1967ல் வசூலில் மாபெரும் சாதனைகள் நிகழ்த்திய காவல்காரன் .
''காவல்காரன் '' 7.9.1967
100 நாட்கள் .
சென்னை - குளோப் - அகஸ்தியா - மேகலா
மதுரை - சிந்தாமணி
திருச்சி - ஜுபிடர்
சேலம் - ஒரியன்டல்
Printable View
1967ல் வசூலில் மாபெரும் சாதனைகள் நிகழ்த்திய காவல்காரன் .
''காவல்காரன் '' 7.9.1967
100 நாட்கள் .
சென்னை - குளோப் - அகஸ்தியா - மேகலா
மதுரை - சிந்தாமணி
திருச்சி - ஜுபிடர்
சேலம் - ஒரியன்டல்
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே?
எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது.
சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.
பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.
பெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது. - See more at: http://www.noolulagam.com/product/?p....xuGEaDwK.dpuf
அசைக்க முடியாத கோட்டைகளை அசைத்து காட்டியவர் .
கொக்கரித்தோர் கோட்டைகளை தகர்த்தெறிந்தவர்
மக்கள் மனக் கோட்டையில் புகுந்தவர்
1967ல் கோட்டையில் திமுகவை அமர்த்தியவர் .
1977ல் மக்கள் திலகமே கோட்டைக்குள் முதல்வராக அமர்ந்தவர்
சினிமா என்ற கோட்டையில் பொற்கால முதல்வராக திகழ்ந்தவர் .
கனவு தொழிற்சாலையில் பல வெற்றி கோட்டைகளை கடந்தவர் .
எம்ஜிஆர் சினிமாவில் நடித்த வரை அவரே முடி சூடா மன்னன் .
அரசியலில் கடைசி வரை தமிழத்தை ஆண்ட மன்னாதி மன்னன்
எம்ஜிஆரின் வெற்றிகளை வரலாறு ஏற்று கொண்டது .
மக்கள் ஏற்று கொண்டார்கள்
தொண்டர்களும் ரசிகர்களும் இரவு பகலாக உழைத்தார்கள்
இன்றும் உழைக்கிறார்கள் ..
நாளையும் உழைப்பார்கள்
இந்த அட்சய பாத்திரத்தில் இருக்கும் மக்கள் திலகமும் அவர் உருவாக்கிய இயக்கமும் , சின்னமும்
அள்ள அள்ள குறையாது .அமுத சுரபியான மக்கள் திலகத்தின்செல்வாக்கும் , திருமுகமும் உலகம்
உள்ளவரை அழியாது .
சரித்திரம் வெற்றிகளை என்றுமே மறக்காது .
courtesy - facebook
திரு.சுஹராம் சார்,
சென்னை சாந்தி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாயும் புலி என்ற புதிய படம் வெளியாகியுள்ளது. சாய் சாந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலை மற்றும் மதியக் காட்சியாக சவாலே சமாளி என்ற புதிய படமும் மாலை, இரவுக் காட்சியாக டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கில படமும் ஓடுகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் சத்யம் திரையரங்கில் நீங்கள் கூறியிருப்பது போல, சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் காலைக் காட்சியாக ஓடுகிறது. பேபி ஆல்பட்டில் மதிய காட்சி மட்டும் நடக்கிறது.
இருந்தாலும் நாளிதழில் ஓடாத திரையரங்குகளின் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது வேண்டுமென்றே நடந்திருக்கும் என்று நினைக்க முடியவில்லை. விநியோகஸ்தர் கொடுக்கும் விளம்பரத்தை நாளிதழ்களில் வெளியிடுகிறார்கள். அதில் தவறு நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு சுஹர்ரம்
உங்களது நண்பர்கள் நடிகர் திலகம் திரைப்படம் காண்பதில் ஆர்வம் காட்டுவதை உங்கள் பதிவின் மூலம் படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
Anyway, தகவலுக்கு நன்றி. விசாரித்ததில் சரியான விளம்பர தகவல் கொடுக்கபட்டதேன்றும், பதிப்பாளர் ( DAILY THANTHI) உரிய IMAGE ஐ பதிவில் பதிவு செய்யும்போது தவறு நேர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்கள்.
இன்றைய தின தந்தி யில் இதன் சரியான விளம்பரம் அதற்க்கு ஈடாக ( COMPENSATION) தந்தி குழுமம் இலவசமாக கொடுத்துள்ளார்கள் தவறுக்காக.
விஷயம் இவ்வளவுதான்..அதற்குள் என்னமோ தவறான தகவல் தெரிந்தே பதிவிட்டுள்ளனர் என்பதுபோன்ற எப்போதும் போல உங்களுடைய தவறான கண்ணோட்ட காழ்புணர்ச்சி கொண்ட தங்களுடைய அவசர அவியல் இங்கு...!
http://i501.photobucket.com/albums/e...pswqkgxm4g.jpg
இன்று காலை 10 மணி காட்சியும் சத்யம் வளாகம் 6 DEGREES அரங்கு நிறைவு கண்டுள்ளது உங்களுக்கு உபரி தகவல்..!
திரு. ஆர்.கே.எஸ்.
தாங்களின் விளக்கத்துக்கு நன்றி.
திரு.சுஹராம் அவர்கள், நீங்கள் கூறியிருப்பது போல வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் சொல்லியிருக்க மாட்டார். தாங்களும் அவ்வாறு நினைக்க வேண்டாம். அவருக்கு கிடைத்த தகவலை அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வசூல் பற்றி அவர் கூறியிருந்ததும் கூட தியேட்டர் மேலாளர் சொல்லிய தகவல் என்றுதான் கூறியிருந்தார். அவராக சொல்லவில்லை.
இங்கு எல்லாருமே பரஸ்பர நம்பிக்கையோடுதான் பழகுகிறோம். அவருக்கு கிடைத்த தகவலை அவர் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். நன்றி.
164 இருக்கைகள் கொண்ட சத்யம் 6 டிகிரிஸில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் இன்று காலை அரங்கு நிறைவு கண்டிருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் sir
அவர் கூறிய வசூல் தகவல் முற்றிலும் கற்பனை அல்லது தவறான தகவல் என்று நானும் அப்போதே FACTS உடன் பதிலும் தந்துவிட்டேனே சார் ! அப்படி அவர் உண்மையிலேயே காழ்புணர்ச்சியில் கூறியில்லாத பட்சத்தில் உங்கள் வாக்கினை ஏற்று என்னுடைய வரிகளும் நான் பின் வலித்து கொள்கிறேன் !
சுமார் 100 இருக்கைகள் மற்றும் ஒரு டிக்கெட் விலை 120 ருபாய் கொண்ட STUDIO 5 அரங்கில் இருந்து ....164 இருக்கைகள் கொண்ட 6 DEGREES திரை அரங்கில் ஒரு டிக்கெட் விலை 150 ரூபாய்கள் என்ற நிலையிலும் ஞாயிறு இளம் காலை காட்சி 10 மணி அரங்கு நிறைவு என்றால் .......இதற்க்கு பெயர் சாதனை அன்றி வேறு என்னவென்று கூறுவது :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி !
RKS