பதில் கடிதம் போட்டாகிவிட்டது :)
Printable View
ராஜேஷ் சார்,
விரசத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இருக்காது. அதனால்தான் அவர் கண்ணியப் பாடகி. நம் கண்ணான பாடகி.
ஒரு மாதிரியான பாட்டு. கரணம் தப்பினாலும் மரணம் என்பதைப் போல. ஆனால் என்ன ஒரு இனிமை தந்து முகம் சுளிக்க வைக்காமல், அருவருப்பு அடைய வைக்காமல், மீண்டும் மீண்டும் இப்பாடலைக் கேட்கத் தூண்டுகிறார் இந்த இன்னிசை அரசி. இசையரசியின் குரலும், இளையராஜாவின் மிரள வைக்கும் இசையும் எப்படி ஒன்றோடொன்று பின்னி இழைகின்றன!
'நிலவு நேரம்
இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி'
இந்த 'அன்னை' ஓர் ஆலயம்தனே!
http://www.youtube.com/watch?v=tzKF1...yer_detailpage
ஆம் இந்த அன்னை ஒரு இசை ஆலயம் அதெல்ன்ன சந்தேகம்
எஸ்வி,
நடிகைகளின் பழைய படங்கள் அழகோ அழகு. முக்கியமாக சாரதா. நடிகர்திலகத்தின் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்க வேண்டியவர்.
திராவிட மன்மதனுடன் - திராவிட ரதி தேவி இணைந்து கலக்கும் தேவா பாட்டிற்கு நன்றி.
நீங்கள் இந்த மாதிரி பங்களிப்பில் மிளிர்கிரீர்கள். தொடருங்கள். நாங்களும் தொடருவோம்.
உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி. என் எடையை உடற்பயிற்சியின்றி ,ஐந்து கிலோ குறைத்து,ரேகையையும் தேய விட்டாயிற்று.
ராஜேஷ் சார்,
பதிலுக்கு பதில் :)
கோபால் ஜி, ஆம் இருந்தாலும் நடிகர் திலகம் தான் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கொடுத்தார்.
முதன் முதலில் குங்குமம் திரைக்காக அவரை பரிந்துரைக்க மற்றவர்கள் வேண்டாம் என்றார்களாம், ஆனால் நடிகர் திலகமோ நல்லா நடிப்பா அவளையே புக் செய்யுங்க என்று சொன்னாராம்.. இன்னும் பல படங்களில் நடித்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.. மிகத்திறமையான நடிகை