குறும்பு , தண்ணீரை எங்கு பார்த்தாலும் ஒதுங்குவதால் தான் சி.காவின் பதிவை ஒதுக்கி விட்டீரா பாருங்கள் குழந்தை கோவித்து கொண்டுவிட்டது ..
Printable View
ராகவ் ஜி . நீங்கள் தான் பழைய படங்களில் வரும் மாமனார் போல வீட்டில் இடியே விழுந்தாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே போல பொங்கும் பூம்புனலை சலிக்காமல் அள்ளி வழங்கி கொண்டிருக்கிறீர்கள் .. நெஞ்சார்ந்த நன்றிகள் ...
இதோ சங்கமா சங்கமாவின் தெலுங்கு வடிவம்
http://www.youtube.com/watch?v=tPouwijp6_Y
பொங்கும் பூம்புனல்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் தமிழ் உச்சரிப்பிற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் அடியேனும் அடக்கம். வேறு சில பாடகர்கள் மொழியை சிதைக்கும் போதெல்லாம் சீர்காழியார் பாடியிருக்கலாமே என மனதில் தோன்றும். அப்போது நம் மனதிற்குள் இப்படியெல்லாம் எண்ணங்கள் தோன்றும் என்று முன்கூட்டியே யூகித்ததைப் போல இந்தப் பாடல் வரிகள் அமைந்திருப்பதைப் பாருங்கள்..
தமிழ்க்கலைதனில் ஊறிய களையெடுப்பாய்...
பாடலின் பல்லவியே இந்த அளவிற்கு தைரியமாக உள்ளது வியப்பைத் தருகிறதல்லவா..
என்னதான் முடிவு திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் என் நினைவு தெரிந்த நாள் முதல் இது வரை ஒரு முறை கூட வானொலியிலோ கல்யாணம் கச்சேரி போன்ற பொது நிகழ்ச்சிகளிலோ கேட்ட நினைவு இல்லை. முதன் முறை படத்தில் பார்த்த போது கேட்டது பார்த்த வாய்ப்பிற்குப் பிறகு இப்போது தான் டிவிடியில் மூலமாக கிடைத்தது.
நீங்களும் பாட்டைக் கேளுங்கள் பாருங்கள்..
http://www.youtube.com/watch?v=ungtfrjVcCw
மாமனார்கள் மாறுவதில்லை.. எவ்வளவு தலைமுறைகளானாலும் ராஜேஷ் சார்...
வாசு ஜி , கிருஷ்ணா ஜி, மற்றும் கோபால் ஜி
உங்களை மயக்க இரு பாடல்கள் இதோ
கண்டசாலாவின் இசையில் கன்னட தெலுங்கு மொழியில் ஒரே பாடல்
தெலுங்கில் பந்திபொட்டு (என்.டி.ஆர் - கிருஷ்ணகுமாரி)
கன்னடத்தில் வீரகேசரி (ராஜ்குமார்- லீலாவதி மிகவும் ஹிட் ஜோடி)
ஊஹலு குச குட லாடே
மெல்லுசிரே சவி கானா
http://www.youtube.com/watch?v=-Ry8xeDKnRY
http://www.youtube.com/watch?v=q8Qi0Ua3ZXI
பொங்கும் பூம்புனல்
கணக்குப் பார்த்து காதல் வந்ததா காதல் வந்ததால் கணக்கு வந்ததா... விடை தெரியாத பல கேள்விகளில் இதுவும் அடக்கம்..
இங்கே ஒரு காதல் ஜோடி அசலையும் வட்டியையும் வசூலிப்பதைப் பற்றி ஆராய்வதைப் பாருங்கள்...
அதுவும் எங்கே...குளியலறையில்...
ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்குமாம்...
கோபால் சார்... இது உங்களுக்காக...
மறக்க முடியுமா படத்திலிருந்து மெல்லிசை மன்னர் டி.கே.ஆரின் கைவண்ணத்தில்...
http://www.youtube.com/watch?v=OZ3iOYKjDro
அய்யய்யோ! அப்படி இல்லை சி.க.சார். உங்களுக்கு எப்போதோ பாராட்டு பதில் படித்து ரசித்து ரெடி செய்து விட்டேன். அதற்குள் டிராக் மாறியதால் கொஞ்சம் லேட். ரொம்ப ரசித்துப் படித்தேன்
அதுவும் அந்த 3 கூறுக்கு (ஒன்னு ஓசி வேற) பத்து ரூவா டிக்கெட்டுக்கு போதுமா கிழவிக்கு? வெத்திலை பாக்குக்கு நம்ம சி.க. தருவாரோ! அருமை சி.க.சார்.
இப்படித்தான் சார் நல்ல பதிவுகள் சிலராலே அடிபட்டுப் போகும். ஆனா நம்ம திரியில் அப்படி இல்ல. கவனிக்கப்பட்டு ரசிக்கப்பட்டு விடும்.
நேற்று இரவு கூட உங்கள் பதிவைப் படிச்சுட்டு பதில் போட்டேனே!