தமிழ் இந்து -08/04/2016
http://i66.tinypic.com/1et8hj.jpg
http://i68.tinypic.com/3508il2.jpg
http://i63.tinypic.com/jq3tx3.jpg
Printable View
தமிழ் இந்து -08/04/2016
http://i66.tinypic.com/1et8hj.jpg
http://i68.tinypic.com/3508il2.jpg
http://i63.tinypic.com/jq3tx3.jpg
THE HINDU - CINIMA PLUS-03/04/2016
http://i63.tinypic.com/10wjyu8.jpg
http://i67.tinypic.com/zx8tgk.jpg
http://i66.tinypic.com/25ovtbs.jpg
மக்கள்திலகம் அவர்களின் ஆவணங்கள் , புகைப்பட பதிவுகள் வழங்கி கொண்டிருக்கும் உடன் பிறவா சகோதரர்களுக்கு என்றெண்டும் திரையுலக சக்கரவர்த்தி புரட்சிதலைவர் அபிமானிகள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...
காய்ந்து சிவந்தது சூரியகாந்தி - தரணியில்
தோய்ந்து சிவந்தது காய்ச்சிய தங்கம் ;
ஆய்ந்து சிவந்தது அறிஞர் தம் நெஞ்சம் - தினம்
ஈந்து சிவந்தன எம்ஜியார் இரு கரமே .........
எங்கள் வீட்டுப் பிள்ளை , ஏழைகளின் தோழன்
தங்க குணமுள்ள கலை மன்னன்
மக்கள் திலகம் எங்கள் எம்ஜியார் அண்ணன் .....
- இசை முரசுவின் தனிப் பாடல்
1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது.
- தி இந்து
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தபோது எம்.ஜி.ஆர்-கருணாநிதி இருவருக்குமிடையே நடந்த கருத்துமோதல்களும் அதற்கு அவர்கள் எதிர்வினையாற்றியதும் தெரிந்தவிஷயம். அதிமுக துவங்கி சில ஆண்டுகள் கழிந்தபின் நடந்த சம்பவம் அது.
கருணாநிதி-எம்.ஜி.ஆர் மோதல் உச்சத்திலிருந்த நேரம். ஒரு மேடையில் கருணாநிதியை கடும் வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டு எம்.ஜி.ஆரை வந்து சந்தித்தார் அந்த இரண்டாம் கட்டத்தலைவர். இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். இரண்டாம் கட்டத்தலைவர், தான் கருணாநிதியை மேடையில் வறுத்தெடுத்ததை எம்.ஜி.ஆரிடம் பெருமிதமாக கூறினார். தலைவர் நம்மை பாராட்டுவார் என்பது அவரது எண்ணம். ஆனால் அந்த தலைவர் கதையை சொல்லி முடித்த அடுத்த வினாடி எம்.ஜி.ஆர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச்சொன்னார்.
சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டத்தலைவரை காரை விட்டு இறங்கச்சொன்னவர், “ கருணாநிதியை மேடையில் கண்டபடி பேசியதோடு இல்லாமல் அதை என்னிடமே வந்துசொல்கிறாயா...கருணாநிதியை பெயர் சொல்லிப்பேச உனக்கு என்ன் அருகதை இருக்கிறது. எனக்கும் அவருக்கும் ஆயிரம் கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனாலும் ஒருகாலத்தில் எனக்கு தலைவராக இருந்தவர். அப்படிப்பட்டவரை நேற்று அரசியலுக்கு வந்த நீ எப்படி இப்படி பேசுவாய்...நான் உனக்கு தலைவர்...உன் தலைவரான எனக்கே அவர் தலைவராக இருந்தவர் என்றால் அவருக்கு என்ன மரியாதை தரவேண்டும்...அரசியல் வெளிச்சத்தில் இன்று நீ வந்துவிட்டாய் என்பதற்காக பழசை மறக்கக்கூடாது. இனிமேலாவது மரியாதையாக பேசு” என சீறினார். பின்பு கிளம்பியது கார். சீறிச்சென்ற காரை பார்த்தபடி அதிர்ச்சியில் உறைந்துநின்றார் அந்த தலைவர். இப்படி அரசியலில் தங்கள் கண்ணியத்தை பேணிய தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.
## புரட்சித்தலைவரின் கடுங்கோபத்திற்கு
ஆளான அந்தநபர் , அப்போது கட்சியின்
தென்சென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பில்
இருந்த அண்ணன்ஜேப்பியார் .
courtesy chandran veerasamy fb
தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., வெளியேற்றப்பட்ட பிறகு, 1977ல் நடந்த தேர்தல் தான், தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது.
அதற்கு முன், தி.மு.க.,வில், சில மாற்றங்கள் நடந்தன. கருணாநிதியின் தலைமைக்கு போட்டியாக வருவார் என, கருதப்பட்ட மதியழகன், நிதியமைச்சர் பதவியிலிருந்து துாக்கப்பட்டார்.
மற்றொரு முக்கிய தலைவர் சத்தியவாணிமுத்து, தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்று விலகினார். நெடுஞ்செழியனும் விலகி, மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கினார். ஆனால், எம்.ஜி.ஆர்., துவங்கிய
அ.தி.மு.க., தான், தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்தது.
அந்த தேர்தலில், தி.மு.க.,வும், ஜனதா கட்சியும், ஒரு கூட்டணி; அ.தி.மு.க.,வும், மார்க்சிஸ்ட் கட்சியும் எதிரணி. காங்கிரசும்,இந்திய கம்யூனிஸ்டும், இன்னொரு கூட்டணி. மும்முனைப் போட்டியான அத்தேர்தலில், தி.மு.க., 25 சதவீத ஓட்டுகள் பெற்று, 48 இடங்களை மட்டுமே பிடித்தது. 200 இடங்களில் போட்டியிட்ட, அ.தி.மு.க., 30
சதவீத ஓட்டுகளை பெற்று, 130 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சி அமைத்தது.
அதே ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு எம்.ஜி.ஆர்., ஆதரவு அளித்தார். ஆனால், ஜனதா கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்ததும், அதற்கு வெளிப்படையாக ஆதரவளித்தார்.
தமிழகத்தில், தஞ்சாவூர் தொகுதி இடைத்தேர்தலில், இந்திரா நின்றால் வெற்றி பெற செய்வதாக,
எம்.ஜி.ஆர்., வாக்களித்தார். ஆனால், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் நிர்பந்தம் காரணமாக பின்வாங்கினார். அதனால், காங்கிரஸ் ஆட்சி செய்த கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில், இந்திரா போட்டியிட நேர்ந்தது.தஞ்சை வாக்குறுதிக்கு பரிகாரமாக, சிக்மகளூரில் நாஞ்சில் மனோகரன் தலைமையில் அமைச்சர்கள் குழுவை அனுப்பி, இந்திராவின் வெற்றிக்கு
எம்.ஜி.ஆர்., பாடுபட்டார். ஜனதா அரசு கவிழ்ந்ததும், அ.தி.மு.க.,வை முந்திக்கொண்டு, காங்கிரஸ் பக்கம் தி.மு.க., சாய்ந்தது. அதன்படி, 1980 லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது. எம்.ஜி.ஆர்., ஜனதா கட்சியோடு சேர்ந்தார். அந்த தேர்தலில் ஜனதா -- அ.தி.மு.க., கூட்டணி, இரண்டு இடங்கள் மட்டுமே பிடித்தது. காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி, 37 தொகுதி களை கைப்பற்றியது.
உடனடியாக சட்டசபை தேர்தல் நடத்தினால், ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கருணாநிதியின் பேச்சை நம்பி, அ.தி.மு.க., ஆட்சியை இந்திரா கலைத்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக இடதுசாரிகள் களம் இறங்கினர்.
காங்கிரஸ்- - தி.மு.க., ஒரு அணியாக களம் கண்டன. ஆனால், தி.மு.க.,வை மக்கள் புறக்கணித்தனர். அத்தேர்தலில், அ.தி.மு.க., 39 சதவீத ஓட்டுகளை பெற்று, 129 தொகுதிகளுடன் ஆட்சியை தக்கவைத்தது. தி.மு.க., 30 சதவீத ஓட்டுகளை பெற்று, 37 தொகுதிகளை மட்டுமே பிடித்தது.
இந்திரா மறைவால், 1984 தேர்தல் முக்கியத்துவம் பெற்றது. ராஜிவ் பிரதமரானார். அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவாக, எம்.ஜி.ஆர்.,
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக, அமெரிக்கா சென்றார். அவரது பிரசாரம் இல்லாமலே, அ.தி.மு.க., 38 சதவீத ஓட்டுகளை பெற்று, 132 இடங்களில் வெற்றி கண்டது.
அந்த வெற்றியின் பின்புலத்தில், எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருந்த வீடியோ காட்சிகள் இடம் பெற்றன. தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருக்கும் காட்சிகளையும், இந்திரா உடல் தகன காட்சிகளையும் இணைத்து, ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார். அதனால், தி.மு.க., 24 தொகுதிகளை மட்டும் பெற்று, மூன்றாவது தோல்வியை தழுவியது. அ.தி.மு.க.,வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர்., மறையும் வரை தோல்வியை கண்டறியாத சரித்திர நாயகனாகவே விளங்கினார்.
courtesy dinamalar
துாசி தட்டப்படும் எம்.ஜி.ஆரின் பிரசார வேன்...விஜயகாந்தின் சென்டிமென்ட்!
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய தேர்தல் பிரசார வேனை, தனது 2016 தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். கட்சி அலுவலகமான கோயம்பேட்டில் அந்த வேனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
எம்.ஜி.ஆரின் பிரபலமான TN w -2005 என்ற எண் கொண்ட வெளிர் நீல நிறம் கொண்ட இந்த வேனை, எம்.ஜி.ஆர் கடந்த காலங்களில் தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தினார். ஏ.சி செய்யப்பட்டு, படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட இந்த வேனின் நடுமையத்தில் உள்ள துளையின் வழியாக எம்.ஜி.ஆர், பிரசார பாயின்ட்டுகளில் ஏறி நின்று, கூம்பு வடிவ மைக் அல்லது ஒயர் மைக்கில் பேசுவார்.
பிரசாரம் முடிந்ததும் வேனின் பின்புறமுள்ள இடத்தில் ஓய்வு எடுத்துக்கொள்வார். பேசுகிறபோது வேனின் இருபுறமும், அவருக்கு நெருக்கமான ஸ்டண்ட் ஆட்கள் பாதுகாப்பாக நின்றுகொள்வர். திமுகவிலிருந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர் பல்வேறு தாக்குதல்களை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது.
மதுரையில் ஒருமுறை, பிரசாரத்தின்போது மலையூர் மம்பட்டியானின் ஆட்கள் எம்.ஜி.ஆரை தாக்கவிருந்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது உண்டு.
பின்னாளில் திமுகவிலிருந்து பிரிந்துவந்தபின் எதிர்க்கட்சியினர் கற்களை வீசுவது, கம்பு எரிவது என திடீர் தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். இதன்பின்னா்தான் எம்.ஜி.ஆர் தனக்கு பிரத்யேக வாகனத்தை வடிவமைத்துக்கொண்டதோடு, ஸ்டண்ட் ஆட்களுடன் பிரசாரம் செய்யத்துவங்கினார். பிரசாரத்தின்போது எந்த ஊர்களிலாவது தொண்டர்கள் கொடிக்கம்பத்தை நிறுவி, அதில் எம்.ஜி.ஆரை கொடிஏற்ற வற்புறுத்துவர். நிகழ்ச்சி நிரலில் அது இல்லையென்றாலும் தொண்டரின் மனதை கஷ்டப்படுத்தவிரும்பாத எம்.ஜி.ஆர், வண்டியில் இருந்தபடியே கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துவிட்டு கிளம்புவார்.
சில இடங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டச்சொல்லி குரல் கொடுப்பர். இதை கவனிக்கும் எம்.ஜி.ஆர், அருகிலிருக்கும் பாதுகாவலர்களிடம் சொல்ல அவர்கள் குழந்தையை மிக பத்திரமாக மேலே கொண்டுவருவர். குழந்தையை பெண்ணா அல்லது ஆணா என நாசூக்காக கவனித்து, பெயர் சூட்டிவிட்டு, பத்திரமாக குழந்தை பெற்றோரிடம் சென்று சேர்வதை பிரசாரத்திற்கு நடுவேவும் கவனமாக பார்ப்பார்.
ஒரு பாயிண்ட்டுக்கும் அடுத்த பாயிண்டுக்கும் நடுவே அவர் எடுக்கும் ஓய்வுதான் அன்றைய ஓய்வு. மீண்டும் அடுத்த பாயிண்ட் வந்ததும் தொண்டர்களிடம் பழைய உற்சாகத்துடன் பேசத்துவங்குவார் எம்.ஜி.ஆர். எவ்வளவு சோர்வு தென்பட்டாலும் தொண்டர்களை கண்டுவிட்டால் உற்சாகமாகிவிடும் அவரது முகம். இதுதான் எம்.ஜி.ஆரின் பிரசார பாணி.
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் அந்த வாகனம், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய வாகனங்களின் வரிசையில் பின்னாளில் ராமாவரத்தில் உள்ள வீட்டில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இயல்பிலேயே எம்.ஜி.ஆரின் ரசிகரான விஜயகாந்த், 96- ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையாருடன் நட்புடன் இருந்த ஒரு சமயத்தில், எம்.ஜி.ஆர் நினைவாக தனக்கு அந்த வேனை தரும்படி கேட்டுப்பெற்றார்.
இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தாலும் ஜானகி அம்மையார் உறுதியாக இருந்தார். ராமாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட வேன், விஜயகாந்தின் கோயம்பேடு மண்டபத்தில் வெறுமனே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
2005- ம் ஆண்டு, தே.மு.தி.க.,வை துவக்கிய விஜயகாந்த், மதுரையில் நடந்த தனது கட்சி மாநாட்டிற்கு ராசியாக கருதி, இந்த பிரசார வேனில் மேடைக்கு வந்தார்.
விருதாச்சலம் தொகுதியில் பிரசாரத்தின்போது அந்த வேனில், சில இடங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அதன்பின், மீண்டும் ஷெட்டுக்கே சென்றது வேன். வேனை கேட்டுப்பெற்ற விஜயகாந்த், அதை முறையாக பராமரிக்கவில்லை என அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பும் எழுந்தது.
இப்போது மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் கவனம் மீண்டும் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய வேன் மீது திரும்பியுள்ளது. 77 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.ஜி.ஆருக்கு, அதன்பின் தொடர்ந்து அரசியலில் வெற்றிமுகமாகவே இருந்ததால் இந்தமுறை எம்.ஜி.ஆரின் ராசி தனக்கு ஒத்துழைக்கும் என நினைக்கும் விஜயகாந்த், மீண்டும் வேனை தூசி தட்ட உத்தரவிட்டுள்ளார்.
வேன் தயாரானதும், சம்பிரதாயமாக தான் பிரச்சாரம் செய்யும் ஓரிரு இடங்களில் மட்டும் அதில் ஏறி நின்று பேசி மக்களிடையே ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜயகாந்தின் இந்த வேன் சென்டிமென்ட் அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பது மே 19 ல் தெரிந்துவிடும்.
courtesy junior vikatan