http://i40.tinypic.com/28k0vhk.jpg
1980 கோவை மாவட்டத்தில் கடும் மழை பெய்த போது மக்கள் திலகம் நேரில் சென்று ஆறுதல் கூறிய காட்சி .
Printable View
http://i40.tinypic.com/28k0vhk.jpg
1980 கோவை மாவட்டத்தில் கடும் மழை பெய்த போது மக்கள் திலகம் நேரில் சென்று ஆறுதல் கூறிய காட்சி .
மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் '' படத்தில் இடம் பெற்ற புலவர் புலமைபித்தனின் அவர்களின்
''ஆயிரம் நிலவே வா ''பாடல் .
திரை இசைத்திலகம் மகாதேவனின் அருமையான இசையினில் எஸ்.பி .பாலசுப்ரமணியம்
சுசீலா இருவரின் இனிய குரலில்
மக்கள் திலகம் - ஜெயா இருவரின் நடிப்பில் கொள்ளை கொண்ட இனிய காதல் கீதம் .
பாடலின் துவக்க இசையில் ஒரு வித மயக்க உணர்வு தூண்டும் இசையில்
''ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர
புதுப் பாடல் விழி பாட''
என்று மக்கள் திலகம் பாடும் போது ஜெய்ப்பூர் அரண்மணை தோட்டத்தில் வித்தியாசமான உடை அலங்காரத்தில் தோன்றுவது கண்ணுக்கு விருந்தாகும் .பூவை கையில் வைத்து கொண்டு பாடிகொண்டே வந்து பின்னர் அந்த பூவை வெகு அழகாக பின் புறம் வீசும் காட்சியில் எம்ஜியார் பிரமாதமாக நடித்திருப்பார் .
ஜெயாவின் காதல் மயக்கத்தில் உருவான இந்த பாடலில் மக்கள் திலகம் தன்னுடைய முகத்தை சிரிப்பது போல் சிரித்து நெருக்கமான காட்சியில் முகத்தை இறுக்கமாக வைத்திருப்பார் .
காதலின் ஏக்கத்தை முக பாவத்துடன் மக்கள் திலகத்துடன் அபிநயத்துடன் பாடும் வரிகள்
நெஞ்சை கொள்ளை கொள்ளும் காட்சிகளாகும் .
மக்கள் திலகத்தின் கட்டழகை ஜெயா வர்ணனை செய்து பாடும்
''மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக'' என்று அவர் மீது சாயம் காட்சியில்
மக்கள் திலகத்தின் புன்சிர்ப்பும் -இறுக்கமும் என்று உடனுக்குடன் வித்தியாசம் காட்டி
நடித்திருப்பார் .
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ
இந்த காட்சி ஜெய்பூர் அரண்மனைக்குள் ராணியின் படுக்கை அறையில் முதல் முறையாக
மக்கள் திலகத்திற்காக அனுமதி தரப்பட்டது விசேஷமாகும் .
இலக்கிய நயம் கொண்ட இந்த கவிதை பாடல் புலமை பித்தனின் புகழுக்கு பெருமை சேர்த்தது .
படத்தில் இடம் பெறாத வரிகள் ....[ இசை தட்டில் இடம் பெற்றுள்ளது ]
''அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ''
என்ன காரணத்தினாலோ இந்த வரிகள் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் .
ஆயிரம் நிலவே வா பாடல் எப்போது கேட்டாலும் மனதிற்கு ஒரு இதமான மெல்லிய
காதல் உணர்வை தூண்டுகிறது .
மக்கள் திலகத்தின் வித்தியாசமான உடை அலங்காரம் - காதல் என்று மிகவும் அழகாக நடித்து பாடியிருப்பார் .அவருக்கு ஈடு கொடுத்து ஜெயாவும் பிரமாதமாக உணர்வுகளை வெளிபடுத்தி நடித்திருப்பார் .
காலத்தால் அழியாத காவிய காதல் பாடல்களில் இந்த பாடலுக்கு என்றும் இடமுண்டு .http://youtu.be/yHfBRUdJ0Ts
BANGALORE - NEW CITY THEATRE
EN ANNAN -1970
http://i39.tinypic.com/sfgirs.jpg
தமிழக முதல்வராக நமது பேரன்பு தலைவர் இருந்தபோது 1980 ஆம் ஆண்டு கோவையில் பலத்த மழை காரணமாக கோவை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஆளான பகுதிகளுக்கு அவர் நேரடியாக சென்றார். உடன் திரு அரங்கநாயகம் மற்றும் காலம்சென்ற குழந்தைவேலு ஆகியோரும் உடன் சென்றனர். தலைவர் அவர்கள் மழை நீர் நிரம்பிய இடங்களில் வேட்டியை முழங்கால் வரை மடித்து கட்டி கொண்டு இறங்கி மற்றவர்களுக்கு முன்னால் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார். அவரின் பொன்னான கால்களில் கல்லும் முள்ளும் பட்டு ரத்தம் வந்ததை கூட ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை அந்த ஏழைகளின் தலைவர்.
http://i39.tinypic.com/2gtnu4p.png
FIRST SHOW AT ROYAL, COIMBATORE
URIMAIKKURAL
MSG FROM MR.HARIDASS, COIMBATORE