https://www.youtube.com/watch?v=rFN-EHknlSg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றே சொல்லிவிட்டார் ....
நம்நாடு படத்தில் இடம் பெற்ற இந்த காட்சி இன்றைய அரசியலுக்கு பொருந்துகிறது .
https://youtu.be/y8HRpeWXFqA
திரு கலை வேந்தன் - உங்கள் பதிவுகளை படிக்கும்போது பொறாமையாக இருக்கிறது - தமிழ் உங்களிடம் தஞ்சம் புகுந்து கொண்டதால் , அதை உங்களுக்கு தெரியாமல் என்னிடம் வரவழைக்க எந்த உக்தியும் தெரியாமல் திண்டாட வேண்டியதாக உள்ளது . அருமை என்று எழுதுவது மிகவும் குறைத்து எழுதுவதுபோல எனக்கு புலப்படுகின்றது . உங்களிடம் தஞ்சம் புகுந்துள்ள தமிழை சிறிது இரவல் தந்தால் , சில வார்த்தைகளை என்னால் தேடி கண்டுபிடித்து எழுத முடியும் - முடியுமா ??
இந்த பதிவை திரு லோகநாதனுக்கு சமர்பிப்பதில் சந்தோஷம் அடைகிறேன் . நேற்று பாதியில் தான் " திருடாதே " படத்தை பார்க்க முடிந்தது - படத்தின் முடிவை பார்க்க மனம் இல்லாததினால் , என் ரிமோட் வேறு சேனலுக்கு தாவியது . பார்த்த வரையில் எனக்கு கிடைத்த சில இனிய அனுபவங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . எளிமையான கதை , தெளிந்த நீரோட்டம் போல வசனங்கள் - மனதில் தைக்கும் போதனைகள் , சில கருத்துள்ள பாடல்கள் , யோசிக்க ஏதுவாக இருக்கும் திருப்பங்கள் , யோசிக்கவே முடியாத ஒரு முடிவு - படம் முழுவதும் நம்மை அறியாமல் நாம் சந்திக்கும் ஒரு இழைந்தோடும் சோகம் , சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள் , சிந்திக்க வைக்கும் அறிவுரைகள் - ஒரு புதிய , மாறுபட்ட மக்கள் திலகத்தை சந்திக்கிறோம் - உணர்ச்சியின் பிழம்பாக . காதலும் , சண்டைகளும் இருந்தாலும் முக்கியத்துவம் கொடுத்தது , இனம் தெரியாத சோகத்திற்கும், கை தட்டலுக்கு உரிய நடிப்பும் தான் -
MT யின் அடுத்த பக்கத்தை , உணர்ச்சியினால் உருவம் எடுக்கும் அந்த உன்னத நடிப்பை தாங்கி கொண்டு வந்த இந்த படம் பல முறை பார்க்க வேண்டியவைகளில் ஒன்று . அவரின் உணர்ச்சி கொண்ட நடிப்பு இந்த படத்தின் டைட்டில் யையே மாற்றி அமைத்தது - படம் " திருடாதே " அல்ல " திருடுங்கள் " என்று - ஆம் - பணத்தை அல்ல , பார்பவரின் மனதை ------- படத்தை முழுவதும் பார்க்காததினால் , கதையை விமர்சிக்க நான் தகுதி உள்ளவன் அல்ல - இருந்தாலும் சில வசனங்கள் மனதை தொட்டன
1. நாகையா ஒரு இடத்தில் MT உண்டியலில் பணம் போடுவதை தடுப்பார் " தம்பி இந்த பணம் , நீ உண்டியலில் போடுவதை நான் சம்மதிக்க மாட்டேன் - இது நேர் வழியில் உனக்கு வந்ததில்லை "
MT இதற்க்கு சொல்லும் வசனம் பிரமாதம் " ஐயா - இந்த உண்டியில் விழும் பணம் எல்லாம் நேர் வழியில் வந்தது என்று நீங்கள் நம்புகிறீர்களா - அப்படி இருந்தால் இதில் ஒரு காசும் விழுந்திருக்காது !"
2. நாகையாவிடம் தான் திருடுவதிர்க்கும் ஒரு காரணம் உள்ளது என்பார் - உடனே நாகையா அவரிடம் " தம்பி இப்பொழுதெல்லாம் தவறுகள் செய்வதற்கு ஒரு நல்ல காரணத்தை கண்டு பிடித்து விடலாம் என்பார் . பொட்டில் அறைந்தது போல MT அதை கேட்டு துடிப்பார் ..
2. MT யை ஒரு கூட்டம் வழி மறைக்கும் - அவர்களிடம் MT சொல்லும் விதம் மிகவும் ரசிக்க வேண்டியவை " நான் திருடுவதைத்தான் விட்டுவிட்டேன் - உங்களை உதைப்பதை அல்ல !"
குறிக்கோள் மிகவும் உயர்ந்ததாக இருந்தாலும் , கெட்ட வழிகளில் அதை அடைய முயற்சி செய்யக்கூடாது என்பதை இந்த படம் அழகாக எடுத்து சொல்லியுள்ளது - பாவத்தின் விலை உயிரே !!
தாயை மதிப்பவன் தவறுகள் செய்ய முனைய மாட்டான் - மற்றவர்கள் மனதையும் புண்படுத்த மாட்டான் என்பதை ஆணித்தரமாக எடுத்து சொல்லும் படம் இது - வார்த்தைகளில் வரும் வெப்பம் , தாயை கொல்லும் பாவத்திலும் கொடியது என்பதை மிகவும் அழகாக எடுத்து சொல்கின்றது இந்த படம் - காதல் இருக்கின்றது ஆனால் அதில் வன்முறை இல்லை - வசனங்கள் இருக்கின்றது - மற்றவர்களை புண் படுத்த அல்ல - பண் படுத்த !! சண்டைகள் இருக்கின்றது - அதில் செயற்கை இல்லை - இது ஒரு படம் மட்டும் அல்ல , எல்லோருக்கும் ஒரு பாடமும் கூட - ஒரு தாய் தன் மகனுக்காக எந்த அவமானத்தையும் ஏற்று கொள்வாள் - ஆனால் அவன் திருடி பிழைப்பவன் என்று மட்டும் அறிந்தால் அவள் கர்பப்பை கொடுக்கும் வலியில் தன்னை மடித்துக்கொல்வாள் - சுமந்தது பத்து மாதங்கள் - நடை தளர்ந்தது ஆறு மாதங்கள் - கண் சொருகியது இரண்டு மாதங்கள் , தூக்கம் விடை பெற்றது கடைசி ஒரு மாதம் - தன் மகன் ஒரு நல்லவன் அல்ல என்று அறிந்ததும் பிரியும் உயிர் ஒரு நொடியில்- இதுதான் அன்னை ! அதனால்தான் அவள் ஒரு கோயில் - அங்கே வாழும் தெய்வமும் அவள்தான் .
நம் எல்லோருக்கும் நம் தாய் சொல்லித்தரும் பாடம்
Culture of Discipline
Son ,
When you have disciplined yourself , you don't need hierarchy ;
When you have disciplined thought , you don't need bureaucracy;
When you have disciplined action , you don't need excessive controls;
when you combine a culture of discipline with an ethic of entrepreneurship ,
you get the magical alchemy of great performance !!
Not all people are most important asset to me , my dear son - but you, the right son is !!!!
அன்புடன் ரவி
[QUOTE=g94127302;1217461]
MT யின் அடுத்த பக்கத்தை , உணர்ச்சியினால் உருவம் எடுக்கும் அந்த உன்னத நடிப்பை தாங்கி கொண்டு வந்த இந்த படம் பல முறை பார்க்க வேண்டியவைகளில் ஒன்று . அவரின் உணர்ச்சி கொண்ட நடிப்பு இந்த படத்தின் டைட்டில் யையே மாற்றி அமைத்தது - படம் " திருடாதே " அல்ல " திருடுங்கள் " என்று - ஆம் - பணத்தை அல்ல , பார்பவரின் மனதை ------- படத்தை முழுவதும் பார்க்காததினால் , கதையை விமர்சிக்க நான் தகுதி உள்ளவன் அல்ல - இருந்தாலும் சில வசனங்கள் மனதை தொட்டன
ரவி சார்
திருடாதே படத்தை பற்றிய உங்களின் விமர்சனம் சூப்பர் . மிகவும் அனுபவித்து ரசித்து படத்தை பார்த்த உங்களின் பதிவு அருமை . வாழ்த்துக்கள் ரவி சார் .
அன்பிற்கினிய திரு. ரவி சார் அவர்களுக்கு,
தங்களின் பெரிய மனத்துடன் கூடிய பாராட்டுக்கு நன்றி. ஆனால், உண்மையில் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களை படித்துதான் நல்ல அம்சங்களை, உத்திகளை நான் கற்றுக் கொள்கிறேன். குறிப்பாக, மேலே நீங்கள் எழுதிய கடைசி பாரா....
‘‘தாயை மதிப்பவன் தவறுகள் செய்ய முனைய மாட்டான்.......
நம் எல்லோருக்கும் நம் தாய் சொல்லித்தரும் பாடம்’’
.... என்ன ஒரு சரளமான, நடை. யோசித்து, யோசித்து எழுதியதாக தெரியவில்லை.எழுத திண்டாடுவதாக நீங்கள் கூறுவது உங்கள் அடக்கத்தை காட்டுகிறது. நிறைகுடம் தளும்பாது என்பார்கள். நீங்கள் நிறைகுடம் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
இந்தப் பதிவை திரு.லோகநாதன் அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளீர்கள். தாயை இழந்து வாடும் அவருக்கு உங்கள் பதிவு நிச்சயம் ஆறுதல் அளிக்கும்.
திருடாதே படம் பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை திரு.ரவி சார். நீங்கள் குறிப்பிட்ட காட்சிகளை நானும் பார்த்து ரசித்திருக்கிறேன். தனது மகன் திருடன் என்பதை அறிந்த மக்கள் திலகத்தின் தாயாக வரும் லட்சுமி பிரபா அவர்கள், இந்தக் கையாலே வளர்த்தேனே என்று அங்குள்ள மேஜையில் கைகளை அறைந்து கொள்வார். தாய்க்கு கை வலிக்கக் கூடாது என்று மக்கள் திலகம், அம்மா... என்று கதறிக் கொண்டே ஓடிப் போய் மேஜை மேல் பாதி உடலை வைத்து முதுகைக் காட்டி அடிகளை தானே வாங்கிக் கொள்வார். வார்த்தையே இல்லாமல், தாய் மீது பேரன்பு கொண்ட மகனின் மன நிலையை காட்டுவார்.
நேற்று முன்தினம் திரு.சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றி கூறியிருந்தேன். மன்னிக்கவும் சார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த திரு. சின்ன அண்ணாமலையைப் பற்றி உங்களிடம் நான் கூறுவது பில்கேட்சிடம் மைக்ரோசாப்ட் பற்றி கூறுவது போல. உங்களுக்குத் தெரிந்திருக்கும். முதலில் திருடாதே படத்தை அவர்தான் தயாரித்தார். மக்கள் திலகத்துக்கு கால் முறிவு ஏற்பட்டதால், படம் தாமதமானால் நஷ்டத்தை தாங்க முடியாது என்பதால் அவரது யோசனைப்படி கவியரசர் கண்ணதாசனின் தமையனார் ஏ.எல்.எஸ் அவர்களிடம் படத்தை விற்றுவிட்டார்.
நீங்கள் முழுப் படத்தையும் பார்த்தால் எங்களுக்கு பெரிய விருந்தே கிடைக்கும் போலிருக்கிறதே. அடிக்கடி வந்து உங்கள் உயர்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.ரொம்ப நன்றி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தின இதழ் -பத்திரிகையில் தினமும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய கட்டுரை மற்றும் வல்லமை இணயதளத்தில்
இடம் பெற்ற மனதில் நிறைந்த மக்கள் திலகம் -கட்டுரைகள் பதிவுகளை வழங்கி வரும் இனியநண்பர்கள் திரு லோகநாதன் திரு சைலஷ் , திரு குமார் அவர்களுக்கு நன்றி . கலைவேந்தனின் பதிவுகளும் அருமை .
நாளை பிறபகல் - ஜெயா டிவியில் மக்கள் திலகத்தின் ''என்கடமை '' ஒளிபரப்பாகிறது.