evergreen youthful star of world cinema
the othername of energy
Quote:
" புதிய பூமி " (27-06-1968) திரைப்படம் கண்ட அனுபவம் :
http://i60.tinypic.com/eja2ig.jpg
சென்னை " குளோப் " ( பின்னாளில் "அலங்கார்" என்று பெயர் மாற்றப்பட்டது) அரங்கில், "புதிய பூமி" காவியத்தை, நான் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது கண்டு களித்தேன். நான், என்னுடைய வகுப்பு தோழர்கள் திரு. ரங்கராஜன், திரு. பார்த்தசாரதி, திரு. ஜி. கே. ரவிக்குமார் ஆகியோருடன் முதல் நாள் ( வியாழக்கிழமை ) மாலை காட்சியில் தான் பார்க்க முடிந்தது. ஆனால், அதற்கு முன்பு, சென்னை திருவல்லிக்கேணி எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த, மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர்களுடன் ளுடன் இணைந்து வழக்கம் போல் தோரணங்கள், ஸ்டார் போன்றவற்றை, அவர்களின் கட்டளைப்படி கட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் 12 - 13 வயது சிறுவர்களாக இருந்தபடியால், எங்கள் ஆர்வத்தை அந்த மூத்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மக்கள் திலகத்தின் படத்துக்கு இது மாதிரியான வேலைகள் செய்வதை பெரும் பாக்கியமாக கருதினோம். அந்த மூத்த ரசிகர்கள் சிலர் ஏற்கனவே பகல் காட்சியில் "புதிய பூமி" காவியத்தை கண்டு களித்திருந்தாலும், ராமமூர்த்தி, பாலன், மணி, போன்ற சிலர் மீண்டும் எங்களுடன் மாலை காட்சிக்கு இக்காவியத்தை காண வந்திருந்தனர். அவர்களின் தயவால், எங்களுக்கு முதல் நாள் டிக்கெட் சிரமம் இன்றி கிடைத்தது.
அப்போது சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற செயலாளராக திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் இருந்ததாக நினைவு. அவரின் ஆணைப்படி, ஒருங்கினைப்பின்படி, மக்கள் திலகத்தின் பல்வேறு மன்ற அமைப்புக்கள் துடிப்புடன் செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.
திரையில் நம் பொன்மனசெம்மல் தோன்றும் முதல் காட்சியில், பலத்த கைதட்டல், விசில், உற்சாகம், ஆரவாரம், ஆர்ப்பரிப்பு. சிறுவர்களாகிய நாங்கள் அதை வெகுவாக ரசித்தோம்.
"நான் உங்கள் வீட்டு பிள்ளை" என்ற பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. உற்சாக நடனம் புரிந்தனர் ரசிகர்கள். 1967ல் தென்காசி சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் (743) வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்த தி. மு. க. வேட்பாளர் கதிரவன் என்கின்ற சம்சுதீன்,
அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் பிள்ளை அவர்கள் மறைவால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க வேட்பாளர் கதிரவனை நினைவு படுத்தும் விதமாக கதாநாயகனின் பெயர் கதிரவன் என்று நிர்ணயிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் கதிரவன் அமோக வெற்றி பெற்றார். (தி. மு. க. வின் வெற்றிக்கு நம் புரட்சித் தலைவர் உழைத்த கடின உழைப்பு சொல்லி மாளாது) .
அனைத்து பாடல்களுமே தேனினும் இனியது. குறிப்பாக, ' விழியே விழியே உனக்கென்ன வேலை ' என்ற பாடலின் இறுதிக் காட்சியில் நம் மக்கள் திலகம் நகத்தை கடித்தபடி, வெட்கப்படும் காட்சி வெகு நளினமானது. இயல்பான நடிப்பால் இமயத்தின் உச்சியை தொட்ட நம் மக்கள் திலகத்தின் அந்த நடிப்புக் காட்சி வெகுவாக அப்போதே ரசிக்கப்பட்டது.
அடுக்கடுக்காய் நம் ஒப்பற்ற இதய தெய்வத்தின் அழகையும்,, நடிப்பையும், அங்குலம் அங்குலமாக வர்ணனை செய்யலாம். 51 வயதில், இப்படி ஓர் அழகா என்ற வினா எழுகிறது.
http://i60.tinypic.com/hv54jn.jpg
இளமையின் துள்ளல், இனிமையின் உருவம் இதுதான் மக்கள் திலகம் என்று, திரைப்படம் முடிந்து செல்கையில், உணர்வுப்பூர்வமாக மக்களும், ரசிகர்களும் பேசிக்கொண்டு சென்றனர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்