http://i60.tinypic.com/69m7ue.jpg
Printable View
திரு. வினோத் அவர்கள் அறிவது :
கர்நாடக எம். ஜி. ஆர் ரசிகர்கள் வெளியிட்ட என் அண்ணன் சிறப்பு மலர் வெகு அருமை.
சமீபத்தில், "ஆல்பர்ட் " அரங்கில் நடைபெற்ற நம் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன்" நூறாவது நாள் வெற்றி விழாவில் கர்நாடக எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த அன்பர்கள் அவர்கள் கையோடு கொண்டு வந்த பேனருக்கு அணிவித்த மாலைகளின் பிரம்மாண்டம் மலைக்க வைத்தது. அவர்களுக்கு இத்தருணத்தில் பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடக எம். ஜி. ஆர். ரசிகர்கள் வித்தியாசமானவர்கள்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/mmpy1l.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
" புதிய பூமி " (27-06-1968) திரைப்படம் கண்ட அனுபவம் :
http://i60.tinypic.com/eja2ig.jpg
சென்னை " குளோப் " ( பின்னாளில் "அலங்கார்" என்று பெயர் மாற்றப்பட்டது) அரங்கில், "புதிய பூமி" காவியத்தை, நான் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது கண்டு களித்தேன். நான், என்னுடைய வகுப்பு தோழர்கள் திரு. ரங்கராஜன், திரு. பார்த்தசாரதி, திரு. ஜி. கே. ரவிக்குமார் ஆகியோருடன் முதல் நாள் ( வியாழக்கிழமை ) மாலை காட்சியில் தான் பார்க்க முடிந்தது. ஆனால், அதற்கு முன்பு, சென்னை திருவல்லிக்கேணி எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த, மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர்களுடன் ளுடன் இணைந்து வழக்கம் போல் தோரணங்கள், ஸ்டார் போன்றவற்றை, அவர்களின் கட்டளைப்படி கட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் 12 - 13 வயது சிறுவர்களாக இருந்தபடியால், எங்கள் ஆர்வத்தை அந்த மூத்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மக்கள் திலகத்தின் படத்துக்கு இது மாதிரியான வேலைகள் செய்வதை பெரும் பாக்கியமாக கருதினோம். அந்த மூத்த ரசிகர்கள் சிலர் ஏற்கனவே பகல் காட்சியில் "புதிய பூமி" காவியத்தை கண்டு களித்திருந்தாலும், ராமமூர்த்தி, பாலன், மணி, போன்ற சிலர் மீண்டும் எங்களுடன் மாலை காட்சிக்கு இக்காவியத்தை காண வந்திருந்தனர். அவர்களின் தயவால், எங்களுக்கு முதல் நாள் டிக்கெட் சிரமம் இன்றி கிடைத்தது.
அப்போது சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற செயலாளராக திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் இருந்ததாக நினைவு. அவரின் ஆணைப்படி, ஒருங்கினைப்பின்படி, மக்கள் திலகத்தின் பல்வேறு மன்ற அமைப்புக்கள் துடிப்புடன் செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.
திரையில் நம் பொன்மனசெம்மல் தோன்றும் முதல் காட்சியில், பலத்த கைதட்டல், விசில், உற்சாகம், ஆரவாரம், ஆர்ப்பரிப்பு. சிறுவர்களாகிய நாங்கள் அதை வெகுவாக ரசித்தோம்.
"நான் உங்கள் வீட்டு பிள்ளை" என்ற பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. உற்சாக நடனம் புரிந்தனர் ரசிகர்கள். 1967ல் தென்காசி சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் (743) வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்த தி. மு. க. வேட்பாளர் கதிரவன் என்கின்ற சம்சுதீன்,
அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் பிள்ளை அவர்கள் மறைவால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க வேட்பாளர் கதிரவனை நினைவு படுத்தும் விதமாக கதாநாயகனின் பெயர் கதிரவன் என்று நிர்ணயிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் கதிரவன் அமோக வெற்றி பெற்றார். (தி. மு. க. வின் வெற்றிக்கு நம் புரட்சித் தலைவர் உழைத்த கடின உழைப்பு சொல்லி மாளாது) .
அனைத்து பாடல்களுமே தேனினும் இனியது. குறிப்பாக, ' விழியே விழியே உனக்கென்ன வேலை ' என்ற பாடலின் இறுதிக் காட்சியில் நம் மக்கள் திலகம் நகத்தை கடித்தபடி, வெட்கப்படும் காட்சி வெகு நளினமானது. இயல்பான நடிப்பால் இமயத்தின் உச்சியை தொட்ட நம் மக்கள் திலகத்தின் அந்த நடிப்புக் காட்சி வெகுவாக அப்போதே ரசிக்கப்பட்டது.
அடுக்கடுக்காய் நம் ஒப்பற்ற இதய தெய்வத்தின் அழகையும்,, நடிப்பையும், அங்குலம் அங்குலமாக வர்ணனை செய்யலாம். 51 வயதில், இப்படி ஓர் அழகா என்ற வினா எழுகிறது.
http://i60.tinypic.com/hv54jn.jpg
இளமையின் துள்ளல், இனிமையின் உருவம் இதுதான் மக்கள் திலகம் என்று, திரைப்படம் முடிந்து செல்கையில், உணர்வுப்பூர்வமாக மக்களும், ரசிகர்களும் பேசிக்கொண்டு சென்றனர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக் காவியத்தின் 100 வது நாள் வெற்றி விழாவில் பங்கேற்ற இயக்குனர் திரு. பி. வாசு அவர்களை, அவரது இல்லத்தில்,
இன்று காலை, " ஒலிக்கிறது உரிமைக்குரல் " மாத இதழ் ஆசிரியர் திரு. பி. எஸ். ராஜு, (பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்கம்) அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பாக அதன் காப்பாளர் திரு. ஏ. ஹயாத், திருவளர்கள் கே. எஸ். மணி மற்றும் இராமமூர்த்தி ஆகியோர், மரியாதை நிமித்தம் சந்தித்து, விழாவில் பங்கேற்றமைக்கு, தங்களின் மகிழ்ச்சியையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர். . அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
அது போழ்து, "மாட்டுக்கார வேலன்" காவியத்தில், " ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ணை சாய்க்கிறா" பாடல் கட்சியில், நம் மக்கள் திலகத்தின் நடிப்பை வெகுவாக பாராட்டினார். மேலும், " எங்கள் வீட்டு பிள்ளை " காவியத்தில், ஒய்யாரமாக, யதார்த்தமாக வெகு இயல்பாக, அதே சமயம் மிக மிக " ஸ்டைல் " ஆக கால் மேல் கால் போட்டு பத்திரம் படிக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலாத காட்சி என்று மக்கள் திலகத்தின் நடிப்பினை சிலாகித்து பேசினார்.
சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பு மிகவும் உற்சாகமான சந்திப்பு என அனைவரும் தெரிவித்தனர்.
கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை முன்னிட்டு, இந்த இனிமையான சந்திப்பு நிகழ்ச்சியில் நான் பங்கு பெற முடியாத துர்பாக்கியசாலி ஆகி விட்டேன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
எனது எண்ணங்கள்
தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!
தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார். இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும். எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.
இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.
அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.
.
காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.
அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.
தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.
“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.
இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.
அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை.
அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.
அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.
'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.
‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.
‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.
இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.
பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.
“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
courtesy-net
பல இடங்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும், ஏழை எளியோருக்கு உதவிகளும், ஆங்காங்கே ரத்த தானங்களும், அவர் பெயரால் மற்ற நல்லெண்ண நிகழ்வுகளும் நடைபெறுவது அவரது நல்ல உள்ளத்துக்கு மக்கள் காட்டும் அன்பின் அடையாளமாக போய்விட்டது. காலமாகி பல வருடங்கள் போனாலும், நம்மிடையே இன்றும் இருப்பது போன்ற உணர்வை மக்கள் ஒரு சிலருக்கே வழங்கி இருக்கின்றனர். அவர்களுள் ஒருவராக மக்கள் திலகம் திகழ்கிறார்.
எஸ்ட்ரோ எம்ஜிஆரின் "பெரிய இடத்துப் பெண்", "நம் நாடு" மற்றும் "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படங்களினை காண்பித்து அவரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இது வாடிக்கையாக நடப்பதுதான் என்றாலும் தமிழ் நேசன் நாளிதழில் அவரைப்பற்றிய நினைவுகளை படித்துக்கொண்டு சிறு வயதில் அவரின் படங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை மனதுக்குள் அசைபோடுவது பசுமையான ஒன்றாக இருந்தது எனக்கு.
எஸ்டேட்டின் பின்னனியில் வாழ்க்கையை தொடங்கியவன் நான். அறுபதாம் ஆண்டுகள் அவை. பந்து விளையாடும் திடலில் திரையினைக் கட்டி, புரொஜெக்டர்கள் மூலமாக தமிழ்ப் படங்களைக் காண்பித்து வந்த காலம் அது. அப்போது மக்களின் மாபெரும் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.
சீனர், மலாய்க்காரர் என்ற பேதம் இல்லாமல் அனைவராலும் ரசிக்கப்பட்டவர். அதன் தாக்கம் இன்றளவும் நம் மலேசிய நாட்டில் உண்டு. அதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு இன்றைய மலாக்கா மாநில முதல்வர்.
மற்ற இனத்தவர்களில் ஒரு சிலருக்கே நமது தமிழ் நடிகர்களைத் தெரிகிறது. அதிலும் கமல், ரஜினியத் தவிற வேறு யாரையும் அவர்கள் கண்டுகொண்டதாக இல்லை.
எம்ஜிஆரை அன்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் 16வது வாரம் சத்யம் மற்றும் ஆல்பர்ட் திரையரங்கில்
தலைவரின் 100வது காவியம் ஒளிவிளக்கு குறுகிய கால இடைவெளியில் பிராட்வே திரை அரங்கில்
சின்னத்திரையில்
சன்லைப் தொலைகாட்சியில் காலை 11.00 மணிக்கு பறக்கும் பாவை
சன்லைப் தொலைகாட்சியில் மா லை 7.00 மணிக்கு ரிக் ஷா காரன்
கருணாநிதி தொலைகாட்சியில் மா லை 5.00 மணிக்கு அன்பேவா
முரசு தொலைகாட்சியில் மா லை 7.30 மணிக்கு நவரத்தினம்,
இப்படி ஒரு சாதனை தலைவர் படங்கள் மட்டுமே சாதிக்க முடியும்
அதனால் தான் இந்த திரைஉலகில் நிரந்தர வசூல் மன்னராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்