http://i61.tinypic.com/5ple9l.jpg
Printable View
வாமனன் கூட தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் எழுதுவார். பல தகவல்கள் திரட்டியிருந்தாலும் சில தவறுகளும் உண்டு.
நண்பர்களே,
கிட்டத்தட்ட விட்டு விடலாம் என்றே இருந்தேன். ஏனென்றால் வியாபாரத்தில் எக்கசக்க தொல்லைகள்.இரவில் தூக்கமின்றி கழித்து அவதியுற்று கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி, ஏன் பிரிய திரிக்கு செல்வதேயில்லை,relaxed ஆக இருப்பீர்களே, என்றதற்கு ,நான் இப்போது உவப்பாக இல்லை. என் இயல்புக்கு ஒத்து வராததால் அங்கேயும் பிரச்சினைதான் என்றேன்.ஆனால் ,அவர்கள் ஒப்பு கொள்ளாமல், நண்பர்களுடன் , உரசல்தானே ,பகைமை இல்லையே ,பிறகு ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று என்னை ஊக்குவித்ததால் ஏற்கெனவே ஆரம்பித்து ,சரியாக தொடராததை திருப்புகிறேன்.
அஜித் ஹரி ,என் film society நண்பன்.film institute (புனே)இயக்கம்,எடிட்டிங் இரண்டிலும் பட்டம்.நானும் அவனும் மெட்ராஸ் பிலிம் சொசைட்டி,காம்பஸ் பிலிம் சொசைட்டி,என்று தொடர்பவர்கள்.நான் கிட்டத்தட்ட 28 மொழிகளின் 7500 படங்கள் பார்த்து என் வாழ்நாளில் 33 சதம் படத்தில் ,படிப்பதில் (இலக்கியம் ) செலவழித்தவன்.நானும் ஹரியும் சேர்ந்து உலக படங்களை பட்டியலிட்டு மகிழ்நத ஒரு தருணத்தில் அவன் கேட்ட கேள்வி. கோபால் ,கிட்டத்தட்ட அத்தனை தமிழ் படங்களையும் பார்த்தவன் என்ற முறையில் ,உன்னால் மட்டுமே முடியும் என்ற வகையில் பத்தாண்டுகளாய் பிரித்து பட்டியலிடேன் .இது முந்தையவர்களாலும் முடியாது. இன்றையவர்களாலும் முடியாது. முடிய கூடியவர்களுக்கு , உன் மாதிரி பறந்து பட்ட உலக பரிச்சயம் இருக்காது என்றதால் ,அவனுக்காக இதை 1992 இல் 90 வரை செய்து காட்டி , பிறகு அடுத்தடுத்த பத்துகளையும் சேர்த்தேன். அவன் விருப்ப படியே இங்கு பிரசுரித்தேன். ஹரியிடம் வருந்தினேன். ஒரு சில்லறை நடிகையை பற்றி நூறு பக்கம் விவாதிக்கிறார்கள் ,ஆனால் இதை கவனித்தவர்கள் மூவரே என்றேன்.
அவன் திருப்பி கேட்டது ,உரிய முன்னுரையுடன் செய்தாயா என்று.இல்லை,திடீர் பதிவென்றேன்.அதற்கு ஹரி திருப்பி போடு நம் உரையாடலுடன் ,அவர்களிடமிருந்து தொடர் கவனிப்பு வந்து உனக்கே நீ மிஸ் பண்ணியது,தவறாக சேர்த்தது தெரிய வரலாம் என்றான் நேற்று. இன்று ஹரிக்காக மீண்டும். (வாசு ,முரளி நீங்கள் பார்த்திருப்பீர்கள் அவனை முதல் நிகழ்ச்சியில் )
கோபு சார்,
தங்கள் பாராட்டிற்கு நன்றி! எனக்கும் மிகவும் பிடித்த பாடல் ஏழைப் பங்காளன் பாடல்.
50 களின் சிறந்த படங்கள்.(கோபால் விருப்பம்)
1951- ஓர் இரவு,சம்சாரம்,பாதாள பைரவி,மர்ம யோகி.
1952-பராசக்தி.
1953-ஒவ்வையார்.,தேவதாஸ்,மனம் போல் மாங்கல்யம்.
1954-அந்த நாள்,எதிர்பாராதது,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,கூண்டுக்கிளி,தூக்கு தூக்கி,மனோகரா,ரத்த கண்ணீர்,ராஜி என் கண்மணி,மலை கள்ளன்.
1955-மிஸ்ஸியம்மா,முதல் தேதி.
1956-அமர தீபம்,நானே ராஜா,பெண்ணின் பெருமை,ரங்கூன் ராதா,ராஜா ராணி.
1957- புதையல்,மக்களை பெற்ற மகராசி,மாயா பஜார்.
1958-அன்னையின் ஆணை,உத்தம புத்திரன்,சபாஷ் மீனா,வஞ்சி கோட்டை வாலிபன்,நாடோடி மன்னன்.
1959-கல்யாண பரிசு,பாக பிரிவினை,வீர பாண்டிய கட்ட பொம்மன்,சிவகங்கை சீமை.
1960-அடுத்த வீட்டு பெண்,இரும்பு திரை,களத்தூர் கண்ணம்மா,படிக்காத மேதை,தெய்வ பிறவி ,பாதை தெரியுது பார்.
50 களின் மிக சிறந்த பத்து.
1)அந்த நாள்.
2)பராசக்தி.
3)மிஸ்ஸியம்மா.
4)ரங்கூன் ராதா.
5)பாக பிரிவினை.
6)மலை கள்ளன்.
7)தேவதாஸ்.
8)உத்தம புத்திரன்.
9)வீர பாண்டிய கட்ட பொம்மன்.
10)ரத்த கண்ணீர்.
1960 களின் சிறந்த படங்கள்(Gopal Choice).
1961 -பாவ மன்னிப்பு,பாச மலர்,பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்.
1962- அன்னை,ஆலய மணி,காத்திருந்த கண்கள்,சாரதா,சுமைதாங்கி,நெஞ்சில் ஓர் ஆலயம்,பலே பாண்டியா,படித்தால் மட்டும் போதுமா,பாசம்.
1963-இருவர் உள்ளம்,பார் மகளே பார்,பெரிய இடத்து பெண்,மணியோசை,கற்பகம்.
1964-கர்ணன்,ஆண்டவன் கட்டளை,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,கருப்பு பணம்,சர்வர் சுந்தரம்,பொம்மை,காதலிக்க நேரமில்லை,படகோட்டி.
1965-திருவிளையாடல்,எங்க வீட்டு பிள்ளை,ஆயிரத்தில் ஒருவன்,ஆசை முகம்,என்னதான் முடிவு,குழந்தையும் தெய்வமும்,வாழ்க்கை படகு,வெண்ணிற ஆடை,ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் ,நாணல்,நீர்க்குமிழி,உன்னை போல் ஒருவன்.இதய கமலம்.
1966- செல்வம்,தாயே உனக்காக,மோட்டார் சுந்தரம் பிள்ளை, ராமு,மெட்ராஸ் டு பாண்டிச்சேரி,மேஜர் சந்திரகாந்த்,யாருக்காக அழுதான்,வல்லவன் ஒருவன்.அன்பே வா.
1967-ஊட்டி வரை உறவு,இரு மலர்கள்,திருவருட்செல்வர்,நான்,பட்டணத்தில் பூதம், பாமா விஜயம்,ஆலயம்,சாது மிரண்டால்,கண் கண்ட தெய்வம்,அதே கண்கள்,மாய மோதிரம்.
1968-தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,கலாட்டா கல்யாணம்,குடியிருந்த கோயில்,எதிர் நீச்சல்,குழந்தைக்காக ,சக்கரம்,பணமா பாசமா,ஜீவநாம்சம்.
1969-தெய்வ மகன்,சிவந்த மண்,காவல் தெய்வம்,அடிமை பெண்,வா ராஜா வா,பூவா தலையா,இரு கோடுகள்,சாந்தி நிலையம்,துலாபாரம்,மன்னிப்பு,
1970-பாதுகாப்பு,வியட்நாம் வீடு,எங்கிருந்தோ வந்தாள் ,காவிய தலைவி,காலம் வெல்லும்,நடு இரவில்,நம்ம குழந்தைகள்,மாட்டுகார வேலன்.
மிக சிறந்த முதல் பத்து.
1)தில்லானா மோகனாம்பாள்
2)புதிய பறவை.
3)திருவிளையாடல்,
4)பாச மலர்.
5)நெஞ்சில் ஓர் ஆலயம்
6)காதலிக்க நேரமில்லை.
7)பாமா விஜயம்.
8)அன்பே வா
9)எங்க வீட்டு பிள்ளை.
10)வியட்நாம் வீடு.
70 களின் சிறந்த படங்கள்(கோபால் சாய்ஸ் )
1971- சுமதி என் சுந்தரி,சவாலே சமாளி,பாபு,புன்னகை,நூற்றுக்கு நூறு,மீண்டும் வாழ்வேன்,சபதம்,உத்தரவின்றி உள்ளே வா,ஆதிபராசக்தி.
1972-ராஜா,ஞான ஒளி ,பட்டிக்காடா பட்டணமா,வசந்த மாளிகை,நீதி,காசேதான் கடவுளடா,புகுந்த வீடு,மிஸ்டர் சம்பத்,வெள்ளி விழா,
1973-அரங்கேற்றம்,அலைகள்,உலகம் சுற்றும் வாலிபன்,கெளரவம்,சூரியகாந்தி,சொல்லத்தான் நினைக்கிறேன்,பொண்ணுக்கு தங்க மனசு,எங்கள் தங்க ராஜா,ராஜபார்ட் ரங்கதுரை..
1974-அவள் ஒரு தொடர்கதை,தாகம்,திக்கற்ற பார்வதி,நான் அவனில்லை,தங்க பதக்கம்,அக்கரை பச்சை.
1975-அபூர்வ ராகங்கள்,அவன்தான் மனிதன்,இதய கனி,பல்லாண்டு வாழ்க,உறவு சொல்ல ஒருவன்.
1976-அன்ன கிளி,உணர்ச்சிகள்,ஒ மஞ்சு,பத்ரகாளி,மன்மத லீலை,மூன்று முடிச்சு,ரோஜாவின் ராஜா.
1977-அவர்கள்,அவர் எனக்கே சொந்தம்,காயத்ரி,சில நேரங்களில் சில மனிதர்கள்,தீபம்,தூண்டில் மீன்,புவனா ஒரு கேள்வி குறி,16 வயதினிலே..
1978- அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது,ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,கிழக்கே போகும் ரயில்,சட்டம் என் கையில்,சிவப்பு ரோஜாக்கள்,நிழல் நிஜமாகிறது,தப்பு தாளங்கள்,முள்ளும் மலரும்,மனிதரில் இத்தனை நிறங்களா,ஜகன் மோகினி.
1979-இரு நிலவுகள்,அக்ரஹாரத்தில் கழுதை,அழியாத கோலங்கள்,உதிரி பூக்கள்,கல்யாண ராமன்,நினைத்தாலே இனிக்கும்,பசி,ரோசாப்பூ ரவிக்கைகாரி.
1980-நெஞ்சத்தை கிள்ளாதே,பூட்டாத பூட்டுக்கள்,கிராமத்து அத்தியாயம்,நிழல்கள்,மூடுபனி,உச்ச கட்டம்,ஒருதலை ராகம்,ஜானி,வறுமையின் நிறம் சிகப்பு.
70 களின் மிக சிறந்த பத்து.
1)அவள் அப்படித்தான்.
2)முள்ளும் மலரும்.
3)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
4)16 வயதினிலே.
5)உதிரி பூக்கள்.
6)அழியாத கோலங்கள்.
7)நூற்றுக்கு நூறு.
8)மன்மத லீலை.
9)நான் அவனில்லை.
10)கெளரவம்.
80களின் சிறந்த படங்கள்(கோபால் சாய்ஸ்)
1981-மௌன கீதங்கள்,அந்த ஏழு நாட்கள்,அலைகள் ஓய்வதில்லை,ஆறிலிருந்து அறுபது வரை,குடும்பம் ஒரு கதம்பம்,டிக் டிக் டிக்,47 நாட்கள்,நெற்றி கண்,தண்ணீர் தண்ணீர்,பன்னீர் புஷ்பங்கள்,பாலைவன சோலை,ராஜ பார்வை,மீண்டும் கோகிலா,தில்லுமுல்லு.
1982-ஏழாவது மனிதன்,எங்கேயோ கேட்ட குரல்,கோழி கூவுது,துணை,பரீட்சைக்கு நேரமாச்சு,பயணங்கள் முடிவதில்லை,மணல் கயிறு,மூன்றாம் பிறை,மூன்று முகம்,மெட்டி.
1983-இன்று நீ நாளை நான்,ஒரு இந்திய கனவு,ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது,கண் சிவந்தால் மண் சிவக்கும்,முந்தானை முடிச்சு,மண் வாசனை,சலங்கை ஒலி .
1984-அச்சமில்லை அச்சமில்லை,நூறாவது நாள்,வாழ்க்கை,விதி,வைதேகி காத்திருந்தாள் ,சிறை.
1985-முதல் மரியாதை,ஆண் பாவம்,பூவே பூச்சூடவா,மயூரி,யார்,ஹேமாவின் காதலர்கள்,மீண்டும் ஒரு காதல் கதை,பகல் நிலவு.
1986-ஊமை விழிகள்,சம்சாரம் அது மின்சாரம்,புன்னகை மன்னன்,மௌன ராகம்,விக்ரம்,பாலைவன ரோஜாக்கள்.
1987-கடமை கண்ணியம் கட்டுப்பாடு,நாயகன்,பூவிழி வாசலிலே,பேசும் படம்,ரெட்டை வால் குருவி,வேதம் புதிது.
1988-அக்கினி நட்சத்திரம்,உன்னால் முடியும் தம்பி,கதாநாயகன்,சத்யா,மண மகளே வா,வீடு.
1989-அபூர்வ சகோதரர்கள்,அன்று பெய்த மழையில்,இதுதாண்டா போலிஸ்,கரகாட்டகாரன்,புதிய பாதை,புது புது அர்த்தங்கள்,வருஷம் 16,மாப்பிள்ளை,வெற்றி விழா.
1990-அஞ்சலி,அரங்கேற்ற வேளை ,உச்சி வெய்யில்,கிழக்கு வாசல்,கேளடி கண்மணி,த்யாகு,புரியாத புதிர்,புலன் விசாரணை,ராஜா கைய வச்சா,மைக்கேல் மதன காம ராஜன்.
80 களின் மிக சிறந்த பத்து.
1)முதல் மரியாதை.
2)நாயகன்.
3)ராஜ பார்வை.
4)பேசும் படம்.
5)அபூர்வ சகோதரர்கள்.
6)அக்கினி நட்சத்திரம்.
7)மீண்டும் ஒரு காதல் கதை.
8)தண்ணீர் தண்ணீர்
9)வீடு.
10)அந்த ஏழு நாட்கள்.
90களின் சிறந்த படங்கள்(கோபால் தேர்வு)
1991- சந்தியா ராகம்,அழகன்,இதயம்,கேப்டன் பிரபாகரன்,தளபதி,கோபுர வாசலிலே,மகாநதி,குணா,சின்ன தம்பி,சிகரம்.
1992-சின்ன கவுண்டர்,தேவர் மகன், நாங்கள்,மன்னன்,ரோஜா,சூரியன்.
1993-உழவன்,கேப்டன் மகள்,சின்ன மாப்பிள்ளை,தசரதன்,திருடா திருடா,கிழக்கு சீமையிலே,ஜென்டில் மேன் ,மறுபடியும்,புதிய முகம்.
1994-பம்பாய்,கருத்தம்மா,காதலன்,ஆனஸ்ட் ராஜ்,டூயட்,
நம்மவர் ,நாட்டாமை,மகாநதி, வியட்நாம் காலனி ,மகளிர் மட்டும்.
1995-ஆசை,இந்திரா,குருதி புனல்,சதி லீலாவதி,பாட்ஷா,மோக முள்,அவதாரம்.
1996-அவ்வை ஷண்முகி,இந்தியன்,உள்ளத்தை அள்ளி தா,காதல் கோட்டை,கோகுலத்தில் சீதை,பூவே உனக்காக,சிறை சாலை.
1997-இருவர்,மின்சார கனவு,காதலுக்கு மரியாதை,பாரதி கண்ணம்மா,சூரிய வம்சம்.
1998-உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,காதல் மன்னன்,பூவேலி,ஜீன்ஸ்.
1999-அமர்க்களம்,சேது,படையப்பா,முதல்வன்,வாலி.
2000-அலை பாயுதே,கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்,கண்ணுக்குள் நிலவு,குஷி,தெனாலி,மல்லி,ரிதம்,வெற்றி கொடி கட்டு,வானத்தை போல.ஹே ராம்.
90 களின் சிறந்த பத்து
1)தேவர் மகன்.
2)மகாநதி.
3)மகளிர் மட்டும்.
4)அவதாரம்.
5)மோக முள்.
6)சேது.
7)மின்சார கனவு.
8)வாலி.
9)ஜென்டில் மேன்
10)ஆசை.
2001-2010 என்னை கவர்ந்த படங்கள்.
ஆளவந்தான், டும் டும் டும், 12 b ,தில்,தினா,பாண்டவர் பூமி,பூவெல்லாம் உன் வாசம்,மின்னலே,மிடில் கிளாஸ் மாதவன்,கன்னத்தில் முத்தமிட்டால் ,சொல்ல மறந்த கதை,பஞ்ச தந்திரம்,பம்மல் கே சம்பந்தம்,ரமணா,இயற்கை,காக்க காக்க,காதல் கொண்டேன்,தூள்,பிதா மகன்,அழகிய தீயே,புது பேட்டை,7 ஜி ரெயின் போ காலனி,ரஜினி,பாரதி,பெரியார்,பாய்ஸ்,அந்நியன்,சி வாஜி, வரலாறு,கில்லி,சுப்ரமணிய புரம்,அறிந்தும் அறியாமலும்,எம்டன் மகன்,கஜினி,இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி,காதல்,வெய்யில்,பொல்லாதவன்,அன்பே சிவம்,விருமாண்டி,மொழி,ஒன்பது ரூபாய் நோட்டு,பள்ளி கூடம்,அஞ்சாதே,கனா கண்டேன்,பார்த்திபன் கனவு,பிரிவோம் சிந்திப்போம்,ரன்,சண்டை கோழி,உள்ளம் கேட்குமே,சாமி ,வசூல் ராஜா எம்.பீ.பீ.எஸ்.,கண்ட நாள் முதல்,சந்தோஷ் சுப்ரமணியம்,பொம்மலாட்டம்,பொய் சொல்ல போறோம்,அபியும் நானும்,பருத்தி வீரன்,அயன்,ஈ , வாரணம் ஆயிரம்,நாடோடிகள்,திரு திரு துரு துரு,உன்னை போல் ஒருவன்,ஆயிரத்தில் ஓருவன்,பேராண்மை ,பசங்க,வெண்ணிலா கபடி குழு,தமிழ் படம்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்,சென்னை-28,சரோஜா,அங்காடி தெரு,விண்ணை தாண்டி வருவாயா,நான் கடவுள்.
முதல் பத்து (2001-2010)
1)நான் கடவுள்
2)அஞ்சாதே
3)புது பேட்டை.
4)அன்பே சிவம்.
5)பொல்லாதவன்
6)பாய்ஸ்
7)காக்க காக்க
8)மொழி
9)காதல்.
10)வெய்யில்.
கோபால் சார். அருமையான தொகுப்பு.
70’களில் நீதிக்கு தலைவணங்கு கூட நல்ல படமே .. நேரமு சிக்*ஷாவின் தமிழ் பதிவாக இருந்தாலும் நல்லாவே இருக்கும்