oops....i read periyavar as periyar that's why i mentioned that periyaar did not converse.
my mistake in reading it wrong.. thanks for pointing out !
Regards
RKS
Printable View
நம்முடைய இதயதெய்வம்! இப்படிப்பட்டோரின் இதயங்களில்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
http://i1170.photobucket.com/albums/...psirtvuflh.jpg
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு இனிய காலை/மதிய வணக்கம்.
மெல்போர்னில் தற்சமயம் மதியம் 02:45.
இன்று போல் என்றும் வாழ்க.
புரட்சி தலைவரின் 'தேடி வந்த மாப்பிள்ளை' திரைப்படத்தில் வரும் பாடலிருந்து சில வரிகள்...
'வெற்றி மீது வெற்றி வந்து
என்னைச் சேரும்'
தலைவரின் படங்களில், திரைக்கதையின் உள்கருத்து, பாடல்கள், உரையாடல்கள், ஆகியவை positive thinkingயை மேம்படுத்துவதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கும் என்பதை, தலைவரின் அன்பர்கள் ஏறத்தாழ அனைவரும் அறிவார்கள்.
அதனால்தானோ என்னவோ, தலவர் மறைந்த பின் தோன்றிய தலைமுறையினர் உட்பட, அவரது படங்களை மனதின் அடித்தளத்திலிருந்து விரும்பிப் பார்க்கின்றனர்.
எத்தகைய மனநிலையில் இருந்தாலும் தலைவரை திரையில் கண்டவுடன் உற்சாகம் பொங்கி தம்மை தாமே புதுப்பிக்கும் நிலையை அடைந்து, வாழ்க்கை பயணத்தின் அடுத்த சவாலை எதிர்கொள்ளத் தயாராகிய உணர்வு பெற்று விடுகின்றனர்.
இந்த நிலை அவர் திரையுலகிலிருந்து அரசியலுக்கு சென்ற காலகட்டங்களிலிருந்து இன்று வரை எந்த படங்களிலும் இருந்ததாக தெரியவில்லை.
வேறு எந்த தனிமனிதராலும் இந்த அளவுக்கு மக்கள் நேசிக்கும் நிலையை அடையவில்லை என்பது எனது கணிப்பு, தவறாகயிருந்தால் கருத்தை தெரிவியுங்கள்.
பொதுவாக 1976/77 காலகட்டத்திற்குப் பின் வந்த தமிழ் படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை.
கடந்த 35 ஆண்டுகளில் எண்ணி 60 அல்லது 70 படங்கள் பார்த்திருப்பேன், அவ்வளவுதான்.
அதற்கு முக்கிய காரணம், பேசப்படும் தமிழில் சுத்தமின்மை, கட்டுக்கடங்காத அளவு மேல்நாட்டு வாழ்க்கை முறைகளின் இறக்குமதி, கண்கள் கூசும் அளவுக்கு காமிரா அசைவுகள், அளவுக்கு அதிகமாக மேல் நாட்டு பாணி கலந்த இசை மற்றும் நடனங்கள், சண்டைக்காட்சிகள், இப்படிப் பல.
அது போகட்டும் என்றால், வெளிவரும் படங்களில் positive thinkingயை மேம்படுத்துவதற்கென்று ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், தலைவரின் படங்களில் இருந்த ஒரு ஈர்ப்பு சக்தி வெளிவரும் படங்களில் இருப்பதாக தெரியவில்லை.
தலைவர் முதல்வராக இருந்த பொழுது ஒரு மேடைப்பேச்சில் மேற்க்கூறிய காரணங்களின் அடிப்படையில், தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.
அந்த மேடைப்பேச்சின் clipயை youtubeல் காணலாம், பெயர் நினைவில்லை.
'...இப்பொழுது வெளியிடப்படும் படங்களைப் பார்க்கும் பொழுது, மனதிற்கு மிகவும் வருத்தமாகவும், கவலையாகவும் இருக்கிறது...எடுங்கள்...நல்ல படமாக எடுங்கள்...மக்களுக்குப் படிப்பினையைத் தரக்கூடிய தரமான படங்களாக எடுங்கள்...' என்று கூறியிருந்தார்.
அந்த மேடைப்பேச்சின் clipயை மறுபடியும் பார்க்க நேரந்தால் அன்பர்களோடு நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy fb
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.
மெல்போர்னில் தற்சமயம் மதியம் 12:45.
இன்று போல் என்றும் வாழ்க.
புரட்சி தலைவரின் 'இதயக்கனி' திரைப்படத்தில் வரும், மிக அருமையான கருத்துக்கள் நிறைந்த, ரசிகர்களின் மனதைக் கவர்ந்த, ஒரு பாடலிருந்து சில வரிகள்...
'உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடுபள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி
சென்று நன்மை தேடுங்கள்
நதியைப்போல நாமும் நடந்து
பயன் தர வேண்டும்
கடலைப்போல விரிந்த இதயம்
இருந்திட வேண்டும்
வானம் போல பிறருக்காக
அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் எங்கும்
விளங்கிட வேண்டும்
...
நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற'
தலைவரின் பெயரால் அவரது வழி நடந்து பிறருக்கு தொண்டு செய்வது என்பது ஒரு மகத்தான சாதனை.
தொண்டு செய்வதற்கு பல வழிகள் உண்டு.
உடலால் உழைத்து, அல்லது பொருளால் உதவி, அன்பு காட்டி, இது போன்று விழுப்பணர்ச்சியை ஏற்படுத்தி நல் வாழ்வுக்கு வழி காட்டுவதும், தொண்டு செய்வதற்கு ஈடாகும்.
சில உதவிகளை தனிமனதராக நின்று செய்து விடலாம், சில தொண்டுகள் சிறியதொரு கூட்டணியின் உதவியை நாட வேண்டி வரும், சில சமுதாய முன்னேற்றங்களை செயலாக்க பல்லாயிரத்தினரை ஒன்று கூட்டி வழி நடத்த வேண்டிவரும், சில பொருளாதார அளவு முன்னேற்றங்களை அரசாங்கமும், மாபெரும் நிறுவனங்களுமே சாதிக்க இயலும்.
ஆயினும், இவையனைத்திற்கும் அடிப்படை, புரட்சி தலைவரின் 'புதியபூமி' திரைப்படப் பாடலில் வரும், 'ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும், உலகம் செழிப்பதுண்டு' எனும் வரிகள்.
தலைவரின் அன்பர்களாகிய நாம் 'விழிப்புணர்ச்சியை' ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கானோரை ஒன்று திரட்டி நல் வழி காட்டும் திறமை படைத்தவர்கள், என்பது எனது தாழ்மையான கருத்து.
ஒரு கால கட்டத்தில், புரட்சி தலைவரின் ரசிகர் மன்றங்களை, நற்பணி மற்றங்களாக தலைவர் மாற்றியமைத்ததாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஏன் 'உழைக்கும் தோழர்களை ஒன்று கூட்டக் கூடாது'?
ஏன், நாமெல்லோரும் 'உலகம் நமது என்று சிந்து பாடக்கூடாது', ஏன் வேற்றுமைகளை அகற்றக்கூடாது?
ஏன், அனைவரும் கூடி (அரசின் உதவியோடு) 'மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப் பார்க்கக்கூடாது', ஏன் செயலாக்க நமது திறனை பயன் படுத்தக் கூடாது?
இத்தகைய சாதனைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பொழுது, பாடலின் பிற்ப்பகுதியில் கூறியுள்ள வரிகளுக்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பினை அடைந்து விடுகிறோம்.
பாடலின் வரிகளிலிருந்து கிடைக்கும் படிப்பினை...
முன்னேற்றம் என்பது அரசின் திட்டங்கள் உட்பட, பலரது முயற்சி, ஒத்துழைப்பினால், அடையக்கூடியது.
முகநூல் மற்றும் நாளிதழ்களில் வழியாக நாட்டின் நிலையைப்பற்றி அறியும் பொழுது, செல்ல வேண்டிய தூரம் பல உண்டு என்று தெரிகிறது.
பாரபட்சமின்றி நற்செயல்களை மேற்க்கொள்ள பலரது பங்களிப்பு தேவை என்பதும் விளங்குகின்றது.
எங்கிருந்து தொடங்குவது, எப்படி தொடங்குவது, எப்படி நற்பயணத்தை மேற்க்கொள்ளுவது, என்பவைகளே பதிலுக்குக் காத்திருக்கும் கேள்விகள்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy net
ஜப்பானியரையும் உள்ளம் கொள்ளை கொண்ட மக்கள் திலகம் .
http://i1170.photobucket.com/albums/...pssifybeds.jpg
http://i1170.photobucket.com/albums/...psst37ffwq.jpg
m g ramachandran
M G Ramachandran, popular Tamil actor and chief minister of Tamil Nadu, posing during a photo shoot, in New Delhi on July 02, 1973.
Image Id : 382775
Credit : (Source: The Times Of India Group)
© BCCL
Photograph Date: : 02/07/1973 (tentative)
Formats : JPG
File size : 0.19 MB
Dimension : 2048 px x 1511 px
Print Size : 28 inch x 20 inch
Resolution : 72 dpi
RAMZAN FASTING BEGIN
https://www.youtube.com/watch?v=3FEOtAlu7Mo
Kalaivendhan Sir,
https://www.youtube.com/watch?v=t27SWCRF6Kc
This is how one person [ comedy piece] manages situation [not you], very brilliant!