சரியான நேரத்தில் நம்நாடு வீடியோ பதிவிட்ட குமார் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
1969ல் வெளிவந்த நம்நாடு படத்தில் மக்கள் திலகம் கூறும் வசனங்கள் இன்றைய அரசியல் தலைவர்கள் , பதவியில் இருந்தவர்கள் பற்றிய காட்சிகள் அத்தனையும் பொருத்தமாக உள்ளது .
Printable View
சரியான நேரத்தில் நம்நாடு வீடியோ பதிவிட்ட குமார் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
1969ல் வெளிவந்த நம்நாடு படத்தில் மக்கள் திலகம் கூறும் வசனங்கள் இன்றைய அரசியல் தலைவர்கள் , பதவியில் இருந்தவர்கள் பற்றிய காட்சிகள் அத்தனையும் பொருத்தமாக உள்ளது .
நண்பர் திரு. ரவி அவர்களுக்கு வணக்கம் .
தங்களின் "திருடாதே " விமர்சனம் என் உள்ளத்தை கவர்ந்தது. சமூக படங்களில் மக்கள் திலகம் முதன் முதலாக நடித்து தன் முத்திரையை பதித்த , எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.
மக்கள் திலகத்தின் நடிப்பு, வசனங்கள், நகைச்சுவை, எல்லை தாண்டாத காதல்,இனிமையான பாடல்கள் -திருடாதே, என்னருகே நீ இருந்தால், ஓ மிஸ்டர் பாலு, அழகான சின்ன பொண்ணு போகுது .
சுறுசுறுப்பான, விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், மக்களுக்கு அறிவுரை/போதனை சொல்லக் கூடிய கருத்தாழமிக்க வசன வரிகள், ஆகியவற்றை தங்கள் பாணியில் திறம்பட விமர்சித்ததற்கு நன்றி.
திருட்டு தொழிலில் ஈடுபட்டு , தன் தாயிடம் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி,மன்னிப்பு கோரும் காட்சியில், இதுநாள் வரையில் திருடிக் கொண்டுதான் இருந்தேன்.இனிமேல் திருடமாட்டேன் . என்னம்மா அப்படி பார்க்கிறீங்க .என்று குழந்தைத்தனமாக,அதே நேரம், தாயை எப்படியாவது நம்பவைத்து, தவறுக்கு
பிராயச்சித்தம் தேட முயற்சிக்கும் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு மிக
அபாரம், அருமை.
தன் தாய் இறந்ததும், நடிகர் நாகையாவிடம், அண்ணனை இழந்த சாவித்திரிக்கு
ஆறுதல் கூறுவேனா, அல்லது கணவனை இழந்த மனைவியை தேற்றுவேனா ,ஐயா என் இதயமே வெடித்துவிடும் போல் உள்ளது என அழுது புலம்பும் காட்சியிலும் இயல்பாக, அருமையாக நடித்துள்ளார் மக்கள் திலகம். அப்போது
நடிகர் நாகையா, பாலு (மக்கள் திலகம் ) மறந்தும் இனி திருடமாட்டான்.
ஏனெனில், அவன் செய்த திருட்டினால் தன் தாயை இழந்துவிட்டான்.என்கிற காட்சியும் அருமை.
வில்லனை பிடித்துக் கொடுத்ததால் , அரசு மூலம் கிடைத்த பணத்தை, நடிகர் நாகையாவிடம் ஒப்படைத்து, குழந்தைகள் நல நிதிக்கு பயன்படுத்துமாறு
கூறி, கைகூப்பி வணங்கி செல்கிறார் மக்கள் திலகம்..நம் நெஞ்சைத் தொட்டவாறு.
ஒருவன் செய்யும் திருட்டினால் , ஒரு குடும்பத்தில் நேரும் இன்னல்களையும்,
துன்பங்களையும், தன் தாயையே இழக்கும் கொடுமையையும், பின்னர் திருட்டு பழியில் இருந்து மீண்டு ,அரும்பாடுபட்டு திருந்தியவனாக, நல்லவனாக , கதாநாயகனை மிக அழகாக சித்தரித்த திரைப்படம்.
1974 முதல் 1980 வரையிலான காலத்தில், பிரைட்டன், சரவணா, பத்மநாபா,
பிராட்வே , பிரபாத், மேகலா,தங்கம், பாரகன், என பல அரங்குகளில் நண்பர்களுடன் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் கண்டுகளித்தது பசுமையான நினைவுகள்.
1981ல் நண்பர் திரு. கே. எஸ். மணி அவர்களுடன் நாகர்கோவில் - ராஜேஷில்
பார்த்த அனுபவமும் உண்டு. அப்போது நான், திருவனந்தபுரத்தில் பணியாற்றி வந்தேன். திரு. மணி ,நாகர்கோயிலில் பணியாற்றி வந்தார்.
முதலில் நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.
ஏனெனில், மக்கள் திலகம் திரியில் தற்போது " திருடாதே " ஒளிபரப்பாகி கொண்டு
இருக்கிறது -சன் லைபில் என்று பதிவிட்டதனால் அதுவும் ஒரு மணி நேரம் கழித்து தான் படம் பார்க்க முடிந்தது.
ஆர். லோகநாதன்.