காலை வணக்கம்
திரையில் பக்தி
கேள்வி-பதில் தொடர்கிறது
http://i818.photobucket.com/albums/z...psfaafmlrl.jpg
Printable View
காலை வணக்கம்
திரையில் பக்தி
கேள்வி-பதில் தொடர்கிறது
http://i818.photobucket.com/albums/z...psfaafmlrl.jpg
திரையில் பக்தி
கேள்வி -பதில்
பகுதி 1
கேள்வி :
கண்ணா - நீ கருமையாக இருக்கிறாய் . இருந்தாலும் உன்னை மறுப்போர் இல்லை , கண்டு வெறுப்போர் இல்லை - அதே கருமை நிறம் தான் எனக்கும் - ஆனால் என்னை விரும்புவோர் யாருமே இல்லையே கண்ணா ? என்ன தவறு செய்து விட்டேன் ?, இங்கு வந்து பிறந்ததை விட --- வெளி அழகுதான் முக்கியமா? , உள்ளம் அழுக்காக இருந்தால் பரவாயில்லையா ?? உனக்கும் ஒரு சட்டம் . எனக்கு ஒரு சட்டமா? - சிலையாக இருப்பதால் உன்னை ஒன்றுமே கேட்கக்கூடாதா ? - ஒரு பெண் இங்கே புலம்புகிறாள் - கண்ணன் எதுவுமே தனக்கு சாதமாக கொடுக்கவில்லை என்ற ஏக்கம் பாடலாக வருகிறது ... மணம் பார்க்க மறுப்போர் முன் தன்னை கண்ணன் படைத்துவிட்டானே என்ற கோபம் !!
https://www.youtube.com/watch?v=xO1RW80P8YU
கேள்வி : அந்த பெண்ணோ கருமை நிறம் கொண்டவள் - இந்த பெண்ணுக்கு என்ன குறை ? ஏன் இவளும் கண்ணனைத்திட்ட வேண்டும் ? கங்கையில் ஓடுவது தண்ணீர் அல்ல - நாங்கள் சிந்தும் கண்ணீர் என்று ஏன் புலம்ப வேண்டும் ? - எல்லாவற்றிக்கும் கண்ணன் தான் பொறுப்பேற்க வேண்டுமா ?
https://www.youtube.com/watch?v=2-HUJ9PPqHI
திரையில் பக்தி
கேள்வி -பதில்
பகுதி 2
பதில்
இறைவனை நாம் என்ன வேண்டுமானாலும் திட்டலாம் - அவன் நம்மை திருப்பித்திட்டப்போவதில்லை - ஆனால் அவன் நமக்கு நல்லது செய்தபின் நன்றி சொல்கிறோமா என்றால் பதில் இல்லைதான் - எல்லாமே கிடைத்துவிட்டால் இறைவனை யார் நம்ப போகிறார்கள் - அவனை ஏன் வணங்க போகிறோம் ? அவனை ஒன்று மட்டுமே கேட்க வேண்டும் - இறைவா பிரச்சனைகள் வரட்டும் - அதை சமாளிக்கக்கூடிய திறமையை எனக்கு கொடு - இப்படி கேட்டுப்பாருங்கள் - உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்ச்னைகளுக்கு பிரச்சனைகள் வந்துவிடும் . கேட்டதும் கொடுப்பவன் அவன் - கேட்பதில் ஒரு நியாயம் , தர்மம் இருக்க வேண்டும் - நம் வேண்டுதல்கள் பிறரை அழிப்பதற்காக இருக்ககூடாது . பிறர் மனங்களை புன்படுத்துவதற்க்காக இருக்கவே கூடாது .பிறர் சிரிக்க வேண்டும் , மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள் - நீங்கள் கேட்காமலேயே உங்கள் வாழ்விலும் அதே வரன் கிடைக்கும் .....
https://www.youtube.com/watch?v=vTHQM9IpCS8
https://www.youtube.com/watch?v=Q9fRIouXfqI
திரையில் பக்தி
கேள்வி -பதில்
பகுதி 3
கேள்வி :
இறைவன் ஏன் சிலையாகி விட்டான் ? யாராவது இதற்கு காரணமா ? பல இதிகாசங்களில் இறைவன் மனிதனுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்ததை அறிகிறோம் . ஆனால் எவ்வளவு அழைத்தாலும் இப்பொழுது அவன் ஏன் வருவதில்லை ? கீதையில் கண்ணன் சொல்கிறான் - எப்பொழுதெல்லாம் தர்மம் தலை குனிகிறதோ அப்பொழுதெல்லாம் நான் வருவேன் - தர்மம் இப்பொழு தற்கொலை செய்துகொள்ளத்துடிக்கிறதே ஏன் அவன் தான் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்பு தருவதில்லை ??
https://www.youtube.com/watch?v=aZJfSm4do6o
திரையில் பக்தி
கேள்வி -பதில்
பகுதி 4
பதில் - அவன் அவனாக வருவதில்லை - நம்மிடையே என்றுமே இருக்கிறான் - பெற்றவர்களாக , முதியவர்களாக , குழந்தைகளாக , ஏழைகளாக , மனைவியாக , நண்பனாக , குருவாக --- இதோ அந்த கேள்விக்கு ஒரு பதில்
https://www.youtube.com/watch?v=9mzZVgQRzwg
நாளை வேறு கேள்வி -பதில்களுடன் சந்திப்போம் .
ரவி சார்...
தெய்வத்தைப் பற்றி தெளிவாக எழுதறீங்க.. !!
அவதாரம் என்றால் இறங்கி வந்தவர் என்றுதான் அர்த்தமாம். அப்படி இறங்கினாலும் கொள்கையிலேயே நின்றவன் ராமன். அதனால் அது நம்மால் சட்டென்று எட்ட முடியாத விஷயமாகத் தோன்றிவிடுகிறது. கண்ணனோ எல்லோருக்கும் பிடித்த மாதிரி எல்லாவற்றையும் செய்திருப்பதாக பாகவதம் சொல்கிறது. அதனால் சுலபமாக நெருங்கக் கூடியவனாகத் தோன்றுகிறான்.
அதனாலேயே பெரியோர் ராமன் சென்ற பாதையில் நட என்றும் கண்ணன் சொன்ன சொல்லின்படி நட என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
தெய்வம் மானுஷ்ய ரூபேண: எனவும் மனிதனும் தெய்வமாகலாம் எனவும் சொற்றொடர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன..
காற்றடித்தால் அவன் வீடாவான்.. கடுமழையில் அவன் குடையாவான் .. ஆற்றாதழுதால் அழுத கண்ணீரை அங்கே துடைக்கும் கையாவான் ..
ஒரு கதை உண்டு... நதிக்கரை ஓரமாக இருந்த கிராமத்தில் ஒரு சர்ச். அதில் கடவுள் நம்பிக்கை மிகுந்த பாதிரியார் ஒருவர் இருந்தார். ஒரு முறை அதிகமான வெள்ளம் வந்து கிராமமே மூழ்கும் நிலை ஏற்பட்டது. கிராமத்தலைவர் ஓடி வந்து "எல்லா மக்களும் கிளம்பறாங்க.. வாங்க சாமி.. போகலாம்" என்றார். அதற்கு பாதிரியார் "இறைவன் என்னைக் காப்பான். நான் வருவதற்கில்லை" என்று சொல்லி விட்டார். வற்புறுத்தியும் வராததால் தலைவரும் போய் விட்டார். வெள்ளம் அதிகமானதும் பாதிரியார் சர்ச்சின் முதல் மாடிக்கு ஏறி நின்று கொண்டார். அப்போது பெருகிய வெள்ளத்தில் படகில் சென்ற சிலர் "சாமி... படகுக்கு வந்துடுங்க.. தண்ணி அதிகமாகுது" என்று அழைக்க "இறைவனை நம்புகிறேன். அவன் வந்து காப்பாற்றுவான்" என்று திரும்பிக் கொள்ள அவர்கள் போய் விட்டனர். வெள்ளப் பெருக்கு பொங்கியெழ பாதிரியார் சர்ச்சின் உச்சியில் இருந்த சிலுவையை அணைத்தபடி தொங்கிக் கொண்டிருந்தபோது அரசாங்கக் அனுப்பி வைத்த ஹெலிகாப்டர் வந்து கயிறைப் போட பாதிரியார் ஏற மறுத்தார். "என் இறைவன் வந்து காப்பாற்றுவான்" என்றபோது தண்ணீர் அதிகமாக அவர் அதற்குள் மூழ்கிப் போனார்.
மேலுலகத்தில் பாதிரியாரின் ஆன்மா இறைவன் முன் நின்றது. சோகத்துடன் அவர் இறைவனை நோக்கி " நீங்கள் வந்து காப்பாற்றுவீர்கள் என்றிருந்தேன். இப்படி என் நம்பிக்கையை உடைத்து விட்டீர்களே" என்று கலங்கினார்..
இறைவன் சொன்னான். "அது தவறு. நான் மூன்று முறை உன்னைக் காப்பாற்ற வந்தேன். முதல் முறை கிராமத்தலைவர் மூலம். பின் படகில் வந்தவர்கள் மூலம்.. கடைசியாக அரசாங்கத்தின் மூலம். ... நீ என் அழைப்பை ஒதுக்கி விட்டால் நான் என்ன செய்ய முடியும் ? நீ உலகத்தில் வாழ விருப்பம் என்றால் உலகத்தைக் கடவுளாக பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். நீ எல்லாவற்றையும் வேண்டாம் என்று சொன்னதால் உன்னை என்னிடமே அழைத்துக் கொண்டேன். அவ்வளவுதான்"
ஆத்திகம் பேசும் அன்பருக்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்.
https://www.youtube.com/watch?v=ClhP4qHFPEs
hi. good mornng all...
ரவி..என்ன தான் பக்திப் பரவசமாய் எழுதறீங்க என்றாலும் காலங்கார்த்தால விஜயகுமாரியோட பாட்டும் செளகார் ஜானகியோட பாட்டும் ஒண்ணா போட்ட உம்மை.... என்ன செய்தால் தேவலை :)
ரவி ஜி
டேப் ராதா மாணிக்கத்தின் கேளுங்கள் தரப்படும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அந்த குரலே நம்மை அந்த பாடலுக்குள் இழுத்து செல்லும்
நன்றி நன்றி
CK - நமக்குள் எவ்வளவு வேறுபாடுகள் பார்த்தீர்களா ? உள்ளத்தால் ஒன்று பட்டாலும் பார்க்கும் கோணத்தில் வேறு படுகிறோம் . விஜயகுமாரியும் , சௌகார் ஜானகியும் என் கண்களுக்குத் தெரியவே இல்லை - இருவருமே p .சுசிலா வாகத்தான் எனக்கு தெரிந்தனர் . கல்லாக சிலருக்கு தெரியும் கடவுள் , மற்ற சிலருக்கு உயிராக , ஜோதியாக தெரிவதுபோல !!! பார்க்கும் பார்வை , கோணங்கள் மாறுபடும் போது அர்த்தங்கள் அனர்த்தங்களாகி விடுகின்றன - இல்லையா CK ?? :):smokesmile:
மது சார் - உங்கள் உள்ளுக்குள் ஒளிந்திருந்த ஒரு அசாத்தியமான மது அவர்களையும் வெளிக்கொண்டு வந்து விட்டீர்கள் - என் பதிவுகளுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றியாக இதை கருதுகிறேன் . எவ்வளவு அருமையான கருத்துக்கள் - என்னால் இப்படி எழுதவே முடியாது சார் ... ஸ்ரீ ராமனை யும் , கண்ணனையும் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் - எழுதிக்கொண்டே இருக்கலாம் . சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம் -
Rama has rules over substances – Krishna has substances over rules
In other words , Rama is rule bound king and Krishna is rule breaker to sustain dharma – cause is same but effect is different .
ஒரு முறை எல்லா தேவர்களும் பரந்தாமனிடம் சென்று கேட்டனராம் - " பிரபு - நீங்கள் எடுத்த அவதாரங்களில் உங்களுக்கு கடினமான , மிகவும் பிடித்த அவதாரம் எது ? "
மாதவன் சொன்னான் " எனக்கு சவாலாக அமைந்த அவதாரம் " ராமன் " - மற்ற அவதாரங்களில் என் தெய்வத்தன்மை நிறைந்திருக்கும் - ஆனால் இதில் முழுக்க முழுக்க மனிதனாக வாழ்ந்தேன் - நல்ல பண்புகளுடன் , ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் சிறிதும் மாறாமல் வாழ்வது என்பது எவ்வளவு கடினமான அனுபவம் ... மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் மீண்டும் மனித அவதாரத்தைத்தான் விரும்புவேன் ..... "
மிக்க நன்றி சார் , பொறுமையுடன் என் பதிவுகளை படிப்பதற்காக --