Super Sir !
The Jurisdiction which our Nadigar Thilagam showcased with Pride and Proud, the same jurisdiction is now STABBING HIS BACK !!!
So unfortunate !!!!
RKS
Printable View
From Mr. Sudhangan's facebook
ஒரு பேனாவின் பயணம் – 26
அடுத்து என்ன நடந்தது ?
திரை விலகியது!
பளிச்சென்ற ஒரு பிறாமணக் குடும்ப அமைப்பில் மேடையில் ஒரு வீடு!
அது `செட்’ தான்!
திரை விலகியதுமே அரங்கத்தில் பலத்த கைதட்டல்!
முன்னாடி வரிசையில் இருந்த இசைக் கலைஞர்களில் ஒருவர்,பக்கத்திலிருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
`மாமா! நார்த்தை விட செளத்தில் தலைவருக்கு நல்ல வரவேற்பு’ என்று அவர் சொல்லும்போதே!
திரையை விலக்கி பிரஸ்டிஜ் பத்மநாபனாக சிவாஜி உள்ளிருந்து திரையை விலக்கி வெளியே வருவார்!
`சாவித்திரி’ என்று சொல்லிக்கொண்டே வெளியே வருவார்!
அதுவும் கண்ணாடியை கழட்டி வலது கையில் வைத்திருப்பார்!
அப்போது தொலைபேசி மணி அடிக்கும்!
அவரே எடுப்பார்!
`பிரஸ்டிஜ் பத்மநாபன் ஹீயர்!’ என்பார்!
மறுமுனையில் ஏதோ பேசுவார்கள்!
`ஹலோ! ராங் நம்பர்!
அவர்களை திட்டிவிட்டு போனை வைப்பார்!
அந்த குரல் ஏற்ற இறக்கங்களை கேட்ட அடுத்த நிமிடம், சிவாஜி ஏதோ ஒரு வசனத்தை கேட்கவே முடியவில்லை!
அரங்கமே எழுந்து கைதட்டிக் கொண்டிருந்தது!
திரும்பி பார்த்தேன்!
ஆண்களும், பெண்களுமாக எழுந்து நின்று கைதட்டிக்கொண்டிருந்தார்கள்!
மேடையில் இருந்த வெளிச்சம் பாதி அரங்கத்தில் பாய்ந்து கூட்டத்தை காட்டிக்கொண்டிருந்தது!
வானில் இருந்து நிலா பொழிந்த வெளிச்சம், மீதி இருட்டு பகுதியிலிருந்த மக்களை காட்டிக்கொண்டிருந்தது!
பின்னால் காலரி மாதிரி இருந்த பகுதியின் மக்களை அங்கே இடது பக்க கேட்டுக்கு எதிரே இருந்த முருகன் கோவில் விளக்கின்வெளிச்சன் காட்டிக்கொண்டிருந்தது!
அந்த முருகன் கோவில் இருந்த தெருவிற்கு பெயர் `இருசப்ப கிராமணி தெரு’!
அந்தத் தெருவில் அந்த முருகன் கோவிலுக்கு இடது பக்கத்தில் நான்கைந்து வீடுகளைத் தாண்டித் தான் சிலம்புச் செல்வர்ம.பொ.சியில் வீடு இருந்தது!
அதை விடுங்கள்!
சிவாஜி இங்கே அடுத்த வசனம் பேச ஐந்து நிமிடங்கள் ஆயிற்று!
அடுத்து சிவாஜி , மேடையில் அந்த அந்தணர் வேடத்தில் தன் மனைவியை ` சாவித்திரி’ என்றழைத்ததும்!
மடிசார் உடையில் வருவார் அவர் மனைவி சாவித்திரி!
அவர் நான் ஏற்கெனவே `அதே கண்கள்’ படத்தில் பார்த்த ஜி.சகுந்தலா!
அந்த வயதில் எனக்கு எப்படி எனக்கு அத்தனை நடிகர், நடிகைகளின் பெயரும் தெரியும் என்கிற சந்தேகம் வரலாம்!
எனக்குத்தான் படிப்பை விட சினிமாவும், சினிமா சார்ந்த பத்திரிகைகளும் மிகவும் மனப்பாடமாச்சே!
நாடகம் அந்த வயதில் புரிந்தும், புரியாமலும் இருந்தது என்பதுதான் உண்மை!
ஆனால் சிவாஜி கணேசனை நேரில் முதல் வரிசையில் இருந்து பார்த்த எனக்கு அந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை!
கூட்டம் கலைய ஆரம்பித்தது!
நான் அங்கிருந்து நகரவில்லை!
அப்படியே அந்த இசைக்கலைஞர்கள் எல்லோரும் மேடைக்குப் போனார்கள்!
நானும் சிறுவனாக அந்த மேடைக்கு அவர்கள் பின்னால் போனேன்!
அப்போதுதான் சிவாஜி தன் மேக்கப்பை கலைத்துவிட்டு ஒரு வெள்ளை சட்டை, வேட்டியுடன், அந்த பிரஸ்டிஜ் பத்மநாபன்வேடத்திலிருந்த நெற்றி வீபூதியை கலைத்துவிட்டு, சாதாரணமாக வெளியே வந்தார்!
அப்போது என் பக்கத்திலிருந்த இசைக் கலைஞரை அழைத்தார்!
` என்ன அந்த அம்மா படத்தைப் பார்த்து நான் அழுத இடத்தில் சரியா வாசிக்கலை! உன் ம்யூசிக் வரும்னு காத்திருந்தேன்! நான்ஏதோ கோளாறு பண்ணிட்டேன்னு தெரிஞ்சு நான் சமாளிச்சேன்! நாளைக்கு இந்தத் தப்பு நடக்கக்கூடாது தெரிஞ்சுதா!’ என்றுஅவரை தட்டிக்கொடுத்துவிட்டு, மேடைக்கருகில் வந்து நின்ற அவர் காரில் ஏறிப் போய்விட்டார்!
நான் இப்போது எல்லோரையும் மறந்து, அதாவது அந்த முதல் வரிசையில் என்னை சேர்த்துக்கொண்டஇசைக்கலைஞர்களையெல்லாம் மறந்து விட்டு அந்த காரின் பின்னால் ஒடினேன்!
கார் ஒடியே போனது!
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...4a&oe=56C482BA
சில ஆயிரம் அடிகள் படம் பிடிக்கப்பட்டு ஏதோ காரணங்களால் நின்று போன நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்று நடமாடும் தெய்வம்.
நிழற்படம் நன்றி பேசும்படம்
http://i1028.photobucket.com/albums/...pszfrnevfd.jpg
இருபது வருடங்களுக்கு முன்பு
ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் படித்த நகைச்சுவைத் துணுக்கு இது.
மணமாகி,புருஷன் வீடு வந்த
மனைவி தனது அன்பான கணவனுக்குத் தன் கையால்
வாய்க்கு ருசியாக ஏதாவது செய்து தர வேண்டுமென்று
ஆசைப்பட்டாள்.
கணவனுக்கு"அல்வா"என்றால்
மிக விருப்பமென்று தெரிந்து
கொண்டு, அன்றிரவே அல்வா
தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத்
துவங்கினாள்.
மறுநாள் வேலைக்குக் கிளம்பிய கணவனின் காதில்
கிசுகிசுத்தாள்.."என்னாங்க..
சாயங்காலம் சீக்கிரமா வந்திடுங்க..உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச "அல்வா" செஞ்சு வைக்கிறேன்."
கணவன் உற்சாகமாய்க் கிளம்பிப் போனான். சொன்னது
போலவே மாலையில் சீக்கிரம்
வந்து விட்டான்.
ஆர்வமாய் வந்த கணவனின்
கையில் மனைவி அல்வாக் கிண்ணத்தை ஆசையாய்த்
தந்தாள்.
அவன் ஆசையின் வேகத்திற்கு
அல்வா வரவில்லை. சீக்கிரம்
செய்து விட வேண்டும் என்கிற
பதட்டத்தில் மனைவிக்காரியின் செய்முறையில் ஏதோ பக்குவம் தவற..அல்வா, கோந்து போல் ஆகி கிண்ணத்தோடு ஒட்டிக் கொண்டு விட்டது.
கணவன் அல்வாக் கிண்ணத்தோடு போராடுவதைப்
பார்த்து மனைவி கவலையாய்க் கேட்டாள்.
"ஏங்க..அல்வா நல்லா இல்லையா?"
"சேச்சே.. யார் சொன்னா?
நீ செஞ்ச அல்வா,நம்ம "நடிகர்
திலகம்" மாதிரி இருக்கு."
என்றான்.
குஷியான மனைவி,"எப்படி
சொல்றீங்க?"என்று கேட்டாள்.
"ஆமா.. நடிகர் திலகம் மாதிரியே 'பாத்திரத்தோட பாத்திரமா' ஒன்றீருச்சு இல்ல".
-------
அந்த கணவன் நடிகர் திலகத்தின் ரசிகனாகத்தான்
இருக்க வேண்டும். தவறைச்
சுட்டிக் காட்டும் போது கூட
அடுத்தவர் மனதை நோகடிக்காத அந்த நல்ல குணம் வேறு யாருக்கு வரும்?
ஸ்வாதி ப்ரொடக்ஷன்ஸ் என்ற ஒரு படத்தயாரிப்பு நிறுவனம் 60களின துவக்கத்தில் நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் துவக்கியது. இரு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்தப் படம் கடைசியில் வளராமல் நின்று போனது. ஒரு முறை பச்சை விளக்கு என்ற பெயரிலும் மற்றோர் முறை தங்க சுரங்கம் என்ற பெயரிலும் தயாரானது. பின்னாளில் இந்த இரு பெயர்களுமே நடிகர் திலகத்தின் வேறு படங்களுக்கு சூட்டப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது வரலாறு. அந்த படத்தின் இரு ஸ்டில்கள் நம் பார்வைக்கு.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...31a02125beb9cf
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...47&oe=569555B4