னாயிட்டு இருக்கு ஷாட்டு...' என்று, மலை யாளம் கலந்த தமிழில் அவர் சொன்னார்.
"என்னுடைய மூவ் மென்ட், நான் நடந்து வந்தது, சரியாக வர வில்லை என்று நினைக் கிறேன். ஒன் மோர் டேக் ப்ளீஸ்...' மீண்டும், அந்த காட்சியை நடித்து, எங்களை நோக்கி, "சரியா' என்கிற மாதிரி பார்த்தார்.
நாங்கள் இருவரும், "தம்ஸ் அப்' பாணியில், கட்டை விரலை உயர்த்தி காண்பித் தோம். 150 படங்களில் நடித்து, மாபெரும் நடிகர் என்று பெயர் வாங்கிய பின்னரும், ஒரு காட்சிக்கு தானே, மீண்டும், ரீ-டேக் கேட்டு நடிக்கும் நடிகரை, உலக அளவில், விரல் விட்டு எண்ணி விடலாம்.
இப்போது சொல்லுங்க, நான் சிவாஜி பித்தனாக இருப்பதில் தவறு இருக்கிறதா...?
அகில இந்திய சிவாஜி மன்றம், கடந்த ஜூலை மாதம், பாசமலர் டிரெயிலர் வெளியீட்டு விழா அழைப்பிதழில், என் பெயரை, "சிவாஜி பித்தன்' என்று போட்டிருந்தனர். நான் சிவாஜி பித்தன் தான் என்பதை, பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.
கவுரவம் படத்தின், முதல் நாள் படப்பிடிப்பு. இந்த காட்சி, டிராமாவில் இல்லாதது. அவருக்கு எல்லாமாக இருந்த மகன் போன்ற கண்ணன், அவரை விட்டு பிரிந்து போய் விடுகிறான். இந்நிலையில், அவர், தனக்கு தானே பேசிக் கொள்ளும் காட்சியை, முதலில் எடுத்தனர்.
சிவாஜி வசனங்களை நன்றாக பேசி நடித்தாலும்,"ஏண்டா... ஒரு கட்டபொம்மன், வியட்நாம் வீடு என்றால், பல முறை நடித்த நாடகம். என் கேரக்டர் முழுமையாக தெரியும். எடுத்த எடுப்பிலே, எந்த சீன் வேண்டுமானாலும் நடிக்கலாம். இந்த நாடகத்தை, நான் ஒரே முறை தான் பார்த்திருக்கிறேன். படத்தின் கிளைமேக்சுக்கு முன் வருகிற, ஹெவியான சீனை, முதல் ஷாட்டாக எடுக்குறீங்களே... கேரக்டரின் மூடு, பாவத்திற்குள் நான் வர வேண்டாமா? சிவாஜி கணேசன் என்றால், என்ன வேண்டுமென்றாலும் செய்து விடுவான்... அவன் தலையிலே, பாரத்தை போடலாம் என்று எடுக்குறீங்களா.... எடுங்க எடுங்க. இதை சவாலா எடுத்து, செய்து காண்பிக்கிறேன்...' என்றார்.
கவுரவம் பட ஷூட்டிங்கின் போது, சில நாட்கள், காலையில், பாரிஸ்டர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பர். மதியம், ஜூனியர் அட்வகேட் கண்ணன் வரும் காட்சிகளை எடுப்பர்.
காலையில்,மேக் - அப் போட போகும் போதே, சிவாஜி கம்பீரமாக, மிடுக்காக போவார். அப்போதிலிருந்தே, அந்த கேரக்டருக்குள் நுழைந்து விடுவார். அதே போல மதியம், மேக்-அப் போட போகும் போது அடக்கமாக, சாந்தமாக இருப்பார். இதை நாகேஷ் கவனித்து, என்னிடம் சொல்வார். நானும், அதை கவனித்து வியந்திருக்கிறேன்.
கவுரவம் படத்தில் வரும், "நீயும், நானுமா' பாடல் காட்சியில், இரு சிவாஜிகளும், அரச உடையில் வருவர்.
இங்கிலாந்து அரசர், ஐந்தாம் ஜார்ஜ் போன்ற தோற்றத்தில், சிவாஜி கம்பீரமாக இருப்பார். அந்த காஸ்ட்யூம் அவருக்கு மிகவும் பிடிக்கும். கவுரவம் படத்தின் விளம்பரங்களில், அந்த தோற்றம் நிறைய உபயோகிக்கப்பட்டது. "அன்னை இல்லம்' வீட்டில், மாடிப்படி ஏறுமிடத்தில், ஜார்ஜ் மன்னன் தோற்றத்திலுள்ள, அவரது, பெரிய படம் மாட்டப்பட்டிருக்கும்.
பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டரை எடுக்கும் போது மட்டும், சிவாஜியிடம், ஒரு தனி ஸ்டைல் இருக்கும். இடது கையால் ஒரு சொடுக்கு போட்டு, கேஸ் கட்டை எடுப்பார். பல பக்க வசனங்கள் சொல்ல முடியாத அர்த்தங்களை, அந்த, ஒரு சொடுக்கு, எடுத்துக் காட்டும்.
சென்ற நூற்றாண்டின், மிகச் சிறந்த அறிவாளி என்று, கருதப்படும் ராஜாஜி, சினிமா பார்ப்பதில், விருப்பம் இல்லாதவர். ஆனாலும், சம்பூர்ண ராமாயணம் படத்தை, அவரை பார்க்க வைத்தனர். அப்படத்தில், ஒரு சில காட்சியில், கவுரவ நடிகராக, பரதன் வேடத்தில், சிவாஜி நடித்திருப்பார். ராமன் காட்டுக்கு சென்றதும், வெறிச்சோடியிருக்கும் அயோத்தி நகரத்தின் காட்சி, தன் தாய் கைகேயியை, கோபித்துக் கொள்ளும் காட்சி, ராமரை கூப்பிட, காட்டுக்கு செல்லும் காட்சி என, சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும், படத்தில் சிவாஜியின், பரதன் பாத்திரம் தான் நிற்கும். படம் பார்த்த பின், ராஜாஜியிடம், படத்தை பற்றிய விமர்சனம் கேட்டனர்.
"பரதனுக்கு என் பாராட்டுகள்' என்று, ஒரே வரியில் கூறினார் ராஜாஜி. அவர், படத்தில், சிவாஜியை பார்க்கவில்லை. பரதனை மட்டும் தான் பார்த்திருக்கிறார்.
சென்னை கமலா தியேட்டர் அதிபர், காலம் சென்ற, வி.என் சிதம்பரம், சிவாஜியின் நெருங்கிய நண்பரும், ரசிகரும் ஆவார். நாங்கள் நடத்தும், சிவாஜி நினைவு நிகழ்ச்சிகளுக்கு, டிக்கெட் வாங்கி வந்து, பார்த்து, ரசிப்பார். அவர், சிவாஜியை, புட்டபர்த்தி அழைத்துச் சென்றார். புட்டபர்த்தி சென்ற போது, பொது நுழைவு வாசல் அருகே, சிறிது நேரம், அவர்களை உட்கார வைத்து, பின், அழைத்து சென்றனர். நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பிரத்யேக வழி வழியாக, உள்ளே செல்ல அனுமதிப்பர் என்று தான், சிதம்பரம் நினைத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை.
புட்டபர்த்தி சாய்பாபாவிடம், இருவரும் சென்ற போது, பாபா தெலுங்கில், "மெயின் நுழைவு வாயிலிலிருந்து, நடக்க வைத்து விட்டேனே என்று, கோபம் தானே உனக்கு... சிவாஜியின் நடிப்பில், ரொம்ப ரசிக்கத் தக்கது, அவருடைய நடை தான் என்று, எல்லாரும் சொன்னாங்க. எனக்கு உன் நடையை பார்க்கணும்ன்னு ஆசை. அதனாலதான், உன்னை இவ்வளவு தூரம் நடக்க வைத்தேன்...' என்றார். சிவாஜிக்கு, தெலுங்கு நன்றாக புரியும். பாபா சொன்னதைக் கேட்டு, நெகிழ்ந்து விட்டார்.
what an avtaar nadigar thilagam is !
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (16) மைனாவதி
(தொடர்-16)
http://i812.photobucket.com/albums/z...ps65deac4e.jpg
நடிகர் திலகத்தின் முதல் நாயகி பண்டரிபாய் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அந்த பண்டரிபாயின் தங்கைதான் இந்தத் தொடரின் நாயகி மைனாவதி. பெரும்பாலும் அதிக பரிச்சயம் இல்லாத நடிகை. ஆனால் கன்னடத் திரையுலகில் கோலோச்சியவர். தன் அக்காவின் சாயலை அப்படியே கொண்டவர். தலைவருடன் நடிக்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றவர். நடிகர் திலகத்தின் அபூர்வமான நாயகியர் லிஸ்ட்டில் சேருபவர்.
'சாந்தா சக்கு' என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் 1956 இல் 'பக்த விஜயா' என்ற கன்னடப் படத்தில் பெரிய ரோலில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் நடித்தார். கிட்டத்தட்ட 100 கன்னடப் படங்களுக்கு மேல் நடித்து சாதனை புரிந்தவர்.
பொம்மைக் கல்யாணம், குறவஞ்சி போன்ற படங்களில் தலைவருடன் இணைந்தவர்.
'பொம்மைக் கல்யாணம்' படத்தில் தலைவருடன் மைனாவதி
http://i812.photobucket.com/albums/z...psf62698c9.jpg
'பொம்மைக் கல்யாண'த்தின் நாயகி ஜமுனா. இரண்டாவது நாயகி மைனாவதி. நடிகர் திலகத்தின் முறைப்பெண் 'கண்ணம்மா' என்ற துடுக்குத்தனமான கேரக்டர். அத்தானைச் சுற்றி சுற்றி வரும் வேடம். சுறுசுறுப்பாகவும், துருதுருவென்றும் வெகுளித்தன வேடத்தை மைனாவதி நன்றாகவே செய்திருப்பார். குள்ளம் இவரது மைனஸ் பாய்ன்ட். குடும்பப்பாங்கான முக அமைப்பைக் கொண்டவர்.
தலைவருடன் கலகலப்பான 'ஆச வச்சேன்... ஆச வச்சேன்' பாடலில் (கிட்டத்தட்ட டூயட் போலத் தான்) கலக்குவார். தலைவர் இப்பாடலில் கொள்ளையோ கொள்ளை அழகு!
ஜமுனா வரதட்சணைக் கொடுமையால் மாமியார் சாந்தகுமாரியிடம் அவஸ்தைப்பட, முறைப் பெண்ணான மைனாவதியை தலைவருக்குக் கட்டி வைக்க சாந்தகுமாரி ப்ளான் போட, இறுதியில் எதுவும் நிறைவேறாமல் ஏமாந்து போகும் முறைப்பெண் பாத்திரம் மைனாவதிக்கு. அழுது வடியாமல் கல கலவென பண்ணியிருப்பது தனிச் சிறப்பு.
'பொம்மைக் கல்யாணம்' படத்தில் 'ஆச வச்சேன் ஆச வச்சேன்' என்று மைனாவதி தலைவர் மேல் ஆசை வைத்து பாடும் இளமைத் துள்ளல் பாடல். (இருவரும் என்ன ஒரு சுறுசுறுப்பு)
http://www.youtube.com/watch?v=NusuM...yer_detailpage
அடுத்து 1960-இல் வெளிவந்த 'குறவஞ்சி' படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி மெயின் ரோலில் நடித்திருந்தாலும் நடிகர் திலகத்தின் ஜோடியாக நடிக்கும் பொன்னான வாய்ப்பை மைனாவதி பெற்றார்.
'குறவஞ்சி' படத்தில் தலைவருடன் மைனாவதி
http://i812.photobucket.com/albums/z...ps83c033ff.jpg
'குறவஞ்சி' படத்தில் வித்தியாசமான கெட்-அப்பில் மைனாவதி
http://i812.photobucket.com/albums/z...ps093e7a45.jpg
படம் தொடங்கி முக்கால் மணி நேரத்திற்கு பின் 'பொன்னி' என்ற மீனவ குல பெண்ணாக மைனாவதி 'எந்நாளும் தண்ணியிலே எங்க பொழப்பு' என்ற பாடலில் அறிமுகமாவார். அந்த வேடமும் அவருக்கு மிகப் பொருத்தம்.
அரச குமாரியான சாவித்திரியின் காதலை நிராகரித்து 'பொன்னி' என்ற மீனவ மைனாவதியைக் காதலிப்பார் கதிரவனான நடிகர் திலகம்.
ஒரு கட்டத்தில் கொடுங்கோல் மன்னனின் ஆட்கள் மைனாவதியை கடற்கரையில் துரத்த அங்கே வரும் நடிகர் திலகம் மைனாவதியை காப்பாற்ற அவரை இழுத்துக் கொண்டு ஓடி ஒரு குகையினுள் ஒளிந்து கொள்வார். பல பாழடைந்த சிலைகளின் நடுவே இருவரும் நிற்கையில் நடிகர் திலகம் எதேச்சையாக குகை மேலிருந்து படர்ந்து தொங்கும் ஒரு கொடியைப் பிடித்து இழுக்க, குகையிலிருந்து இருவர் மேலும் வெண் புழுதியாகக் கொட்ட, அதையே சாதகமாக்கி வில்லன் ஆட்கள் தேடுகையில் அங்கிருக்கும் ஜோடி சிலைகளோடு சிலைகளாக புழுதியோடு நடிகர் திலகமும்,மைனாவதியும் போஸ் கொடுத்தபடி நின்று தப்பிக்கும் காட்சி ரசமானது. நல்ல கற்பனை.
இறுதியில் வில்லன்கள் இமயா (ஒ.ஏ.கே.தேவர்), முகாரி (வகாப் காஷ்மீரி) சூழ்ச்சியினால் மன்னன் ஆர்.பாலசுப்ரமணியம் தீர்ப்பின்படி நடிகர் திலகமும், மைனாவதியும் உயிரோடு கல்லறையில் புதைக்கப் படுவார்கள். அதில் நடிகர் திலகம் தப்பித்து மைனாவதியைக் காப்பாற்ற முயல, மைனாவதி கல்லறையிலேயே பிணமாகி விடுவது நெஞ்சை உருக்கும் காட்சி. மைனாவதியின் பிணத்தை மடியில் வைத்து நடிகர் திலகம் கதறுவது இன்னும் நெஞ்சை உருக்கும் காட்சி. மைனாவதி இந்தக் காட்சியில் பரிதாப ஓட்டுக்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார். இறுதிக் காட்சியில் நடிகர் திலகம் மைனாவதியின் சடலத்தை சோகத்துடன் தூக்கியபடி கடற்கரையை நோக்கி நடக்கும் காட்சி மனதை பிசையும் ஒரு அற்புதக் காட்சி.
'குறவஞ்சி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. மைனாவதியைத் தூக்கியபடி நம் மன்னவர்
http://i812.photobucket.com/albums/z...psc7fc3c39.jpg
இன்னொரு சிறப்பம்சம். 'குறவஞ்சி'யில் அக்காள் பண்டரிபாயும், (இமயாவின் (ஒ.ஏ.கே.தேவர்) மனைவி சித்ரா) தங்கை மைனாவதியும் இணைந்து நடித்திருப்பார்கள். ஆனால் இருவரும் சந்திக்கும் காட்சிகள் கிடையாது.
'குறவஞ்சி' படத்தில் 'காதல் கடல் கரையோரமே' பாடல்.
http://www.youtube.com/watch?v=vDdQaPzAHXI&feature=player_detailpage
முதுமையிலும், இளமையிலும்
http://www.chitraloka.com/images/images1/mynavathi.jpg
மைனாவதி 2012 ஆம் ஆண்டு தனது 78 ஆவது வயதில் மாரடைப்பால் பெங்களூருவில் உயிர் நீத்தார். சில கன்னட டெலிவிஷன் சீரியல்களில் மைனாவதி நடித்துள்ளார். 'நானே பாக்கியவதி' அனுராதா, அன்னபூர்ணா, அம்மா போன்ற சூப்பர் ஹிட் கன்னடப் படங்களில் நடித்துள்ளார். கன்னட உலகின் முடிசூடா நாயகர்கள் ராஜ் குமார், கல்யாண் குமார், உதயகுமார் ஆகியோருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர் நடித்த சில பிரபலமான தமிழ்ப் படங்கள்.
வண்ணக் கிளி
குலதெய்வம்.
ஆரவல்லி.
மைனாவதி நடிப்பில் 1957-இல் வெளியான 'ஆரவல்லி' என்ற படத்தில் மறக்க முடியாத ஜிக்கியின் குரலில் வாழ்நாளெல்லாம் நம்மைக் கட்டிப் போட்டு ஜென்ம ஜென்மத்துக்கும் கிறங்கடிக்கும் பாடல்
இப்பதிவின் சிறப்பு போனஸ் பாடலாக மைனாவதி அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலிப் பாடலாக இடம் பெறுகிறது.
ஆம்... இதோ!
'சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே'
http://www.youtube.com/watch?v=8T7u0n2aZu4&feature=player_detailpage
(நாயகியர் தொடருவர்)
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
வாசு சார்
நாயகியர் தொடர் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் தங்களுடைய கடுமையான உழைப்பின் பிரதிபலிப்பாக உள்ளது. இதில் எவ்வளவு சிரமம் உள்ளது என்பதையும் என்னால் யூகிக்க முடிகிறது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
மைனாவதி ... அதிகம் அறியப் படாதவரென்றாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர்களில் ஒருவர். குறவஞ்சியில் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய சிறந்த நடிப்பு பரிமளிக்கும். தாங்கள் குறிப்பிட்ட அந்தக் குகைக் காட்சியானாலும் சரி, க்ளைமாக்ஸ் காட்சியிலும் சரி ரசிகர்களின் நெஞ்சில் சட்டென்று இடம் பிடித்து விடுவார்.
ஆரவல்லி பாட்டு... அருமையான பின்னணி இசை, ஏ.எம்.ராஜா ஜிக்கியின் மயக்கும் குரல் ... மறக்க முடியாத தமிழ்ப் பாடல்களில் இதுவும் ஒன்று...
பாராட்டுக்கள்.
டியர் வாசுதேவன் சார்,
'நடிகர்திலகத்தின் திரை நாயகியர்' வரிசையில் அதிகம் பிரபலமில்லாத மைனாவதியைப் பற்றிய தொகுப்பு மிகவும் சுவை. இதுபோன்ற அபூர்வ நடிகர், நடிகையர் பற்றிய விவரங்களையும், காணொளிகளையும் தேடிப்பிடித்து சேகரிப்பது மிக மிக சிரமம். அதை செவ்வனே செய்திருக்கிறீர்கள். பொம்மைக்கல்யாணம் பார்த்ததில்லை.. குறவஞ்சியில் இவரது ரோல் நினைவிருக்கிறது. மோகனப்புன்னகை கிளைமாக்ஸ் பார்த்தபோது, இதேபோன்ற ஒரு காட்சியை நடிகர்திலகத்தின் இன்னொரு படத்தில் பார்த்ததுண்டே என்று யோசித்து யோசித்து பின்னர் அது குறவஞ்சி என்று கண்டுகொண்டேன்.
பாராட்டுக்கள்....