http://i1.ytimg.com/vi/B4--ARPcRVo/m...jpg?v=4f8c1310
http://i.ytimg.com/vi/SdnOlP94x2g/0.jpghttp://i1.ytimg.com/vi/H2kPbPF7dIE/hqdefault.jpg
http://i1.ytimg.com/vi/KsqfDbJv33U/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/4Jh2J1Y-kbU/hqdefault.jpg
Printable View
டியர் வாசுதேவன் சார்,
நாயகிகள் தொடரில் கார்த்திக் சார் குறிப்பிட்டமாதிரி அதிகம் அறியப்படாத மைனாவதி பற்றி அழகாக விவரித்து அதற்கேற்ற புகைப்படங்களையும் அளித்திருக்கிறீர்கள். நன்றி.
தமிழ்த் திரையுலகம் தன்னிகரில்லா தவப் புதல்வனை ஈன்றெடுத்த இந்த பொன்னான நாளை, பராசக்தி பொக்கிஷப் புகைப்படங்களைப் பதிவு செய்து எல்லோரையும் கொண்டாடவைத்த தங்களுக்கு பாராட்டுக்கள், நன்றி.
இன்று கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள். அவருடைய நினைவைப் போற்றும் எனக்குப் பிடித்த ஒரு முத்தான தத்துவப் பாடல்
http://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ
Vasu Sir கலக்கறீங்க
Great postings
:smokesmile::-D
:-D:smokesmile:
கொடுங்கள்.. பெறுவீர்கள்!....
வாழ்கையில் NT நடந்துகொண்ட முறை :
நடிப்பை மட்டும் கொடுக்கவில்லை , அன்பையும் , சந்தோஷத்தையும் அதுவே பல திரிகள் கடந்து வெற்றியுடன் சென்று கொண்டிருக்கின்றது - அவரிடம் இருந்து கற்று கொள்ளவேண்டியவை இன்னும் எவ்ளவோ !!!--------------------------------------------
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி
எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர்
குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும்
மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச்
சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்தப் படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதைக் கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம்.மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும்
கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள்.செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்
NT shown the way - Part 2
NT எவ்வளுவு அழகாக இரண்டாவது நிலையையும் , முன்றாவது நிலையையும் தனது வாழ்க்கையிலும் , சினிமா துறையிலும் எடுத்து காட்டினார் . முதலாவது நிலை நட் க்கு தெரியாத ஒன்று .
மனிதனின் மூன்று நிலைகள்
.கடும் மழை.ஒருவர் மருத்துவ மனை செல்ல வேண்டும்.எல்லா ஆட்டோவும் நிற்காமல்செல்கின்றன.ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் இதுதான் தருணம் என்று முப்பதுரூபாய் தூரத்துக்கு 200 ரூ கேட்கிறார்.அந்த மனிதர் ஆட்டோவில் ஏறி வேறுஒரு இடத்தில் நிறுத்தி ஒரு பாட்டியைக் கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றிமருத்துவமனை செல்கிறார்.receptionist பாட்டியின் பெயரைக் கேட்க'இவர் என் பாட்டி இல்லை.தெருவில்மயங்கிக் கிடந்தார். உதவும் எண்ணத்தில் அழைத்து வந்தேன் " என்றார்.ஆட்டோ டிரைவர் மனதினுள் "இவ்வளவு நல்ல மனிதரிடம் அநியாயமாகப் பணம் பேசிவிட்டோமே என்று வேதனை அடைகிறார்.வைத்தியம் முடிந்ததும் டிரைவரே பாட்டியைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி உரியஇடத்தில் இறக்கி விட்டுப் பணம் வாங்க மறுத்து விடுகிறார்.
மனிதனிடம் மூன்று நிலைகள் உள்ளன.
1சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறக்கவேண்டும் என்று அற்பமாக நினைத்தல்
2.தானும் மனிதனாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுதல் இரண்டாவது நிலை.
3.பிறரைவிட சற்றேனும் கூடுதலாக நல்ல குணத்தை வெளிப் படுத்த நினைத்தால் மூன்றாம் நிலை.
ஆட்டோ டிரைவரிடம் இந்த மூன்று நிலைகளும் படிப் படியாகக் காணப் படுகின்றன.ஒரு தெளிவான மனமாற்றம் ஏற்படுகிறது. எல்லா மனிதரிலும் இப்படிப்பட்ட ஈர உள்ளம் இருக்கவே செய்கிறது.ஆனால் மனதின் அடி ஆழத்தில் உள்ளது.ஆழ் துளை borewell மூலம் ஈரத்தை வெளிக் கொணர வேண்டியுள்ளது. இந்த borewell போடும் பணியினை NT பல படங்கள் மூலமாக எடுத்துகூறியவர் ( Eg : Irumbu thirai , Avan thaan Manithan etc., ) - எதை விட வேறு என்ன பெருமை நமக்கு இருக்க முடியும் ?
:smokesmile::):)
NT எவ்வளுவு அழகாக இரண்டாவது நிலையையும் , முன்றாவது நிலையையும் தனது வாழ்க்கையிலும் , சினிமா துறையிலும் எடுத்து காட்டினார் . முதலாவது நிலை நட் க்கு தெரியாத ஒன்று .
ஆழ் துளை borewell மூலம் ஈரத்தை வெளிக் கொணர வேண்டியுள்ளது. இந்த borewell போடும் பணியினைச்
வாசு சார்
ஹப்ப்ப்ப்பப்பா.........பராசக்தி வெளியீட்டு 62வது ஆண்டை இதை விட சிறப்பாக கொண்டாட முடியாது என்கிற அளவிற்கு அற்புதமாக பிரமிப்பூட்டும் வகையில் கொண்டாடி விட்டீர்கள். 40க்கும் மேற்பட்ட Snapshots .... WOW ..... ஒவ்வொரு ஸ்டில்லுக்கும் மிகவும் சிரமப்பட்டு கடினமாக உழைத்து இந்த ரிசல்டைக் கொண்டு வர வேண்டும். எந்த ஒரு கலைஞனும் விட்டு விடாமல் அனைவரையும் தங்களுடைய பதிவுகளில் கவர் செய்து விட்டீர்கள். பதிவுத் திலகம் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.. சார்... தொடருங்கள்...
ராகவேந்திரன்
ரவி ...
தங்கள் அட்டகாசமான பதிவிற்குப் பாராட்டுக்கள்.