-
-
|Rare Video| Kamal Haasan's Short Interview about Hey Ram & Marudhanayagam
https://www.youtube.com/watch?v=9zhaeaQFtzk#t=73
-
Quote:
Originally Posted by
Ragu Raj
Really rare video..
Thanks for your post.
-
Kamal Haasan's Deepavali Special Pattimandram
https://www.youtube.com/watch?v=RI1jwvpinP8
-
கமலுடன் நடிக்க ஆசைப்படும் கன்னட சூப்பர் ஸ்டார்
‘விஸ்வரூபம்-2’ படத்தைத் தொடர்ந்து கமல், தனது நீண்ட நாளைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கன்னட நடிகரான ரமேஷ் அரவிந்த் கமலுடன் சேர்ந்து பல படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கன்னடத்து சூப்பர் ஸ்டார் ஒருவரும் கமலுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். கன்னடத்து சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். 51 வயதாகும் இவர், கன்னடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை இன்றளவும் தக்க வைத்திருப்பவர்.
இவர்தான் கமலுடன் ஒரு படமாவது சேர்ந்து நடித்து விடவேண்டும் என்று ஆசையில் உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,
நான் கமலின் அதிதீவிர ரசிகன். ஒருமுறை கமலை சந்தித்போது அவர் என்னை கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். அன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு நான் குளிக்கவே இல்லை. காரணம், இந்த இனிய அனுபவம் என்னைவிட்டு போய்விடக்கூடாது என்பதனால்தான்.
கமலுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
LOL - 'kulikkavey illai" !
-
தமிழ் சினிமா... ஒரு க்ளிக் உலா!
ஸ்டில்ஸ் ரவி... அன்றைய 'காமதேனு’ தொடங்கி இன்றைய 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ வரை 500 திரைப்படங்களுக்கும் அதிகமாகப் பணியாற்றிய தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வான்டட்’ புகைப்படக் கலைஞர். 'அன்னக்கிளி’ இளையராஜா அறிமுகம், மகேந்திரனின் 'ஜானி’ மேக்கிங், கோடம்பாக்கத்தின் அவுட்டோர் படப்பிடிப்புகள் என தமிழ் சினிமாவின் வரலாற்றோடு நெருக்கமாகப் பயணித்துவரும் இவர், தன் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்...
http://i1277.photobucket.com/albums/...ps129354c1.jpg
அப்போதுதான் புதிதாக வந்த மினி கீ போர்டு ஒன்றை சுஹாசினி, வாணி கணபதியிடம் இசைத்துக் காட்டுகிறார் கமல். எனக்கு கமல் எப்பவும் ஆச்சர்யம். கோல்டு ஸ்பாட் குளிர்பானம் குடிக்கும் குரங்கு, நேபாளத்தில் வரிசையாக நிற்கவைத்து ஆடுகளின் தலையை வெட்டும் நேர்த்திக்கடன் என, தான் பொழுது போக்காக எடுத்த படங்களைக் காட்டுவார். 'ஹாபியா எடுக்கும் மனுஷனே இவ்வளவு நேர்த்தியா எடுக்கும்போது, அதையே தொழிலா பண்ற நாம எப்படி எடுக்கணும்’னு எனக்குள் வெறி ஏறும். தமிழ் சினிமாவில் முதல் டிஜிட்டல் கேமரா வாங்கியவர் கமல். இரண்டாவதுதான் நான். ஆல் இன் ஆல் அழகுராஜான்னா, அது கமல்தான்!
(ananda vikatan)
-
-
-
அனைவருக்கும் கலைஞானி கமல்ஹாசன் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நவம்பர் 7
http://i1366.photobucket.com/albums/...ps7b4e0454.jpg