http://s18.postimg.org/lo82yd8bt/csss.jpg
Printable View
இந்த வார குமுதம் இதழில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதுரை வீரனின்
உண்மை கதையை விளக்கி எழுதி, அத்துடன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.-பானுமதி
நடித்து சரித்திர சகாப்தம் படைத்த மதுரைவீரன் படத்தின் ஸ்டில் ஒன்றினை
பிரசுரம் செய்திருந்தனர். அதனை நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்
http://i61.tinypic.com/29pbw4n.jpg
http://i59.tinypic.com/aw6y1.jpg
தமிழகத்தில் அதைப் போன்ற முரட்டு சாட்சியங்கள் நிறையவே பரவிக்கிடக்கின்றன .
நன்றி.:குமுதம்வார இதழ்.
http://i58.tinypic.com/2mwth04.jpg
நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்களின் மகாதேவி -வெளியாகி 57 ஆண்டுகள் நிறைவு ஆனது.
வெளிவந்த தேதி :22/11/1957.
சென்னையில் 6 தியேட்டர் களில் வெளியான முதல் படம்.
புரட்சி நடிகர் தோன்றும் காட்சிகள் விருவிருப்பாகாவும், சுறுசுறுப்பாகவும் இருந்தன.
வில்லன் பி.எஸ். வீரப்பாவுடன் மோதும் காட்சிகள் படு த்ரில்லிங்
இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.-
1. கண்மூடும் வேளையிலும் கலை -ஏ .எம்.ராஜா -சுசீலா பாடிய இனிய காதல் கீதம்.
2.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - டி.எம்.எஸ். குரல் இனிமையாக இருக்கும்.
3. தாயத்து அம்மா தாயத்து -டி.எம்.எஸ். பாடல்.
4.காக்கா காக்கா மை கொண்டு வா -எம்.எஸ். ராஜேஸ்வரி குழந்தை பாடுவது போல்
அருமையாக பாடினார்.
5.சிங்கார புன்னகை - எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய இனிய தொட்டில் பாடல்.
6. சேவை செய்வதே ஆனந்தம் -டி.எம்.எஸ். & எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய
தேனான காதல் பாடல்.
7. தந்தனா பாட்டு பாடனும் -சந்திரபாபு & எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய நகைச்சுவை பாடல்.
8. உன் திருமுகத்தை - சந்திரபாபு & எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய மற்றொரு நகைச்சுவை பாடல்.
வில்லன் வீரப்பாவின் வசனங்கள் மற்றும் வில்லத்தனமான சிரிப்பை கண்டு
பெண்கள் மிகவும் பயந்து ரசித்த காலம்.
அடைந்தால் மகாதேவி அல்லது மரணதேவி .
எம்.என்.ராஜம் அத்தான் என அழைக்கும்போது , இந்த சத்தான வார்த்தையில்தான் உன் அத்தான் செத்தான்.
மகாதேவியுடன் பேசும் வசனம் - என் இச்சைக்கு நீ இணங்கா விட்டால் உன் குங்குமம் அழியும் . மஞ்சள் இழப்பாய் . உன் மணவாளன் பிணமாவான் .
நீ தனியாவாய். எனக்கு கனியாவாய் .
மேற்கண்ட வசனங்கள் அந்த காலத்தில் மிக பிரபலம் .
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைஅமைப்பு டைட்டில் காட்சிகளிலும் ,சண்டை காட்சிகளிலும் பல காட்சிகளில் பின்னணி இசை அருமை.
மக்கள் திலகம் தோன்றும் காட்சிகள் குறைவானது போல் ஒரு உணர்வு.
படத்தின் கதைஅமைப்பு அவ்வாறு இருந்தது.நடிக பேரரசரின் நடிப்பு உணர்ச்சிகரமாகவும் , குறிப்பாக மகாதேவியை தேடி வரும் காட்சிகள் , பார்வை இழந்தபின் வரும் காட்சிகள், இளவரசரை காப்பாற்ற துடிக்கும் காட்சிகள் , பாம்புகளை வரவழைத்து மகுடியால் ஊதிய வண்ணம் விஷத்தை முறியவைக்கும் காட்சிகள் ஆகியன என்னை கவர்ந்த காட்சிகள்.
1974 ல் முதன் முதலாக பிரபாத் அரங்கில் பார்த்தேன். பின்பு பல அரங்குகளில்
பார்த்து ரசித்த அனுபவம் உண்டு..
1970லிருந்து 2000 ஆண்டுகள் வரை பல அரங்குகளில் சக்கை போடு போட்ட படம்.
மறுவெளியீடுகளில் வசூல் சாதனை புரிந்த படம்.
ஆர். லோகநாதன்.