Originally Posted by
KALAIVENTHAN
நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு, வணக்கம்.
திரிகளிடையே சுமூக உறவை விரும்பும் உங்கள் நல்லெண்ணமும் கோரிக்கையும் புரிகிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் குறுக்கே நிற்க மாட்டோம்.
நீங்கள் குறிப்பிட்டது திரு. சிவாஜி கணேசன் அவர்களை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை அல்ல. திரு.பொன்.ராதா கிருஷ்ணன் போன்று மறைமுகமாக தலைவரை தாக்குபவர்களை கண்டிக்கும் கட்டுரை.
அரசியலில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்கவில்லை என்பதை அந்த கட்டுரையாளரும் ஒப்புக் கொள்கிறார்.
திரு.சிவாஜி கணேசன் அவர்களை உயர்த்துவதாக நினைத்து கிளிப்பிள்ளை போல இவர்கள் பேசுவது அந்த நல்ல நடிப்புக் கலைஞரை கொச்சைப்படுத்தும் செயலாகும் என்று கட்டுரையில் உள்ளது.
‘திரு. சிவாஜி கணேசன் அவர்களைப் போன்ற நடிகர் எங்கும் கிடைக்க மாட்டார் என்று உயர்ந்த, பரந்த எண்ணத்துடன் புரட்சித் தலைவர் கூறியது போன்று சினிமாவில் நன்றாகவே நடித்தவர்தான் திரு.சிவாஜி கணேசன் என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அரசியலில் அவர் ஏன் நடிக்க வேண்டும்? மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள்’ என்றுதான் கட்டுரையாளர் கூறுகிறார்.
எனவே, இது திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு எதிரான கட்டுரை அல்ல. மேலும் நான் திரியில் இருந்து திரு.வேலூர் ராமமூர்த்தியின் பதிவுகளை படித்தவரை புரிந்து கொண்டது, அவர் மோதல் போக்கை விரும்புபவர் அல்ல. சமீபத்தில் பறக்கும் பாவை நோட்டீசை வெளியிட்டபோது கூட ‘இது பார்வைக்குத்தான் விவாதத்துக்கு அல்ல’ என்று கூறியிருந்தார். நீங்களும் அதற்கு பதிலளித்தீர்கள். எனவே,அந்த கட்டுரையை தவறாக பார்க்க வேண்டாம்.
நானும் கவனித்தே வருகிறேன். சமீபத்திய தங்கள் பதிவுகளில் உணர்ச்சி வசப்படுதல் குறைந்து எழுத்துக்களும் கருத்துக்களும் மேலும் மெருகேறி வருகின்றன. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்