-
' அய்யா இப்படி கையைக் கொடுங்க...நான் தூக்கி விடுகிறேன்' என கையை நீட்டுகிறேன். கனத்த உருவம், அழுக்கான உடை, தோளில் தோல்பை, ஒருகால் இல்லாத அந்த முதியவர் கைப்பிடி உதவியுடன் பஸ்சில் ஏற முடியாமல் தடுமாறி நிற்க சிரமப்பட்டு கைத்தாங்கலாக பஸ் இருக்கையில் அமர வைக்கிறேன். ' என்ன தம்பி பஸ்ல கூச்சல் போட்டுட்டு வர்றானுங்களே இந்தப் பசங்க குடிச்சிருக்கானுங்க அப்படித்தானே...ம்... நான் நடிச்ச காலத்திலேருந்து எம்ஜிஆர் மது அருந்தக்கூடாதுனு பேசி அறிவுரை கூறுவார்...இப்ப எல்லாம் அப்படி சொல்ல யாரு இருக்கா?' என்றாரே பார்க்கனும். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ' என்னது நீங்க நடிகரா?' என்றேன் அவரை வேடிக்கையாகப் பார்த்தபடி. ' ஆமாம்பா நான் உலகம் சுற்றும் வாலிபன் படத்துல எம்ஜிஆருடன் புத்த துறவி வேஷத்துல நடிச்ச கெம்பையா நான்தானப்பா' என்றார் சத்தமாக. பஸ்சே அவரைத் திரும்பிப் பார்க்க...என் உடல் சிலிர்த்தது. ' அய்யா நம்பவே முடியல...' என இழுத்தபடியே அவரை நன்றாகப் பார்த்தேன். ம்கூம் 100 சதவீதம் அவரில்லையே என அதிருப்தியானேன். ' இருக்கலாம்...புத்த துறவி மொட்டைத் தலையுடன் புத்த துறவி வேடத்துடன் இருப்பார்.1970-73 களில் இளம் வாலிபன். இப்போது வயது முதிர்ந்துவிட்டது. நிறம் தக்காளி பழ நிறம். மூக்கு முழி....ஓ...அவரேதான்!!!! ' அய்யா சத்தியமங்கலத்திற்கு 2009 ல் பணி நிமித்தமாக வந்த நாளிலிருந்து( இதயக்கனியில் திருப்பூர் ரவிச்சந்திரன் இவரை பேட்டி கண்டு வந்த முதல் செய்தியின்படி இவர் இந்த ஊரில் இருப்பதை நினைவில் வைத்திருந்தேன்) உங்களைத் தேடிகிட்டிருந்தேன். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை இப்படி ஒரு நிலையிலா சந்திக்க வேண்டும்!' என எண்ணியபடியே பஸ் நிலையம் வந்து சேர்ந்தோம். ' தம்பி கொஞ்ச நேரம் உட்காரலாம்' என்றவரைச் சுற்றி மொய்த்தது மக்கள் கூட்டம். ' இவர்தான் எம்ஜிஆருடன் உ.சு.வாலிபன் படத்துல நடிச்சவர், எனக்கு இவரை ரொம்பவே தெரியும், படத்துல இவரோட சீன் பரபரப்பா இருக்கும்' என ஆளாளுக்குப் பேச அந்த புகழ்மழையில் நனைந்து ஆர்வமாக இருந்தார். ' அய்யா உங்க வீடு...???' என்பதற்குள் ' நான்தான் வழக்கமாக இவரை கூட்டிட்டுப் போவேன்' என ஒருவர் முன் வந்தார். அவரை அழைத்துச் செல்வதில் பலர் போட்டிப் போட... அவர்களைத் தடுத்த கெம்பையா,' தம்பி ஆட்டோ வரச் சொல்லுங்க, நீங்க வீட்ல கொண்டு என்னை விட்டுட்டுப் போங்க' என்றார். வீட்டில்.....' அய்யா நான் போயிட்டு வர்றேன்' என்றேன். ' இந்தாங்க தம்பி...400 ரூபாய்' என என் சட்டைப் பையில் திணித்தார். ' ஏன்,எதற்கு?' என்றேன் அதிர்ச்சியுடன். ' வழக்கமாக என்னை வீட்ல கொண்டு வந்து சேர்க்கிறவங்களுக்கு நான் கொடுப்பது' என்றார். ' ஓ...அப்படியா, எனக்கு இதுபோல பணம் வேண்டாம் அய்யா, நான் ஒரு ஆசிரியர், அதிலும் என் தெய்வத்துடன் நடித்தவர் நீங்கள்' எனக் கூறியபடி வலுக்கட்டாயமாக அவரது பணத்தை அவர் கையில் திணித்தேன். அடுத்த கணம் அவர் போட்ட சத்தம் அந்த பங்களாவிலிருந்த அனைவரையும் ஓடோடி வரச் செய்தது. ' என்ன தம்பி சொன்னீங்க...வாத்தியாரா நீங்க? வாத்தியார் ரசிகரா நீங்க?' என்றவர் ' கடவுளே இத்தனை வருசத்துக்கப்புறம் இப்படி ஒரு எம்ஜிஆர் ரசிகரை சந்திக்க வெச்சிருக்கிறியே' என அவர் போட்ட சத்தம் அவர் புரட்சித் தலைவருடன் மீண்டும் சேர்ந்துவிட்ட பின்பு இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது........ Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 6. ஞாயிற்றுக்கிழமை
எம்ஜிஆர் பக்தர்களே
இந்தப்படத்தில் இருப்பவர்கள்
பெரியவர் எம் ஜி சக்கரபாணி
அவருடைய மனைவி மீனாட்சி அம்மாள்
அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள்
ராமாயணத்தில் வருகின்ற. ராமர் லட்சுமணனை போல் நம் கண் முன்னால் வாழ்ந்தவர்கள்
சக்கரபாணி எம்ஜிஆர் அவர்கள்
///////////////;///////////////////////////?////////
இந்திய சினிமா உலகத்தை சேர்ந்தவர்கள் யார் சென்னை வந்தாலும்
சென்னை ஸ்டுடியோக்களில் நுழைந்து
பெரியவர் இருக்கிறாரா என்று கூறினால் அது எம் ஜி சக்கரபாணி அவர்களைத்தான் குறிப்பிடும் வார்த்தை
சென்னை சினிமா ஸ்டுடியோக்களில் நுழைந்து
சின்னவர் வந்துவிட்டாரா என்று கேட்டாள்
அது எம்ஜிஆர் அவர்களைத்தான் குறிக்கும்
அண்ணன்-தம்பி இருவரையுமே
பெரியவர் / சின்னவர் / என்ற அடைமொழியோடு தான் சினிமா உலகில் அழைப்பார்கள்
///////////////////;/;;///////////////;/////////;//////
நாம் எம்ஜிஆர் குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்
பெரியவர் சக்கரபாணி அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்
பெரியவர் எம் ஜி சக்கரபாணி அவர்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள்
7. ஏழு ஆண் குழந்தைகள்
3 மூன்று பெண்குழந்தைகள்
++++++++++++++++++++++++++++++++++
சத்தியபாமா என்ற மணி
ராமமூர்த்தி
பிரபாகர்
சந்திரன்
சுகுமார்
லீலாவதி
விஜயலட்சுமி
ராஜேந்திரன்
பாலு
விஜயகுமார்
இந்த 10 குழந்தைகளுக்கும் பெயர் வைத்தவர் நம் அருமை தலைவன் எம்ஜிஆர்
++++++++++++++++++++++++++++++++++
சத்யபாமா
சுகுமார்
பாலு
இந்த மூன்று பேரும் இறந்து விட்டார்கள்
++++++++++++++++++++++++++++++++++
இந்தியாவில் உள்ள நடிகர்களில் எம்ஜிஆரை போல் சினிமா உலகை கொடிகட்டி ஆண்டவர் யாரும் கிடையாது
இந்தியாவில் உள்ள முதலமைச்சர் களிலே எம்ஜிஆரை போல் மக்கள் செல்வாக்கு உடையவர்கள் யாரும் கிடையாது
எம்ஜிஆர் தமிழ் நாட்டில் பல ஆட்சியை உருவாக்கியவர்
பல
முதலமைச்சர்களை உருவாக்கியவர்
தான் முதலமைச்சராக கொடிகட்டி வாழ்ந்தபோதும்
தன் அண்ணன் தம்பி மாமன் மச்சான் குடும்பத்தினரே அரசியல் பக்கம் அண்டவிடாமல் செய்தவர் எம்ஜிஆர்
,முதலமைச்சரின் அண்ணன் தம்பி மாமன் மச்சான் எல்லாம் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார்கள்
ஆனால் பெரியவர் சக்கரபாணியின் குடும்பத்தினர் அரசியலிலோ ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டவர்கள் கிடையாது..... Thanks......
-
வணக்கம் நண்பர்களே!! புரட்சித்தலைவரின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பலித்தன...(எனக்கொரு மகன் பிறப்பான் தவிர...அதன் விளக்கம் அப்புறம்) ஒரு சிறிய உதாரணம்....
எம் ஜி ஆர் திமுக வில் இருந்து நீக்கப்படுகிறார்.உலகம் சுற்றும் வாலிபன ரிலீசாக போகிறது. 1973ல் திமுக சார்பில் மதுரையில் மணிநகரம் பகுதியில் திமுக பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க இரும்பு மனிதர் என அழைக்கப்படும் மதுரை முத்து அவர்களும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கமும் எஸ்எஸ்ஆர்...ஆற்றிய உரை...
மதுரை முத்து: "அடேய் ராமச்சந்திரா... நீ சினிமாவுல தான் சண்ட போடுவ... ஆனா நா நிஜத்துல சண்டியர்... கலைஞரையா கணக்கு கேக்குற... உன்னை வாழவே விடமாட்டேன். உன் படம் ரிலீஸ் ஆனா நா சேலைய கட்டிக்குறேன்". டேய் ரசிக குஞ்சுகளா. உங்காளு கையில வச்சு சண்ட போடுறது ஒரிஜினல் கத்தி இல்லடா. வெறும் அட்டக்கத்தி. இனியாவது திருந்துங்கடா.. "(எம் ஜி ஆர் கட்சியை விட்டு விலகும்போது திணமணி கார்ட்டூன்... எம் ஜி ஆர் அண்ணா படத்தை எடுத்துக்கொண்டு இனி இதற்கு இங்கு வேவையில்லை. என்கிறார். கருணாநிதி பக்கத்தில் இருந்த மதுரை முத்துவை காட்டி"இந்த அண்ணா என்னை காப்பார் "என்பது போல இருந்தது. மதுரை முத்து அந்த அளவு செல்வாக்கானவர்)
எஸ்எஸ்ஆர்: "அன்றைய தினம் ராஜாதேசிங்கு படத்தில் பத்மினியுடன் நான் நெருங்கி நடிக்க கூடாது என எம்ஜிஆர் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா? "
(மறுநாள் சோ தன் 'துக்ளக்' புத்தகத்தில் "எஸ்எஸ்ஆர் சார். நீங்களும் பத்மினியும் நெருங்கி நடிப்பதை எம்ஜிஆர் தடுத்தாரா? எப்பேர்ப்பட்ட துரோகம் இது.இதனால் இந்த நாட்டுக்கே பேராபத்து வந்துவிடுமே!! இதை இந்த நாடு மறந்தால் இந்த நாட்டுக்கு விமோச்சனம் ஏது?"என கிண்டலடித்தார்)
திண்டுக்கல் எம். பி. ராஜாங்கம் :எனதருமை நண்பர் எஸ்எஸ்ஆரை சினிமாவில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜிஆர் தான். எங்களை பகைத்துக் கொண்டதால் இனி எம்ஜிஆர் அரசியலில் மட்டும் அல்ல. சினிமாவிலும் வாழ முடியாது...
இதே ராஜாங்கம்எ இந்த கூட்டத்தை முடித்து திண்டுக்கல் திரும்பிப் செல்லும்போது தான் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிறது.அதிமுக மாயத்தேவரை நிறுத்தி மாபெரும் வெற்றி பெற்று திமுக வேட்பாளர் பொன்முத்துராமலிங்கத்தை(வேட்பாளர் தேர்ந்தெடுத்தது மதுரை முத்து) டெபாசிட் இழக்க செய்தது. எந்த ராஜாங்கம் எதிர்த்தாரோ அவரே எம்ஜிஆரின் முதல் வெற்றிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்.
கருணாநிதி எம் ஜி ஆர் செல்வாக்கு காரணமாக அதிமுக வென்றது என்பதை மறைக்க "மதுரை மாவட்ட தலைமை வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது". என மேயர் முத்துவை பழிபோடுகிறார். முத்துவுக்கு கோபம் வருகிறது. "தேர்ந்தெடுத்த போது மறுப்பு சொல்லாமல் தோற்றவுடன் என் மீது பழி போட்டால் என்ன நியாயம் "என பகிரங்கமாக கேட்டார். உடனே கருணாநிதி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் சொல்வதை கேட்க வேண்டாம் என செக் வைக்க நொந்து போன மேயர் முத்து எம் ஜி ஆரிடமே சரணடைகிறார். தலைவரும் முத்தண்ணணை கட்டித் தழுவி வரவேற்கிறார். அதிமுகவிலும் மதுரை முத்துவே மேயரானார். எஸ்எஸ்ஆரும் தன் மனைவி விஷயத்தில் கருணா நடந்து கொண்டதை பார்த்து மனம் நொந்து எம் ஜி ஆர் இடம் சரணடைகிறார். 1977 கழகம் வெற்றி பெற அதே மதுரைமணிநகரத்தில் மேயர் முத்து தலைமையில் கூட்டம்.மேயர் முத்துவே இந்த தகவல்களை எல்லாம் கூறி "சென்ற கூட்டத்தில் இதே இடத்தில் நாங்கள் மூவருமே(ராஜாங்கம்,முத்து,எஸ்எஸ்ஆர்) எம்ஜிஆரை வாழ விட மாட்டோம் என முழங்கினோம். காலத்தின் கட்டளை படி நாங்க மூணுபேருமே எம்ஜிஆரிடம் சரணடைந்தோம்"
தர்மம் தலைகாக்கும் படத்தில் "நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்"என்ற எம்ஜிஆர் வார்த்தை இப்படி பலித்தது.(நன்றி. ராஜநாயகம்) ...
இந்த தகவல் பல வருடங்களுக்கு முன் என் தந்தை சொன்னது.......... Thanks fb
-
கஷ்டப்பட்டதை மறக்காதவர்!
அரச அவையில் சில திட்டங்களை மன்னனாக இருந்து நாடோடி வீராங்கன் அறிவிக்கின்றான். அதில் தொலைநோக்கு பார்வை கொண்ட வசனம் :–
“ஐந்து வயது ஆனவுடனே குழந்தைகளைக் கட்டாயமாகப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு, பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரையில் மாணவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.”
எம்.ஜி.ஆர். மூன்றாவதுக்கு மேல் படிக்க முடியாத வறுமைச் சூழலில் இருப்பது போன்ற பிள்ளை செல்வங்கள் படித்து நாளைய உலகை உருவாக்கும் நல்லவர்களாக உயர்வதற்கான திட்டமிடல் இந்த வசனங்களில் புதைந்திருப்பதை அறியலாம்.
”தான் நடித்த காட்சி மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்காமல் படம் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.
குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும்படியாக படம் எடுக்க வேண்டும், பொழுதுபோக்குப் படத்திலும் நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும்’ என்பார். இந்த கருத்து சின்னவருடைய மனதில் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சின்னவர் நடித்த ’வீரஜெகதீஷ்’ என்ற பழைய படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த படத்தில் ஒரு காட்சியில் புகை பிடிப்பவனுக்கு சின்னவர் அறிவுரை சொல்வதுபோல வசனம் இருக்கும். ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, ஏழ்மையை சந்தித்து வாழ்ந்தவர். காலில் செருப்பு கூட இல்லாமல் பல இடங்களுக்குச் சென்று பல கஷ்டங்களை அனுபவித்தவர், அந்த வறுமை தந்த பாடமே வாழ்க்கைத் தத்துவத்தை அவருக்கு உணர்த்தியது எனலாம். புகழும் பெருமையும் வந்த காலத்தில், இளைமையில் வறுமையில் தான் பட்ட கஷ்டங்களை மறந்து இருக்க முடியும். ஆனால், அவர் கடைசி வரையிலும் அதை மறக்கவில்லை. அது அவரது சிறப்பு” என்பது இயக்குநர் கே. சங்கரின் அனுபவம்.
எம்.ஜி.ஆர். பாடல்கள் பேசப்படக் காரணம்?
சின்னவரின் படங்களில் பாடல்கள் புகழ்பெற, வாழ்க்கையில் அவர் அனுபவித்து அறிந்ததை பாடல்களில் சொன்னதும் ஒரு காரணம்.
பாடல் பதிவின் போது ஒரு பாடலை அவர் ஓ.கே. செய்தால் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் அப்பாடா மறு ஜென்மம் என்று சொல்வார்கள். (அந்த அளவுக்கு பாடலில் கவனம் செலுத்தி வேலை வாங்குவார்) சின்னவருக்காக ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் 25 டியூன்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.
’இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் வரும் ‘அன்புக்கு நான் அடிமை’ பாடல் காட்சியை இரவு ஒன்பது மணிக்கு ஷூட் பண்ண ஏற்பாடு, அதற்கு ஒரு வாரமாகவே முயற்சித்தும் பாடல் சரியாக அமையவில்லை.
அந்தக் காட்சியை படமாக்க இரண்டு மணி நேரத்திற்கு முன் மாலை 7 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் எழுத பாடல் ஓ.கே. ஆனது” என்கிறார் இயக்குநர் கே. சங்கர்
'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கவிஞர் மருதகாசியை ஒரு பாடல் எழுத வைத்தார்.
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற பாடலின் சரணத்தை
“பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்துவிட்டு
தன்வழியே போகிறவர் போகட்டுமே!”
என்று கவிஞர் எழுதி காட்டினார்.
“தன் வழியே என்று சொல்கிறீர்களே… அது ஏன் ஒரு நல்ல வழியாக இருக்கக்கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவன் ஏன் தன் வழியில் போகக்கூடாது? அதைத் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று புரட்சித்தலைவர் சொல்ல, ’தாங்கள் விரும்புவது என்ன? இந்த இடத்தில் எப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றீர்கள்?” என்று கவிஞர் கேட்கிறார்.
“தீய வழி என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்கிறார் மக்கள் திலகம்.
‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’
என்ற வரிக்குப் பதிலாக
‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’
என்று எழுதி கவிஞர் சொல்ல,
“ஆகா… பொருத்தமான வரி! அற்புதம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் எம்.ஜி.ஆர். “ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர். கூர்ந்து கவனிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய அறிவாற்றல் மிக்கவர்களோடு பணிபுரிவது பெரும் பாக்கியம்” என்று தன்னிடம் கவிஞர் மருதகாசி மொழிந்ததை வழிமொழிகிறார் பத்திரிகையாளர் நாகை தருமன்.
“எந்தக் காட்சியும் படமாக்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பு பெறும், எந்த விதத்தில் படமாக்கினால் நன்றாக அமையும் என்றெல்லாம் விவாதித்த பிறகுதான் ஒப்புக் கொள்வார். அவருககுத் தெரியாத எந்தப் பிரிவுமே இந்தத் துறையில் கிடையாது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேங்காய் சீனிவாசன்.
நன்றி : திரு. விஜயபாஸ்கர் - தினமலர்....... Thanks..........
-
எம்.ஜி.ஆரால் மழையா??
--------------------------------------------
மேற்கண்ட கேள்விக்கு--
ஆம்! என்று பதில் சொல்வது அடியேனில்லை! திருவள்ளுவன்??
நல்லார் ஒருவர் உளரேல்-அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!!!
ஆம்!! அது 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரம்!
லஞ்சம் லாவண்யம் அதிகார துஷ்பிரயோகத்தால்
இயற்கை--
வஞ்சம் கொண்டு தன் சினத்தைக் காட்டிய வேளை--
மக்கள்---
தஞ்சம் என எம்.ஜி.ஆரைத் தலைவனாக ஏற்ற்தால்
பஞ்சம் இன்றிக் கொட்டித் தீர்த்த மழையின் மகிழ்வு??
நீர் நிலைகள் எல்லாக் குளங்களிலும் ஏரிகளிலும் நிரம்பி வழிந்த நிலையில் புழல் ஏரி உடையக் கூடிய அபாயத்தில் நீரை உள் வாங்கியிருக்கிறது??
அமைச்சர்,,காளிமுத்து,,முதல்வர் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்டு,,நிலைமையை விளக்க--
அந்த இரவில் சில அதிகாரிகளுடன் புழல் அணைக்கு விரையுமாறு காளிமுத்துவைப் பணிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
நள்ளிரவில்,,கொட்டும் மழையில்,,சில அதிகாரிகளுடன் காளிமுத்து அங்கே விரைகிறார்??
மழையின் தீவிரத்தால்,,தன் செயல்பட்டை நிறுத்திக் கொள்கிறது மின்சாரம்??
சுற்றிலும் சூழ்ந்து கொண்ட இருளில்--அதிகாரிகளுடன் டார்ச் லைட் சகிதம்,,,அமைச்சர் காளிமுத்து,,நிலைமையை ஆராய்ந்து கொண்டிருக்க--சக்தி வாய்ந்த டார்ச் லைட் சகிதம்,,ஒரு கும்பல் எதிர் திசையிலிருந்து அந்த இடத்துக்கு வருகிறது??
பொது மக்கள்,,,தங்கள் பணிக்கு இடையூறாக அங்கே கும்பல் சேருகிறார்களே என்ற எரிச்சலில் காளிமுத்து ஏறிட்டு நோக்க--
அந்த கும்பலின் தலைவனாக முதல்வர் எம்.ஜி.ஆர்???
உங்களைப் போகச் சொல்லிட்டேனே தவிர,,பிறகு தான் சிந்தித்துப் பார்த்தேன்! உங்கள் குழுவுக்கு,,வெள்ள அபாயத்தால் ஏதேனும் துன்பம் நேரிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் நான் சில அதிகாரிகளுடன் வந்தேன்???
முதல்வரே இந்த இருட்டில் இப்படி வருகை புரிந்ததும்,,அதற்கு அவர் சொன்ன விளக்கமும்,,அங்கே இருந்த அதிகாரிகளை நெகிழ்ச்சியுடன் கூடிய இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது!!
அங்கே நடைபெற வேண்டிய வேலைகளும் தடை இன்றியும் துரிதமாகவும் நடந்தேறுகிறது!!!
இருள் சூழ்ந்த அந்த இக்கட்டான சூழலில்
அருள் சூழ்ந்த இந்த முதவனின் செயலைப் போல் வேறு எங்கேனும் நாம் கண்டதுண்டா????.......... Thanks.........
.
-
கழகத்தை விட்டு, விலகிச் சென்ற கவியரசர்; கழகத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் அடைய விரும்பிய திராவிட நாடு கொள்கை பற்றியும், திராவிட நாடு கொள்கையை அவர்கள் கைவிட்டது பற்றியும்; நாட்டையாளும் நிலையில் நாற்காலிகளில் அவர்கள் அமர்ந்தால் நேரக்கூடிய அவலங்கள் பற்றியும் ஏராளமாக எழுதினார், மேடை முழக்கங்களும் செய்தார்.
இவற்றையெல்லாம் தனது இதயத்தின் ஒரு பகுதியில் இருத்திக் கொண்ட மக்கள் திலகம்; தனது படங்களில் கண்ணதாசன் பாடல்கள் எழுதக்கூடாது என்று, எந்தத் தயாரிப்பாளரிடமும் கட்டளை பிறப்பித்ததில்லை.
இதனால்தான் தேவர் பிலிம்ஸ் தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த அனைத்துப் படங்களுக்கும் (ஒன்றிரண்டு தவிர) கண்ணதாசனே பாடல்களை எழுதிக் குவித்தார்.
பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கும்; ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர். ராமண்ணா தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும் கண்ணதாசனே பெரும்பாலும் பாடல்களை எழுதினார்.
இதற்கெல்லாம் காரணம், எம்.ஜி.ஆர் என்ற கலைஞானி, கண்ணதாசன் என்ற கவிஞரிடம் இருந்த கவித்துவத்தின் மீது செலுத்திய கவிப்பற்றும், கலைப்பற்றுமே எனலாம்.
திராவிட இயக்கத்தில் இருந்தபோது கண்ணதாசன் எழுதிய
‘அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!’
என்ற பாடலை, தான் பயணம் செய்யும் வண்டியிலேயே எப்பொழுதும் கேட்கும் வண்ணம், கைவசம் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்பதனை, அவரே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.
இந்த அளவிற்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மீது, தனது எண்ண அலைகளின் தாகத்தைத் தக்கவைத்துக் கொண்டவரே எம்.ஜி.ஆர். என்பதனை நாடு நன்கறியும்!
(வலைதளத்தியிருந்து பெற்றவை)......... Thanks...
-
தலைவரின் உதவியாளர் திரு.மகாலிங்கம் அவர்கள் தலைவர் பற்றி எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் திரு.கு.பிட்சாண்டி (இந்திய ஆட்சி பணி ஓய்வு) அவர்கள் பேச்சு...
ஒரு ஞாயிறு அன்று விடுமுறை தினத்தில் தலைவர் வீட்டில் முதல்வர் அவருடன் ஒரு ஆட்சி பற்றி ஆய்வு முடிந்து மாலை வீட்டுக்குப் புறப்படும் நேரம் அப்போது தூர்தர்சனில் மட்டும் படங்கள் ஒளிபரப்பு செய்யும் நேரம்.
அன்று நம் நாடு படம் வீட்டில் ஹாலில் உள்ள கலர் டி.வி.யில் நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து பார்க்க தொடங்கினோம்.
விடுமுறை அன்றாவது வீட்டுக்கு நேரம் செலவிட விரும்பி தலைவர் என்ன எல்லோரும் கிளம்பி விட்டார்களா என்று மாடியிலிருந்து கேட்டார்.
எல்லோர் வீட்டிலும் கருப்பு வெள்ளை டி.வி.இன்று உங்கள் படம் கலரில் கீழே பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்ன உடனே என்னை மேலே அழைத்து நமது குழுவில் எத்தனை பேர் லிஸ்ட் கொடுங்கள் என்று கேட்டார்.
நான் அரசுத்துறை சார்ந்த 16 மற்றும் 11 பேர் என்று கொடுத்தேன். பொன்மனம் உடனே அப்போது வெளியே நிற்கும் வாட்ச்மேன் கிருஷ்ணன், பூக்காரி அம்மா எல்லோரும் எங்கே போய் டி.வி பார்ப்பார்கள் என்று சொல்லி லிஸ்டை 36 பேர் என்று திருத்தினார்.
நாங்கள் முதல்வர் வீட்டில் படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே ஒரு ஒரு மணிநேரம் கழித்து என் மனைவி என்னை ஹாலில் உள்ள தொலைபேசியில் அழைத்து என்னங்க வீட்டுக்கு சீக்கிரம் வாங்க நம்ம வீட்டில் கலர் டி.வி வந்துள்ளது ஆட்கள் (அக்காலத்தில்) ஆண்டென்னா மாட்டி கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.
அன்று வீட்டில் இருந்து பணி புரிந்த 36 குடும்பங்களுக்கும் கலர் டி.வி பொருத்தி கொடுத்த நிகழ்வை அவரை தவிர இந்த உலகில் யார் செய்ய முடியும்.
ஆட்சியரும் சாமானியரும் ஒன்றே என்று பார்த்த நம் தலைவர் புகழ் எந்நாளும் காப்போம்......... Thanks...
-
இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை...
கொண்டுவந்தது ..
தாங்கள்தான் என்று திமுகவும்,
இந்த திட்டத்தை ...
அன்புமணி தான் .. கொண்டுவந்ததாகவும் ...
மாறிமாறி உரிமை கொண்டாடுகின்றன!
பழய டப்பாவிற்கு
புதுபெயிண்ட் அடித்து புதியது என்று மார்கெட்டில் விற்பதுபோல் ..
1979 நவம்பரில் .....
தனது முதலாம் ஆட்சிகாலத்திலேயே ...
எம்ஜிஆர் ....
கொண்டு வந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டமே 108 ஆக உருமாறியுள்ளது.
அதற்கு அச்சாரமே எம்ஜிஆர்தான்!
முதல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் டாக்டர் நடராசன்,
விபத்து மற்றும் மருத்துவ சேவை உதவிக்கான வரைவு திட்டத்தை திட்டக்குழுவிடம் சமர்ப்பித்தார்.
முதல்வர் எம்ஜிஆர் உடனே அதற்கு ஒப்புதல் அளித்து ரூ50 லட்சத்தை ஒதுக்கி செயல்படுத்தினார்.
முதல்கட்டமாக ..
ரூ. 60 ஆயிரம் வீதம் ....
50 ஆம்புலன்ஸ்களும்,
உயிர் காக்கும் மருந்துகள், கருவிகள்,
உபகரணங்களும் வாங்கப்பட்டன.
திட்டம் சிறப்பாக செயல்பட அப்போதைய காவல்துறை ஆணையர் ஸ்ரீபால்,
மெட்ராஸ் கமிஷனர் ராமகிருஷ்ணன்,
சென்னை மருத்துவகல்லூரி முதல்வர் லலிதா காமேஸ்வரன், முன்னாள் மருத்துவகல்லூரி முதல்வர்கள் மரு. நடராசன், மரு.சொக்கலிங்கம் ஆகியோரைக் கொண்ட கண்காணிப்பு குழுவையும் எம்ஜிஆர் அமைத்தார்.
மேலும் 140 ஆம்புலன்ஸ்களும்,
39 தகவல் மையங்களும், ஒயர்லஸ் கருவிகளுடனும் ..
1980ல் விரிவுபடுத்தினார்.
அனைத்து அரசு மருத்துவமனைகளுடன் 30 பெரிய தனியார் மருத்துவ மனைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன.
மொத்தத்தில் 1979 நவம்பரில் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முதலாக இந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது பொன்மனச்செம்மலே!
புரட்சித்தலைவர் கொண்டுவந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு, திமுக உரிமை கொண்டாடுகின்றது
எம்ஜிஆர் காலத்தில் ...
அவர் மூளையில் உதித்து செயல்படுத்தியதுதான் ...
இந்த இலவச ஆம்புலன்ஸ் வசதி திட்டம்..
ஆதாரம்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் ஜுனியர் விகடன் 17/4/2011 இதழ் !!!........ Thanks...
-
"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி"
தமது கடுமையான உழைப்பால்
வெற்றியின் எல்லையை எட்டியவர்
எழுச்சி ஏந்தல் எம்ஜிஆர்.
பாட்டால் புத்தி சொன்ன
பாட்டுடைத் தலைவருக்கு,
தமிழ் நாட்டை ஆண்ட,
தங்கத் தலைவருக்கு,
மிகவும் பிடித்த பாடலின் வரிகள்
எவை தெரியுமா?
"பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
"பாசவலை" படத்தில் எழுதிய....
"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்
குள்ள நரி தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடிதான் சொந்தம்"
உனக்கெது சொந்தம்?
எனக்கெது சொந்தம்?
உலகத்துக்கு எதுதான் சொந்தமடா?
-இந்த பளிங்கு வரிகளும்,
பவழ வார்த்தைகளும்தான்,
எம்ஜிஆர் மனதில்,
குடியிருந்த கோயிலில் பதிந்த கல்வெட்டு எனலாம்............ Thanks.........
-
உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர்... எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது.
திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம்! என்று சொல்லும் அதே நேரத்தில்; அரசியலிலும் அவர்... யாராலும் யூகிக்க முடியாத அதிசய மனிதராகவே விளங்கினார். சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் கட்டங்கள் ஒரு சரித்திரமாகவே அமைந்து விட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்லியல்புகளை உணர்வு வயத்துடன் நினைவு கூர்கிறார்கள். மொத்தத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்று ‘தெய்வத்தாய்’ படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போலத்தான் அவரது வாழ்க்கையும் அமைந்துவிட்டது.
இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917- ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி... ஆக, இந்த ஆண்டு 2017, ஜனவரி 17 ஆம் தேதியோடு அவருக்கு 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. எம்ஜிஆரின் வாழ்நாள் சாதனைகளைப் போற்றும் வகையில், தமிழக அரசு, இந்த வருடம் முழுவதையும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அவரது நினைவுகளைப் போற்றி பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகமே எம்ஜிஆர் நினைவுகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; இன்றைய இளையதலைமுறையினரும் கூட மறைந்த முதல்வரும், மக்கள் மனம் கவர்ந்த நடிகருமான எம்ஜிஆரைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு; எம்ஜிஆரின் ஆரம்பகால சினிமா மற்றும் அரசியல் பிரவேஷம், அதில் அவரடைந்த வெற்றிகள், எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், அவரது அரிய புகைப்படங்கள், அவர் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய நாடு போற்றும் திட்டங்கள், தங்கள் மொத்த வாழ்க்கையையும் எம்ஜிஆரை ரசிப்பதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களான அவரது அதி தீவிர ரசிகர்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் உள்ளிட்ட பல விஷயங்களை எம்ஜிஆர் 100 எனும் தலைப்பில் தொடராக வெளியிடவிருக்கிறது தினமணி.
வேடிக்கையாக ஒரு விஷயம் சொல்வார்கள்,
இந்தியாவில் தவழும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் பார்வையில் படுமாறு இந்தியப்பிரபலங்கள் சிலரது புகைப்படங்களைப் பரப்பி சில விஞ்ஞானிகள் ஒரு புது விதமான ஆராய்ச்சியில் இறங்கினார்களாம். அந்த ஆராய்ச்சியின் நோக்கம் எந்த பிரபலம் அறியாக் குழந்தைகளைக் கூட கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவர் என்பதை அறிவது தான்.
ஏசு கிறிஸ்து, மகாத்மா காந்தி, எம்ஜிஆர், அண்ணாதுரை, இப்படி நீண்ட அந்த பிரபலங்கள் லிஸ்டில் அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தது போல் ஆசையாய் எடுத்துப் பார்த்தது யாருடைய புகைப்படத்தை தெரியுமா? பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் புகைப்படத்தைத் தான். எப்போதும் வசீகரப் புன்னகை மாறாத அந்த முகத்தை குழந்தைகளால் மட்டுமல்ல எம்ஜிஆரை வெறுப்பவர்களாலும் கூட ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை என்பதற்கு அவரது வாழ்க்கையும், வாழ்நாள் முழுக்க அவருக்கு கூடிய கூட்டமுமே சாட்சி. அவையெல்லாம் அப்போது அந்த மாமனிதருக்காக ‘தானாய் சேர்ந்த கூட்டம்’!....... Thanks.........