கதை :
தான் செய்யாத தவறுக்கு தன்னை சிறைக்கு அனுப்பிய தன் முதலாளி mr ராதாவை பழி வாங்க அவர் மகனை கடத்தி விடுகிறார் டிரைவர் பாலையா , அந்த குழந்தையை ரயில் தண்டவாளத்தில் போட்டு விடுகிறார் , அந்த குழந்தையை வளர்கிறார் இஸ்மாயில் (வி.நாகய்யா) . தன் கணவர் செய்த தவறை நினைத்து ராதாவின் மனைவி டிரைவரின் பெண் குழந்தையை தான் அண்ணனாக நினைக்கும் கிறிஸ்துவர் எஸ்.வி.சுப்பய்யா விடம் கொடுக்கிறார் . டிரைவரின் இன்னும் ஒரு குழந்தையை காப்பாற்ற முடியாமல் போய் விடுகிறது . அந்த குழந்தை சேரியில் வளர்கிறது
ஜமீன்தாரின் மகன் சின்ன மகன் ரவி
பல வருடங்களுக்கு பிறகு
இஸ்மாயிலின் மகன் ரஹீம் வளர்ந்து அந்த சேரியில் நல்ல பெயருடன் வளம் வருகிறார் , சேரியில் மத , ஜாதி சண்டை வராமல் பார்த்து கொள்ளுகிறார் , அந்த இடத்தை தன் வசமாக வேண்டும் என்று திட்டம் போடும் ஜமீந்தார் சதி செய்கிறார் , அது பலிக்காமல் போகிறது
ரவி (ஜெமினி ) போலீஸ் இன்ஸ்பெக்டராக அதே ஊருக்கு வருகிறார் , ரஹீம் , ரவி இருவருக்கும் மோதல் வருகிறது , அதை ஊதி பெருசாகி விடுகிறார் ரவியின் தந்தை , ரவி ரஹீம் தங்கை போல் பாவிக்கும் சாவித்ரியை காதலிக்கிறார் , ரவியின் தந்தை மத வெறி இருந்தாலும் தன் மகன் தன் கிறிஸ்துவர் எஸ்.வி.சுப்பய்யா வின் மகளை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் (பணத்துக்கு ஆசைப்பட்டு )
ரஹீமை காதலிக்கிறார் தேவிகா எஸ்.வி.சுப்பய்யாவின் மகள்
ரஹீமை அழிக்க திராவகம் ஊற்றி விடுகிறார் ராதா , ரஹீம் செய்யாத குற்றத்துக்கு ரவி அவரை கைது செய்து விடுகிறார் . அப்போ தான் ரஹீம் இஸ்மாயில் தன் தந்தை அல்ல என்றும் தன்னை எதிரியாக நினைக்கும் ராதாதான் தன் தந்தை என்றும் அறிந்து கொள்ளுகிறார் (இஸ்மாயில் சாக போகும் தருவாயில் உண்மையை சொல்லி விடுகிறார் )
ரஹீம் இல்லாததால் சேரியை சுலபமாக காலி செய்து விடுகிறார் ராதா , தன் காதலி மேல் தப்பாக ஒரு பொய்யை சொல்லி ரவியை நம்ப வைத்து விடுகிறார்
ஜெயில் இருந்து வெளியே வரும் ரஹீம் ராதா உடன் சமாதானமாக போக விரும்புகிறார் அதை ஏற்க மறுக்கிறார் ராதா .
பாலையா திரும்பி வந்து தன் முதலாளியின் மனைவியை சந்தித்து மன்னிப்பு கேட்க அவரோ பாலையாவின் மகள் தான் எஸ்.வி.சுப்பய்யா வின் வீட்டில் வளர்கிறது என்று சொல்ல , சேரியில் வளர்ந்து வந்த தங்கம்(சாவித்ரி ) தான் பாலைய்யாவின் 2 வது மகள் என்று அறிய பிறந்தவர்கள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்
ரஹீமை அழிக்க அவர் இருக்கும் இடத்துக்கு தீ வைக்கிறார் அவர் தந்தை ராதாவுக்கு உண்மை தெரிய வருகிறது
முடிவில் அவர் மனம் திருந்த , ரஹீம் , ரவி இருவருக்கும் தங்கள் விருப்ப படி திருமணம் நடக்கிறது