-
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு அமைந்த உயர்வு போல் வேறு எவருக்கும் அமையவில்லை .காரணம் எம்ஜிஆர் குறிக்கோளோடு வாழ்ந்தார் உழைத்தார். தன்னை நம்பினார் . ரசிகர்களை நம்பினார் . மக்களை நம்பினார் . எம்ஜிஆருக்காக ரசிகர்கள் உண்மையாக உழைத்தார்கள் .தொண்டர்களாக உழைத்து எம்ஜிஆருக்கு பெருமை சேர்த்தார்கள் .,.
1947ல் கதாநாயகன்
1950ல் சூப்பர் ஸ்டார்
1954ல் வசூல் சக்கரவர்த்தி
1956ல் மதுரை வீரன் - இமாலய வெற்றி
1957ல் திமுக வெற்றிக்கு உதயசூரியன் எம்ஜிஆர் உழைப்பு
1958ல் நாடோடி மன்னன் - வரலாற்று வெற்றி விழாக்கள்
1960ல் மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
1961ல் சமூக புரட்சி படம் திருடாதே - சீர்திருத்த காவியம்
1962ல் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைப்பு
1963ல் 9 படங்களில் நடித்து மாபெரும் புகழ் ஈட்டியவர்
1964ல் ரசிகர்களை தீவிர பக்தர்களாக மாற்றிய எம்ஜிஆர் படங்கள்
1965ல் எங்க வீட்டு பிள்ளை - நாடே வியந்து பாராட்டி ஏற்று கொண்டது
1966ல் மீண்டும் 9 படங்களில் எம்ஜிஆர் ஜொலித்தார் .ரசிகர்கள் பேரானந்தம்
1967ல் மறுபிறவி . தேர்தலில் வெற்றி . நிலைத்து நின்றார் .
1968ல் ஒளிவிளக்கு 100வது படம் , வெற்றி மேல் வெற்றி
1969ல் அடிமைப்பெண் - நம்நாடு தித்திக்கும் விருந்து ரசிகர்களுக்கு .
1970ல் மாட்டுக்கார வேலன் வெள்ளி விழா .புகழின் உச்சக்கட்டம் .
1971ல் தேர்தலில் வெற்றி . ரிக் ஷாக்காரன் இமாலய வெற்றி .
1972ல் பாரத் எம்ஜிஆர் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் - அதிமுக உதயம் .
1973ல் திண்டுக்கல் வெற்றி வீரர் . உலகம் சுற்றும் வாலிபன் வைர கிரீடம் .
1974ல் புதுவை - கோவை வெற்றி .உரிமைக்குரல் 200 நாட்கள் .
1975ல் இதயக்கனி இமாலய வெற்றி .
1976ல் அரசியல் மற்றும் திரை உலகில் முடி சூடா மன்னன் .
1977 - 1987 வரை முடிசூடிய மன்னன்
1987 - 2019 இன்று வரை எம்ஜிஆர் புகழ் கொடிகட்டி பறக்கிறது .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம் ...
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த இந்த பெருமைகள் மறக்க முடியாது .
எம்ஜிஆர் அரசியல் இயக்கம் அழிந்து விடும் என்று தப்புக்கணக்கு போட்டவர்கள் இன்று விழி பிதுங்கி எம்ஜிஆரின் புகழ் மேன்மேலும் உயர்ந்து வருவதை பார்த்து மனப்புழுக்கமும் கவலையும் ஆட்கொண்டு தங்களை ஆறுதல் படுத்தி கொள்ள வழியில்லாமல் தடுமாறுவது கண்டு பரிதாபம் கொள்வது மட்டும் தான் நம்மால் முடியும் .........வேறென்ன செய்வது☺️........... Thanks wa.,
-
ஹயாத் அண்ணா ஆரோக்கியமான விழா.அருமையான விழா.இதுவரை கேட்காத பாடல்களை கேட்கவைத்த ஆர்ப்பாட்டமான விழா. புரட்சி தலைவரின் புகழ் பரப்பும் இந்த விழாவிற்க்காக பல நாட்களாக பாடுபட்டு வெற்றியும் பெற்றார் அந்த நால்வர் திருவாளர்கள்.ஹயாத்.பாபு.செல்வகுமார்.மனோகரன் ஆகியோர்களுக்கு கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றியையும்.மகிழ்ச்சியையும் உளமார தெரிவித்து கொள்கிறோம்............ Thanks wa.,
-
1987-2019
32 வருடங்கள் தொடர்ந்து இந்தியாவிலும் அந்நிய மண்ணிலும் பல்வேறு எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாகவும் , தனிப்பட்ட இயக்கங்கள் சார்பாகவும் , அரசியல் காட்சிகள் சார்பாகவும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழ் பரப்பப்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது .உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத பெருமை .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் கனவுகள் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது . முக்கியமாக நிறைவேற வேண்டிய செய்திகள் .
1. மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் நெகட்டிவ் - விவரங்கள் பெற்று கிடைக்க கூடியவைகளை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி பத்திர ப் படுத்தி வைக்க ஆவண செய்ய வேண்டும் .
2. மக்கள் திலகத்தின் படங்களை கலைவாணர் அரங்கில் தினசரி ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் வீதம் குறைந்த கட்டணத்தில் திரையிட முன் வர வேண்டும் .படிப்படியாக தமிழகம் முழுவதும் ஆண்டு முழுவதும் எம்ஜிஆர் படங்கள் திரையிட வேண்டும் .
அனைத்து எம்ஜிஆர் மன்ற அமைப்புகளும் தங்களது ஈகோவை தொலைத்து விட்டு இனி நமது எம்ஜிஆர் புகழ் ஒன்றே குறிக்கோளுடன் செயல் படுத்த வேண்டும் . இனி வரும் காலங்களில் விழா என்ற பெயரில் தேவை இல்லாத பாராட்டுக்கள் , சால்வைகள் , ஆராதனைகள் சுய விளம்பரங்கள் என்று கொண்டாடும் நிலைமையை மாற்றுங்கள் நண்பர்களே ...... .என்ன சரிதானே...... Thanks wa...
-
கடந்த இரண்டு நாட்களாக
முகநூல் வாட்ஸ் அப் மற்றும் எம்ஜிஆர் குழுக்கள் ஆகியவற்றில் இப்படமும் செய்தியும் இடம்பெற்று வருகிறது...
அதில் முக்கிய தகவலை யாரும் பதிவு செய்யாததால் இன்று மீண்டும் பதிவு செய்கிறேன்...
புரட்சித்தலைவர் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் 24.12.1987ல் மறைந்த செய்திகேட்டு தாங்கா துயரில் தன்னுயிரையும் மாய்த்து கொண்டனர் பலர்...
அன்றைய தினம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக திறப்பு விழாவிற்காக இலட்சக்கணக்கில் முன்கூட்டியே சென்னைக்கு புறப்பட்டு விட்டனர் எம்ஜிஆர் தொண்டர்கள்.
அப்படி வந்தவர்களில் அடியேனும் ஒருவன்...
இதயதெய்வத்தை கடைசியாக தரிசனம் செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடக மாநில எம்ஜிஆர் தொண்டர்களும் பொதுமக்களும் பெங்களூர் இரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூடிய கூட்டத்தை பார்த்து மிரண்டுபோன இரயில்வே அதிகாரிகள் பெங்களூரிலிருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்க ஏற்பாடு செய்தனர்...
அந்த இரயில்தான் கீழே நீங்கள் படத்தில் பார்ப்பது...
தென்னக இரயில்வேயில் வண்டி பெட்டியின் கூரைமீது அமர்ந்து செல்ல அனுமதிப்பதில்லை...
ஆனால் எம்ஜிஆருக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்வதற்கு பெங்களூர் இரயில் நிலையத்தில் கூடிய கூட்டத்தை பார்த்த அதிகாரிகள் இதை தடுக்கவில்லை...
வார்த்தைகளால் இந்நிகழ்வை விளக்கிட இயலாது..
அனுபவத்தில் உணர்ந்தவர்களுக்கே புரியும்.................... Thanks wa.,
-
மதுரை- சென்ட்ரல் dts ஞாயிறு மாலை காட்சி மட்டும் சுமார் ரூபாய் 19000.00 வசூல் அள்ளியுள்ளது... வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "குடியிருந்த கோயில்"... வசூல் திலகம் எத்தனை தொலைக்காட்சிகளில் ஓளி பரப்பினாலும் திரையரங்கத்தில் வந்து தரிசிக்கும் ரசிகர்கள், பக்தர்கள் வாழ்க வளமுடன்...
-
#MGR_News_with_Unseen_Images
#கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது...
#அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.
விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித்ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்...
#விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.
உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார்...
‘#நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது...
#நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி...
#மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.
சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர்...
#அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.
‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.
‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.
‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம்...
#பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்...
‘‘#இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது...
#கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’
எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது...
----V P சிவகுமார்................ Thanks wa.,
-
உலகிலேயே முதன் முதலாக சண்டை காட்சிகளில் வேகத்தை புகுத்தி ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்தவர் டிபன்ஸஸோட பன்ச்சையும் அறிமுகப்படுத்தியவரும்
மக்கள் திலகம் தான்
28-4 -2019 அன்று மதுரை சென்டரலில் "குடியிருந்த கோயில்"!........... Thanks wa.,
ஹயாத் !
-
-
http://i68.tinypic.com/dyotxl.jpg
1968ம் ஆண்டில் வெளியான படங்களில் வெற்றியையும், வசூலையும் குவித்து முதலிடம் பெற்ற திரைக்காவியம் .
பல முறை வெள்ளித்திரைகளில் விஜயம் செய்து வசூல், வெற்றிகளை பல அரங்குகளில் குவித்து மகத்தான சாதனை புரிந்த படம்.
இம்முறை மதுரை சென்ட்ரலில் முதல் 4 நாட்களில் மட்டும் ரூ.1 லட்சத்தை
வசூலாக ஈட்டி இந்த ஆண்டில் இதுவரையில் திரையிடப்பட்ட படங்களுக்கு
சிம்ம சொப்பனமாக திகழ்ந்து , அரிய சாதனை புரிந்து வெற்றி நடை போடுகிறது
28/4/19 ஞாயிறு மாலை காட்சி மட்டும் அரங்கு நிறைந்து சுமார் ரூ.20,000/- வரை வசூலாகி உள்ளது .
தகவல் உதவி :மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.
-