http://i59.tinypic.com/2inl9c.jpg
Printable View
இன்று முதல், (02/04/2015) மதுரை மீனாட்சி பாரடைசில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
.
(ஜே.பி. ) விஜயம். - ஏ.வி.எம்.அளிக்கும் "அன்பே வா " தினசரி 4 காட்சிகள். அதன் சுவரொட்டிகள் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.
http://i57.tinypic.com/avfriv.jpg
திரு ஹைதராபத் ரவிக்குமார் சார்
திருடாதே -படத்தை பார்த்து நீங்கள் உணர்வுபூர்வமாக எழுதிய கருத்துக்கள் மிகவும் சரியே.
தாய்மை பற்றிய உங்களின் தொகுப்பு - அபாரம் .
நினைக்க கோடி உண்டு.. மறக்க ஒன்றே ஒன்று தான் – அவர் மறைவு
அவர் நடித்த படங்களும், அதன் தலைப்புகளும் அவர் நடந்த தடங்களாகவும், அவர் நடத்தியப் பாடங்களாகவும் ஆகின. பெற்றால்தான் பிள்ளையா, தாயைக் காத்த தனயன், அன்னமிட்டகை, பாசம், ஊருக்கு உழைப்பவன், படகோட்டி, தொழிலாளி, ரிக்க்ஷாக்காரன், விவசாயி, காவல்காரன் என ஒவ்வொரு படத்தின் தலைப்பும் அவருக்குப் புகழை வாரி வாரி வழங்கிட… திரை உலகில் ஒளி விளக்காக மிளிர்ந்து உலகம் சுற்றும் வாலிபனாக இறுதியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனுடன் அவர் தனது திரையுலகத் தொடர்பை காரண காரியங்களை முன்னிட்டு துண்டித்துவிட்டார். அவரது நடிப்பு தான் நின்றுபோனதே தவிர அவரின் இதயத்துடிப்பு நின்றபாடில்லை. இன்றும்கூட அவரது படங்களை விரும்பிப் பார்க்கும் மக்கள் இருந்து கொண்டுள்ளார்கள் என்பதே அதற்குச் சான்று!
பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.
எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.
Courtesy - vallami.