Enjoy the song from Dharmatma starring Feroz Khan & Hema
http://youtu.be/HVaKhdBaIQk
Printable View
Enjoy the song from Dharmatma starring Feroz Khan & Hema
http://youtu.be/HVaKhdBaIQk
ஹாய் க்ருஷ்ணா ஜி, வாசு சார் மதுண்ணாவ், ராஜேஷ்ஜி நன்றி..
கே.பி.ஏ.சி லலிதா தானும் இப்படிப் பேசப் படுவோம் என நினைக்கவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்ததாக எனது மத்தியானத் தூக்கத்தில் கனவில் வந்த என் பாட்டி சொன்னார்!
ம்ம் ராஜ பார்வை படம் வெகு நாள் முன்பு பார்த்தது.. நைஸ் ரைட் அப்..எல்வி.பிரசாத் தானே இதயக் கமலம் தயாரித்தவர்.. அழகே அழகு தேவதை பாடல் சுத்தமாக மறந்து விட்டிருந்தது எனக்கு நாலு வருடங்களுக்கு முன்னால்.. சென்னை சென்றிருந்த போது என் நண்பனின் காரில் கேட்டேன்..என்ன பாட்டுடா ஏதோ ரொம்ப ஸ்லோவா இருக்கறா மாதிரி இருக்கே என முதல் இரண்டு வரிகளில் கேட்க அவன் ஸ்டியரிங்கை விட்டு விட்டு என்னை முறைத்தான்..என்னடா மறந்து போச்சா ராஜபார்வை என பின் நினைவுக்கு வந்தது..
ராஜேஷ்..கேபிஏசி.ல வோட ஹிந்தி தகவலுக்கு தாங்க்ஸ்..
வாணி கணபதி – உன்னை நான்பார்த்தது வெண்ணிலா வேளையில் ஆடுபவர் தானே..ம்ம்
எஸ்.வாசுதேவன் சார்.ஹிந்திப்பாடல்களுக்கு நன்றி.
மதுண்ணா பேசு மனமே பேசு பார்க்கணும்..பாட்டு கேட்டிருக்கிறேன்..பி.பா. ஒரு தாங்க்ஸ்..
எஸ்.வி சார்..உ.சு.வா.. பாட்டை வைத்துகதை பண்ணியிருந்தார்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட படமாக்கிய விதம் அந்தக் காலத்து ரசிகனை மதித்து அவனுக்கு ஒரு ஃபுல் எண்ட்ர்டெய்ன்மெண்ட் வழங்க வேண்டும் விதம் விதமான நாடுகளைக் காண்பிக்க வேண்டும் என்ற சிந்தனையில் எடுத்து வழங்கிய எம்ஜிஆரின் டைரக்ஷன் பெருந்தன்மை மறக்க இயலாது..உ.சு.வா முழுக்க் முழுக்க எம்.ஜி.ஆர் தான்..பாராட்டெல்லாம் அவருக்குத்தான்..
*
*
மத்தியானம் கனவில் வந்த பாட்டியுடனான என் உரையாடல்
“ஹாய் பாட்டி”
“ஹாய்..என்னடா இது..இவ்ளோ குண்டாயிட்ட…ஒன் வயசுல ஒங்கப்பா எப்படி இருந்தான் தெரியுமா..
“சும்மா சொல்லாத பாட்டி.. அவரும் என்னை மாதிரிதான் இருந்திருப்பாரு..ஆமா ஏதோ வராதவ வந்திருக்க..எனக்கு ஒரு விஷ்யம் சொல்லேன்”
“யாரைப் பத்தி..மோனல் கஜ்ஜார் பத்தியா..சரி..இன்னிக்குலீவ் தானே..தலைக்குப் போட்டுக்கலையா..என்னடா அங்கங்க கொஞ்சம் வெள்ளையா இருக்கு..”
“ஷ்..பாட்டி ..நான் தான் கொஞ்சம் வயசான மாதிரி இருந்தா ஒரு கெட் அப்பா இருக்கும்னு கொஞ்சம் ஒய்ட் டை போட்டிருக்கேன்..இந்த எஸ்.ஜி.கிட்டப்பா எப்படி இருப்பார்..”
“ம் அது ஒரு காலம் டா கண்ணா நன்னா இருப்பான்..பார்த்துண்டே இருக்கலாம்..அல்பாயுசு..இங்க தான் சொர்க்கம் ரம்பா காலனில நாப்பதாம் நம்பர் வீட்ல இருக்கான்…வில்கிப்பீடியால பாத்தியோ..அதுஎன்ன சொல்லுதுன்னா..
எஸ். ஜி. கிட்டப்பா (S. G. Kittappa) என்று அழைக்கப்பட்ட செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (ஆகத்து 25, 1906 – டிசம்பர் 2, 1933) சினிமா காலத்துக்கு முன்பே 1920களில் பிரபலமாயிருந்த ஒரு செவ்வியல் பாடகர் மற்றும் நாடகக் கலைஞர். இவர் சினிமா நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் கணவர்.”
“அதைச் சொல்ற்துக்கு நீ எதுக்கு பாட்டி.. கே.பி.எஸ் பிடிக்குமா..”
“ம்..கொடுத்து வச்சவ.. நல்ல புருஷன்..ஆனா ஆறே வருஷம் தான் வாழ்ந்தா புருஷனோட..ஆனா குரல் இருக்கே வெகு கம்பீரம்..”
“ஆமா பாட்டி பழம் நீயப்பா ல்லாம் பார்த்திருக்கேன்..”
“காரணமில்லாம எலி ரேமண்ட்ஸ் ஸ்யூட்லாம் போடாதே..எதுக்குக் கேக்கறன்னு சொல்லட்டா....
“சொல்லு..”
“கே.பி.எஸ் ஸோட காதல்கதை தான் காவியத் தலைவன்னு தினமலர்லபோட்டிருக்கான்..அதானே..”
“ஆமா பாட்டி..அந்தக்கால லவ்வாச்சே..படம் ஓடுமா என்ன..”
“அதான் அவங்க கதை இல்லைன்னு வசந்த பாலன் சொல்லியிருக்காரே..இன்ஸ்பிரேஷன் மட்டும் தானாம்.. அப்புறம் கண்ணா காதல் எந்தக்கால்த்துலயும் காதல் தான்..இதுல அந்தக்காலம் என்ன இந்தக்காலம் என்ன..இந்த வேதிகாப்பொண்ணு இருக்காளே அவ என்ன ஓ.கேயாத் தானே இருக்கா...”
“போங்க பாட்டி நல்லாத் தான் இருக்கா..இப்படில்லாம் பட்டுனு கேக்காதீங்க..இவ காதுல விழுந்துடப் போவுது..”
“அடப்பாவி.. அவள மாதிரித்தான் நான் சின்ன வயசுல இருந்தேன்னு சொல்ல வந்தேன்..இந்தா கொட்டு வாங்கிக்கோ”
“ஆ” என முழித்து விட்டேன்..!
நாலு வேலி நிலம் லஷ்மி விஜயம் பாடல்கள் பார்த்தேன் வாசு சார் .. நான் பார்த்திராத கேட்டிராத பாடல்கள்.. நன்றி
மதுண்ணா சொல்லத்துடிப்பது என்ன நல்ல பாட்டு ஜெம்னி- நிம்மி ஜோடி க்யூட்.. தாங்க்ஸ்
கிருஷ்ணா சார்..ரொம்ப நாளைக்கப்புறம் அழகே அழகு தேவதை பார்த்தேன்.. நைஸ்.. இது மாதிரி இப்ப ஒரு இப்பவே இப்பவே அழகுப் பாட்டு ராமன் தேடிய சீதைல இருக்கு தெரியுமா.. தாங்க்ஸ்
காவிரிமைந்தன் பற்றித் தெரியாது..மு.மேத்தா தெரியும் அவர் சினிமாப்பாட்டுன்ன வுடனே நினைவுக்கு வருவது.. தோட்டத்தில பாத்திகட்டி – வேலைக்காரன் ரஜ்னி-சொ.பு. அப்புறம் தேனருவியில் நனைந்திடும் மலரோ – ஆகாய கங்கை சுஹாஸ்-கார்த்திக்
டிகேஏசி. நளினாவிற்குப் பதில் ல்லிதா என எழுதிவிட்டேன்..அது காட்சிப் பிழை!
From Padmini's Hindi movie Kalpana
Bekasi Had se Jab Guzar Jaye........
http://www.youtube.com/watch?v=QKL_GPfsABE
Raga: Desh
I posted this in Hindi songs thread long time back. Hope you don't mind the repetition. :)
Padmini made her debut in another Kalpana released in 1948 produced by Uday Shankar, a famous dancer.
சின்ன கண்ணன் சார்
உலகம் சுற்றும் வாலிபன் - படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு எம்ஜிஆர்தான் முழு காரணம் - உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை ..
மதுஜி!
இதோ நீங்கள் கேட்ட பாடல். 'நானும் ஒரு பெண்' திரைப்படத்தில் நம் இசையரசி பாடிய, படத்தில் இடம் பெறாத இன்னமுத கானம்.
'கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
உன் கனிமுகத்தின் தரிசனத்தைப் பார்த்திருந்தேன்'
ஆகா! என்ன ஒரு அருமையான பாடல். எப்போதோ கேட்டது. முதல் வரி கேட்டவுடன் டபார்' என்று ஞாபகம் வந்துவிட்டது. பாடல் முடிந்தவுடன் கண்களின் ஓரங்களில் நீர் கசிந்தது தெரிந்தது. அதுவும் 'உன்னைக் கண்ட கண் ஒருநாள் ஓய்ந்து விடும் ....உனக்கு உணவளித்த கை ஒருநாள் சாய்ந்து விடும்' வரிகள் ரொம்பவே கலங்க வைத்து விட்டன. சுசீலாம்மா... என்ன சொல்வது? நா எழ வில்லை.
அருமையான பாடலை நீண்ட நாட்களுக்குப் பிறகு நினைவு கூறச் செய்த உங்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.
இந்தப் பாடலை எனக்காக அளித்த என் அன்பு நண்பர் பலே பலே அவர்களுக்கு என் மகிழ்ச்சியான நன்றியை நமது திரியின் மூலமாகக் கூறிக் கொள்கிறேன்.
இனி பாடலின் முழு வரிகள்.
http://i.ytimg.com/vi/uPYFg_TIqy4/hqdefault.jpg
கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
உன் கனிமுகத்தின் தரிசனத்தைப் பார்த்திருந்தேன்
இன்னமுத பேச்சினிலே மயங்க வைத்தாய்
உன் இதயத்திலே எனக்கு ஒரு இடம் கொடுத்தாய்
கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
வண்ண மலர் சிரிப்பையெல்லாம் வழங்க வந்தாயே
எண்ணமதில் ஊர்வலமாய் எழுந்து வந்தாயே
வாழ்க்கை எனும் போர்க்களத்தில் எனைப் பிடித்தாயே
இன்ப வரம் கொடுத்து அன்பினிலே மகிழ்ந்திருந்தாயே
கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
மண மேடை வாசலிலே வந்து நின்றேனே
மலை போன்ற துயரம் அங்கே கண்டு நின்றேனே
மயங்காதே என்று சொல்லி தேற்ற வந்தாயே
மனைவி என்ற பெருமை தந்து காக்க வந்தாயே
கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
உன்னைக் கண்ட கண் ஒருநாள் ஓய்ந்து விடும்
உனக்கு உணவளித்த கை ஒருநாள் சாய்ந்து விடும்
உன்னைக் கண்ட கண் ஒருநாள் ஓய்ந்து விடும்
உனக்கு உணவளித்த கை ஒருநாள் சாய்ந்து விடும்
என் உயிர் பறந்து போனாலும் உறவிருக்கும்
உயிர் பறந்து போனாலும் உறவிருக்கும்
என் உள்ளம் என்றும் உன் மடியில் தவமிருக்கும்
கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
உன் கனிமுகத்தின் தரிசனத்தைப் பார்த்திருந்தேன்
இன்னமுத பேச்சினிலே மயங்க வைத்தாய்
உன் இதயத்திலே எனக்கு ஒரு இடம் கொடுத்தாய்
கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
http://www.mediafire.com/listen/8ij3...en-+Susila.mp3
காலை வணக்கம் வாசு ஜி
வணக்கம் ராஜேஷ்ஜி!
இசையரசியின் கண்ணழகின் சன்னதியில்' கேட்டீர்களா?