-
சிவாஜிகணேசனின் கடைசி நிமிடங்கள்: உடன் இருந்த தாணு உருக்கமான தகவல்கள்
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 12, 11:22 pm ist
சிவாஜிகணேசன் உயிர் பிரியும் வேளையில், அருகில் இருந்தவர் கலைப்புலி தாணு.
சிவாஜிகணேசன் நடித்த 'மன்னவரு சின்னவரு' படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். அந்த காலக்கட்டத்தில், அவர்கள் நெருக்கமாகப் பழகினார்கள்.
சிவாஜியுடனான தனது அனுபவங்கள் பற்றி தாணு தொடர்ந்து கூறியதாவது:-
'நடிப்பு என்று செட்டுக்கு வந்துவிட்டால், முழுக்க அதன் மீதே கவனமாக இருப்பார் என்று சிவாஜி சாரை சொல்வார்கள். 'மன்னவரு சின்னவரு' படத்தில் நடித்த நேரத்தில், எனக்காக ஒரு சிக்கன நடவடிக்கையையும் அவர் மேற்கொண்டார்.
பெங்களூரில் உள்ள ஒரு லாட்ஜில் அன்று படப்பிடிப்பு. செட்டுக்கு வந்த சிவாஜி சார் பேச்சுவாக்கில் அங்கிருந்தவர்களிடம், 'எவ்வளவு வாடகை?' என்று கேட்டிருக்கிறார். அவர்கள் ஒருநாள் படப்பிடிப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் வாடகை என்று சொல்லியிருக்கிறார்கள்.
உடனே சிவாஜி சார், 'இந்த இடத்தோட ஓணர் எங்கே? என்று கேட்டதோடு அப்படியே 'புலி எங்கே?' என்று என்னையும் தேடியிருக்கிறார். நான் அங்கில்லை என்று தெரிந்ததும், லாட்ஜின் மானேஜரிடம் 'இந்த சின்ன இடத்துக்கு ஒரு நாள் வாடகை 25 ஆயிரம் என்பது ரொம்ப ரொம்ப அதிகம்.
10 ஆயிரம்தான் கொடுக்கலாம். உங்க முதலாளி கிட்ட நான் சொன்னேன் என்று சொல்லு. அவர் வாடகையை குறைக்கலேன்னா நான் நடிக்கிறதா இல்லே' என்று கூறியிருக்கிறார்.
உடனடியாக லாட்ஜின் உரிமையாளருக்கு தகவல் சொல்லப்பட்டு, அவரும், சிவாஜி சாரே கூறுகிறார் என்பதால், 10 ஆயிரம் வாடகைக்கு கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த தகவல் எனக்கு தெரியவந்தபோது, 'என் மீது கொண்ட அக்கறையில்தான் சிவாஜி சார் இப்படி செய்திருக்கிறார்' என்பதை உணர்ந்து கொண்டேன். என் மீது அவருக்கு எப்பேர்ப்பட்ட அன்பு இருந்திருந்தால் இப்படி முயற்சி மேற்கொண்டிருப்பார்!
'மன்னவரு சின்னவரு' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதுதான், அவருக்கு சளித்தொந்தரவு இருந்தது எனக்குத் தெரியும். தினமும் `ஆக்சிஜன் டபிளேசர்' மூலம் தொண்டை சளியை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்படிச் செய்யாவிட்டால் நுரையீரலில் கிருமிகள் சேர்ந்துவிடும் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
'எனக்காக இப்படி கஷ்டப்படுகிறீர்களே?' என்று கேட்டபோது, 'யார் யாருக்கோ பண்றேன். என்னைநேசிக்கிற உனக்காக இந்த சின்ன கஷ்டத்தைத் தாங்கமாட்டேனா புலி' என்று திருப்பிக் கேட்டார்.
பழகிவிட்டால் ஆத்மார்த்தமான அன்பைத் தருவதில் சிவாஜி சாருக்கு இணை அவர்தான். நாமாக அவரை சந்திக்காவிட்டாலும் அவராக நம்மை தொடர்பு கொண்டு நட்பு பாராட்டுவார்.
இப்படித்தான் ஒருநாள் நான் காரில் நந்தனம் தேவர் சிலை அருகில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சிவாஜி சாரின் உதவியாளரும் டிரைவருமான முருகன் 'சிவாஜி சார் உங்களை சந்திக்க விரும்புகிறார். உடனடியாக போனில் தொடர்பு கொண்டு பேசுங்கள்' என்றார்.
உடனடியாக நான் போனில் சிவாஜி சாரை தொடர்பு கொண்டேன். என் குரலைக் கேட்டவர், 'புலி, எங்கிருக்கே?' என்று கேட்டார். 'நந்தனம் பக்கம் காரில் வந்து கொண்டிருக்கிறேன்' என்றேன்.
'நேரா இங்கே வர்றே! என் கூட சாப்பிடறே! எவ்வளவு நேரத்தில் வருவே?' என்று கேட்டார்.
'5 நிமிஷத்தில் வந்துடறேன்' என்றேன்.
இதைத்தொடர்ந்து என் கார் நேராக போக் ரோட்டில் உள்ள சிவாஜி சார் வீட்டுக்கு போனது.
நான் போகும்போது சிவாஜி டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்தார். அவருடன் சிங்கப்பூர் டி.டி. துரை என்பவரும் இருந்தார். (அவரை சிவாஜி சாரே எனக்கு அறிமுகப்படுத்தினார்).
மூவருமாய் மதிய உணவருந்துகிறோம். சாப்பிட்டு முடித்ததும் டி.டி.துரை கிளம்புகிறார். அவர் போனதும் அதுவரை இயல்பாய் காணப்பட்ட சிவாஜி சாரின் முகத்தில் திடீரென உற்சாகம் தொலைந்து போனது. அப்போது அவரது மகள் வயிற்றுப் பேத்தியின் கணவர் (சுதாகரன்) ஜெயிலில் இருந்தார். அதுபற்றி பேசிய சிவாஜி சார், 'புலி! இந்த சூழல்ல என்னை கடவுள் ஏன்தான் இன்னும் வெச்சிருக்கார்ன்னே தோணுது.
குழந்தைகள் முகத்தைப் பார்க்க முடியலை. நிம்மதி இல்லாம இருக்காங்க. நான் எதைச்சொல்லி அவங்களை சமாதானப்படுத்துவேன்? இவங்களுக்குக்கூட எதுவுமே செய்யமுடியாம வாழறதைவிட போய்ச்சேரலாம். அண்ணன் எம்.ஜி.ஆர். கொடுத்து வெச்சவரு. நல்ல பேரு, புகழ் செல்வாக்கோட போய் சேர்ந்தாரு. நான்தான் அந்த பஸ்ஸை `மிஸ்' பண்ணிட்டேன்' என்றார். சொல்லும்போதே குரலில் அத்தனை விரக்தி.
நான் அவரை என்வரையில் சமாதானப்படுத்தினேன். 'உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லவிதமாக நடக்கும் சார்' என்று சொன்னேன்.
'என்னமோ புலி! இதையெல்லாம் உங்கிட்ட சொல்லணும்னு தோணிச்சு. ஏதோ கடவுள் கண்ணைத் தொறந்தா சரி' என்றவர், 'நான் வரட்டுமா?' என்று ஓய்வெடுக்க மாடிக்கு புறப்பட்டார்.
அப்போதுகூட என் மனதில் சின்னதாய் ஒரு திருப்தி. நடிப்புக்கே திலகமானவர், கலைப்பொக்கிஷமாக விளங்குபவர், தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கியாக என்னைக் கருதினாரே! அந்த மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பினேன்.
இது நடந்து 15 நாள் கழித்து எனக்கு டைமண்ட் பாபுவிடம் இருந்து போன். 'சிவாஜி சார் சீரியசான நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்று கூறியவர், என்னை வந்து பார்த்துவிட்டுப் போகும்படியும் சொன்னார்.
அதிர்ந்து போன நான், அப்போதே காரில் அப்பல்லோ பறந்தேன். சிவாஜி சார் 'ஐசியூ' வில் (தீவிர கண்காணிப்பு பிரிவு) அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராம்குமார் அங்கிருந்த சிவாஜி குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறேன். அப்போது ராம்குமார் என்னிடம் உடைந்த குரலில் 'அப்பாவின் இறுதி மூச்சு அடங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம்தான் இருப்பார்' என்று சொல்ல, நான் மனம் கேட்காமல் பதற்றமாய் சிவாஜி சார் இருந்த `ஐசிï'வுக்குள் போக ராம்குமாரை அழைக்கிறேன். 'எனக்கு சக்தி இல்லை சார்!' என்று அவர் கூற, பிடிவாதமாக அழைத்துக் கொண்டு போகிறேன்.
தனது ஒப்பற்ற நடிப்பால் சரித்திரம் படைத்தவர். உலகமே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் கலைச்சக்கரவர்த்தியின் இறுதி மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். தன் தந்தையின் அந்த கடைசிக் கட்டத்தை காண மனம் தாங்காததால், அழுதுகொண்டே ராம்குமார் அறையில் இருந்து வெளியேறினார்.
நான் மட்டும் நிற்கிறேன். சில நொடிகளில் நடிப்பின் இமயத்தின் இறுதிமூச்சு, கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி முடிகிறது. இதைப் பார்த்த ஒரே துர்பாக்யசாலி நான்தான். சிவாஜி சாரை அன்னை ராஜாமணி அம்மையார் ஈன்றெடுத்த அந்த வினாடியில் தன் குழந்தையின் மூச்சுக்காற்றை எப்படியெல்லாம் சுவாசித்து மகிழ்ந்திருப்பார். அந்த குழந்தை கலைத்தாயின் தவப்புதல்வனாகி 70 வயது கடந்த நிலையில் இன்று இறுதி மூச்சை நிறுத்திக் கொள்வதை பார்க்கும் நிலைக்கு ஆளான நான் துர்பாக்கியசாலிதானே.
துயரம் நெஞ்சையடைக்க, கண்கள் ஆறாகப் பொங்க அவர் பாதம் தொட்டு வணங்கி அறையை விட்டு வெளியே வந்தேன். ஒரு சகாப்தம் அமரத்துவம் ஆனதை பார்க்க நேர்ந்த அந்த சோகத்திலும், சிவாஜி சார் என் மீது வைத்திருந்த அன்புதான் இந்த நேரத்தில் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும் எனக்குள்ளாக உணர்ந்தேன்.
சிவாஜி சார் காலமாகி 41-வது நாளில் அவருக்கு மத்திய அரசு சிறப்புத் தபால் தலை வெளியிட்டது. பிரமோத்மகாஜன் தலைமையில் பிரபல இந்தி நடிகர் சத்ருகன்சின்கா இந்த தபால் தலையை வெளியிட்டார்.
சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த இந்த விழாவில், கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டது இன்னொரு சிறப்பு. இது சிவாஜி என்ற மாபெரும் கலைஞருக்கு கிடைத்த சிறப்பு. இந்த விழாவில் சிவாஜி சாரின் நடிப்பு வரலாற்றை வைகோ விவரித்த அழகு, ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றது.'
இவ்வாறு தாணு கூறினார்.
-
Dear Ravi Sir,thanks for your reply.Thats why whenever I talked to my friends who dont understand the value of NT because of their immaturity,I say with pride that I am LUCKY to be a NT fan.With Regards.
-
Dear Saraswathi Madam,I think your article will bring tears in everyone who love NT and the way Thaanu has narrated its heart-breaking.
-
தலைவரின் இறுதி நிமிடங்களை தாணு அவர்கள் எழுதியதை பதிவிட்டு கண்ணில் நீர் வரவழைத்து விட்டீர்கள் ,
-
பதிவுக்கு நன்றி மேடம் - கண்களை குளமாக்கிவிட்டது இந்த பதிவு - எவள்ளவோ படங்களில் மரணத்தை தழுவிருக்கிறார் கதைக்காக , நடிப்புக்காக - ஆனால் ஏன் உண்மை மரணம் ஒரு நடிப்பாக இல்லாமல் போய்விட்டது ????
:(:(:(:(:(:(:(:(:(:(::
-
தாணு தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்த 'மன்னவரு சின்னவரு' படப்பிடிப்பின்போது நடந்த நிகழ்ச்சிகள்
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 11, 10:55 PM IST
தயாரிப்பாளர் தாணு கேட்டுக்கொண்டதற்கிணங்க, உடல் நலக்குறைவாக இருந்த நேரத்திலும் அவரது 'மன்னவரு சின்னவரு' படத்தில் சிவாஜிகணேசன் நடித்தார்.
சிவாஜி நடித்த படத்தை தயாரித்த அனுபவம் குறித்து தாணு கூறியதாவது:-
'நடிகர் திலகம் சிவாஜி சார் நடிக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஆனால் எனக்கு இந்த வாய்ப்பு தற்செயலாக அமைந்தது.
ஒருநாள் நான் வீட்டில் இருந்த நேரத்தில் நடிகர் அர்ஜூன் அவரது நண்பர் கோவை மணியுடன் வீட்டுக்கு வந்திருந்தார். பரஸ்பர பேச்சுவார்த்தைக்குப் பிறகு வீட்டை சுற்றிப் பார்த்தவர், வாஸ்து அமைப்பு சரியாக இருக்கிறது என்றும் பாராட்டினார்.
நான் முதன் முதலில் தயாரித்த 'யார்' படத்தின் நாயகன் அர்ஜூன். எனவே படம் பற்றி பேச வந்திருப்பார் என்று நான் எண்ணிய நேரத்தில் அர்ஜூனே ஆரம்பித்தார். 'தாணு சார்! உங்கள் தயாரிப்பில் 'யார்' படத்தில் நான் நடித்து 13 வருஷம் ஆகிறது. அந்தப் படத்துக்கு டிரைவ்இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் எதிரில் 100 அடிக்கு 'கட்அவுட்' வைத்திருந்தீர்கள். அதுவரை, 'ஒருவாரம் ஓடும் பட ஹீரோ' என்ற நிலையில் இருந்த நான், உங்களின் 'யார்' படம் வந்த பிறகுதான் 'நூறு நாள் பட ஹீரோ' ஆனேன். இப்போது உங்கள் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்' என்றார்.
'சரி. நடியுங்கள். கதை தயார் செய்வோம்' என்றேன்.
உடனே அர்ஜூன், 'சார்! நான் தெலுங்கில் நடித்த `சுபவார்த்தா' என்ற படம் நன்றாக ஓடியது. படத்தில் சவுந்தர்யா என் ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக், டப்பிங் உரிமையை நான் வாங்கியிருக்கிறேன். இதையே தமிழில் படமாக்கலாம்' என்றார்.
எல்லாம் தயாராகத்தான் வந்திருக்கிறார். அர்ஜூனைப் பொறுத்த வரையில் 'யார்' படத்தை நான் எடுத்த அந்த காலகட்டத்தில் என்னிடம் ரொம்பவே பிரியம் காட்டுவார். மரியாதையும் அதிகம். படப்பிடிப்பு தளத்தில் நான் சாப்பிட்டேனா என்பதை தெரிந்து கொண்ட பிறகே அவர் சாப்பிடுவார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீடு தேடி வந்து விடுவார். படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எடுப்பது பற்றி ஆர்வமாக கேட்டுத் தெரிந்து கொள்வார்.
இப்படி என் மீது அர்ஜூன் காட்டி வந்த அன்பு, இப்போதும் எனக்குள் பசுமையாக இருந்ததால், நானும் அந்த தெலுங்குக் கதையையே தமிழில் தயாரிக்க முடிவு செய்தேன். இப்படித்தான் தமிழில் 'மன்னவரு சின்னவரு' உருவானது.
படத்தில், சிவாஜி சார் நடித்த கேரக்டரில் முதலில் அவர் நடிப்பதாக இல்லை. `விசுவைக் கேட்டுப் பார்க்கலாம். அவர் கிடைக்கவில்லை என்றால் விஜயகுமாரை முயற்சிக்கலாம்' என்கிற எண்ணத்தில் இருந்தேன்.
திடீரென்றுதான் 'இந்த கேரக்டரில் சிவாஜி சார் நடித்தால் எப்படி இருக்கும்?' என்று ஓர் எண்ணம் பளிச்சிட்டது. நான் இதுபற்றி சிவாஜி சாரின் மக்கள் தொடர்பாளராக இருந்த `டைமண்ட்' பாபுவிடம் பேசியபோது, அவர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரிடம் தகவல் சொல்ல, ராம்குமார் என்னை சந்திக்க விரும்பினார்.
நானும் ராம்குமாரை சந்தித்தேன். அவரிடம், 'சிவாஜி சாரை வைத்து இதுவரை நான் படம் தயாரிக்கவில்லையே தவிர, அவர் நடித்து வெளிவந்த `எதிரொலி', `பிராப்தம்', `ராஜபக்தி', `படிக்காத மேதை', `குங்குமம்', `படித்தால் மட்டும் போதுமா', `மரகதம்', `கல்யாணியின் கணவன்' போன்ற படங்களை விநியோகம் செய்திருக்கிறேன்' என்றேன்.
சிவாஜி சாரிடம் நான் வைத்திருந்த மரியாதை, ராம்குமாரை கவர்ந்தது. 'சரி! அப்பாவை பார்த்துப் பேசுங்கள். கொஞ்சம் உடல் நலக்குறைவாக இருப்பதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தோம். ஆனால் நீங்கள் இவ்வளவு விரும்பி கேட்டு வந்த பிறகு, நீங்கள் அப்பாவிடமே பேசிவிடுங்கள்' என்றார்.
நான் சிவாஜி சாரை போக் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். என்னைக் கண்டதும், 'வா, புலி!' என்றார், சிம்மக்குரலில். எனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 'கலைப்புலி' என்பதால் என்னை எங்கே பார்த்தாலும் 'புலி' என்றுதான் அழைப்பார்! அந்த அன்பான வரவேற்பில் நான் நெகிழ்ந்த நேரத்தில், வைகோ எப்படி இருக்கிறார் என்று கேட்டார்.
'நல்லா இருக்கார்' என்றேன்.
தொடர்ந்து அன்றைய சினிமா, அரசியல் பற்றி பேச்சு நீண்டது. கலைஞர் பற்றி இளம் வயதில் கலைஞருக்கும் அவருக்குமான நட்பு பற்றியெல்லாம் பேசினார். 'என் வரையில் அரசியல் சரியான விதத்தில் அமையவில்லை. எதிர்பாராமல் பல துரோகங்களை சந்தித்து சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சரி விடு! உன் படத்திலே நான் நடிக்கணும்னு சொன்னியாமே! கதையை சொல்லு பார்ப்போம்' என்றார்.
நான் கதையை சொன்னேன். 'நான் பண்றேன். ராம்குமாரை பார்த்துட்டுப்போ' என்றார்.
சிவாஜி சார் என் படத்தில் நடிக்க சம்மதித்து விட்ட சந்தோஷத்தில், அதுவரை ஹீரோவாக நடித்தபோது அவர் வாங்கியிருந்த சம்பளத்தைவிட இரண்டு மடங்கு சம்பளம் கொடுத்தேன். அப்படிக் கொடுத்ததில் எனக்கொரு மனநிறைவு.
கலையுலகில் அவர் ஒரு சகாப்தம். அதுமட்டுமின்றி நேரம் தவறாமைக்கும் எடுத்துக்காட்டாக இருந்தார். படப்பிடிப்பு நாளில் ஒரு மணி நேரத்துக்கு முன்பே மேக்கப் போட்டு ரெடியாக இருப்பார். அவரோடு பழகிய நாட்கள் என் வாழ்வின் வசந்த காலம்.
என் இல்லத்தில் இருந்து வரும் உணவை அவர் உண்பதும், அவர் வீட்டில் இருந்து வருகிற உணவை எனக்குத் தந்து உண்ண வைப்பதுமாய் அந்த அன்புப் பரிமாற்ற நாட்கள் இப்போது நினைத்தாலும் பொற்காலம்.
படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மைசூருக்கு காரில் என்னுடன் வருவார். அப்போதும் பழைய விஷயங்களை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டு வருவார்.
சிவாஜி சாருக்கு அப்போது உடல்நிலை பாதித்து இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. படத்தில் அவர் ஆவியாக வந்து எதிரிகளை பழிவாங்குகிற காட்சியை இரவில்தான் எடுத்தோம்.
இந்தக் காட்சியில் ஆவி வரும்போது, திகில் ஏற்படுத்துவதற்காக அறை முழுக்க புகையைப் பரவவிட்டோம். சிவாஜி சாருக்கு `புகை அலர்ஜி' என்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அவருக்கு ஒத்துக்கொள்கிற மாதிரி காட்சி வைத்திருப்போம். ஆனால் தனக்கான எந்த பாதிப்பையும் வெளிக்காட்டாமல் அந்தக் காட்சிகளில் எல்லாம் சிவாஜி சார் நடித்து முடித்தார். தொழில் என்று வந்துவிட்டால் அதில் எந்த அளவுக்கு ஈடுபாடு காட்டவேண்டும் என்பதற்கு அவர்தான் உதாரணம்.
சாப்பிட்டு முடித்ததும் அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகளை அவரது டிரைவரும், உதவியாளருமான முருகன் கொடுப்பார். ஒரு மாபெரும் நடிப்புக் கலைஞரின் உடல்நல விஷயத்தில் தாயன்புக்கு ஈடாக அக்கறை காட்டிய முருகனின் அக்கறை என்னைக் கவர்ந்தது. அதனால்தான் சிவாஜி சாரின் காலத்துக்குப் பிறகு முருகனை என் ஆபீசில் பணியில் சேர்த்துக்கொண்டேன்.
படத்தில் சிவாஜி சார் நடிக்கிறார் என்பது உறுதியானதுமே படம் பெரிய விலைக்குப் போகும் என்று அர்ஜூன் கணக்குப் போட்டிருக்கிறார். அதனால் தனது நண்பர் கோவை மணியை என்னை பார்க்க அனுப்பினார். கோவை மணி வந்ததும் வராததுமாக விஷயத்தை தொடங்கிவிட்டார். 'சார்! படத்தில் சிவாஜி சாரும் நடிக்கிறதால `ஸ்டார் வேல்ï' படமாயிட்டுது. வியாபாரமும் பெரிய அளவில் இருக்கும்னு அர்ஜூன் எதிர்பார்க்கிறார். அதனால் அவருக்கு ஏற்கனவே நீங்க பேசின சம்பளத்தைவிட 25 லட்சம் கூடுதலா எதிர்பார்க்கிறார்' என்றார். ------> THE ACTOR WHO DID NOT HAVE MARKET TOO HAS DEMANDED 25 LAKHS MORE BECAUSE OF THE STAR VALUE INCREASE DUE TO NADIGAR THILAGAM's INCLUSION !!!! THIS RECORD IS ONE SAMPLE OF THE STAR VALUE NADIGAR THILAGAM ENJOYED EVEN AT THE AGE OF 70!!.
SAGA NADIGAN 10 LAKHS NADIGAR THILAGATHAALA ADHIGAMA SAMBALAM VAANGINAAN PAARU....IDHU DHAANYAA UNMAYAANA SAADHANAI !!!
அவர் இப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'பேசின சம்பளத்தை வாங்குவதுதானே சரி' என்று சொல்லிப் பார்த்தேன். வந்தவரோ அர்ஜூனிடம் போனில் பேசி கடைசியில் 10 லட்சமாவது கூடுதலாக தந்தால்தான் ஆயிற்று' என்றார். இதனால் அர்ஜூன் கேட்ட கூடுதல் பணம் 10 லட்சத்தை வருத்தத்துடன் கொடுத்து அனுப்பினேன்.
படம் வளர்ந்தது. 30 நாட்கள் இடைவிடாமல் சிவாஜி சாரும் நடித்துக் கொடுத்தார். சிவாஜி சாரை எனது தரப்பில் மேலும் கவுரவப்படுத்த விரும்பி டைட்டில் பாட்டில் அவரைப் புகழ்ந்து 'மன்னவரு சின்னவரு! மனசுக்கேத்த நல்லவரு! மனசார வாழ்த்தி பாடுங்கடி! என் மன்னவரை மனசார வாழ்த்தி பாடுங்கடி' என்று எழுதினேன். இந்தப் பாட்டுக்கு நானே இசையும் அமைத்தேன்.
இதற்குள் இந்தப்பாட்டு பற்றிய தகவல் சிவாஜி சாரின் காதுக்குப் போயிற்று. அவர் ஆச்சரியத்துடன், 'புலியா (தாணு) எழுதிச்சு? புலியா மிïசிக் பண்ணிச்சு?' என்று மாறி மாறி கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். 'அது வெறொண்ணுமில்லே! புலிக்கு என் மேலே அவ்வளவு பிரியம்' என்று சொல்லி என் மீதான மன நிறைவை வெளிப்படுத்தியிருக்கிறார்.
என் குடும்பத்தின் மீது அவர் காட்டிய அன்பு, அளவு கடந்தது. எனது மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நேரம் அது. இந்த தகவல் சிவாஜி சாருக்கு தெரியவர, என் இல்லம் வந்து, மனைவியை பார்க்க விரும்பினார். நான் அவரிடம், 'என் மனைவிக்கு தனது உடல் நலிவு என்பது மட்டுமே தெரியும். கேன்சர் பாதிப்பால்தான் உடல் நலிவு என்பதை சொல்லாமல் வைத்திருக்கிறோம். அதனால் நீங்கள் வரும்போதும் சொல்லவேண்டாம்' என்று கேட்டுக்கொண்டேன்.
சிவாஜி சார், மனைவி கமலா அம்மாளுடன் வந்தார். சிவாஜி சாரின் பாடல்கள் எனது மனைவிக்கு உயிர். முடியாமல் படுக்கையிலேயே வேதனையுடன் நாட்களை நகர்த்திய அந்த நேரத்திலும் சிவாஜி சாரின் பாடல்கள்தான் அவங்களுக்கு ஆறுதல். சிவாஜி சாரின் 'கொடி அசைந்ததும் காற்று வந்ததோ' பாட்டை திரும்பத் திரும்ப டிவியில் போட்டு ரசிப்பாங்க.
இப்படி சிவாஜி சாரின் ரசிகைக்கு அவரே திடீரென்று வீட்டுக்கு வந்தால் எப்படி இருக்கும்? நோயுற்ற பிறகு ரொம்ப நாளைக்குப் பிறகு அவங்க முகத்தில் அப்படியொரு பிரகாசத்தைப் பார்த்தேன். முடியாத நிலையிலும் எழுந்து உபசரிக்கத் தொடங்கிட்டாங்க.
சிவாஜி சாரும் 'இந்தப் பக்கமா கமலாவும் நானும் கபாலீசுவரர் கோவிலுக்கு வந்தோமா... அப்படியே உங்க வீட்டுக்கும் வந்துட்டோம்' என்றார்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சிவாஜி சார் புறப்பட்டபோது என் மனைவி பூஜையறைக்குப் போய் வெள்ளித் தூக்கில் ஜாக்கெட் துண்டு, மஞ்சள் குங்குமம் எடுத்து வைத்து கமலா அம்மாளிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினாங்க. அதுவரை மனதை திடமாய் வைத்திருந்த கமலா அம்மாள், என் மனைவியின் இந்த அன்பில் கலங்கிப் போனார். இப்போது சிவாஜி சாரின் கண்களிலும் நீர்த்திவலைகள். அதை மறைத்தபடி அந்த தம்பதிகள் அன்புடன் பிரியாவிடை பெற்றுப்போனார்கள். நான் பார்த்து வியந்த அன்புத் தம்பதிகள் என்றால் அது சிவாஜி -கமலா அம்மாதான்.'
-
-
Dear Friends,
நடக்காத விஷயங்களை, கற்பனையில் உருவான பொய் கதைகளை என்னமோ உண்மையாக நடந்தாமாதிரி இட்டு கட்டி எழுதுபவர்கள் இந்த உலகில் இன்னமும் உள்ளதை நாம் கண் கூடாக காண்கிறோம்.
அப்படி இருக்க திரை உலகில் நல்ல நிலையில் இருக்கும் திரு கலைபுலி தாணு அவர்கள் அவர் வாயால் உரைத்து பதிவு செய்யப்பட்ட பத்திரிகையில் வந்த எழுத்து வடிவமாகும் மேற்கூறிய இரண்டு தகவல்களும்.
நடிகர் திலகத்தை பற்றி நாம் ஒன்றும் என்றும் இல்லாத பொய்யான கற்பனை கதைகளை ஒரு சிலரை போல அவிழ்த்து விடவேண்டியது இல்லை !
இது போல நடுநிலை பத்திரிகைகளில் வந்த ப்ரசூரிக்கபட்ட செய்திகளை போட்டாலே போதும் !
-
தினமலர் வாரமலர். அக்டோபர் 20,2013,
http://img.dinamalar.com/data/uploads/E_1382084763.jpeg
நான் சுவாசிக்கு சிவாஜி! - ஒய்.ஜி. மகேந்திரா (4)
பத்மா சேஷாத்ரி பள்ளி விழாவில் தான், முதன் முறையாக, சிவாஜியை பார்த்தேன். "இவர் தான் நடிகர் சிவாஜியா... வெள்ளை வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக இருக் கிறாரே...' என்ற எண்ணம் தான், எனக்கு, அப்போது தோன்றியது. சிறுவன் என்பதால், எனக்கு, கத்திச் சண்டை நிறைந்த "அட்வெஞ்சர்' படமும், லாரல் ஹார்டி காமெடி படங்களும் பிடிக்கும். என் தந்தை நடத்தி வந்த, "யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' குழுவினர், சிவாஜி படங்களைப் பற்றி, காரசாரமாக விமர்சிப்பர். வியந்து கவனிப்பேன்.
நுங்கம்பாக்கத்தில், பாலா டூரிஸ்ட் கம்பெனி பின்புறம் உள்ள, சந்திரலேகா முத்துசாமி தெருவில் தான் எங்கள் வீடு இருந்தது. கூரை வேய்ந்திருந்த மொட்டை மாடியில் தான், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆரம்பமானது. காலை 9:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை, வகுப்பும், பின், யு.ஏ.ஏ., நாடக குழுவின், நாடக ஒத்திகை மற்றும் நுங்கம்பாக்கம் லேடீஸ் கிளப் கூட்டங்கள் என, எல்லாமே, அங்கு தான் நடக்கும்.
அங்கே, நுங்கம்பாக்கம் லேடீஸ் கிளப் அங்கத்தினர்களுக்காக, 16 எம்.எம்.மில்., படிக்காத மேதை படம் திரையிட்டனர். 16 எம்.எம்., ரீல்கள் என்பதால், ஒவ்வொரு ரீல் முடிந்த பின், கழற்றி, மறு ரீல் போட்டு, பல இன்டர்வெல்களுடன் படம் ஓடும்.
அதுதான், நான், முதன்முதலில் பார்த்த சிவாஜி படம். அப்போது, எனக்கு பத்து வயது இருக்கும். அந்த படம், என்னை முழுமையாக உலுக்கிவிட்டது. முரட்டுத் தனம், வெகுளித்தனம், யதார்த்தம் இவற்றின் கலவையாக அமைந்திருந்த ரங்கன் கதாபாத்திரம், என் மனதில், ஆழமாக பதிந்து விட்டது.
என் தந்தை ஒய்.ஜி.பி.,யிடம், "ரங்கனாக வந்த அதே ஆள் தானா, இந்த சிவாஜி...' என்று கேட்டேன். அதற்கு அவர், "அதுதான்டா நடிப்பு; அவர்தான்டா சிவாஜி...' என்றார். இப்படம், தியேட்டரில், மறுபடியும் ரிலீசான போதும், வீட்டிலும் பல முறை, அந்த படத்தை பார்த்திருக்கிறேன்.
ஒரு நேர்மையான, விசுவாசமான வேலைக்காரரின் பிரதிபலிப்பே ரங்கன். அதில் ஒரு காட்சி, என்னை, வியக்க வைத்தது. ஈ.வி.சரோஜாவை, பெண் பார்க்க வருவர். மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, சிவாஜி நேராக சென்று, மாப்பிள்ளையின் புஜங்களைத் தொட்டுப் பார்த்து, "ஸ்ட்ராங்கான ஆள் தான்' என்று, செய்கையிலும், தன் கண்களாலும் உறுதிபடுத்துவார். அந்த வீட்டில், ரங்கன் எடுத்துக் கொள்ளும் உரிமையை, இந்த ஒரு ஆக்ஷனில் வெளிப்படுத்துவார்.
ரங்கன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வேலைக்காரனாகவே கடைசி வரை இருக்க கூடாது என்று, ரங்காராவ் தீர்மானித்து, "தனிக்குடித்தனம் செல்லுங்கள்...' என்று சொல்லுவார். அந்தக்காட்சியில், ரங்காராவ் - சிவாஜி இருவரின் முகபாவம், குரலை, ஏற்றி - இறக்கி பேசுவதில் காட்டும் வித்தியாசம்... எல்லா நடிகர்களுக்கும், அது, ஒரு பெரிய பாடம்.
படிக்காத மேதை படத்தை, எத்தனை முறை வேண்டுமானாலும், "ரீ-மேக்' செய்யலாம்; சிவாஜி செய்த ரங்கனை, "ரீ-மேக்' செய்ய முடியாது. சிவாஜியே, மறுபடியும் பிறந்து வந்து தான் செய்ய முடியும்.
சிவாஜி, ரங்காராவிற்கு மட்டுமல்ல, இயக்குனர் பீம்சிங்கிற்கும் இது நிகரற்ற படம். உள்ளத்தை நெகிழச் செய்யும், கருத்துள்ள வசனங்கள் எழுதிய, கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கும், அப்படம், ஒரு மைல் கல்.
கீழ்வானம் சிவக்கும் படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரில் நடந்து கொண்டிருந்தது. முக்தா சீனிவாசன் என்னிடம், "டேய்... என்னிடம், அண்ணனுடைய டேட்ஸ் இருக்கு. உன்னுடைய, "பரீட்சைக்கு நேரமாச்சு' நாடகத்தை, அவரை வைத்து செய்தால், நன்றாக இருக்கும்...' என்றார்.
மேட்டரை சிவாஜியிடம் சொன்ன போது, என்னைப் பார்த்து, அவருக்கே உரித்தான நக்கலோடு, "ஆஹா... சார் கதை சொல்லப் போகிறாரா... கதை சொல்வதிலே, சார் பெரிய ஆள் ஆச்சே... சரி, நாளை காலை, 7:00 மணிக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டில், என்கிட்ட கதை சொல்லு...' என்றார்.
மறு நாள் காலை, 7:00 மணிக்கு, நான் செல்லும் போதே, 9:00 மணி ஷூட்டிங்கிற்கு, "மேக் - அப்' போட்டு, தயாராக இருந்தார். கலைவாணியை வேண்டி, என் வாக்குத் திறமையை திரட்டி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், என் நாடக கதையை கூறினேன். கதை கேட்டு முடித்ததும், என்னிடம், "நாளைக்கு இதே நேரத்திற்கு வா. அப்போது சொல்றேன்...' என்று சொல்லி, படப்பிடிப்பு வேலையை, கவனிக்க சென்று விட்டார்.
அடுத்த நாள், காலை 7:00 மணி. அதே லொகேஷன். சிவாஜி என்னைப் பார்த்து, "டேய்... நேற்று, நீ சொன்ன கதையிலே, என்னுடைய கேரக்டர், நரசிம்மாச்சாரியை பற்றி, நான் புரிந்து கொண்டதை சொல்றேன். சரியா இருக்கா பாரு...' என்று கூறி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், அவர், எனக்கு கதாபாத்திரத்தை விளக்கினார். எனக்கே பிரமிப்பாக இருந்தது. நாங்கள், நாடகத்தில் காண்பித்த நரசிம்மாச்சாரியை விட, ஒரு படி மேலேயே போய் விட்டார்.
நடிப்பின் மீது, எவ்வளவு பற்றுதல் இருந்தால், ஒரே நாளில், தன் கேரக்டரை புரிந்து கொண்டிருப்பார். அது மட்டுமில்லாமல், "சரியாக இருக்கா சொல்லு' என்று, என்னிடம் கேட்கிறாரே என்று, நெகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி, கதையை, "ஓ.கே'., செய்த பின்பும், சிறு தயக்கத்துடன், நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அதைப் புரிந்து கொண்ட அவர், லேசான புன்முறுவலுடன், "கவலைப்படாதடா பரதேசி. நீ தான் வரதுக்குட்டி...' என்று சொன்னாரே பார்க்கணும். என் மனதிற்குள், மங்கள வாத்தியங்கள் முழங்கின. எங்களுடைய, யு.ஏ.ஏ.,வின், நான்கு நாடகங்கள், சிவாஜியை வைத்து, திரைப்படங்களாக தயாரிக்கப் பட்டிருக்கின்றன. அவை, அறிவாளி, பார் மகளே பார், கவுரவம், பரீட்சைக்கு நேரமாச்சு. நான்கிலும், என் தந்தை ஒய்.ஜி.பி., நாடகத்தில் செய்த பாத்திரங்களை. சிவாஜி, மேலும் மெருகூட்டி, திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஒரு முறை, காஞ்சி மகா பெரியவர், சென்னை தாம்பரத்திற்கு, விஜயம் செய்த போது, திருவருட்செல்வர் திரைப்பட போஸ்டர்களை பார்த்து, "என் போட்டோ போட்டு, சினிமாக்காரங்க ஏன் போஸ்டர் அடிச்சிருக்காங்க?' என்று கேட்டார். "திருவருட்செல்வர் என்ற படத்தில், சிவாஜி கணேசன், அப்பர் சுவாமி வேஷத்தில் நடிச்சிருக்காரு. அந்த போஸ்டர் தான் இது...' என்று, அவருக்கு விளக்கம் தரப்பட்டது. மகாபெரியவரை, மனதில் வைத்து தான், அப்பர் கதாபாத்திரத்தில், நடித்திருந்தார் சிவாஜி. "கண்மேலே கை வைத்து பார்ப்பது, முகத்தோற்றம் எல்லாம், தன்னை மாதிரியே செய்திருப்பதாக சொல்லி, சிவாஜியை, மடத்தில் வந்து, தன்னை பார்க்கும்படி' முக்தா ஸ்ரீனிவாசன் மூலமாக, சொல்லி அனுப்பியிருந்தார் மகாபெரியவர். முக்தாவும், சிவாஜியும் மடத்திற்கு சென்று, மகா பெரியவரை தரிசனம் செய்தனர். கொஞ்ச நேரம், அப்படியே சிவாஜியை பார்த்து விட்டு, ஆசிர்வாதம் செய்தார். "ஒரு வினாடியாவது, மகாபெரியவர் தரிசனம் கிடைக்காதா' என்று, எண்ணற்ற பக்தர்கள் ஏங்கும்போது, மகாபெரியவரே, சிவாஜியை அழைத்து, ஆசிர்வாதம் செய்துள்ளார் என்றால், அந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?
சிவாஜி, கோவில்களுக்கு, யானைகளை தானமாக கொடுப்பதை, மகாபெரியவர், பாராட்டி, "யானையை தானம் செய்றது, மிகச்சிறந்த தானம்...' என்று, சொன்னார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், வெள்ளையம்மா என்ற குட்டி யானையை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, புன்னை மாரியம்மன் கோவிலுக்கு, தானமாக கொடுத்திருந்தார் சிவாஜி. சில ஆண்டுகளுக்குப் பின், அந்த யானை, தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுக்கப்பட்டது. சமீபத்தில், வெள்ளையம்மா யானை (வயது 63) மரணமடைந்த செய்தியை, பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.
தகுதியுள்ள புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதிலும், தான் இதுவரை பணிபுரியாத இயக்குனர்களோடு, இணைந்து படங்கள் செய்வதிலும், சிவாஜிக்கு, எப்போதுமே ஆர்வமுண்டு; விரும்புவார். முக்கிய பாத்திரங்களில் அவர் நடித்த, 288 படங்களில், 90 இயக்குனர்களுடன், அவர் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது, வியப்பான செய்தி.
— தொடரும்.
எஸ். ரஜத்
-
Mr Vasu Sir,
Suda Suda Morning article from you about our NT in Dina Malar.