http://i68.tinypic.com/34y60br.jpg
ஒரு அரைவேக்காடு, ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பவர், ரசிகர் மன்றத்திலேயே பொறுப்பில் இருப்பவர் தப்பும் தவறுமாக தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் உளறிக் கொட்டி வருகிறார். ‘‘பிராப்தம் என்ற சாவித்திரி தயாரித்த படத்தால் சாவித்திரி நஷ்டமடையவில்லை. நல்ல லாபம் வந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு கணக்கு காட்டியவர்கள் சாவித்திரியை சுற்றி இருந்தவர்கள் லாபத்தை தாங்கள் சுருட்டிக் கொண்டு சாவித்திரியை ஏமாற்றி விட்டார்கள்’’ என்று நிறுவுவதுதான் அவரது நோக்கம். அதுபற்றி நமக்கு அக்கறை இல்லை.
சாவித்திரி நொடித்துப் போனார் என்பதைப் பற்றி நாம் பரிதாபம் படலாமே தவிர, ஆராய வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை.
ஆனால், ‘‘பிராப்தம் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பம் கொண்டு சாவித்திரியின் வீட்டுக்குச் சென்று விருப்பம் தெரிவித்தார். சாவித்திரி அவர் விருப்பத்தை ஏற்கவில்லை’’ என்று தமிழக அரசியல் பத்திரிகையில் அந்த பொய்யர் உளறிக் கொட்டி இருக்கிறார். சாவித்திரியின் வீடு தேடிப் போய் படத்தில் நடிக்க மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டாராம். அதுவும் பிராப்தம் படத்தில் நடிப்பதற்காகவாம். கொடுமை. பொய்க்கு ஒரு அளவு வேண்டாமா?
ஏற்கனவே அந்தத் தொடரில் மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற என் தங்கை படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது என்று எழுதியதற்காக நாஞ்சில் இன்பா என்ற அந்த நபரை எம்.ஜி.ஆர். மன்றத்தினர் பலரும் மதுரை தமிழ்நேசன், திண்டுக்கல் மலரவன் உட்பட பலரும் செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தோம். சரியாக பதில் அளிக்காமல் போனை கட் செய்தார். இப்போது பிராப்தம் படத்தில் நடிக்க சாவித்திரி வீட்டுக்குச் சென்று மக்கள் திலகம் வாய்ப்பு கேட்டார் என்று கூச்சமே இல்லாமல் பொய் எழுதி இருக்கிறார்.
ஏற்கனவே இதே தொடரில் அவருக்குப் பிடித்த நடிகரின் மகள் சாந்தியின் திருமணத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ மறைந்த அன்பில் பொய்யாமொழி கலந்துகொண்டார் என்று எழுதி தனது ஞான சூனியத்தை அவர் காட்டிக் கொண்டார். உண்மையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்டது அன்பில் தர்மலிங்கம்.
இன்னும் என்னவெல்லாம் பொய்களை அவிழ்த்துவிடப் போகிறாரோ தெரியவில்லை.