http://i62.tinypic.com/rrsc3q.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனருக்கு
மலர்மாலைகள் அணிவிக்கபட்டுள்ள காட்சி.
Printable View
http://i62.tinypic.com/rrsc3q.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனருக்கு
மலர்மாலைகள் அணிவிக்கபட்டுள்ள காட்சி.
http://i60.tinypic.com/oarzw0.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "திரைப்பட வசனகர்த்தா திரு.ஆர். கே. சண்முகம் , காரில் வந்திறங்கிய பின் ,நடக்க முடியாததால்
தூக்கி வரப்படும் காட்சி.
http://i57.tinypic.com/2cem914.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "பக்தர்கள் வைத்த பேனர்.
என் வீட்டு வரவேற்பறையில் எம்ஜிஆரின் படம்....!
என்வீட்டில் எந்த அரசியல்தலைவரின் படமும் கிடையாது. நடிகரின் படமும் இல்லை. சினிமா நடிகர்களைத் தெரியாத சிலர் என்னிடம் இந்த படத்தில் இருப்பவர் யார்? எனவும்..உங்க அண்ணனா எனக் கேட்டவர்களும் உண்டு.
என்னை விட வயதில் பெரியவர்கள் என்ன ஒரு College teacher-ன் வீட்டில் சினிமா நடிகரின் படமா என முகம் சுளித்தவர்கள் உண்டு. எங்க குடும்பத்தில் பலர் சிவாஜி கணேசனின் ரசிகர்கள். என் வீட்டில் இருக்கும் எம். ஜி.ஆரின் படத்தை அங்கிருந்து வேறு எங்காவது மறைவாக வைத்துவிட்டுப் போனவர்களும் உண்டு. என் மனைவியே அதை எடுத்து மறைத்து வைத்து விடுவாள். ஆனால் நான் திரும்பவும் அந்தப் படத்தை எடுத்து இருக்கும் இடத்தில் வைத்து விடுவேன்.
நானும் சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசிப்பேன். பாட்டுக்காக எம்ஜிஆர் படம் பார்ப்பேன். நான் பார்த்த உலகம் சுற்றும் வாலிபன் படம் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினேன். நான் ரசித்ததால் அது எனக்கு பிடித்த படமாய் இருந்ததால் அவ்வாறு பேசினேன். நான் பேசிய இடம் சென்னையில் உள்ள என் உறவினர் ஒருவரின் வீட்டில். அப்பொழுது அதனை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஆட்டோ ட்ரைவர். பெயர் கேசவன். அவர் ஆங்கிலம் பேச விரும்பி இண்டியன் எக்ஸ்பிரஸ் படிக்கக் கூடியவர். நான் சென்னையில் இருக்கும் போதெல்லாம் அவருடைய ஆட்டோவில் தான் எல்லா இடங்களுக்கும் போவேன்.
2004-ல் எனது மகளின் திருமணவிழாவிற்கு கேசவனுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தேன். சென்னையில் இருந்து அவ்வளவு தூரம் செலவு செய்து வருவார் என நினைக்கவே இல்லை. நான் சற்றும் எதிர் பார்க்காமல் வந்தார். அவர் சார்,“ உங்களுக்கு என் அன்பு பரிசு. கலர் ஸெராக்ஸ் எடுத்தேன் ரெண்டு . ஒன்றை நான் என் வீட்டில் வைத்திருக்கிறேன்.” என்று சொல்லி தந்த படம் தான் எம்ஜிஆர் போட்டொ.
கேசவனின் அன்பினை மதிப்பதற்காக இன்றும் என் வீட்டு Hall-ஐ அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.எத்தனை கோடி உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார் எம்ஜிஆர்,அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் .
எனக்கு அவரையும் பிடிக்கும்.
courtesy - kesavan -net
சின்ன வயதில் அதாவது பள்ளிக்கூடம் செல்லும் நாளிலிருந்து நான் எம்ஜிஆர் ரசிகன். தீவிரமான ரசிகன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. கல்லூரிக்கு சென்ற பின்னர் விவரம் தெரிந்த பின்புதான் சிவாஜி,ஜெமினி, நடித்த படங்களை பார்த்தேன்.
அப்போதெல்லாம் ரசிகர்களில் சிலர் படம் வெளியான,முதல் நாளே,முதல் காட்சியை பார்த்து விட்டு ஏதோ வீர தீர செயலை செய்தது போல பெருமையாக சொல்லுவார்கள்.அவர்கள் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்று தோன்றும்.உடனே அவர்கள் தாங்கள் வாங்கிய சினிமா தியேட்டரின் டிக்கட்டை எடுத்து காண்பிப்பார்கள்.அல்லது தியேட்டரில் மட்டுமே விற்கப்படும் பாட்டு புத்தகத்தை எடுத்து நீட்டுவார்கள். இன்னும் சில ரசிகர்கள் தெருவில் உள்ள மன்றத்திலேயே பழியாக கிடப்பார்கள்..எம்ஜிஆர் படங்கள் ரிலீசாகும் தினம் மன்றத்தை அலங்கரிப்பது, மன்றத்திலிருந்து படம் வெளிவந்த தியேட்டர் வரை ஊர்வலமாக செல்வது என்று ரொம்பவும் அமர்க்களப் படுத்துவார்கள். இதனால் பள்ளிப் படிப்பை கோட்டை விட்டவர்களும் உண்டு.
அப்போது எம்ஜிஆர்- சிவாஜி இருவரும் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த நேரம். இரண்டு பேருக்குமே ஏராளமான ரசிகர்கள். தி.மு.கவில் எம்ஜிஆர் என்றால் காங்கிரஸில் சிவாஜி. இருவரது ரசிகர்களும் அப்படியே இருந்தார்கள். எம்ஜிஆர் மன்றத்திற்கு அருகிலோ அல்லது எதிரிலோ., சிவாஜி ரசிகர் மன்றம் இருக்கும். இதனால் இரண்டு மன்ற ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் வந்து போகும்.
எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் சிவாஜிக்கும், சிவாஜிக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் எம்ஜிஆருக்கும் நடித்தார்கள். இருந்தாலும் எம்ஜிஆர்-சரோஜாதேவி, சிவாஜி-பத்மினி, ஜெமினி-சாவித்திரி ஜோடிகள் அப்போது பிரசித்தம்.ஜெமினியும் சாவித்திரியும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகி விட்டனர். அதிலும் எம்ஜிஆர் ரசிகர்கள் சரோஜாதேவியை சொந்த அண்ணியாகவே நினைத்தனர்.அப்போது அந்தநேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் இளைஞர்களாக இருந்ததும் ஒரு காரணம். அதற்கு தகுந்தாற் போல எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நெருங்கி நடித்தனர்.
”காவேரி கரை இருக்கு கரைமேலே பூவிருக்கு” (தாய் சொல்லை தட்டாதே), “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்”(அன்பே வா),
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (எஙக வீட்டுப் பிள்ளை),”ஏதோ ஏதோ ஒரு மயக்கம்”(குடும்ப தலைவன்),”தொட்டு விடத் தொட்டு விட தொடரும்”(தர்மம் தலை காக்கும்),”அன்று வந்ததும் இதே நிலா”இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு”(நீதிக்குப் பின் பாசம்),”தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்” (படகோட்டி), ”ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரை பந்தலிட்டு” (பணத்தோட்டம்), ””கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”(பறக்கும் பாவை),”ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்”(தெய்வத்தாய்),- என்று எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் பாடல்களை பாடிக்கொண்டே போகலாம்.
courtesy -net
http://i59.tinypic.com/102ts08.jpg
மதுரை - வண்டியூர் - பழனிமுருகன் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் ''புதிய பூமி '' தற்போது நடை பெற்று கொண்டு வருகிறது . 27.6.1968ல் வந்த மக்கள் திலகத்தின் புதிய பூமி படம் 46 ஆண்டுகள்நிறைவு நாளில் இப்படம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
http://i62.tinypic.com/rr5jm8.jpg
திருவளர்கள்:சங்கர் , பாண்டியராஜன் , கோபால், லோகநாதன் ,பாண்டியன் ,கணேசன், ஹயாத், செல்வகுமார்,மனோகரன், பெருமாள், சந்திரசேகர் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/2uogk0y.jpg
சுப்பிரமணி, ரமேஷ், பி.ஜி.சேகர்,நந்தா,குமார் ,நசீர் ,கோவை பெரியநாயகி ,
வக்கீல் மோகன்குமார் , ஹயாத் , லோகநாதன் , பாண்டியராஜ் ,கணேசன் ,
வெள்ளையன் , இளங்கோ மற்றும் பலர்
http://i58.tinypic.com/ixgnya.jpg
இளங்கோ , லோகநாதன், நசீர் , ஹயாத் , பி.ஜி.சேகர் , வக்கீல்
மோகன்குமார் , சேகர் (அபொல்லோ மார்கெடிங் ).ஆகியோர்.
http://i62.tinypic.com/fp8bkg.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் , திரு.பி.வாசு, திரு.சொக்கலிங்கம்.