நீ ஒரு செல்லப் பிள்ளை எனக்கும் பிடிக்கும் க்ருஷ்ணாஜி :)
ம்ம் யூட்யூபில்காலங்களில் அவள் வசந்தம் பாடல் கேட்டேன்.. முதன் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது, மணமகளே உன் மணவறைக் கோலம் - அனலைஸ் செய்தாகிவிட்ட்தா..
Printable View
நீ ஒரு செல்லப் பிள்ளை எனக்கும் பிடிக்கும் க்ருஷ்ணாஜி :)
ம்ம் யூட்யூபில்காலங்களில் அவள் வசந்தம் பாடல் கேட்டேன்.. முதன் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது, மணமகளே உன் மணவறைக் கோலம் - அனலைஸ் செய்தாகிவிட்ட்தா..
நூற்றுக்கு நூறில் கமல் ஆ.. நினைவில்லையே.ஒரு வேளை விதவை ஜெயந்தியின் மகளின் காதலரா..அல்லது மகனா
.கண்ணா நலமா பார்த்ததில்லை க்ருஷ்ணா சார்..
http://3.bp.blogspot.com/-OL7YSKeZIG...__1821605f.jpg
எண்பதுகள் காலப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு "அபஸ்வரம்" ராம்ஜி அவர்கள் குறித்துப் பரவலான அறிமுகம் இருக்கும். திரையிசைப்பாடல்களை அரங்கேற்றும் பிரபல மெல்லிசைக் குழுக்களுள் இவருடைய அபஸ்வரம் குழுவும் வெகுஜன அந்தஸ்தைப் பெற்றிருந்தது
இசைத்துறையில் கடந்த நாற்பது வருடங்களாக இயங்கி வரும் அபஸ்வரம் ராம்ஜி அவர்கள், இப்போது அபஸ்வரம் என்ற இசைக்குழுவை நிறுத்தி வைத்து "இசை மழலை" எனும் புது வடிவ மேடை இசை நிகழ்ச்சிகளை இயக்கி வருகின்றார்.ஏப்ரல் 1, 1976 ஆம் ஆண்டு முட்டாள் தினத்தில் "அபஸ்வரம் இசைக்குழு ஆரம்பித்த அந்த நாளில் காதில் அடைத்துக் கொள்ளப் பஞ்சும், இடைவேளையின் போது தலைவலி மாத்திரையும் கொடுத்து இசை நிகழ்ச்சி நடத்தினாராம்.தமிழத் திரையுலகம் கண்ட முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான கே.சுப்ரமணியம் அவர்களின் மகன் இவர்.
இன்று முன்னணிப்பாடகர்களாக விளங்கி வரும் பல இளம் பாடகர்களின் அத்திவாரம் "இசை மழலை" எனும் ராம்ஜியின் இசைக்குழு வழியாகப் போடப்பட்டது.
பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம்,s .v.ரமணன் இவர்களின் சகோதரர் அபஸ்வரம் ராம்ஜி என்று நினைவு
நேற்றே நிலாவை நம்ம SSS தயவில் பார்த்து ரசித்தாகி விட்டது..
அடுத்த ரிக்வெஸ்டை மெதுவாக வைக்கலாம் என்று வரலக்ஷ்மி.. வரலக்ஷ்மி
( சிக்கா.. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் எஸ்.வரலக்ஷ்மி சொந்தக் குரலில் பாடும் "காதலாகினேன்.. எவர் ஏது சொன்ன போதும் நான்... காத..லாகினேன்" பாட்டு கேட்டதுண்டா ? )
இருக்கட்டும்.. வரலக்ஷ்மி விரதம் அன்றைக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன் என் அடுத்த ரிக்வெஸ்டை.
ஜெய்சங்கர் நடித்து வெளிவராமல் போன "கதா நாயகன்" என்ற படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடும் ஒரு அருமையான பாட்டு..
"சில நேரங்களில் சில மனிதர்களை
சிந்தித்து பார்த்தால் சிரிப்பு வரும்
என்ன கோலமோ என்ன கொள்கையோ
இதயம் சிலருக்கு இரண்டல்லவோ"
என்று ஆரம்பித்து
"சந்திரனுக்கு செல்பவனுக்கு சாம்பார் சாதம் இல்லை.. அங்கு இல்லை
சந்ததி என்று ஒன்பது பிள்ளை இனிமேல் பிறந்தால் தொல்லை.. என்றும் தொல்லை
சோழன் காலக் குடுமி... இதில் காரில் என்ன பவனி
அடி பெண்ணே கொஞ்சம் கவனி
நீயும் ஆண்பாதி பெண் பாதி அவதாரமோ"
என்றெல்லாம் stanzas வரும்..
சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாடலுக்கான படம் தெரியாமல் நான் தேடிக்கொண்டு இருந்த சமயம் நம்ம ராகவ்ஜிதான் கண்டு பிடித்து சொன்னார்.
இந்தப் பாட்டு எங்கேயாச்சும் கிடைச்சா மதுர கானங்கள் திரிக்கு மடக்கி இழுத்துக் கொண்டு வாருங்கள்.
ஆ.த அ சி யில் எல்லாப் பாட்ட்டும் கேட்டிருக்கிறேன்..படம்பார்த்தது தியேட்டரில் தானே ஆனால் நினைவிலில்லை..ஜெயா டிவியில் மறுபடி பார்த்த போது மதுண்ணா ஏக பாட் கட்.. அதுவும் காளி என் ரத்தினம் கணீர்க்குரலில்பாடும் காளிப் பாட்டு கட்
கதா நாயகன் பாட்டு கேட்டதா நினைவிலில்லையே..
ஒங்க அலப்பரை தாங்கல. ஜானகியின் சார்பா நான் எனது பார்வைகளை இங்கே வைக்க விரும்பினாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான். நீங்களும் அதையெல்லாம் வசதியாக புறக்கணித்து மறுபடியும் மறுபடியும் ஆக்டேவ் பிட்ச், ஸ்விட்ச் என்றே இசை இலக்கண ரீதியா ஜல்லியடித்து விடுவீர்கள். இந்த இலக்கணத்தையெல்லாம் தூரப் போட்டு வாங்க. குரல் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை (அன்பு, பாசம், கோபம் , சினம், ஆனந்தம் ,இன்பம், மகிழ்ச்சி , துக்கம் ,ஆசை , பொறாமை , வெறுப்பு , விரக்தி , அமைதி , பயம் , கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஆச்சரியம் , வெட்கம், பரிவு, இரக்கம், காதல், காமம், விரகதாபம், எரிச்சல் ,சலிப்பு ,குற்றுணர்வு ,மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம், ஈர்ப்பு, பெருமை, உணர்வின்மை, நம்பிக்கை, மனக்கலக்கம், தவிப்பு, பற்று, அவநம்பிக்கை , சோம்பல், அதிர்ச்சி, மன நிறைவு அல்லது திருப்தி , தனிமை, அவா, வலி, அலட்சியம் , திகில், பீதி, பக்தி, தியாகம், தாய்மை) மற்றும் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வித உணர்ச்சிகளை ஏற்றி ஏற்றிப் பாடும் ஞானத்தை மட்டுமே மையமா வைத்து பேசலாம். எந்தெந்த விதமான உணர்வுகளுக்கு குரல் பயன்படுத்தப் பட்டு நேர்த்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதையும் அலசலாம். பன்முகக் குரலில் யார் தேர்ந்தவர், சிறந்தவர் என்பதையும் கணக்கில் கொண்டு அப்புறம் முடிவு செய்யலாம் யாருடைய நிழலை யாரெல்லாம் தீண்ட முடியாது என்று.. ஆனால் இதுபோன்ற ஆரோக்யமான விவாதம் மையத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை இப்போதில்லை. அதனால, காசா பணமா! "எந்த காலத்திலும், எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது." - போன்ற சிலாகிப்புகளை நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.
ஒன்றல்ல.. ஆயிரக் கணக்கான பாடல்கள். Randomஆக எதைவேண்டுமானாலும் நீங்கள் கேட்டு லயிக்கலாம், இவங்க நிழலை ..இல்லை இல்லை.. இவங்களோட எல்லைக் கோட்டில் நிற்க / எட்டிப்பார்க்கக் கூட யாருக்கும் தகுதியில்லை என முடிவெடுக்கத் தூண்டும் பலப் பலப் பாடல்கள். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று.. அதுவும் இப்போதைய காலக் கட்டத்தில் நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் ஒரு பாடல் என்பதால் சட்டென ஞாபகத்திற்கு வருகிறது. எஜமான் படத்தில் வரும் "உரக்கக் கத்துது கோழி!". இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களை ஒப்பிடுகையில் இதன் வீச்சு குறைவுதான். ஆனால் பொக்கிஷம் என்றே நான் கருதுகிறேன். சரணத்தின் ஒவ்வொரு அடியிலும் எப்பேர்பட்ட ஏற்ற இறக்கங்கள்.. அந்த மேடு பள்ளங்களை எப்படி ஜானகி தான் உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும் உணர்ச்சியை (காமம்) பொதித்து இயல்பாக கடக்கிறார்! எப்பேர்பட்ட இசையுருவாக்கம் ராஜாவிடமிருந்து! எப்பேர்பட்ட உள்வாங்கல் ஜான்கியிடமிருந்து! Truly genius stuff!
https://www.youtube.com/watch?v=JTgeTgs6sxk
பின்குறிப்பு! யூடியுப் காணொளி! But ஒலியில் மட்டுமே கவனத்தை செலுத்தவும்.
ஒலி மட்டும் இங்கே!
http://www.raaga.com/player5/?id=400...85091313917625
முன்னரே வேறிடத்தில் நான் குறிப்பிட்டிருந்த நினைவு. ஜானகி ஆரம்ப காலத்திலேயே எல்லா ரேஞ்சையும் கடந்து தன் குரலை Establish செய்து விட்டார். அவருடைய மிகச் சிறந்த பாடலக்களில் ஒன்று அநேகமாக யாருமே நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். படித்த மனைவி படத்தில் இடம் பெற்ற இந்த சிவன் மகனே பாடல் ஜானகியின் Lifetime பாடல்களில் ஒன்று. பிரமிக்க வைக்கும் இவருடைய குரலின் வளமை சரியான முறையில் பயன்படுத்தப் பட்டது தாமதமாகத் தான். ஆரம்ப காலங்களில் பெரும்பாலான இசையமைப்பாளர்கள் அவருடைய குரலில் இருந்த தனித்தன்மையையும் வளமையையும் கவனிக்கவில்லையோ அல்லது பயன்படுத்தவில்லையோ தெரியவிலலை. ஆனால் அவருடைய குரலிலன் உண்மையான சிறந்த பரிமாணம் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே நிகழ்ந்தது என்பது உண்மை. அது வரை ஜானகி என்றாலே கீச்சுக் குரல் என்ற டிரேட்மார்க் பாடகியாய்த்தான் அவர் பயன்படுத்தப் பட்டு வந்தார் என்பதே என் கருத்து.
இதோ அந்தப் பாடல்
http://www.inbaminge.com/t/p/Paditha%20Manaivi/
கிருஷ்ணாஜி...
1000 பதிவுகள் கடந்த அபூர்வ தகவல் சிகாமணி நீங்கள்.. அதற்கேற்ப ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிகாமணி பற்றிய தகவல்களாய் இங்கே வந்து கொண்டிருப்பது மிகவும் பொருத்தமாகும். தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
வாசு சார் ஒவ்வொரு நாளும் தாங்கள் வழங்கும் ஸ்பெஷல் ஒவ்வொருவருக்கும் அந்நாளை ஸ்பெஷலாக்கி விடுகிறது. தொடருங்கள். பிடியுங்கள் பாராட்டை.