https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...07&oe=5C069002
Printable View
ஏண்ணே தலைவர் சிவாஜி அரசியல்ல தோத்தாரு? நம்ம மொக்கராசு எப்பமே இப்படித்தான்.ஒரே கேள்வியவே ஒன்பதாயிரம் தடவ கேப்பான்? இப்படி கேக்கறதுதாலதான் நான் அவன மொக்கராசுன்னு கூப்பிடறேன்.பேரு ஆனா முத்துராசுதான்.
அவன விடுங்க அறிவில்லாத பய. நாட்டுல. ரொம்ப மொக்கராசுக இருக்கானுவுகளே.
அப்ப அறிவு அவுனுகளுக்கு? நாஞ் சொல்லலப்பா.
காமராசருக்கு பின்னால வந்த ஆட்சிக நடத்துன கூத்தை தான் எல்லோரும் பார்த்திருப்பாங்களே.அவங்க செஞ்சதையெல்லாம் தொண்டர்கள் ஏன் சிந்திச்சு பாக்க மாட்டேங்குறாங்க? ஒரு தொண்டன் எந்த அ...டிப்படையில தலைவனை தேர்ந்தெடுக்கிறான்.?
நல்ல தலைவன் யார்?
கஜானா பணத்தை கொள்ளையடிக்காதவனா இருக்கணும், ஊழல் செய்யற கட்சிக்காரன தூக்கி எறியணும், ஆடம்பர செலவ விரும்பாதவனா இருக்கணும், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.ஆனா இதை செய்யாத அரசியல்வாதி எவனாவது உண்டா இங்க?
இதே பார்வையிலே அவன் தலைவன எவனாவது நினைச்சுப் பாக்கறாங்களா? எப்ப கட்சில சேந்தானோ அப்ப இருந்து அந்த கட்சி என்ன செஞ்சாலும் அதை நியாயப்படுத்தி பேசுறதே தானே வழக்கமா இருக்கு?
மக்களும் பரபரப்பான விஷயங்களையும், குடுமிப்பிடி சண்டைகளையும்,தேவையில்லாத இலவசங்களிலும் எதிர்பார்க்கிற மனசா வச்சிருக்கிறாங்களே ஒழிய, ஜெயிச்சு வந்தவன் என்ன பண்றான், சொன்னதைச் செய்யறானா , ஊழல் பண்றான்னு தெரிஞ்சாலும் ஓட்டுப் போட்டதோடு மறந்து போகிறார்கள்.அடுத்த எலெக்சன் வந்தா அதே நிலைமை ரீபீட்.
நல்ல தலைவர்களோட பெருமை பேசறதோடு சரி.அவங்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்ததை பார்த்தும் திருந்தாது இருக்கிறார்கள்.
சிவாஜியை மட்டுமே உதாரணம் காட்டி பேசுறாங்களே! அரசியல்ல ஜெயிப்பது, தேர்தல் வெற்றிய மட்டும் தான் முன்னால வச்சு பேசுறாங்களேன்னு மொக்கராசு கேட்டான்.
ஐனங்க , ஓட்டுப்போட்ட பின்னால எவன் ஜெயிச்சான்னு பார்த்த பின்னால அவங்க அதோட மறந்துர்றாங்க.அதுக்கு பின்னால அடுத்த எலெக்ஷனப்ப தான், மறுபடியும் முதல்ல இருந்து
அதே காரியங்கள்தான்.
ஏன்னா, இன்னைக்கு யாரைக் கேட்டாலும் காமராஜர் அய்யா மாதிரி யாரு இருக்காங்க?,
அப்படின்னு எல்லாக் கட்சிக்காரன்ல இருந்தும், சாமான்ய மனுஷன் வரைக்கும் பேசறாங்க.ஆனா அதே காமராஜர காலேஜ் பையன நிக்க வெச்சு தோக்கடிச்சவங்கதானே!
சரி இப்படி செஞ்சுட்டமேன்னு அடுத்த எலெக்ஷன்ல முழிச்சுக்கிட்டாங்களா? இல்லைதானே!
பெரும்பாலும், ஜெயிச்சு வந்தவங்க எல்லாம் சாமான்யனாக இருந்தவங்க தான்.ஜெயிச்ச பின்னால அவங்க ரேஞ்சே வேறமாதிரி ஆயிடுது.
பத்து படம் நடிச்ச நடிகனெல்லாம் MLA.
கட்டப்பஞ்சாயத்து கோஷ்டி தலைவனெல்லாம் MLA.
கந்துவட்டி பைனான்ஸியரெல்லாம் MLA.
ஜால்ரா கோஷ்டியெல்லாம் MLA.
இந்த வரலாறு அதிகமான காலகட்டத்துல சிவாஜியும் ஜெயிச்சு வந்தா அவங்களுக்கும் சிவாஜிக்கும் என்ன வித்தியாசம்.
யாரோ நிக்கட்டும்
யாரோ ஜெயிக்கட்டும்
தேவையென்றால்,
ஜனங்க முழிச்சு நல்லதை தேடட்டும்.
மீடியாக்காரங்க நல்லவங்கள படம் புடிச்சு காட்டுங்க.
மீடியாக்காரங்க முடிஞ்சா அந்த நல்ல காரியத்த செய்யுங்க!
சிவாஜியை இழுக்காதீர்கள்.
courtesy net
பொக்கிஷங்கள் தொடர்கிறது..........................
வைரஸ்சில் மீண்டு வந்திருக்கிறேன்
சிலவற்றை தவிர்க்க நினைத்திருந்தேன் ஆனால்
எதிரிகளின் செயல்பாடு எதையும் தவிர்க்காதே என்கிறார்கள்
அவர்கள் ஆசையை ஏன் கெடுப்பான் நிவர்த்திசெய்கிறேன்