ஹாய் ஆல் குட் மார்னிங்க்.. மாஞ்சு மாஞ்சு எழுதின தண்ணீர் தண்ணீர்..யாருமே கண்டுக்கலயே ..ஒரு வேள நல்லபாட்டில்லையோ..
Printable View
ஹாய் ஆல் குட் மார்னிங்க்.. மாஞ்சு மாஞ்சு எழுதின தண்ணீர் தண்ணீர்..யாருமே கண்டுக்கலயே ..ஒரு வேள நல்லபாட்டில்லையோ..
எங்கள் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையில் ,பாடகர் திலகம்-இசை தெய்வ பாடகி , கண்ணதாசனின் குறும்பு, மன்மதனுடன் -(பா)ரதி இணைந்து கலக்கும் ராமண்ணா trade mark கிணற்று பாடல்.
https://www.youtube.com/watch?v=E0ofgj--MQQ
ராஜேஷ் கோபால் நன்றி :)சமையல் எப்படி இருந்தது என்று கேட்கும் மனைவிக்கு தரும் அதே பதில்தான். // என்னை மாதிரியே நிறையப் பேரு இருக்காங்க :)
வாசு ஜி கன்னட கதம்பம் தொடர்ச்சி..
நாகர ஹாவு (ராஜ நாகத்தின் ஒரிஜினல்).. ராமாச்சாரி வேடத்தில் விஷ்ணுவர்த்தன் அறிமுகம்.. தமிழிலும் கன்னடத்தில் கிறித்துவ பெண் வேடத்தில் சுபா
மஞ்சுளாவின் வேடத்தில் ஆர்த்தி .. தமிழை விட கன்னடம் இன்னும் நன்று .. இயக்கம் புட்டண்ணா..
விஜயபாஸ்கரின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து மாணிக்கம்..
இதோ தேவன் வேதமும் கண்ணன் கீதையும் என்ற தமிழின் ஒரிஜினல் சங்கமா சங்கமா அனுராக சங்கமா
அதையே பெண்டியாலா கொஞம் மாற்றி சங்கமம் சங்கமம் என்று இதன் தெலுங்கு வடிவான கொடெ நாகுவில் தந்தார்..
பி.பிஸ்ரீனிவாஸும் இசையரசியும் அற்புதம் போங்கள்
நீங்களே கேட்டு மகிழுங்கள்
http://www.youtube.com/watch?v=36E9G1Wzp1s
ஒரு சாதாரண மழைக்கே இப்போது தண்ணீர் தண்ணீர் என்று தேங்கி நிற்கும் தண்ணீரைப் பார்த்து ஒதுங்கி செல்ல வேண்டிய சாலைகளை நினைத்து சலிக்க வேண்டியதாயிற்று. ஆனால் வறட்சியால் தண்ணீர் தண்ணீர் என்று ஏங்கி நின்ற காலங்கள்... ஹ்ம்ம்... எவ்வளவு கஷ்டங்கள் பட்டோம்... அதை அப்படியே பாலச்சந்தர் திரையில் வடித்து விட்டார்... சி.க. சார் தன் பதிவிலும் அதை அப்படியே பிரதிபலித்து விட்டீர்..
பாராட்டுக்கள் சி.க. சார்
நாகரஹாவின் மற்ற பாடல்களை விட முடியவில்லை
அலமேலு தான் படும் கஷ்டங்களை ராமாச்சாரியிடம் சொல்லும் கதெ ஹேளுவே நன்னா கதெ ஹேளுவே..
http://www.youtube.com/watch?v=h_bq84Ti7oo
இதற்கெல்லாம் முன்பாக அலமேலு சந்தோஷமாக இருந்த காலத்தில் பாடும் கற்பூரதா பொம்பே நானு
என்றுமே என்னை மிகவும் சந்தோஷ படுத்தும் பாடல்
http://www.youtube.com/watch?v=zz5VJNaXVPs
பொங்கும் பூம்புனல்
ஆளாளுக்கு இப்படி விவாதம் செய்து கொண்டிருந்தால் இதற்கு என்ன தான் முடிவு...
என்னை முறைச்சுப் பார்க்கும் ஆளைக் கண்டால் எனக்குப் பிடிக்கலே...
ஐயையோ .... சார் இதில் எந்த பாலிடிக்ஸும் இல்லை... இந்த பாட்டில் உள்ள வரிகளை எடுத்துச்சொன்னேன் அவ்வளவு தான்..
நாம் எந்தக் கட்சியும் இல்லையடா சாமி... நல்ல பாட்டை யார் தந்தாலும் ஓ.கே. தான்..
சரி..சரி.. விஷயத்திற்கு வருவோம்.. பொங்கும் பூம்புனல் தொடருக்கு பாராட்டும் ஆதரவும் தரும் அனைத்து நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
என்னதான் முடிவு திரைப்படத்திலிருந்து ஆர்.சுதர்ஸனம் இசையில் இசையரசியின் குரலில் அபூர்வமான பாடல்
பொண்ணைப் பாத்து மயிலக் காளை மயங்குதிப்போது...
இந்த குரலைக் கேட்டு இங்கு கூட மயங்குதிப்போது...
http://www.youtube.com/watch?v=DOGmJERSWMQ