-
சந்திரன் பாடல் 57: "நானே இந்திரன் நானே சந்திரன்"
-----------------------------------------------------------------------------
இதுவும் வித்தியாசமான பாடல்தான். ஆமாம் இதுவும் காதல் பாடல் இல்லை. இது தற்பெருமை பாடல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.பரவாயில்லையே சந்திரன் இதற்கும் பயன்படுகிறதே!!!
நடிகர் சூரியா சிவகுமார் நடிக்க ஹரி இயக்கத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க கவிஞர் விவேகா வரிகளை பென்னியும் மாணிக்க விநாயகமும் பாடியுள்ளனர்.
ஆண்: ஏ நாலு காலு பாச்சலிலே
ரெண்டு கண்ணு மேச்சலிலே
எட்டு திசை கூச்சலிலே
தட்டுகிற ஓசையிலே
சுத்திவாரான் சுழண்டுவாரான் புயலப்போல எங்கும்
அட பாய்ஞ்சு வரான் பறந்து வரான் நம்ம துரை சிங்கம்
(இசை...)
ஆண்: நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள
சூரியனைப் போல்... சுத்தி வருவேன்...
பாதி நல்லவன் மீதி வல்லவன் மோத வந்தவன
எட்டி மிதிப்பேன்... முட்டி உடைப்பேன்...
காக்கி சட்ட நாட்டாமை நானே
கைது பண்ணும் வேலை இல்லை
அண்ணன் தம்பி சண்டைக்கு வீணா
கேசு போட தேவையில்லை
வீராதி வீரன் எல்லாம் எப்போதுமே வீராப்பா திரிவதில்லை
ஹேய் சொல்லித்தரவா... ஹேய் அள்ளிவிடவா....
ஹேய் சொல்லித்தரவா.. வா.. வா.. ஹேய் அள்ளிவிடவா....
(இசை...)
ஆண்: ஹேய் அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினம் தோறும் திண்ணு பாரு
உன்னோட ஆயுள் நூறு
சொந்த பந்தங்கள் கூட இருந்தா
வந்த துன்பங்கள் தூர பறக்கும்
தாமிரபரணியில மூழ்கி குளிச்சா
தரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்
ஊரோட இருக்கணும்டா
என்னைப்போல பேரோட இருக்கணும்டா
கத்துத்தரவா ஒத்துக்கிடவா
கத்துத்தரவா... வா... வா... ஒத்துக்கிடவா...
நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள
சூரியனைப் போல்... சுத்தி வருவேன்...
(இசை...)
குழு: ஹேய் சீறிவரும் காளை கூட ஒதுங்கும்
இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்
நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கிச்சட்டை போட்ட சிங்கம்
ஆண்: ஏ கருக்குவேல் அய்யனாரு கலையாத்தான் நிக்குறாரு
களவாணி யாரும் வந்தா களவாங்க விடமாட்டாரு
எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்
யாரும் கேட்டாலும் அள்ளிக் கொடுப்போம்
எதிரி வந்தாலும் நாங்கள் மதிப்போம்
எந்த நிலமையிலும் மேலே இருப்போம்
குல தெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம்
வேண்டிக்கிடவா... வெற்றி தரவா...
வேண்டிக்கிடவா... வெற்றி தரவா...
நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள
சூரியனைப் போல்... சுத்தி வருவேன்...
பாதி நல்லவன் மீதி வல்லவன் மோத வந்தவனை
எட்டி மிதிப்பேன்... முட்டி உடைப்பேன்...
---------------------------------------------------------------------------------------
காணொளி:
-----------------
https://www.youtube.com/watch?v=fQoQ2W1Y7mI
அடிப்பேன், உதைப்பேன் அப்படின்னு சொல்றதுக்கு யாரும் கோச்சுக்காதீங்க. போலீஸ் வேஷம் ஆச்சா அப்படிதான் சொல்வாரு. குற்றவாளிகளை விசாரிக்கணும். 'அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க' அப்படின்னு சொல்வாங்க. நாலைந்து ஸ்கார்பியன் வண்டிங்களையே காலி பண்ணிட்டாராம் 'ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு வெய்ட்டு'ன்னு. சிங்கம்னா சும்மாவா!!!
-
கல்நாயக்,
திரு.பி.யூ. சின்னப்பா அவர்களின் இமேஜ் நெட்டில் நீங்கள் தேடிப்பார்த்தால் கிடைக்கும். அவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர். (புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா. இயற்பெயர் சின்னச்சாமி)திரு.தியாகராஜ பாகவதருக்கு தொழில்முறை போட்டியாளர். நான் சொன்ன பாடல் மிகவும் பிரபலமான பாடல். நீங்கள் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு. பாகவதரைப் போல பல ஹிட் பாடல்கள் இவருக்கும் உண்டு.
திருவிளையாடல் படத்தில் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் ‘பாட்டும் நானே’ பாடலில் புல் பெஞ்ச் கச்சேரி செய்வாரே. அதேபோல, ஜெகதலப் பிரதாபன் என்ற படத்தில் திரு.சின்னப்பா அவர்கள் ‘நமக்கினி பயமேது?’ என்ற பாடலில் கலக்குவார். தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்திலேயே மாஸ்க் ஷாட் எடுத்து அசத்தியிருப்பார்கள். திருவிளையாடலில் கொன்னக்கோல் சொல்லிவிட்டு முடிக்கும்போது திரு.டி.எம்.எஸ். ‘இந்தா’ என்பாரே. அதேபோலவே சின்னப்பாவும் லந்தடிப்பார். உத்தமபுத்திரன் (பழைய) படத்தில் இருவேடங்களில் நடித்து தமிழில் முதல் இரட்டை வேட பாத்திரம் செய்தவர். மங்கையர்க்கரசி என்ற படத்தில் 3 வேடங்கள் போட்டவர்.
புதுக்கோட்டையில் ஏராளமான வீடுகளும் நிலங்களும் வாங்கிப் போட்டார். ஒரு கட்டத்துக்குமேல் இனி அவர் எந்த வீடும் புதுக்கோட்டையில் வாங்கக் கூடாது என்று புதுக்கோட்டை மன்னர் உத்தரவே போட்டார். (அப்புறம் மன்னருக்கு என்ன மரியாதை?)
திரையில் கோலோச்சிய திரு.சின்னப்பா அவர்கள் கடைசியில் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி மோசமான மரணத்தை சந்தித்தார்.
ரிக்க்ஷாக்காரன் படத்தில் பாரத் விருது பெற்றதற்காக புரட்சித் தலைவருக்கு அப்போது சென்னை ஓட்டலில் பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் புரட்சித் தலைவர் பேசிய பேச்சு அவர் இறந்த பிறகு 1988ம் ஆண்டு ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’ என்ற பெயரில் ஒலிநாடாவாக வந்தது. அதை மதிஒளி பத்திரிகையை நடத்திய மதிஒளி சண்முகம் வெளியிட்டிருந்தார். அந்த ஒலிநாடா நான் பல முறை கேட்டபின், பல ஆண்டுகளுக்கு முன் அறுந்துபோய் விட்டது. அதில் புரட்சித் தலைவர் பேசியதைக் கேட்டுத்தான் திரு.சின்னப்பா அவர்கள் எப்படிப்பட்ட துயரமான மரணத்தை அடைந்தார் என்பதை தெரிந்து கொண்டேன்.
புகழ் பெற்ற நட்சத்திரமாக திரு.சின்னப்பா விளங்கியபோது அவர் அணிந்திருந்த மோதிரத்தில் இருந்த வைரக்கல்லின் விலை ரூ.32,000 (அந்தக் காலத்திலேயே), வாழ்வில் நொடித்துப் போன திரு.சின்னப்பா கடைசியில் அந்த வைரத்தையே பொடி செய்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இப்படி கலைஞர்களின் நிலையை குறிப்பிட்டு வேதனைப்பட்டிருப்பார் புரட்சித் தலைவர். அந்த உரையில் மேலும் பல அரிய தகவல்கள் உண்டு. நேரம் கிடைக்கும்போது சொல்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
நல்ல தகவல்கள் சொன்னீர்கள் கலைவேந்தன்.
தமிழ் திரை உலகின் முடி சூடா மன்னர்களாக ஒவ்வொரு காலத்திலும் இரண்டு இரண்டு நடிகர்கள் கோலோச்சி இருந்து இருக்கிறார்கள். முதலில் m.k.t.யும் p.u.சின்னப்பாவும் , அப்புறம் நீங்க சொன்னால் நான் கேட்டுக்கிறேன். M.k.t-யின் முடிவு எல்லோரும் அறிந்ததே. சிறை வாழ்க்கை அதை தொடர்ந்து சரிந்த திரை வாழ்க்கை, p.u.c.இன் வாழ்க்கையும் இவ்வளவு துயரம் நிறைந்ததா? இப்போதுதான் தெரிகிறது. பின்னால் வந்தவர்கள் வாழ்வு செழித்ததே. அந்த விதத்தில் நிம்மதிதான்.
நல்ல வேளை, நீங்கள் இந்த வாக்கியத்தை பார்க்கவில்லை போலிருக்கிறது: "கண்ணகி படத்தை மறு வெளியீட்டிலும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் போது படத்தின் செல்வாக்கு புரிகிறது." இப்போதும் பார்க்காதீர்கள். பார்த்தாலும் முழுதுமாக புரிந்து கொள்ளமுயற்ச்சிக்காதீர்கள்.
-
அட... "சந்திரோதயம் இதிலே காணுவதுன் செந்தாமரை முகமே" என்ற பி.யூ.சின்னப்பா பாடல் controversy கிளப்பி விட்டதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். சந்திரோதயத்தை வர்ணிக்கையில் முகத்தை செந்தாமரை என்றால் அது கூம்பி இருக்குமே... என்று கிரிடிக்ஸ் கேள்வி கேட்டார்களாம். என்ன பதில் கிடைத்தது என்றுதான் தெரியவில்லை.
-
மதுண்ணா..செந்தாமரை மொட்டுமுகமே எனக் கவிஞர் பாடியிருக்கலாம்..கு.மா.பா போல :) காண்ட்ரவர்ஸி வந்திருக்காது..
கலைவேந்தன்..சின்னப்பா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி எனக்குப் புதிது..மேலும் ம.தி சொன்ன தகவல்கள் சொல்லுங்கள்.. நன்றி
கல் நாயக் என்னமோ உடல் கொஞ்சம் சரியில்லை எனில் சுட்டி இன்று.. இந்த நானே இந்திரன் நானே சந்திரன் என்னைக் கவர்ந்ததில்லை.. (பொதுவாகவே சிவகுமாரின் வாரிசுகள் படம் எல்லாம் ரிவ்யூ படித்துவிட்டுத் தான் செல்வது என்றிருக்கிறேன்..இப்போதெல்லாம் செஸ்ட்பீட்டிங்க் தான் நிறைய இருக்கிறது அவர்களிடம்..
ம்ம்
வந்ததுக்கு நிழல்கள் படத்தில் இல்லாத பாடல்.. தூரத்தில் நான் கண்ட உன்முகம் ( கொஞ்சம் சோகமான பாடலோ என நினைக்கத் தோன்றினாலும் அப்படி இல்லை.. நல்ல பாடல்)
அமுதா நிழல்கள் படத்தில் அறிமுகம்.. ரயில் சினேகத்தில் வித்யாச அழகாய் வித்யாச தலையலங்காரத்தில் வெகு வடிவாக இருப்பார்...(ஹை..இலங்கைத் தமிழ் :) )
https://youtu.be/QvtwHqc1ArU
இது படத்தில் இல்லாததினாலேயே தெலுங்குப் படமான சித்தாராவில் உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.. அப்படியே மெட்டு ஆனால் ஆடுபவர் பானுப்ரியா
வெண்ணல்லோ கோடரி அண்ட்டம்..
https://youtu.be/5yiYUP7t-uw
ஹை..என்னையுமறியாமல் ஜுகல் பந்தி வந்துடுத்தே எங்கே ராஜ் ராஜ் சார்.. (இரண்டு பாட்டும் எஸ் ஜானகி)
-
ஆஹா பெரிய விவாதமே நடக்கும் போல் உள்ளதே இந்தப் பாடலுக்கு. இப்பவே இந்தப் பாடலை சுருக்கமா எழுதிடலாம்.
சந்திரன் பாடல் 58: "சந்திரோதயம் இதிலே காணுவதுன் செந்தாமரை முகமே"
---------------------------------------------------------------------------------------------------------------
P.U. சின்னப்பாவும், கண்ணாம்பாள் நடித்தது. பூம்புகாரின் முன்னோடி. கோவலன் பாத்திரமே சற்று நெகடிவ் குணாதிசயங்கள் கொண்டது. பெண் கதாபாத்திரமே முன்னிலை வகிக்கும். இதிலும் P.U. சின்னப்பா எப்படி நடித்திருந்தார் என்று படம் பார்த்த கலைவேந்தன் சொல்லவேண்டும். இசை எஸ்.வி. வெங்கட்ராமன். மூலக்கதை: இளங்கோவடிகள் (சி.க. என்னை அடிக்காதீங்க.) பாடல்கள் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இந்தப் பாடல் சங்கராபரண ராகத்தில் அமைந்தது.
இப்போதைக்கு காணொளி மட்டுமே.
காணொளி:
-----------------
https://www.youtube.com/watch?v=mlwCwpBhQ4Q
கண்ணகியைப் பாடினாலும் காண்ட்ரோவர்ஸியா!!!
-
சி.க.,
அரிதான பாடலின் காணொளியை வழங்கி இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது உண்மைதான். ஆரம்பத்தில் சோகம்போல் தோன்றுகிறது. போகப் போகத்தான் தெரிகிறது - அப்படி அல்லவென்று. தெலுங்கு பாடலுக்கும் நன்றி. தெலுங்கென்றாலே ஆட்டம்தான் என்பதை நிரூபித்திருக்கிறது.
-
கல்நாயக்,
அட! ஆமாம். நைசாக நீங்கள் பொடி வைத்திருப்பதை நான் கவனிக்கவில்லை. இப்போதுதான் பார்த்தேன். உங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்தி விடுகிறேனே. முதல் வெளியீட்டில் எனது தாத்தாவுடைய அப்பா பார்த்தாராம். 28 வயதாகும் நான் எப்படி முதல் வெளியீட்டில் பார்த்திருக்க முடியும்? மறுவெளியீட்டில் பார்த்தது மங்கலாய்த்தான் நினைவில்.
சின்னக் கண்ணன்,
புரட்சித் தலைவர் அந்த உரையில், நாடோடி மன்னன் திரைப்படம் ஆஸ்கர் பட விழாவுக்கு அனுப்புவதற்காக, ஆக்க்ஷன் பிக்சர் என்ற வகையில் ,மத்திய அரசு அனுப்பச் சொல்லி கேட்டதாகவும் அதற்காக, படத்தை 11 ரீல்களாக தானே எடிட் செய்து அனுப்பியதையும் கடைசியில் இவர் திமுக என்பதால் அரசியல் தலையீடுகளால் படம் தடுக்கப்பட்டதையும் கூறியிருப்பார்.
பின்னர், தனக்கு பாரத் விருது கிடைத்தது பற்றிய சர்ச்சைகளை எடுத்துக் கூறி, பத்ம ஸ்ரீ விருது இவருக்கு (பாரத் பட்டத்துக்கு முன்பே) வழங்கப்பட்டபோது, இந்தியை திணிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பட்டத்தை பெற மறுத்த நான், பாரத் விருதுக்கு ஆசைப்படுபவன் அல்ல என்றும் கூறியிருப்பார். அப்போது இந்தி திணிப்பு இருந்தது. அதன்பிறகு திணிக்கமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தனர். இப்போது, என் தொழிலுக்கும் திறமைக்கும் அங்கீகாரம் அளிக்கும்போது நான் ஏன் மறுக்க வேண்டும்? என்று கேட்டிருப்பார். (இந்தி திணிப்பும் அதற்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக்கும் திமுக போராட்டத்தை விடுங்கள். காங்கிரசைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்ததே சான்று. அடைப்புக்குறிக்குள் இருப்பது என் கருத்து.)
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக ஜப்பான் சென்றபோது படப்பிடிப்பு நிலையங்கள் டி.வி.நிலையங்களாக மாற்றப்பட்டதை பார்த்ததாகவும் தமிழ் சினிமாவுக்கும் எதிர்காலத்தில் இந்த அபாயம் உண்டு என்றும் எச்சரித்திருப்பார். ஒருமணி நேர உரையில் இன்னும் பல உண்டு. நேரம் கிடைக்கும்போது சொல்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
அன்பின் கலைவேந்தன்.. மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு. பதினோரு ரீல்கள் ஆக்குவதற்குமிகுந்த சிரமப் பட்டிருப்பார் ம.தி என நினைக்கிறேன்..எழுதுங்கள் இன்னும்..
ஒரு கட்டுரை பாதியில் நிற்கிறது..அதை முடித்துச் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்ல இருந்தேன்.. தாமதத்திற்கு மன்னிக்க.. இன்றைக்குள் எழுதிவிடுவேன் என நினைக்கிறேன்..
-
கல்நாயக், சின்னக்கண்ணன்,
உங்கள் இருவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். புரட்சித் தலைவரின் உரை பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். அந்த ஒலிப்பதிவு ஒரு நண்பரிடம் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அது மக்கள் திலகம் திரியில் தரவேற்றப்படும் என்று நம்புகிறேன். உலகெங்கும் உள்ள தமிழர்கள் அந்த உரையை கேட்க முடியும். காணாமல் போன பொக்கிஷம் மறுபடியும் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு. இருவருக்கும் நன்றி.
அதேநேரம், நாம் எழுதுவது எல்லாம் கவனிக்கப்படுகிறது என்பதும், சின்னக்கண்ணன் சொன்னது போல மதுரகானம் திரியை பலர் மவுனப் பார்வையாளர்களாக படிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இங்கே வருவதே ஆறேழு பேர்தான் என்று நினைத்திருந்தேன். அந்த தைரியத்தில் உங்கள் இருவருடனும் கொஞ்சம் விளையாட்டுத்தனமாக பேசுவேன்.
இனி அப்படி பேசுவதற்கு தயக்கமாக இருக்கிறது. நேற்று கூட என் வயது 28 என்று குறிப்பிட்டிருந்தேன்.பலர் பார்க்கும் திரியில் உண்மையை சொல்லிவிடத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? பொய் சொல்கிறான் என்று நினைக்க மாட்டார்களா? எனவே, உண்மையை சொல்லி விடுகிறேன் என் வயது 18. (அடிக்க வராதீர்கள் கல்நாயக்)
புரட்சித் தலைவர் உரையை நான் மட்டுமின்றி அனைவரும் கேட்க காரணமாக இருக்கப்போகும் உங்கள் இருவருக்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்