சிக்கா...
பெண்ணைச் சொல்லி குற்றமில்லை ஓய்.விஜயா இப்படி இருப்பார்....
https://www.youtube.com/watch?v=BLXPGwHiUAY
Printable View
சிக்கா...
பெண்ணைச் சொல்லி குற்றமில்லை ஓய்.விஜயா இப்படி இருப்பார்....
https://www.youtube.com/watch?v=BLXPGwHiUAY
வாசு ஜி...
இது டி.ஆர்.பாப்பா இசையில் கண்ணில் தெரியும் கதைகள் படப்பாடல்...
https://www.youtube.com/watch?v=bJGyyNHgI8A
காலை வணக்கம்
திரையில் பக்தி -
கேள்வி- பதில் தொடர்கிறது
http://i818.photobucket.com/albums/z...psmpfulyec.jpg
திரையில் பக்தி
கேள்வி -பதில்
பதிவு 1
கேள்விகள்
ஒருவர் கேட்கிறார் இறைவன் உண்மையில் இருக்கின்றானா ? இருந்தால் அவன் உலகத்தில் எங்கே வாழ்கிறான் ??
இன்னொருவர் கேட்கிறார் - கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் - அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் -----------
அடுத்தவரோ காதலித்தவன் மீதும் குற்றம் இல்லை , காதலி மீதும் குற்றம் இல்லை - அந்த கடவுள் செய்த குற்றம் என்கிறார் .....
பதில்கள் :
பிறரின் மீது குற்றம் சுமத்துவது மிகவும் சுலபமான வேலை - அதிலும் கண்ணுக்குத்தெரியாத கடவுளைத் திட்டினால் அவர் என்ன நம்மை கேட்கவா போகிறார் ?
அதிகமாக சோதனைகள் வரும் போதுதான் ஏசு நம்மை நெருங்குகிறார் என்கிறது பைபிள் ..... இதையேத்தான் குந்தியும் கண்ணனிடம் வேண்டுகிறாள் , " கண்ணா உன்னை என்றும் நான் மறக்காமல் இருக்க வேண்டும் - அதனால் எனக்கு துன்பங்களையே கொடு - இன்பமும் , மகிழ்ச்சியும் வந்தால் உன்னை நினைக்க நேரம் கிடைக்காது ..... குரான் சொல்லும் தத்துவமும் இதுதான் .
The Quran stresses the importance of man’s discovery of truth at the level of realization. True faith in god is what one achieves at such a level. Where there is no realization , there is no faith.
கண்ணதாசன் சொல்வதும் இதைத்தான் " உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் - இதை உணர்ந்துகொண்டால் துன்பம் எல்லாம் விலகும் !"
நம்பிக்கை வைக்காத பக்தி என்பது பாலில் உப்பை சேர்த்து குடிப்பதைப்போல --- தெய்வம் தனியாக கோயில்களில் இருப்பதில்லை , இதோ இங்கு சொல்லப்படும் எல்லாவற்றிலும் இருக்கிறது - இவைகளில் தெய்வம் இருப்பதை உணர்ந்து கொண்டால் அவன் சிரிப்பதும் நம் செவிகளில் விழும் .நாமும் படைத்தவனை குற்றம் சொல்லத்தேவையில்லை .....
பகுதி 2
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்......
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கோடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கோடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.
ஆ...ஆ.....ஆ......ஆ......ஒ......ஒ......ஒ,..... .
https://www.youtube.com/watch?v=k3YN..._ZE_TQqyF5U1bK
பகுதி 3
தெய்வம் இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
தெய்வம் இருப்பது எங்கே
பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு
தெய்வம் இருப்பது எங்கே
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை
இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு
இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
இவை தான்தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு
தெய்வம் ஏற்கும் உனது தொண்டு
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே?
https://www.youtube.com/watch?v=Ry7xzM477BI
தெய்வத்தை கோயில்களில் மட்டும் தேடுவது தவறு - அவன் நாம் செய்யும் தொழில்களில் இருக்கிறான் , நாம் செய்யும் கொடையில் , காட்டும் பரிவில் , இனிமை கலந்து நாம் பேசும் வார்த்தைகளில் , மற்றவர்களின் முன்னேற்றத்தில் நாம் காட்டும் அக்கரையில் - அவனுக்கு உருவம் இல்லை - நாம் தான் அவன் உலகம் - அவனை நம்மிடம் வரவழைக்க நம்மிடம் இருக்கும் ஒரே கருவி , கர்வம் அற்ற அன்புதான் - நம்மிடம் ஒளிந்திருக்கும் குற்றங்களை அவன் மீது சுமத்தி அவனை திட்டுவதும் , நீ உண்மையில் இருக்கிறாயா என்று கேட்பதும் குழந்தைத்தனமானது - இந்த கேள்விகளுக்கு இந்த இரு பாடல்கள் அழகான விளக்கம் அளிக்கின்றன ......
திரையில் பக்தி
கேள்வி பதில்
பகுதி 4
அன்று முதல் இன்று வரை பல கேள்விகள் - பதில்கள் முக்கியமாகத் தெரிவதில்லை . ஏன் இறைவன் என்னை படைத்தான் ? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு தோல்விகள் , ஏமாற்றங்கள் ? துன்பங்கள் ? என்னை விட அடுத்தவன் எந்த வகையில் உயர்ந்தவன் ? அவன் மட்டும் எப்பவுமே மகிழ்ச்சியாக இருக்கிறானே ??? கடவுள் ஒரு கல் தானே ??? தன்னைப்பற்றியே புரிந்துக்கொள்ளாதவன் இறைவனை எப்படித்தெரிந்துக்கொள்ள போகிறான் ? தனக்கு கிடைத்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இன்னொருவர் நிழலில் இருக்கவே விரும்புகிறோம் ...வெறும் xerox காப்பியாகவே வாழ்க்கை செல்கிறது - ஏன் என்ற கேள்விகள் பிறந்த வண்ணம் இருக்கின்றன - பதில்கள் மடிந்த வண்ணம் இருக்கின்றன - இதைத்தான் சிலர் முற்போக்கு சிந்தனை என்று அழைக்கின்றனர் . இத்தனை கேள்விகளுக்கும் நமக்குத் தேவையான நல்ல பதில் கிடைக்குமா ?? பார்ப்போம் !!
https://www.youtube.com/watch?v=8an-tVU3Uxk
பதில் :
எல்லா கேள்விகளுக்குமே நல்ல பதில்கள் கிடைக்கும் - நாம் தான் சற்று பொறுத்திருக்க வேண்டும் . மேலே இருப்பவர் கேள்விகளை கேட்கிறார் . இதோ பதில் கிடைத்த மகிழ்ச்சியில் இன்முகத்துடன் இவர் நடந்து செல்கிறார் .. வாழ்க்கை பொறுமையை நமக்கு கற்று தருகின்றது - இறைபக்தி நம்மை நல்ல வழியில் நடந்து செல்ல உதவுகின்றது ....
https://www.youtube.com/watch?v=JiqTqJILB1k
நாளை இன்னும் சில கேள்வி பதில்களுடன்
சி.செ. சார்
தாங்கள் ஓய்வு பெறும் பிராயத்தில் இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கெல்லாம் யூகிக்க முடியாத ஒன்றாக இருந்து விட்டதே. வியட்நாம் வீடு பத்மநாபன் போல கிட்டத்தில் வரும் போது தான் இதையெல்லாம் தெரிந்து கொள்கிறோம். எல்லாம் அந்த நடிகர் திலகத்தால் வந்தது. மனுஷன் நமக்கு வயசு உடம்பு இதையெல்லாம் கவனிக்கவே முடியாத படி அவரே கதியென்று இருக்கும் படி செய்து விடுகிறார்.
தங்களின் ஓய்வு காலம் சிறப்பாகவும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கும் வகையில் உடல் ஆரோக்கியத்துடனும் அமைய இறைவனிடம் தங்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தரும்படி வேண்டிக்கொள்கிறோம். தங்களுடைய ஆராய்ச்சி மாணவர்கள் மேலும் சிறப்பெய்தி தங்களுக்கு சிறப்பு சேர்ப்பார்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ஆரம்ப கால விஜயா ஒய். விஜயா.
பின்னாட்களில் ஒய் விஜயா? என்னும் படி ஆகி விட்டதே...
பி.கு. {இது கே.ஆர்.இனிஷியல் போட்டாலும் பொருந்துமோ...}