Originally Posted by
chinnakkannan
வாவ்..தாங்க்ஸ் குகன் ஜி.. ஃபார் த ரெஸிப்பிஸ்..இங்கு பலாப்பழம் ரொம்ப சுமாராத் தான் கிடைக்கும்.. ஊர்லருந்து கொண்டுவரச் சொல்லி ட்ரை பண்ணனும்..
உங்க உணவுகளோட புகைப்படங்களைப் பார்த்தாலே நாவூறுது..
எனக்கு எரிசேரி பிடிக்கும்..செவ்வாழைப் பழமும் தான்..இங்க கிடைக்குது..ஆனா சுகர் அதிகம் கறதால வாழைப்பழம் சாப்பிடறதையே விட்டுட்டேன்..
நேற்று ஒரு ரெஸ்டாரெண்ட்ல ஓனம் சாத்யா சாப்பிட்டேன்..ஓகே..வெல்லத்தில ஒரு பாயசம்..(அடைப் பிரதமன்?),ஜவ்வரிசி ப்பாயசம், வடை, பாகற்காய்வத்தல், நே.சிப்ஸ்(உப்பு+வெல்லம்), முட்டைக்கோஸ் காரட் பொரியல், மோர்க்குழம்பு, சாம்பார், ரசம்,மோர், புழுங்கலரிசிச் சாதம்( நல்லவேளை வெள்ளை தான் - சிகப்பு இல்லை), இரட்டை அப்பளம்,உ.கி கறி என இருந்தன.. சில ஐட்டம் விட்டுப்போயிருக்கலாம்.. மெய்னாய் ஒரு இஞ்சிப்புளி என்று ஒன்று உண்டில்லையா..அது இல்லை..
போன சனிக்கிழமை மாங்காய் இஞ்சி, பச்சை மிளகு கிடைத்தது..அதில் வீட்டில் ஊறுகாய் செய்தார்கள்.. நன்னாயிட்டு இருந்தது..