courtesy- pradeep balu sir
http://i47.tinypic.com/166nhus.jpg
Printable View
courtesy- pradeep balu sir
http://i47.tinypic.com/166nhus.jpg
1977 மார்ச் மாதம் நடை பெற்ற பொது தேர்தலில் அண்ணா திமுக - காங் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியினை தொடர்ந்து 1977 ஜூன் மாதம் சட்ட சபை தேர்தலிலும் இந்தகூட்டணி தொடரும் என்று எதிர் பார்க்கப்பட்டது .
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி காட்சிகள் மாறியது .
மக்கள் திலகம் தலைமையில் அண்ணாதிமுக
திமுக
காங்கிரஸ்
ஜனதா
4 முனை போட்டி .அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்
முடிவு
மக்கள் திலகம் தலைமையிலான அண்ணா திமுக
மாபெரும் வெற்றி பெற்றது .
அன்புள்ள தெய்வத்தின் பக்தர்களுக்கு
நேற்று நமது புரட்சியாரின் எங்கவீட்டு பிள்ளை வெளியீட்டு விழா புதுச்சேரி நியூடோனில் நடைபெற்றது..
http://i45.tinypic.com/b7bfkk.jpg
மாலை 5.00 மணிக்கு தொடங்கிய விழாவின் முதல் நிகழ்ச்சியாக படப்பெட்டிக்கு தீபாராதனை நடைபெற்றது.தீபாராதனையில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்..
http://i50.tinypic.com/9tq3oz.jpg
இரண்டு நாட்களாக பொது மக்களுக்கு எங்க வீட்டுப் பிள்ளையின் சாதனை நோட்டீஸ் வழங்கப்பட்டது..இதில் விசேஷம் என்னவென்றால் தலைவரின் படத்தை பார்க்க வந்த ஒரு வெளிநாட்டினர் அந்த நோட்டிசை விநியோகித்தார்..படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன..தியேட்டர் எதிரில் ரசிகர்கள் கூட்டம் பட்டாசு வெடித்து கொண்டாடியது..இந்த நிகழ்ச்சியில் பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் நிர்வாகிகளும், மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளியின் பீடாதிபதி பூஜ்யஸ்ரீ நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் திரு. பாலமுருகன், +2 மாணவன் பாரதி.. கந்தா, ராமகிருஷ்ணன் நடராஜன், காந்தி, கண்ணன், முருகசாமி, ஜெபமணி, நாகராஜ் சோமசுந்தரம், பாரத எம்.ஜி.ஆர் சமூக நலப்பேரவை சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களின் விசேஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
நடாதூர் ஜனார்த்தன சுவாமிகளை பற்றி நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்..அவர் சிறு வயதிலிருந்தே தலைவரின் மேல் பற்று கொண்டவர்..நான் சிறுவயதில் தலைவரின் படங்களை பார்க்க போகும்போது எனக்கு முன்பு தியேட்டரில் இருப்பார். அப்போதிலிருந்து அவரை நான் அறிவேன். ஆனால் பேசி பழக்கமில்லை. கடந்த 5 வருடங்களாகத்தான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது..அவருடைய கோயிலில் அவர் முகத்தை பார்க்கவும் அவர் காலில் விழுந்தும் ஆசி வாங்குவதற்கும் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பக்தர்கள் காலில் விழுவதை அவர் நாசூக்காக தவிர்ப்பார் அப்படிப்பட்ட அவர் தலைவரின் படத்துக்காக இரண்டு நாட்களாக தியேட்டர் வாசலில் இருந்து பேனர், வாழைமரம், தென்னை மட்டை, கொடி, மாலை ஆகியவற்றை கட்டி அழகு பார்த்தார். அவரை தியேட்டர்ல பார்த்ததில் எல்லோருக்கும் ஆச்சர்யம்..சாமி உங்களை கோயில் பார்பதற்கே கஷ்டம்..இங்கே எப்படி..என்று எல்லோரும் அதிசயித்து போனார்கள்..நம் தலைவருக்கு நான் எங்கும் வருவேன்..எதுவும் செய்வேன்..என் உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னதும் நாங்கள் அனைவரும் உண்மையில் உணர்ச்சிவசப்பட்டு போனோம்.
http://i50.tinypic.com/2q9z22s.jpg
http://i50.tinypic.com/sv288n.jpg
2.அடுத்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர் ஒரு அமெரிக்கர்..அவருடைய பெயர் Basten CONUS அவர் தலைவரைப்பற்றி கேட்டார்..நிறைய தெரிந்துகொண்டார் நடிகராய் இருந்து முதலமைச்சராய் ஆனவர் என்று சொன்னேன். அதற்கு அவர் லைக் ரொனால்ட் ரீகன்? என்று கேட்டார். ஆமாம்..ஆனால் அவருக்கு முன்னோடி எங்கள் எம்.ஜி.ஆர்..என்றேன்..அவர் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்..எம்ஜிஆரை பற்றி நிறைய கேட்டறிந்து அதிசயித்து போனார். மேலும் திரைப்படதிர்கானா நோட்டிசை அவரே விநியோகித்தார்..அவருடைய ஈமெயில் முகவரியும் கொடுத்திருக்கிறார்..திரு.செல்வகுமார் சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..நம் தலைவரின் பெருமைகளை உங்களால் எவ்வளவு முடியுமோ எல்லாவற்றையும் முடிந்தால் புகைப்படத்துடன் அவருடைய ஈமெயிலுக்கு ஆங்கிலத்தில் அனுப்ப முடியுமா என்று கேட்டுகொள்கிறேன் (bconus@gmail.com).
http://i46.tinypic.com/mll0yo.jpg
3. அடுத்ததாக நமது +2 மாணவன் பாரதி..அவனுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது..படம் விளம்பரத்தை பார்த்ததிலிருந்து அவனும் ஆர்வமாகி விட்டான். 14ந்தேதி கணக்கு தேர்வு..அதை எழுதி விட்டு அன்று மாலையே தியேட்டரில் மாலை, கொடி, பேனர் கட்ட வந்துவிட்டான்..நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல்..இது உன்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் தேர்வு என்று சொல்லியும் கேட்காமல் அங்கே வந்துவிட்டான் .கேட்டதற்கு இதோடு எனக்கு திங்கள்தான் எக்ஸாம் என்றான். கூடவே இருந்து அன்று இரவு 10 மணிக்கு மேல் வீட்டுக்கு சென்றான்..மறுநாள் மாலை 5 மணிக்கு தியேட்டர் வந்துவிட்டான்..ஸ்க்ரீன் முன்பு ஆட்டம் பட்டம் போட்டுவிட்டு அதற்கு பிறகு ஹோட்டல் போய் 11 மணிக்கு வீட்டுக்கு சென்றான்..அவன் பத்தாம் வகுப்பில் 550 மார்க் எடுத்தான்..இந்த முறை 1000த்தை தாண்டிதான் என் மார்க் இருக்கும் என்கிறான்..நாம் அனைவரும் அவன் அதிக மார்க் எடுக்க பிரார்த்திப்போம்
http://i46.tinypic.com/3480uo7.jpg
ஆட்டோ பக்கத்தில் அமெரிக்கரின் பக்கத்தில் கட்டம் போட்ட சட்டை போட்டிருப்பவன்தான் பாரதி
4. அடுத்ததாக நம் விழாவிற்கு வந்தவர் நான் பணிபுரியும் தற்போதைய புதுச்சேரி அரசின் சபாநாயகர் அவர்களின் பெரிய மகன் அவர்களும் அவருடைய இரண்டு பிள்ளைகளும்..அதில் ஒரு பிள்ளைதான் படப்பெட்டிக்கு தீபாராதனையில் படப்பெட்டியை பிடித்திருப்பவன்..அவனும் எம்ஜிஆரின் ரசிகன்..4வது படிக்கிறான்..யாருமே படம் பார்க்க அஞ்சும் ஒரு தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார்..
மொத்தத்தில் இந்த தியேட்டரில் நம்முடைய தலைவர் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்றால்..அதுதான் அவருடைய சக்தி..என்பது..புதுச்சேரி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவது உண்மை.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் இனிமேல் இந்த தியேட்டருக்கு தலைவர் படத்தை கொடுக்காமல் பார்த்துக்கொள்ள முடியுமா...